search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கச்சத்தீவு விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கச்சத்தீவு விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

    • கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவும், காங்கிரசும் தங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை என்ற அணுகுமுறையை கடைபிடித்தனர்.
    • கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என அன்றைய பிரதமர் நேரு தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்தது என்பதை தெளிவுபடுத்தும் புதிய உண்மைகள் வெளியாகி உள்ளதாகவும், இதன் மூலம் 'காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது' என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

    தொடர்ந்து, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு யாரெல்லாம் பொறுப்பு? என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

    கச்சத்தீவு தொடர்பாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    * கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவும், காங்கிரசும் தங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை என்ற அணுகுமுறையை கடைபிடித்தனர்.

    * கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு 21 முறை பதில் அளித்துள்ளேன்.

    * 1974-ன் ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

    * ஆனால் 2 ஆண்டுகளில் மற்றொரு ஒப்பந்தம் மூலமாக அந்த உரிமைகள் பறிக்கப்பட்டன.

    * கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என அன்றைய பிரதமர் நேரு தெரிவித்தார்.

    * "கச்சத்தீவு இறையாண்மை இந்தியாவுக்கே உரியது என 1958ல் அன்றைய அட்டர்னி ஜெனரல் செதால்வத் கூறினார்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×