என் மலர்
டெல்லி
- டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது.
- டெல்லியில் உள்ள கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றுள்ளது
புதுடெல்லி:
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் விசாரணைக்கு ஆஜரானால் கைதுசெய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முதல் மந்திரி கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்தார். கெஜ்ரிவால் கோரிக்கையின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தனர்.
இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் அவர் முதலமைச்சராக தொடர்வார் என அம்மாநில சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையை ஏவி கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது
- நெருக்கடி நிலையைத் தொடர்ந்து ஹைதியில் இருந்து வெளியேறும்படி பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
- ஆபரேஷன் இந்திராவதி மூலம் 12 இந்தியர்கள் ஹைதியில் இருந்து டொமினிக்காவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
புதுடெல்லி:
கரீபிய நாடான ஹைதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுவினரின் வன்முறை தாக்குதல்களால் பல ஆண்டுகளாக மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை அரசாங்கம் நடத்த தவறியதால் அங்கு சமூக பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனால் காவல் நிலையங்கள், போலீஸ் அகாடமி, சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களைக் குறிவைத்து ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஹைதியில் நிலவும் நெருக்கடியான நிலைமையால் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டினரை அங்கிருந்து வெளியேறும்படி வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஆபரேஷன் இந்திராவதி மூலம் 12 இந்தியர்கள் ஹைதியில் இருந்து டொமினிக்காவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். நமக்கு தேவையான உதவிகளை செய்யும் டொமினிக்காவுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
External Affairs Minister Dr S Jaishankar tweets, "India begins Operation Indravati to evacuate its nationals from Haiti to the Dominican Republic. 12 Indians evacuated today. Fully committed to the security and well-being of our nationals abroad. Thank the Government of the… pic.twitter.com/QMA8cBdHCE
— ANI (@ANI) March 21, 2024
- நாட்டு மக்கள் கெஜ்ரிவால் பக்கம் இருக்கிறார்கள் என்று ஆம் ஆத்மி கருத்து.
- ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சவுரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோர் கெஜ்ரிவால் இல்லத்திற்குச் சென்றுள்ளனர்.
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தலைகுனிய வைக்க பாஜக எந்த நிலைக்கும் போகும், ஆனால் நாட்டு மக்கள் கெஜ்ரிவால் பக்கம் இருக்கிறார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சவுரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோர் கெஜ்ரிவால் இல்லத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எக்ஸ் பக்கத்தில் ஆம் ஆத்மி தொடர் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இதில்," அமலாக்கத்துறை டெல்லியின் மகன் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை அடைந்தது. டெல்லி உள்பட இன்று முழு நாடும் யாருடைய ஆதரவில் நிற்கிறதோ அந்த மலையை பாஜக நகர்த்த முயற்சிக்கிறது. டெல்லி மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று யாரும் அமைதியாக இருக்க மாட்டார்கள்"
#IstandWithKejriwal என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, "அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்த பாஜக எந்த மட்டத்திற்கும் கீழே இறங்கும். டெல்லி உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்கிறார்கள். உங்களின் இந்த சர்வாதிகாரம் நீடிக்காது. ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒரு கெஜ்ரிவால் வெளிப்படுவார்" என பதிவிடப்பட்டிருந்தது.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான், "கெஜ்ரிவாலின் சித்தாந்தத்தை பாஜகவின் அரசியல் அணியால் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் ஆம் ஆத்மியால் மட்டுமே பாஜகவைத் தடுக்க முடியும். சித்தாந்தத்தை ஒருபோதும் அடக்க முடியாது" என்று பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
- ராகுல் காந்தி சக்தி என பேசியது சர்ச்சையானது.
- ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.
