என் மலர்
டெல்லி
- 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
- 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லத்தக்கவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கடந்த மே 19-ந் தேதி, அந்த நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று அறிவித்தது. பின்னர், இந்த கால அவகாசம், அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று 2000 ரூபாய் நோட்டுகளில் கிட்டத்தட்ட 97.69 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும் மற்றும் 8,202 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்ட மே 19, 2023 அன்று வணிகம் முடிவடையும்போது ரூ.3.56 லட்சம் கோடியாக புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு மார்ச் மாத வணிக முடிவில் ரூ.8,202 கோடியாகக் குறைந்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இதனால், மே 19, 2023 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 97.69 சதவீதம் திரும்பி வந்துவிட்டன. இருப்பினும், 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லத்தக்கவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இதன் அருகில் ஞானவாபி மசூதி இருக்கிறது
- அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இதன் அருகில் ஞானவாபி மசூதி இருக்கிறது. அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி 5 இந்துப் பெண்கள் வாரணாசி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் சில மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த வாரணாசி கோர்ட்டு, மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு உத்தரவிட்டது.
கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது. ஆனால், அது நீரூற்று பகுதி என்றும் தொழுகைக்கு வருபவர்கள் கை, கால் கழுவுவதற்காக அதில் நீர் நிரப்பப்பட்டுள்ளது என்றும் மசூதி நிர்வாகம் தெரிவித்தது.
ஞானவாபி மசூதி வளாகத்தில் தரைகீழ் தளத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் சென்று இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கி வாரணாசி மாவட்ட கோர்ட்டு கடந்த 31-ந்தேதி உத்தரவிட்டது.
வாரணாசி கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டெ ஹமியா மசூதி குழு அலகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் இந்த அப்பீல் மனுவை விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு கடந்த 15-ந்தேதி நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. மசூதி கமிஷன் மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் தொடர்ந்து பூஜை மற்றும் வழிபாடு செய்ய அனுமதி வழங்கி அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஞானவாபி மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, 'ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு தொடர்பாக மசூதி தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
- 2024ம் நிதியாண்டில் சராசரி மாத மொத்த வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது.
- 2023ம் ஆண்டு ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்தது.
மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 11.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் (ஏப்ரல் 2023-மார்ச் 2024) மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ. 20.14 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டில் வசூலித்ததை விட 11.7 சதவீதம் அதிகமாகும்.
2024ம் நிதியாண்டில் சராசரி மாத மொத்த வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியது.
இதுகுறித்து மத்திய அமைச்சகள் வெளியிட்டுள்ள அறிக்கயைில், "மார்ச் 2024க்கான மொத்த நல்ல மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய், 11.5 சதவீத வளர்ச்சியுடன், 1.78 லட்சம் கோடி ரூபாயில் இரண்டாவது அதிகபட்ச வசூலைக் கண்டுள்ளது. உள்நாட்டு ஜிஎஸ்டி வசூல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பால் இந்த எழுச்சி ஏற்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்தது.
மார்ச் 2024க்கான ஜிஎஸ்டி வருவாய் நிகர ரீஃபண்ட் ரூ.1.65 லட்சம் கோடியாகும். இது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலக்கட்டத்தை விட 18.4 சதவீதம் அதிகமாகும்.
இதில், மார்ச் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் இருந்து வரி வசூலாக ரூ.11,017 கோடி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது
- கெஜ்ரிவாலுக்கு வரும் 15-ந்தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது
டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கடந்த மாதம் 21-ந்தேதி (மார்ச்) கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 28-ந்தேதி அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்பின் மார்ச் 28-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஏப்ரல் 1-ந்தேதி (இன்று) வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அவர் மீண்டும் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வருகிற 15-ந்தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்
- செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
- வருகிற 29-ந்தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
புதுடெல்லி:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த பிப்ரவரி 28-ந்தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருப்பதால் அவர் மீதான வழக்கு விசாரணையை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவில், 'செந்தில் பாலாஜி 280 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பைபாஸ் சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி உடல் பரிசோதனை செய்து வருகிறார்.
