என் மலர்tooltip icon

    குஜராத்

    • குஜராத் மாநிலத்தில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது.
    • இதில் ஜடேஜாவின் மனைவி உள்பட 19 புதுமுகங்கள் மந்திரியாக பதவியேற்றனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் முதல் மந்திரி பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலும், 2027-ம் ஆண்டு சட்டசபை தேர்தலும் நடக்கின்றன.

    அதற்குமுன் மந்திரி சபையை மாற்றி அமைக்க முதல் மந்திரி முடிவு செய்தார். அவரது அறிவுறுத்தலின்படி, அவரைத் தவிர மீதி உள்ள 16 மந்திரிகளும் நேற்று முன்தினம் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அவர்களில் 6 பேரின் ராஜினாமாவை முதல் மந்திரி ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்நிலையில், நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆச்சார்ய தேவ்ரத்தை முதல் மந்திரி பூபேந்திர படேல் சந்தித்தார். புதிய மந்திரிகள் பதவியேற்புக்கு அனுமதி கோரினார். கவர்னரும் ஒப்புதல் அளித்தார்.

    இதையடுத்து, காந்தி நகரில் உள்ள மகாத்மா காந்தி மாநாட்டு மையத்தில் மந்திரி சபை விரிவாக்க நிகழ்ச்சி நடந்தது.

    19 புதுமுகங்களுக்கு மந்திரி பதவி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு கவர்னர் ஆச்சார்ய தேவ்ரத் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    அவர்களில், ஆச்சரியப்படத்தக்க புதுமுகமாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா புதிய மந்திரியாக பதவியேற்றார். ஜடேஜாவும், அவருடைய மகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • நேற்று அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
    • உள்துறை அமைச்சர் ஹர்ஷா சங்விக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    முதல்வர் பூபேந்திரா படேல் தலைமையில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் அமைச்சவரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மாநில அமைச்சரவையை முழுமையாக மறுசீரமைக்க வசதியாக நேற்று அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்-தை பூபேந்திரா படேல் சந்தித்தார். இந்நிலையில் 26 புதிய அமைச்சர்களை பூபேஷ் படேல் தேர்வு செய்துள்ளார்.

    இந்த பட்டியலில் கிரிக்கெட் பிரபலம் ரவீந்தர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 2019 இல் அவர் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    முந்தைய அமைச்சரவையில் மூன்று பேர் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் உள்ள 19 பேரும் புதிய முகங்கள் ஆவர். உள்துறை அமைச்சர் ஹர்ஷா சங்விக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்றே ஆளுநர் தலைமையில் நடைபெற உள்ளது. 2027 இல் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான நகர்வாக இந்த அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

    • 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.
    • இன்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை முதல்வர் சந்திக்க உள்ளார்.

    குஜராத் பாஜக அரசின் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் இன்று (வியாழக்கிழமை) ராஜினாமா செய்தனர்.

    நாளை (வெள்ளிக்கிழமை) அமைச்சரவை மாற்றம் நடைபெற இருந்த நிலையில் இன்று முதல்வர் பூபேஷ் படேலை தவிர அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்தனர்.

    முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. குஜராத் பாஜக தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா, மாநில அமைச்சரவையை முழுமையாக மறுசீரமைக்க வசதியாக அமைச்சர்களை பதவி விலகுமாறு உத்தரவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    கூட்டத்தைத் தொடர்ந்து, 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். இன்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்திடம் அவற்றை பூபேஷ் படேல் ஒப்படைக்க உள்ளார்.

    புதிய அமைச்சரவை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு காந்திநகரின் மகாத்மா மந்திரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அறிவிக்கப்பட உள்ளது.     

    • ஓலா ஸ்கூட்டரை தீ வைத்து கொளுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.
    • பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத விரக்தியில் இவ்வாறு செய்துள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் அடிக்கடி Repair-ஆன ஓலா ஸ்கூட்டரை வாடிக்கையாளர் ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து கொளுத்திய சம்பவம் இணையத்தில் பேசுபொருளானது.

    ஷோரூம் வாசலிலேயே ஓலா ஸ்கூட்டரை தீ வைத்து கொளுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.

