என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- உறுதியான ஆதாரங்கள் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அவர்கள் பயங்கரவாத நெட்வொர்க்கை வலுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இரண்டு அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்.
இந்த ஊழியர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்போடு தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர்களுக்காக வேலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த ஊழியர்கள் நீண்ட காலமாக பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
லஷ்கர்-இ-தொய்பாவின் உதவியுடன், அவர்கள் பயங்கரவாத நெட்வொர்க்கை வலுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- நேற்று முன்தினம் மேகவெடிப்பால் கனமழை கொட்டித்தீர்த்தது.
- ஒரு கிராமத்தை வெள்ளம் மற்றும் மண் மூடியதால் பலர் சிக்கித்தவிப்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் மச்சைல் மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சசோதி என்ற கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக நேற்று முன்தினம் பேய்மழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமத்தில் உள்ள வீடுகளை இழுத்துச் சென்றது. மேலும், வீடுகளை மழை வெள்ளம், மண் மூடியுள்ளது.
இதுவரை சுமார் 60 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதேவேளையில் 70 முதல் 80 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால் கிராம மக்கள், 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். மீட்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர உமர் அப்துல்லா பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு சென்று, பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடம் மீட்புப்பணியை துரிதப்படுத்த கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே உமர் அப்துல்லாவை சுற்றி வளைத்த பொதுமக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். அப்போது அருகில் இருந்த கூடாரத்திற்கு (Tent) வாருங்கள், உங்களுடைய குறைகளை கேட்கிறேன் உமர் அப்துல்லா தெரிவித்தார். ஆனால், மக்கள் செல்ல மறுத்துவிட்டார். இதனால் மக்களை சந்திக்காமல் உமர் அப்துல்லா செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-
மக்களுடைய கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடியும். அவர்களுடைய கோபம் உண்மையானது. கடந்த இரண்டு நாட்களாக மாயமாக தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விடை என்ன? என விரும்புகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் உயிரோடு வருவார்களா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
மாயமானவர்கள் உயிர்ப்பிழைக்க வாய்ப்பு இல்லை என்றால், உடல்களை ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். என்.டி.ஆர்.எஃப், எஸ்.டி.ஆர்.எஃப்., ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சிக்கியுள்ள மக்களை மீட்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். மீட்க முடியாத இடங்களில், குறைந்தபட்சம் உடல்களை மீட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்போம்.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
- மோடி அழைத்து கிஷ்த்வாரில் நிலைமை குறித்து விசாரித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏறப்ட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
பிரதமர் மோடி தன்னை அழைத்து கிஷ்த்வாரில் நிலைமை குறித்து விசாரித்ததாகவும், மீட்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்ததாகவும் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா இந்த துயரச் சம்பவம் குறித்து பேசுகையில், "500க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம்.
சில அதிகாரிகள் இந்த எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டக்கூடும் என்று கூறுவது கவலையளிக்கிறது. இது மிகவும் வேதனையான நேரம்" என்று கூறினார்.
- வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளது.
- நிலச்சரிவில் சிக்கி பலியானோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.
ஸ்ரீநகர்:
இமாசலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 120 பேர் படுகாயம் அடைந்தனர் .
வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி பலியானோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- 220க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
- வெள்ளபெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் ஜோசிதி கிஷ்த்வார் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது .
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துவர்கள் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
நிலச்சரிவில் சிக்கி 120 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
220க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
வெள்ளபெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

- ஜோசிதி கிஷ்த்வார் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது
- தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் ஜோசிதி கிஷ்த்வார் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது . இந்த நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
- ஊடுருவ தயாராக இந்த நிலையில் வீரர்கள் கவனித்தனர்.
- வீரர்கள் எச்சரிக்கை விடுத்தும் கவனிகாததால், துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் கத்துவா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் காரர்கள் மீது இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் காயம் அடைந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா மாவட்டத்தின் சந்த்வான், கோதே எல்லை அவுட்போஸ்ட்கள் இடையே உஷார் படுத்தப்பட்ட எல்லை பாதுகாப்புப்படையினர், ஊடுருவ இருந்தவர்களை கவனித்தனர். ஊடுருவல் காரர்களுக்கு பலமுறை வீரர்கள் எச்சரித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதனால் இந்திய வீரர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஊடுருவ முயன்றவர்களில் ஒருவர் காயம் அடைந்தார்.
குண்டு பாய்ந்த நபர் கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் அவருடைய அடையாளம், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதற்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை முடிவில்தான் அவர் ஏன் ஊடுருவ முயன்றார் என்பது தெரியவரும்.
- ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் தூள் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
- தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.
