search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government scheme"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை இந்த குழு சரிபார்க்கும்
    • தகவல் தொழில்நுட்ப திருத்த சட்டம் 2023-க்கு எதிரான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது

    மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளைக் கட்டுப்படுத்த உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

    மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை இந்த குழு சரிபார்க்கும். அந்த தகவல் தவறு என அறிவித்து விட்டால் அந்தப் பதிவை சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்கள் உடனடியாக நீக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அவற்றின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு (FactCheck Unit) அமைக்கும் அரசாணையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் 2023-க்கு எதிரான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
    • இதுபோன்ற தகவல்களை உண்மை கண்டறியும் குழு சரிபார்க்கும்.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், மத்திய அரசு திட்டங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளைக் கட்டுப்படுத்த உண்மை கண்டறியும் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை இந்த குழு சரிபார்க்கும். அந்த தகவல் தவறு என அறிவித்து விட்டால் அந்தப் பதிவை சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்கள் உடனடியாக நீக்க வேண்டும்.

    அப்படி இல்லை எனில் அவற்றின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்
    • புதுவைக்கு மேலும் சுற்றுலா பயணி களை அதிகரிக்க ஆலோசனைகள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலாத்துறை, வணிக விழா சங்கம் சார்பில் வணிக திருவிழா நடந்தது.

    இதில் 10 லட்சத்து 87 ஆயிரம் இலவச கூப்பன்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான பரிசு குலுக்கல் கடந்த மார்ச் 21-ந் தேதி நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு பரிசளிப்பு விழா காந்தி திடலில் நடந்தது.

    சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வரவேற்றார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வாடிக்கையாளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி பேசியதாவது: -

    புதுவையில் புகழ்பெற்ற ஆன்மிக திருத்தலங்கள் உள்ளது. திருக்காஞ்சியில் புஷ்கரணி விழா நடக்கிறது. காரைக்கால் கோவில் நகரத்துக்கு அதிக நிதி ஒதுக்கி ஆன்மிக சுற்றுலாவுக்காக ஆன்மிக பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

    வில்லியனூர் கோவில் நகரமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடற்கரையோரம் பல விடுதிகள் கட்டப்படுகிறது. எந்த அச்சமும் இன்றி சுற்றுலா பயணிகள் தங்கி செல்கின்றனர். புதுவைக்கு மேலும் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க ஆலோசனைகள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கிராமப்புறங்களிலும் சுற்றுலா இடங்களை மேம்படுத்தவும், சிறப்பு மிக்க கீழூரையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்த அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முதல் பரிசாக 11 பேருக்கு கார், 2-ம் பரிசாக 22 பேருக்கு ஸ்கூட்டர், 3-ம் பரிசாக 110 பேருக்கு மொபைல் போன், 4-ம் பரிசாக ஆயிரத்து 170 பேருக்கு சமையலறை பொருட்கள், 10 ஆயிரத்து 961 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குனர் பாலாஜி, வணிக விழா சங்க தலைவர் குணசேகரன், துணை தலைவர்கள் சிவகணேஷ், தணிகாசலம், சங்க செயலாளர் ரவி, இணை செயலாளர்கள் பாலாஜி, ரவி, வேல்முருகன், பொருளாளர் பிரவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்ட இளைய தலைமுறையினர் அரசு திட்டங்களின் மூலம் தொழில்கள் தொடங்கி வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் அளிக்கப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி காரைக்குடி வட்டம், அரியக்குடியில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் அளிக்கப்படுகிறது.

    வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வியாபாரம், சேவை தொழில்கள் மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க முறையே ரூ.5 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கி முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவோர்களாக மாற்றி ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி வருகிறது.

    கலைப்பாடுகளுடன் கூடிய கைவினைப் பொருட்களை தயாரிப்பதற்கான கலையினை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் வகையில், ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி, காரைக்குடி வட்டம், அரியக்குடியில் 25-க்கும் மேற்பட்டவர்கள் தனித்தனியாக வெண்கல குத்துவிளக்கு, கடவுள் உருவங்கள், மணிகள், திருவாட்சி மற்றும் பிற பூஜை பொருட்களை உற்பத்தி செய்யும் பணியினை மேற்கொண்டு வரும் உற்பத்தியாளர்கள், அவர்கள் மேற்கொண்டு வரும் தொழிலை மேம்படுத்தும் வகையில், அரசால் வழங்கப்பட்டு வரும் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் வெண்கல உலோக உற்பத்தியா ளர்களுக்கான குழுமம் ஒன்றை அமைத்து தருவதற்கு கோரிக்கை வைத்துள்ளதன் அடிப்படையில் அதற்கான இடத்தையும் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனைக் கருத்தில் கொண்டு, இளைய தலை முறையினர்கள் இதுபோன்று அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கி, பயன்பெற்று தங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், சிவகங்கை, புள்ளி விவர ஆய்வாளர் நாகராஜன், சிவகங்கை தொழில் கூட்டுறவு அலுவலர் ருத்ரமூர்த்தி, தொழில் கூட்டுறவு மேற்பார்வையாளர் முத்துக்குமார், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×