    ஓலா ஸ்கூட்டர் Repair ஆனதை பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத விரக்தியில் இவ்வாறு செய்துள்ளார்.

    • புல்லட் ரெயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டில் அறிவித்தார்.
    • இந்தத் திட்டத்துக்கு 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    அகமதாபாத்:

    மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே அதிவேகம் கொண்ட புல்லட் ரெயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டில் அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கு 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இவ்விரு நகரங்களுக்கு இடையேயான 508 கி.மீ. தூரத்திற்கு 12 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் தொழில் நுட்பத்தில் அமைக்கப்படும் புல்லட் ரெயில் திட்டத்தின் மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடி.

    இந்நிலையில், நாட்டின் முதல் புல்லட் ரெயில் எப்போது இயக்கப்படும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    குஜராத்தில் கண்பத் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கருத்தரங்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:

    புல்லட் ரெயில் திட்டத்திற்கான அனைத்துப் பணிகளும் அதிவேகமாக நடைபெற்று வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். குஜராத்தில் அதன் பணிகள் திறம்பட நடைபெற்று வருகின்றன.

    ரெயில் தண்டவாள பாதைகள் அமைப்பது, மின்சார வினியோகம் என அனைத்துப் பணிகளும் துரித வேகத்தில் நடக்கிறது.

    சமீபத்தில் ஜப்பான் மந்திரி நகானோ குஜராத்திற்கு வந்திருந்தார். இந்தத் திட்டத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    ஆகஸ்ட், 2027-ம் ஆண்டு புல்லட் ரெயில் சேவையை தொடங்க வேண்டும். மக்கள் சேவைக்கு அதை அளிக்க வேண்டும் என்பது எங்களின் இலக்காக இருக்கிறது என தெரிவித்தார்.

    • இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் அகமதாபாத்தில் நடந்தது.
    • இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இதனால் டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. 104 ரன் மற்றும் 4 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில், உங்களது பார்ட்னர் அஸ்வினை மிஸ் செய்கிறீர்களா என்ற கேள்விக்கு ஜடேஜா கூறுகையில், டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் அஸ்வினை கண்டிப்பாக மிஸ் செய்கிறோம். பல ஆண்டாக இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் போட்டியை வென்று கொடுப்பவர். டெஸ்ட் போட்டிகளின்போது அஸ்வின் பந்து வீச வேண்டும் என தோன்றும். ஆனால் அவர் அணியில் இல்லை என்பதை உணர்வேன் என உருக்கமாகத் தெரிவித்தார்.

    எதிர்காலத்தில் என்னுடைய இடத்துக்கு வேறு ஒரு வீரர் வருவார். இது கண்டிப்பாக நடக்கும் என தெரிவித்தார்.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 146 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது.

    அகமதாபாத்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது.

    முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல், ஜடேஜா ஆகியோர் சதமடித்து அசத்த 5 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்தியா டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. 104 ரன் மற்றும் 4 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில், டெஸ்ட் அரங்கில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை டிராவிட் (163 போட்டிகளில் 11 முறை) உடன் பகிர்ந்து கொண்டார் ஜடேஜா (86 போட்டிகளில் 11 முறை).

    இந்தப் பட்டியலில் முதலிடத்தில் சச்சின் (200 போட்டிகளில் 14 தடவை) உள்ளார்.

    சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்களில் முதலிடம் பெற்றார் ஜடேஜா இவர் 50 போட்டிகளில் 10 தடவை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • இந்திய அணி சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    அகமதாபாத்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

    அதன்படி இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்திய அணி சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர்.

    இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 128 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 448 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா இதுவரை 286 ரன் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா அடித்த 5 சிக்சர்களின் மூலம் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் மாபெரும் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் மகேந்திர சிங் தோனி 78 சிக்சர்களுடன் 4-வது இடத்தில் இருந்தார். நேற்றைய போட்டியில் ஜடேஜா அடித்த 5 சிக்சர்களோடு 80 சிக்சர்களுடன் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட் (90), சேவாக் (90), ரோகித் சர்மா (88) முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    • குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக்.
    • இது மீன்பிடி மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

    குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக் (Sir Creek) ஆகும்.