அவருக்கு ஜாமீன் வழங்க எந்தவொரு நிபந்தனையையும் ஏற்க தயார். விசாரணைக்கு ஒத்துழைக்கவும் தயார்' என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல், ஆஜராகி, 'இந்த மேல்முறையீடு மனுவை பரிசீலிக்க வேண்டும்' என தெரிவித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வருகிற 29-ந்தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
மேலும் கீழமை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் முறையிடப்பட்டது. அந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.
- காங்கிரஸ் கட்சி 3500 கோடி ரூபாய் வருமான வரி கட்ட வேண்டும் என நோட்டீஸ்.
- தேர்தல் களத்தில் சமநிலையை பாதிக்கும் என காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்தது.
வருமான வரி தாக்குதலில் தவறு செய்ததாக காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை அபராதம், வட்டி என சுமார் 3500 கோடி ரூபாய் கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. மேலும் வரி தீர்ப்பாயம் காங்கிரஸ் கட்சியின் சில வங்கி கணக்குகளை முடக்கியது.
இதனால் தேர்தல் நேரத்தின்போது தங்களால் பணம் எடுக்க சிரமமாக உள்ளது என காங்கிரஸ் தெரிவித்தது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. டெல்லி உயர்நீதிமன்றம் எந்த தடையும் பிறப்பிக்கவில்லை.
இதனால் உச்சநீதிமன்றத்தை நாடியது. அப்போது இது வரி தீவிரவாதம். மக்களவை தேர்தலின்போது பணத்தை எடுக்க முடியாத வகையில் முடக்குவதற்கான முயற்சி என குற்றம்சாட்டியது. இது தேர்தலில் சமநிலையை பாதிக்கும் எனவும் தெரிவித்தது.
இந்த வழக்கு பிவி நாகரத்னா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது மத்திய சொலிட்டர் ஜெனரல், தேர்தல் முடியும் வரை கட்டாய நடவடிக்கை எடுக்காது எனத் தெரிவித்தார்.

2024-ல் 20 சதவீதம் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. 135 கோடி ரூபாய் மீட்கப்பட்டது. 1,700 கோடி ரூபாய் கட்டுவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். அதன்பின் 1,700 கோடி ரூபாய் கட்ட வலியுறுத்தப்படும். ஒட்டுமொத்த விசயங்களும் தேர்தலுக்கு பின் சரி செய்யப்படும். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம்" என்றார்.
மத்திய அரசு வரி கட்டுவதற்கு ஏதேனும் இடைக்கால தடைவிதிக்கிறதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, "அப்படி ஏதும் இல்லை. தேர்தல் வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்பதை மட்டும் தெரிவிக்கிறோம்" என்றார்.
- 1976-ம் ஆண்டு இரு நாடுகளின் அரசுகளுக்கும் இடையே ஏற்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமை விட்டு கொடுக்கப்பட்டது.
- கச்சத்தீவு இறையாண்மை இந்தியாவுக்கே உரியது என்று 1958-ம் ஆண்டு அன்றைய அட்டர்னி ஜெனரல் செதால்வத் கூறினார்.
புதுடெல்லி:
இந்திய அரசியலில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பி உள்ளது. கச்சத்தீவு கடந்த 1974-ம் ஆண்டு வரை இந்தியா வசம் இருந்தது.
1974-ம் ஆண்டு இந்தியா, இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதலே கச்சத்தீவில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு ஒப்படைப்பு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் கிடைத்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டார்.
இதையடுத்து பிரதமர் மோடியும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் 'காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று ஒரு விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
பாராளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் 21 முறை பதில் அளித்துள்ளேன்.
கச்சத்தீவு பிரச்சனை எப்படி உருவானது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். அதை பொதுமக்கள் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
1974-ம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்தியா, இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்கவும், புனித பயணத்திற்கும் அனுமதி இருந்தது. 1976-ம் ஆண்டு இரு நாடுகளின் அரசுகளுக்கும் இடையே ஏற்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமை விட்டு கொடுக்கப்பட்டது.
