என் மலர்
இந்தியா

ஜம்முவில் கனமழை, நிலச்சரிவு: 4 பேர் பலி- வைஷ்ணவ தேவி யாத்திரை நிறுத்தம்
- ஜம்முவில் உள்ள தோடா மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.
- வைஷ்ணோ தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் காயம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன, நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையாக பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று தோடா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த கனமழைக் காரணமாக நான்கு பேர் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தில் சாலை அடித்துச் செல்லப்பட்டதால் தோடா- கிஷ்த்வாரை இணைக்கும் NH-244 சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்வதற்கான வழியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் காயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-வின் பல்வேறு பகுதியில் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. அங்குள்ள சூழ்நிலை குறித்து ஆராய ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவிற்கு செல்ல இருக்கிறேன். மீட்புப்பணியை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள முக்கியமான அறுகளான ராவி மற்றும் தாவியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.