    இது மீன்பிடி மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அணமைக் காலமாக பாகிஸ்தான் இந்தப் பகுதியில் ராணுவக் கட்டமைப்புகளை அதிகப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    இந்நிலையில் சர் க்ரீக்பகுதியில் பாகிஸ்தான் எந்த வகையிலும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால், சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

    குஜராத்தின் பூஜ் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் தசரா கொண்டாட்டத்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், "சர் க்ரீக் பகுதியில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏதேனும் தவறான முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அதற்கு வரலாறு மற்றும் புவியியலை மாற்றும் அளவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.

    இந்தப் பிரச்சினை குறித்துப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா பலமுறை முயன்றபோதும், பாகிஸ்தானின் ஒத்துழைக்கவில்லை.

    1965 போரில் இந்திய இராணுவம் லாகூர் வரை சென்றது. இப்போது 2025-ல், கராச்சிக்கு செல்லும் ஒரு வழி இந்த க்ரீக் வழியாகவும் செல்கிறது என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூரின் அனைத்து இலக்குகளையும் இந்தியா வெற்றிகரமாக அடைந்ததாகவும், பாகிஸ்தானுடன் போரைத் தொடங்குவது இந்தியாவின் நோக்கம் அல்ல என்றும் அவர் கூறினார்.  

    • குஜராத்தின் கச் நகரில் பூஜ் பகுதியில் ராணுவ வீரர்கள் சார்பில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
    • இதில் பங்கேற்ற பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் கச் நகரில் பூஜ் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

    அப்போது அவர், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அதன்பின் அவர்களிடையே பேசுகையில், இது புவியியல் அமைப்பு என்பது மட்டுமில்லாமல், உணர்வுபூர்வத்துடனான பூமி மற்றும் தைரியத்திற்கான பல தொடர் நிகழ்வுகளை கொண்டது. 1971-ம் ஆண்டு போரோ அல்லது 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரோ நம்முடைய வீரர்களின் துணிச்சலை இந்த கச் நகரின் எல்லைகள் கண்டன என தெரிவித்தார்.

    நிகழ்ச்சிக்கு பிறகு ராணுவ வீரர்கள் நடத்திய இரவு விருந்திலும் கலந்துகொண்டு அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உணவு சாப்பிட்டார்.

    இந்நிலையில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ராணுவ வீரர்களுடன் தசரா பண்டிகையை கொண்டாடுகிறார்.

    • காட்டில் உள்ள ஒரு இந்து கோவில் முன் சிங்கம் ஓய்வு எடுக்கிறது.
    • சிவன் கோவில் முன் நந்தி இருப்பதுபோல், அமைதியாக இருக்கிறது.

    குஜராத் மாநிலத்தில் ஒரு இந்து கோவில் முன் நடு ராத்திரியில் சிங்கம் ஒன்று கோவிலுக்கு காவல் இருப்பது போன்ற வீடியோ வனத்துறை அதிகாரி (ஐபிஎஸ்) பிரவீன் காஸ்வான் பகிர்ந்துள்ளார். 27 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ பகிர்ந்து என்ன ஒரு தெய்வீக காட்சி. லயன் கோவிலுக்கு காவல் இருப்பது போல் தோன்றுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

    அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சில இது ஏ.ஐ. வீடியோவாக இருக்கலாம் என கருத்து தெரிவித்து்ளளனர்.

    இந்த வீடியோ வனவிலங்குகளுக்கும் இப்பகுதியின் கலாச்சார மரபுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்பைக் காட்டுகிறது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றன. எப்படியோ நவராத்தி விழா காலத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியாவை 5 நாட்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியுள்ளது.
    • வனராஜ் மஞ்சாரியா தனது வளர்ப்பு நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தார்.

    நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து ரேபிஸ் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், குஜராத்தில் வளர்ப்பு நாயின் நகம் கீறியதால் காவல் ஆய்வாளர் ஒருவர் ரேபிஸ் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியாவை 5 நாட்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியுள்ளது. ஆனால் நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்ததுடன், வெறும் நகக் கீறல்தானே என்று அவர் அலட்சியமாக இருந்துள்ளார். இதன் காரணமாக ரேபிஸ் நோய் பாதித்து அவர் உயிரிழந்துள்ளார்.

    ×