கச்சத்தீவு தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு தொடர்ந்து கடிதங்களை எழுதி வந்துள்ளது. பாராளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் பற்றி அரசு ஆலோசித்து வந்தது.
கச்சத்தீவுக்கு உரிமை கோரும் ஆவணங்களை ராமநாதபுரம் ராஜா வைத்திருந்தார். கச்சத்தீவு விவகாரத்தில் தங்களுக்கு பொறுப்பு இல்லை என்கிற வகையில் தி.மு.க., காங்கிரஸ் பேசுகிறது. கச்சத்தீவை தாரை வார்த்தபோது தி.மு.க.வுக்கு நன்றாக தெரியும். 'தெரியாது' என்று யாரும் சொல்ல முடியாது.
ராணுவ பயன்பாட்டிற்கு கச்சத்தீவை பயன்படுத்த இந்தியா-இலங்கை இடையே போட்டி ஏற்பட்டது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறைத்தவர்களை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளவே இந்த விளக்கம்.
கச்சத்தீவில் மீன்பிடிக்க, வலைகளை உலர்த்த தமிழக மீனவர்களுக்கு அனுமதி உள்ளது. கடந்த 1974-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய மீனவர்களின் உரிமைகள் தொடர்பாக 1974-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
கடந்த 1974-ம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானபோது இந்திய மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கச்சத்தீவை தாரை வார்த்ததால் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய மீனவர்கள் 6,184 பேரை இலங்கை அரசு இதுவரை கைது செய்துள்ளது. 1,175 மீன்பிடி படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.
கச்சத்தீவு இறையாண்மை இந்தியாவுக்கே உரியது என்று 1958-ம் ஆண்டு அன்றைய அட்டர்னி ஜெனரல் செதால்வத் கூறினார். ஆனால் கச்சத்தீவை விட்டுக் கொடுப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று அன்றைய பிரதமர் நேரு தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மார்ச் 21-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
- இரண்டு முறை நீதிமன்றம் அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கடந்த மாதம் 21-ந்தேதி (மார்ச்) கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 28-ந்தேதி அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்பின் மார்ச் 28-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஏப்ரல் 1-ந்தேதி (இன்று) வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அவர் மீண்டும் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வருகிற 15-ந்தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட இருக்கிறார்.
- கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவும், காங்கிரசும் தங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை என்ற அணுகுமுறையை கடைபிடித்தனர்.
- கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என அன்றைய பிரதமர் நேரு தெரிவித்தார்.
புதுடெல்லி:
கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்தது என்பதை தெளிவுபடுத்தும் புதிய உண்மைகள் வெளியாகி உள்ளதாகவும், இதன் மூலம் 'காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது' என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
தொடர்ந்து, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு யாரெல்லாம் பொறுப்பு? என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
கச்சத்தீவு தொடர்பாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
* கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவும், காங்கிரசும் தங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை என்ற அணுகுமுறையை கடைபிடித்தனர்.
* கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு 21 முறை பதில் அளித்துள்ளேன்.
* 1974-ன் ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
* ஆனால் 2 ஆண்டுகளில் மற்றொரு ஒப்பந்தம் மூலமாக அந்த உரிமைகள் பறிக்கப்பட்டன.
* கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என அன்றைய பிரதமர் நேரு தெரிவித்தார்.
* "கச்சத்தீவு இறையாண்மை இந்தியாவுக்கே உரியது என 1958ல் அன்றைய அட்டர்னி ஜெனரல் செதால்வத் கூறினார்" என்று தெரிவித்துள்ளார்.
- 1974-ம் ஆண்டு நட்புறவு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.