புதுடெல்லி:
மும்பையில் நடந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பல சக்திகளுக்கு எதிராக நாம் போராட வேண்டி இருக்கிறது என்றார். மின்னணு வாக்கு இயந்திரம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை சிலரது சக்தியாக சித்தரித்தார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.க., இந்து மதத்தின் சிறப்புக்கும் வழிபாட்டுக்கும் உரிய சக்தியை அவர் இழிவுபடுத்தி விட்டார் என குற்றம் சாட்டியது. மேலும், இந்தியா கூட்டணி பெருமைக்குரிய நமது சக்தியை கேவலப்படுத்துகிறது என கூறியது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எங்களது போராட்டம் என்பது வெறுப்பு நிறைந்த அசுர சக்திக்கு மட்டுமே எதிரானது என தெரிவித்தார்.
- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்
- டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்
புதுடெல்லி:
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் விசாரணைக்கு ஆஜரானால் கைதுசெய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முதல் மந்திரி கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்தார். கெஜ்ரிவால் கோரிக்கையின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தனர்.
இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அமலாக்கத்துறை தன்னை கைது செய்யக்கூடாது என முதல் மந்திரி மனுதாக்கல் செய்தார்.
- கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை டெல்லி ஐகோர்ட் இன்று நிராகரித்துள்ளது.
புதுடெல்லி:
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.
டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் விசாரணைக்கு ஆஜரானால் கைதுசெய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முதல் மந்திரி கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்தார். கெஜ்ரிவால் கோரிக்கையின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தனர்.
- காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
- தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை சுதந்திரமாக செயல்பட வேண்டும்
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் முடக்கப்பட்டுள்ளது அந்த கட்சிக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சோனியா காந்தி, "ஒருபுறம், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பெரும் தொகை நன்கொடையாக வந்துள்ளது. மறுபுறம், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சிக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, தேர்தல் செலவுகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சவாலான சூழ்நிலையிலும் தேர்தல் பரப்புரையை திறம்பட செய்ய எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம்
இது நமது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும். ஜனநாயகத்தை முடக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என்று அவர் பேசினார்.
பின்னர் பேசிய கார்கே, "தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை சுதந்திரமாக செயல்பட வேண்டும். நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் களம் சமமாக இருக்க வேண்டும். கணக்கில் வராத கட்டுக் கட்டான பணம் பாஜகவுக்கு சென்றுள்ளது. ஒரே கட்சி எல்லாவற்றையும் கைக்குள் வைத்துக்கொள்ள முயற்சித்து செயல்படுகிறது.
தேர்தல் பத்திரத்தின் மூலம், 55% நிதியை பாஜக பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெறும் 11% மட்டுமே பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான், எங்கள் வங்கி கணக்குகளையும் முடக்கி, அபாயகரமான விளையாட்டை பாஜக விளையாடியிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
- பொன்முடிக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
- தமிழக அரசின் அடிப்படை உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன?
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.
பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில் பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, "பொன்முடி 8 முறை எம்எல்ஏவாக இருந்தவர். சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளி என தீர்மானித்ததால், பொன்முடி தகுதி நீக்கத்திற்கு உள்ளானார்" என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், "பொன்முடியை மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக விரும்புகிறோம்.
சாக்குபோக்கு செல்வதற்காக அரசியலமைப்பு சட்ட அறம் குறித்து ஆளுநர் பேசி வருகிறார். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விவகாரத்திற்கும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கு வர வேண்டுமா?
இருப்பினும், பொன்முடிக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அடிப்படை உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன? என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு பொன்முடி பதவியை ராஜினாமா செய்தாரா ? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், குற்வாளி என தீர்மானித்ததை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகு, ஆளுநருக்கு இதில் என்ன வேலை இருக்கிறது? இந்த விவகாரத்தில் தீவிரமாக கருத்துக்களை தெரிவிக்க உள்ளோம் என்பதை ஆளுநரிடம் தெரிவியுங்கள்.
ஆளுநர் பதவி அடையாளத்திற்கு மட்டுமே.
ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவலை தரக்கூடியவையாக இருக்கின்றன.
ஆளுநருக்கு இன்று இரவு வரை காலக்கெடு விதிக்கிறோம். நாளை உத்தரவிடுகிறோம். நாளைக்குள் சாதகமான தகவலை தெரிவிக்காவிட்டால் உச்சநீதிமன்றமே ஆளுநருக்கு உத்தரவிடும்.
இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக" தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
- மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை இந்த குழு சரிபார்க்கும்
- தகவல் தொழில்நுட்ப திருத்த சட்டம் 2023-க்கு எதிரான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது
மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளைக் கட்டுப்படுத்த உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை இந்த குழு சரிபார்க்கும். அந்த தகவல் தவறு என அறிவித்து விட்டால் அந்தப் பதிவை சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்கள் உடனடியாக நீக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அவற்றின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு (FactCheck Unit) அமைக்கும் அரசாணையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் 2023-க்கு எதிரான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- வாட்ஸ்அப் மூலம் "விக்சித் பாரத்" தகவல் அனுப்பும் மத்திய அரசு.
- தேர்தல் நடத்தை விதியை மீறுவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார்.
இந்தியாவின் 100-வது சுதந்தர தினவிழா கொண்டாடும் 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக (விக்சித் பாரத்) உருவாக வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். இதை நோக்கி பயணிப்பதாகவும், இதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார்.
மத்திய அரசு "விக்சித் பாரத்" என்ற அத்திட்டம் குறித்து விளம்பரம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் மூலம் விக்சித் பாரத் திட்டம் பெயரில் தகவல் அனுப்புகிறது.
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரின் வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் "விக்சித் பாரத்" தொடர்பான தகவலை நிறுத்துமாறு மத்திய அரசை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
- பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி ஆகியோரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பது பொய். இது முற்றிலும் பொய்.
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் முடக்கப்பட்டுள்ளது அந்த கட்சிக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் மீதான கிரிமினல் நடவடிக்கை. பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி ஆகியோரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா ஜனநாயகம் என்பது பொய். இன்றைய இந்தியாவில் ஜனநாயகம் என்பது இல்லை. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பது பொய். இது முற்றிலும் பொய்.
இந்தியாவில் 20 சதவீத வாக்குகள் உள்ளன. ஆனால், எதற்கும் 2 ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை. தேர்தலில் எங்களை முடக்க திட்டமிட்டுள்ளனர். இன்று எங்களுடைய வங்கி கணக்குள் முடக்கப்படவில்லை என்றாலும் கூடு, இந்திய ஜனநாயகத்திற்கு அதிகப்படியான தொகையான கடன் சேதம் ஏற்பட்டுள்ளது.
இது காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் அல்ல. இது இந்திய ஜனநாயத்தின் முடக்கம். மிகப்பெரிய எதிர்க்கட்சியான நாங்கள் என நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. நாங்கள் விளம்பரம் பதிவு செய்ய முடியவில்லை. எங்களது தலைவர்களை எங்கும் அனுப்ப முடியவில்லை. இது ஜனநாயத்தின் மீதான தாக்குதல்
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பதிலாக மத்திய மந்திரி என சட்டத்தில் திருத்தம்.
- மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம் தவறானது என நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தில் கடந்த 2022-ல் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்குப் பதிலாக பிரதமர், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் கொண்ட குழு ஆணையர்களை தேர்வு செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி இரண்டு தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோரை பிரதமர் மோடி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர்), அமித் ஷா ஆகியோர் கொண்ட குழு நியமனம் செய்தது.
மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் தவறானது. ஆகையால் புதிய ஆணையர்கள் நியமனத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்து விட்டது.
இந்த நிலையில் இந்த மனு இன்று சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் "தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடைவிதிக்க முடியாது. அப்படி தடைவிதித்தால் இந்த நிலையில் அது குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சந்து மீது குற்றுச்சாட்டு ஏதும் இல்லை. நிர்வாகிகளின் கைப்பிடியில் தேர்தல் ஆணையம் என்று உங்களால் கூற முடியாது." என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் இடம் பிடித்திருந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி "பரிசீலனைக்காக ஆலோசனை கூட்டத்திற்கு முந்தைய நாள் இரவு 212 பெயர்கள் வழங்கப்பட்டன. ஆலோசனை கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக 6 பேர் கொண்ட பட்டியல் தரப்பட்டது" என்றார்.