ஜம்மு:
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை வேட்டை யாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு பெற்று காஷ்மீரில் ரகசியமாக செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் கடந்த 1-ந்தேதி முதல் ஆபரேஷன் அசல் என்ற அதிரடி நடவடிக்கையை பாதுகாப்பு படை தொடங்கியுள்ளது. அதன்படி பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டு வருகிறார்கள். குல்காம் மாவட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த நிலையில் காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் மலைப் பகுதியான தூள் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் இன்று காலை சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். அங்கு 2 பயங்கரவாதிகள் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து இந்திய ராணுவத்தின் எக்ஸ் தளப் பதிவில், "பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டு உள்ளது.
- 21 பெட்டிகள் அடங்கிய ரெயில் பஞ்சாபில் இருந்து அனந்த்நாக் சென்றடைந்துள்ளது.
- சுமார் 600 கி.மீ. தூரத்தை 18 மணி நேரத்தில் சென்றடைந்துள்ளது.
வடக்கு ரெயில்வே முதன்முறையாக பஞ்சாப் மாநிலம் ரூப்நகரில் இருந்து காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கிற்கு சிமெண்ட் ஏற்றிக் கொண்டு சரக்கு ரெயில் சென்றது. இது குறிப்பிடத்தக்க மைல்கல் என மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனந்த்நாக் சரக்கு ஷெட்டிற்கு முதன்முறையாக சரக்கு ரெயில் இன்று சென்றடையந்துள்ளது. காஷ்மீர் பிராந்தியத்தை தேசிய சரக்கு நெட்வொர்க் உடன் இணைப்பதற்கான குறிப்பிடத்தக்க மைல். இந்த ரெயில் நெட்வொர்க் போக்குவரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் நம்முடைய மக்களின் செலவு குறையும் என அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
21 BCN பெட்டிகள் சிமெண்ட் உடன் சரக்கு ரெயில் சென்றடைந்தது வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 18 மணி நேரத்திற்கும் குறைவான பயணத்துடன் ஏறக்குறைய 600 கி.மீ. தூரத்தை இந்த ரெயில் கடந்து சென்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
- இந்த பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அடர்ந்த காடுகளில் குகைகளில் ஒளிந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
- இந்த நடவடிக்கையில் இதுவரை 10 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி அகால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு உளவுத்துறை தகவல் கிடைத்தது.
இந்த பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அடர்ந்த காடுகளில் குகைகளில் ஒளிந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
இதையடுத்து ஆபரேஷன் அகால் என்ற பெயரில் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இன்று (சனிக்கிழமை) ஆபரேஷன் அகாலின் ஒன்பதாவது நாள்.
இந்நிலையில் இன்று பயங்கரவாதிகள் உடனான சண்டையில் லான்ஸ் நாயக் பிரித்பால் சிங் மற்றும் சிப்பாய் ஹர்மிந்தர் சிங் என்ற 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்த நடவடிக்கையில் இதுவரை 10 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர். இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
- கட்வாவிலிருந்து உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த் கர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.
- காயமடைந்த அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் பயணித்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல்களின்படி, CRPF படையின் 187வது பட்டாலியனின் பேருந்து, இன்று காலை சுமார் 10:30 மணியளவில் கட்வாவிலிருந்து உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த் கர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது 200 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்தது.
பேருந்தில் 18 வீரர்கள் இருந்தனர். இந்த விபத்தில் மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 15 வீரர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- தடைசெய்யப்பட்ட 25 புத்தகங்களும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 152, 196 மற்றும் 197 இன் கீழ் வருவது கண்டறியப்பட்டுள்ளது.
- புத்தகங்களுடன் தொடர்புடைய அனைத்து பிரதிகள், ஆவணங்கள் மற்றும் பொருட்களை மாநிலத்திற்கு பறிமுதல் செய்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 25 புத்தகங்களை வெளியிடுவதற்கும் விநியோகிப்பதற்கும் அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் உள்ளதாகக்கூறி 25 புத்தகங்களுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு தடை விதித்தது. அவை பாரதிய நியாய சன்ஹிதா, 2023-ன் பிரிவு 98 கீழ் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அருந்ததி ராயின் 'ஆசாதி', அரசியல் எழுத்தாளர் சுமந்திர போஸ் எழுதிய 'காஷ்மீர் அட் தி க்ராஸ்ரோட்ஸ்' உள்ளிட்ட புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் உள்துறை, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் ஆகஸ்ட் 5-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், இந்தப் புத்தகங்கள் ஜம்மு-காஷ்மீர் பற்றிய ஒரு தவறான கதையை பரப்புகின்றன என்றும், அது வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் இளைஞர்கள் பங்கேற்பதற்குப் பின்னால் குறிப்பிடத்தக்க உந்துசக்தியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட 25 புத்தகங்களும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 152, 196 மற்றும் 197 இன் கீழ் வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது பிரிவினைவாதத்தை ஊக்குவித்தல் மற்றும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவித்தல் தொடர்பானது. இந்த விதிகளின் கீழ், இந்த புத்தகங்களுடன் தொடர்புடைய அனைத்து பிரதிகள், ஆவணங்கள் மற்றும் பொருட்களை மாநிலத்திற்கு பறிமுதல் செய்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.