- 2015-ல் எல்லைப் பகுதிகளுக்கு ஈடாக வங்காளதேசத்துடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை உங்கள் அரசு மேற்கொண்டதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
புதுடெல்லி:
கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்தது என்பதை தெளிவுபடுத்தும் புதிய உண்மைகள் வெளியாகி உள்ளதாகவும், இதன் மூலம் 'காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது' என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது என்றும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறினார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "1974-ம் ஆண்டு நட்புறவு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. 2015-ல் எல்லைப் பகுதிகளுக்கு ஈடாக வங்காளதேசத்துடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை உங்கள் (பிரதமர் மோடி) அரசு மேற்கொண்டதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
இந்த பிரச்சனையை தீர்த்து கச்சத்தீவை மீட்பதற்கு 10 ஆண்டுகால ஆட்சியில் உங்கள் அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்ததா என்று நீங்கள் சொல்ல வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Pradhan Mantri @narendramodi ji,
— Mallikarjun Kharge (@kharge) March 31, 2024
You have suddenly woken up to the issues of territorial integrity and national security in your 10th year of misrule. Perhaps, elections are the trigger. Your desperation is palpable.
1. "The Land Boundary Agreement between India and Bangladesh…
- காசி தமிழ் சங்கமத்தைப் பொறுத்தவரை நான் காசியின் பாராளுமன்ற உறுப்பினர்.
- தமிழ்நாட்டின் தலைவர்களே, தமிழகப் பாரம்பரியம், வரலாறு மீது பெருமைகொள்ளவில்லை.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வைத்து தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி:- முந்தைய பிரதமர்களை விட, தமிழ் கலாசாரத்தின் மீது அதிக ஈர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். பல முறை இந்த ஆண்டிலேயே தமிழ்நாட்டுக்கு வந்துள்ளீர்கள். உங்கள் வாழ்வில் தமிழகத்திற்கு முதல்முறை வந்தது நினைவிருக்கிறதா?.
பதில்:- கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறேன். கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டப கட்டுமானம் நடக்கும்போது அங்கேயே இருந்திருக்கிறேன். 1975-ல் பிரதமர் இந்திராகாந்தி 'எமர்ஜென்சி' கொண்டுவந்தார். அப்போது நான் தலைமறைவாக இருந்த காலம். இயக்கத்தின் ஒருங்கிணைப்பு பணிகளுக்காக பல ஊர்களுக்கு போக வேண்டியிருந்தது. அப்போது தமிழ்நாட்டுக்கும் வந்துள்ளேன்.
கேள்வி:- கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டோடு தொடர்பில் இருப்பதாக கூறுகிறீர்கள். இங்கு மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் உண்டா?.
பதில்:- ஏராளமாக இருக்கின்றன. என்னை மிகவும் நெகிழ செய்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன். கன்னியாகுமரியில் தொடங்கிய எங்களது ஒற்றுமை யாத்திரை, கேரளாவை தொட்டு, திருப்பி தமிழ்நாடு வழியாக தொடர்ந்தது. அப்போது ஈரோடு பக்கத்தில் ஒரு ஊர். எந்த ஊர் என்று சரியாக நினைவில்லை. அங்கே சுதந்திர போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த ஒரு தியாகி... அதுவும் மிக இள வயதில் உயிர் தியாகம் செய்தவர். அவரது குடும்பத்தில் உள்ள 90 வயது அம்மையாரை பார்க்க நேர்ந்தது. அவர் எனக்கு ஆசீர்வாதம் கொடுக்க வந்தார். அங்கே அந்த தியாகியுடைய நினைவகத்திற்கு மரியாதை செலுத்த சென்றோம். அந்த இடத்தில் அந்த அம்மையார் காட்டிய உணர்ச்சி இருக்கிறதே... அது என்னை நெகிழச்செய்தது.
கேள்வி:- ஒருவேளை, அந்த தியாகி.. தேசியக்கொடி ஏந்தி உயிர்தியாகம் செய்த திருப்பூர் குமரனா?.
பதில்:- ஆமாம். சரியாக சொன்னீர்கள்.. திருப்பூர் குமரன்தான். அந்த மூதாட்டி அளித்த ஆசீர்வாதமும், அந்த அம்மையார் வெளிப்படுத்திய உணர்வுகளும் என்னை நெகிழச்செய்தது.
கேள்வி:- தமிழ்நாட்டிலேயே உங்களுக்கு பிடித்த விஷயம் என்றால் எதை சொல்வீர்கள்? மொழியா? கலாசாரமா? தமிழ் சாப்பாடா?.
பதில்:- அப்படி பிரித்தெல்லாம் என்னால் பார்க்க முடியவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகம் பிடிக்கும். ஆனால் குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும் என்றால், முதலில் மொழி. என் மனதில் ஒரு பெரும் கோபம் இருக்கிறது. ஒரு பெரிய தமிழ் பாரம்பரியத்துக்கு நாம் அநியாயம் செய்திருக்கின்றோம். ஏதாவது ஒரு இடத்தில் டைனோசரோட முட்டை கிடைத்தால், அதை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும். ஆனால் பாருங்கள். பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மொழி நம்மிடம் உள்ளது. அப்படிப்பட்ட புகழ் கொண்ட தமிழ் மொழியை நாம் உலகத்துக்கு சொல்லி பெருமையுடன் கொண்டாடவே இல்லை. இந்த விஷயம் என் மனதில் ஒரு வலியாகவே இருந்தது. அதனால், உலகத்திலேயே பழமையான மொழி எங்கள் தமிழ்மொழிதான் என்று உலகத்தோர் கூடியுள்ள ஐ.நா. அவையில் கூற முடிவெடுத்தேன். ஆனால், பாருங்கள், இப்போது நாட்டில் மொழி அரசியல் நடக்கிறது. நல்ல வேளை. இட்லி, தோசை அரசியல் ஆகவில்லை. இல்லையென்றால் அதையும் தமிழ்நாட்டோடவே முடக்கியிருப்பார்கள்.
இன்றைக்கு ஸ்ரீநகர் போனால் இட்லி தோசை கிடைக்குது. குஜராத்துல இட்லி, தோசையை விரும்பி சாப்பிடறாங்க. நாட்டின் எல்லா மூலையிலயும் இட்லி, தோசை கிடைக்குது. அவ்வளவு ஏன், உலகத்தோட எந்த மூலைக்கு போனாலும் இட்லி, தோசை பிரபலமா இருக்கு. எப்படி இட்லி தோசை உலகம் முழுக்க பரவி இருக்கோ, அதேபோல தமிழ் மொழியும் பரவ வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களால் தமிழை ஒரு பகுதிக்குள் முடக்கி வச்சுருக்காங்க. இதனால தமிழ் மொழிக்கு பெரிய பாதிப்பு. ஏன், இந்தியாவுக்கே இது பாதிப்புதான். இழப்புதான்.
கேள்வி:- ஒரு பிரதமராக தமிழை மையப்படுத்திய சில திட்டங்களை முன்னெடுத்துள்ளீர்கள். எடுத்துக்காட்டாக 'காசி தமிழ் சங்கமம், பாராளுமன்றத்தில் 'தமிழ் செங்கோலை நிறுவியது' போன்றவை. இவை உருவானது எப்படி?
பதில்:- காசி தமிழ் சங்கமத்தைப் பொறுத்தவரை நான் காசியின் பாராளுமன்ற உறுப்பினர். காசிக்கு நான் ஏற்கனவே பலமுறை சென்றிருக்கிறேன். காசியில் உள்ள படகோட்டிகளில் பலர் தமிழ் பேசுகிறார்கள். ஏனென்றால் அதிகபட்ச பயணிகள் தமிழ்நாட்டில் இருந்துதான் வருகிறார்கள். மகாகவி பாரதியாரின் குடும்பம் இன்னும் காசியில் வசிக்கிறது. அவரும் சில காலம் காசியில் இருந்தவர்தான். எனவே, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் பெயரில் ஒரு இருக்கையை ஏற்படுத்தினேன். பிறகு 'காசி தமிழ் சங்கமம் நடத்த வேண்டும் என, எனக்கு தோன்றியது. அதன் மூலம் காசியில் தமிழ் பண்பாட்டை மக்கள் உணர வேண்டும் என எண்ணினேன். காசி தமிழ் சங்கமத்தில்தான், அதிக எண்ணிக்கையிலான தமிழ் புத்தகங்கள் விற்பனையாகின. காசி தமிழ் சங்கமம் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நிகழ்வாக எனக்கு தெரிகிறது.
செங்கோலை பொறுத்தவரை, இந்தியா சுதந்திரம் அடைந்த அந்த முதல் நொடியில், தமிழகத்தின் ஆதீனங்கள் பிரதமர் நேருவுக்கு, ஆட்சி மாற்றத்தின் குறியீடாக, இந்த செங்கோலைத் தந்தனர். ஆனால் இந்த செங்கோலின் பெருமை உணரப்படவில்லை. இந்த செங்கோல் அலகாபாத் அருங்காட்சியகத்தில் கிடந்தது. அதை ஒரு 'வாக்கிங் ஸ்டிக்' என்று கொச்சைப்படுத்தினார்கள். இந்த விவகாரம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. நான் அதை அருங்காட்சியகத்தில் இருந்து கொண்டு வந்தேன். தமிழகத்தின் ஆதீனங்களிடம் இது பற்றி பேசினேன். பல ஆய்வுகளுக்கு பிறகு, புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் அந்த புனித செங்கோலை, சபாநாயகர் இருக்கையின் அருகில் வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். அது மட்டுமில்லை. அது அப்படியே ஒரு மூலையில் இருக்கக்கூடாது என்பதற்காக, ஒரு புதிய நடைமுறையே உருவாக்கினோம். ஆண்டின் முதல் கூட்டத்தொடரில், ஜனாதிபதி உரையாற்ற வரும்போது, ஜனாதிபதியின் முன்பு செங்கோல் எடுத்துச்செல்லப்படும். அதை உரிய இடத்தில் வைத்த பிறகுதான், ஜனாதிபதி தன் உரையை தொடங்குவார். இப்படி ஒரு புதிய சபை மரபையே இந்த ஆண்டு முதல் தொடங்கி வைத்துள்ளேன். தமிழகத்தில் இருந்து நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் இது. இதனை நாம் பெருமையாக நினைக்க வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டின் தலைவர்களே இதை புறக்கணித்தார்கள். இதைவிட துரதிருஷ்டம் வேறு என்ன இருக்கமுடியும்? தமிழ்நாட்டின் தலைவர்களே, தமிழகப் பாரம்பரியம், வரலாறு மீது பெருமைகொள்ளவில்லை. இதனால், எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்பதைப் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை.
கேள்வி:- அயோத்தி ராமர் கோவிலில் நுழையும்போது, முதல் தீப ஆராதனை செய்தபோது, உங்கள் மனதில் என்ன ஓடியது?.
பதில்:- அயோத்தி விழாவிற்கு ஆலய நிர்வாகிகள் என்னை வந்து அழைத்தபோது, அது என்னை நிலைகுலைய வைத்தது. ஒருவித ஆன்மிக உணர்வில் மூழ்க ஆரம்பித்தேன். இதனைப் பற்றி விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று எதிரிகளாகப் பார்க்கப்படும் இந்த காலத்தில், இது சிலருக்கு நகைச்சுவையாகத் தெரியும். இதை எனக்கெதிரான ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்தக்கூடும். ஆனால், எனக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம். அதன் பின்னர் நான் 11 நாட்கள் விரதம் இருக்க முடிவு செய்தேன். இந்த விரத நாட்களில் தென்னிந்தியாவில் பகவான் ஸ்ரீ ராமரோடு தொடர்புடைய எத்தனை இடங்கள் உள்ளனவோ அத்தனை இடங்களுக்கும் செல்லத் தீர்மானித்தேன். இந்த 11 நாட்களில் நான் எனக்குள்ளே பல மாற்றங்களை உணர ஆரம்பித்தேன். நான் அயோத்திக்கு வந்தபோது, அந்த ஆலயத்தில் ஒவ்வொரு அடி எடுத்துவைத்தபோதும், என் மனதுக்குள் எண்ணங்கள் ஓடின.
நான் பிரதமராக இருப்பதால், எனக்கு இந்த பாக்கியமா என நினைத்தேன். இல்லை, நான் என்னை ஒரு பாரதக் குடிமகனாக தான் நினைத்தேன். 140 கோடி மக்களின் பிரதிநிதியாக நினைத்தேன். சாதாரண ஒரு பக்தனைப் போலதான் உணர்ந்தேன். மனதில் இருந்தது எல்லாம் இந்த தேசம், 50 ஆண்டு கால போராட்டம், லட்சக்கணக்கான மக்களின் உயிர்த்தியாகம், லட்சக்கணக்கான மக்களின் தவம், 500 ஆண்டுகளாக பல தலைமுறைகளின் ஆசை, பக்தி, எண்ணம். இவை எல்லாம் பூர்த்தி ஆகிறது என்று நினைத்தேன்.
குழந்தை ராமரின் எதிரே நின்றபோது, முதலில் என்னுடைய பார்வை அவரது பாதத்தில் நிலைகொண்டது. அதன் பிறகு, அவரது கண்களை பார்த்தேன். அதன் பின்னர் என் பார்வை நகரவே இல்லை. அங்கேயே நின்றுவிட்டது. அங்கேயிருந்த பூசாரிகள் என்னை அதைச் செய்யுங்கள், இதைச் செய்யுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் எதிலும் என் மனம் செல்லவில்லை. இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது, குழந்தை ராமர் என்னிடத்தில் ஏதோ சொல்வது போல் தோன்றியது. இந்தியாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது எனச் சொல்வதுபோலத் தோன்றியது. பசுமையான தினங்கள் தொடங்கிவிட்டன, பாரதத்தின் வளர்ச்சி தொடங்கிவிட்டது என சொல்வதுபோல் தோன்றியது.
கேள்வி:- அந்த 11 நாள் விரதத்தில், நீங்கள் தமிழ்நாட்டுக்கும் வந்தீர்கள். ஸ்ரீரங்கம் மற்றும் ராமேசுவரம் வந்த அனுபவத்தைப் பற்றி ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?.
பதில்:- ஸ்ரீரங்கத்தில்தான் கம்ப ராமாயணம் அரங்கேற்றப்பட்டது என அங்கிருந்த விவரம் அறிந்தவர்கள் என்னிடத்தில் சொன்னார்கள். அதே மண்டபத்தில் கம்பராமாயணத்தைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
கேள்வி:- எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு என்னவென்றால், நீங்கள் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தேர்தலுக்கு முன் திட்டமிட்டு நடத்தினீர்கள் என்பதுதான்...
பதில்:- இதோ பாருங்கள், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்தது. அதன் அடிப்படையில்தான் ராமர் ஆலயம் கட்டப்பட்டது. அதனைக் கட்டியவர்கள் வேறு ஆட்கள். ஒரு தனியார் அறக்கட்டளை. அதனால், இந்த நேரத்தை கடவுளேதான் முடிவு செய்திருக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, அதன் பின்னர் கட்டிட வேலை ஆரம்பம், குழந்தை ராமரின் பிராணபிரதிஷ்டை இவை அனைத்திலும் சரியாக நடந்தது என்றால், இதில் மனிதச் செயல்பாடு எங்கேயாவது தென்படுகிறதா? இது ஒரு முறைப்படி நடந்துள்ளது. தேர்தலுக்கு முன் இதெல்லாம் நடக்கும் என்று, தீர்ப்பு எழுதியவர் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.
கேள்வி:- ராமர் ஆலயம் மற்றும் அது தொடர்பான விழாக்கள் எல்லாம், வட இந்தியர்களின் விழாக்கள் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சொல்கின்றனர். இதனால், தமிழ்நாட்டில் தாக்கம் ஏற்படாது என்கின்றனரே?.
பதில்:- இந்தியாவில் உள்ள கிராமங்களின் பெயர்பட்டியலை எடுத்துப்பாருங்கள். இந்த நாட்டில் ராமருடைய பெயருடன் தொடர்புடைய கிராமங்கள் பல இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ராமநாதபுரம். இந்த நாடு முழுவதும், எந்த மாநிலத்தில் இத்தகைய ராமர் தொடர்புடைய ஊர்கள் அதிகம் இருக்கிறது தெரியுமா? தமிழ்நாட்டில்தான். அயோத்திக்கு அருகே கூட இத்தனை ஊர்கள் இல்லை.
இப்போது சொல்லுங்கள், தொடர்பில்லை என்று சொல்பவர்களை என்ன சொல்வது? தென்னிந்தியாவில் இருக்கும் ஆண்களின் பெயர்களை பாருங்கள். ராமருடன் தொடர்புடைய பெயர்கள்தான் அதிகம் இருக்கும்.
கேள்வி:- உங்கள் பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஊழல் பற்றி பேசிவருகிறீர்கள். இவை 10, 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை. இன்றும் இவை இந்திய மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்களா?
பதில்:- இந்தியக் குடிமக்கள், இந்த ஊழல் முதலிலேயே தடுக்கப்பட்டிருந்தால் இந்தியா எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கும்? என்று நினைக்கிறார்கள். இந்த ஊழல் அப்போது நடந்தது, அதைப்பற்றி இப்போது பேசுவதில் என்ன பயன் என நினைக்க மாட்டார்கள். ஊழல் வழக்கில் சிறை சென்றவர்களை தலைவர்களாக அமரவைத்து நாட்டை வழிநடத்த சிலர். இன்று ஊழல்வாதிகளை காப்பாற்ற பேரணிகள் நடத்தப்படுகின்றன. அமலாக்கத்துறை சோதனை நடத்தியதால், போதைபொருள் விற்பவர்கள் சிறை சென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இன்று போதைப் பொருள் ஒரு பெரும் பிரச்சினையாக நம் முன்னே நிற்கிறது.
பணம் சம்பாதிக்க போதைப் பொருள் விற்கப்படுகிறது. அந்தப் பணப்பரிமாற்றத்தை அமலாக்கத்துறை தடுக்கிறது என்றால், அமலாக்கத்துறைக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பணம் யார் கொடுத்தது. யார் வாங்கினார்கள். எப்போது கொடுத்தது. எல்லா விவரங்களும் கிடைக்கிறது.
- தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் உள்ளன. எல்லா விசயங்களும் முழுமையாக இல்லை.
பிரதமர் மோடி தந்தி டி.வி.க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
தேர்தல் பத்திரம் விவாகரம் பா.ஜனதா கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில் பின்வருமாறு:-
இந்த விவாகரத்தில் நான் என்ன செய்து விட்டேன். எதனால் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என சொல்லுங்கள். இதற்காக இவர்கள் (எதிர்க்கட்சிகள்) எல்லோரும் சந்தோசப்பட்டு ஆடுகிறார்கள். இவர்கள் எல்லோரும் துன்பம்தான் படப்போகிறார்கள்
இந்த புத்திசாலிகளிடம் கேட்கிறேன். 2014-க்கு முன் எத்தனை தேர்தல் நடந்துள்ளது. அத்தனை தேர்தல்களிலும் எவ்வளவு செலவு ஆகியிருக்கும். அந்த பணம் எங்கிருந்து வந்தது? யாருக்கு கொடுக்கப்பட்டது என்று எந்த நிறுவனமாவது சொல்ல முடியுமா?.
தற்போது மோடி வந்து தேர்தல் பத்திரத்தை உருவாக்கிவிட்டார். அதனால் உங்களால் தேட முடிகிறது. பணம் யார் கொடுத்தது. யார் வாங்கினார்கள். எப்போது கொடுத்தது. எல்லா விவரங்களும் கிடைக்கிறது. தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் உள்ளன. எல்லா விசயங்களும் முழுமையாக இல்லை. சில குறைகளை தீர்த்துவிட்டால், தேர்தல் பத்திரத்தில் நன்மைகள் கிடைக்கும்.






