என் மலர்
டெல்லி
- 3 மாதங்களில் குடியேற ராகுல்காந்தி திட்டம்.
- டெல்லி சுனக்ரி பாக் சாலையில் அமைந்துள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு மத்திய அரசு சார்பில் டெல்லியில் புதிய பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லி சுனக்ரி பாக் சாலை எண்.5 என்ற முகவரியில் அவருக்கு பங்களா ஒதுக்கப்பட்டு உள்ளதாக பாராளுமன்ற இல்லங்கள் குழு வட்டாரங்கள் கடந்த மாதம் தெரிவித்தன.
இந்த பங்களாவை ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா வதேரா ஏற்கெனவே பார்வையிட்டு சென்றார். எனவே ராகுலுக்கு இந்த பங்களா ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
புதிய பங்களா ஒதுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக ராகுல் காந்திக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும், அவரது பதிலுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற இல்லங்கள் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள பங்களாவில் ராகுல்காந்தி குடியேற இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த பங்களாவில் தங்குவதற்கு ராகுல்காந்தி சம்மதம் தெரிவித்ததையடுத்து வீடு ஒதுக்கீடு தொடர்பாக அவருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் வழங்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த வீடு புதுப்பிக்கப்பட்டு அதில் அலுவலகமும் அமைக்கப்பட்ட பிறகு அதில் குடியேற ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார். அதற்கு இன்னும் 3 மாதம் ஆகலாம்.
எனவே புதுப்பிப்பு பணிகள் முடிந்ததும் இன்னும் 3 மாதங்களில் புதிய பங்களாவில் குடியேற ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். அதுவரை அவர் ஜன்பத் இல்லத்தில் தங்கி இருப்பார் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
- வங்காளதேசத்தில் இருந்து இந்தியர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
- கொல்கத்தாவில் இருந்து வங்காளதேச தலைநகருக்கு தினமும் இரண்டு சேவைகளையும் இயக்குகிறது.
வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் அங்கு உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் வங்காளதேசத்தில் இருந்து இந்தியர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில் ஏர் இந்தியா சிறப்பு விமானம் நேற்று இரவு வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு சென்றடைந்தது. அங்கிருந்து 6 குழந்தைகள் உள்பட 205 இந்தியர்களுடன் புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து டாக்காவிற்கு இயக்கப்படும் 2 விமானங்களைத் தவிர, இந்திய குடிமக்களை அழைத்து வர ஏர் இந்தியா சிறப்பு விமானங்களையும் இயக்கலாம் என்று தெரிகிறது.
இதேபோல் விஸ்தாரா, இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்களும் தங்களது விமான சேவையை மீண்டும் வங்காளதேசத்துக்கு இயக்க தொடங்கி உள்ளன.
விஸ்தாரா நிறுவனம் மும்பையில் இருந்து தினசரி விமானங்களையும், டெல்லியில் இருந்து டாக்காவிற்கு மூன்று வாராந்திர சேவைகளையும் இயக்குகிறது. இண்டிகோ நிறுவனம் டெல்லி, மும்பை மற்றும் சென்னையில் இருந்து டாக்காவிற்கு தினமும் ஒரு விமானத்தையும், கொல்கத்தாவில் இருந்து வங்காளதேச தலைநகருக்கு தினமும் இரண்டு சேவைகளையும் இயக்குகிறது.
- 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா?
- பொதுமக்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை.
10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா? என்ற சந்தேகம் இன்னும் பல இடங்களில் நீடித்து வருகிறது.
10 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் கிழிந்தும் கசங்கியும் காணப்படுகிறது. இதனை தவிர்க்க ரிசர்வ் வங்கி கடந்த 2009-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து 2017-ம் ஆண்டு வரை 14 முறை 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது.
ஆனால் 10 ரூபாய் நாணயம் வெளியானதில் இருந்தே இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நாணயம் செல்லாது என்ற வதந்தி வேகமாக பரவியது. இது எங்கிருந்து எப்படி பரவியது என்பது தெரியவில்லை.
பொதுவாக காய்கறி வியாபாரிகள், மளிகை வியாபாரிகள், சிறு ஓட்டல் வியாபாரிகள், சில்லறை காசுகள் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகினாலும் 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் மட்டும் வாங்க மாட்டோம் என கூறினர்.

கிழிந்து போன கசங்கிய 10 ரூபாய் நோட்டு கூட வாங்கும் பொதுமக்கள் நாணயங்களை வாங்குவதில்லை.
பெரிய வணிக வளாகங்களில் கூட 10 ரூபாய் நாணயங்கள் குறித்து தவறான எண்ணம் கொண்டுள்ளனர். இதன் காரணமாக 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் குறைந்து வருகின்றன. அதனை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் தான் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும். அவற்றை மறுக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியது . நாணயங்களை வாங்க மறுத்தால் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கையும் செய்தது. ஆனாலும் அது பல இடங்களில் எடுபடவில்லை.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரிசர்வ் வங்கி ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் தற்போது 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் வர தொடங்கியுள்ளன.
ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதிகளில் இன்னும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி தொடர்ந்து பரவி வருகிறது. கிழிந்த ரூபாய் நோட்டுகளுடன் 10 ரூபாய் நாணயங்களையும் பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து அதற்கு மாற்றாக ரூபாய் நோட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.
இதனால் விஜயவாடாவில் உள்ள ஒரு வங்கியில் மட்டும் 12 லட்சம் ரூபாய் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இல்லாமல் வீணாக குவிந்து கிடக்கின்றன.
இதே போல பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் 10 ரூபாய் நாணயங்கள் வீணாகக் கிடக்கின்றன.
இது ரிசர்வ் வங்கிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நாணயங்கள் தொடர்பாக நாடு முழுவதும் பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வியாபாரிகள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கக்கூடாது என மீண்டும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- அம்பானியின் வீட்டில் வைத்து நடந்த இரவு விருந்தில் தனது குழந்தைகளுடன் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார்.
- ராகுல் ஒரு துறவி, துறவிகளுக்கு ஜாதி கிடையாதுதான், எனவே அனுராக் பேசியது தவறுதான் என்றும் தெரிவித்தார்.
ஆசியாவின் முதன்மைப் பணக்காரரான இந்தியத் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கொண்டாட்டங்கள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஆடம்பரமான முறையில் நடந்து முடிந்தது. இந்திய அரசியல் சினிமா பிரபலங்கள் முதல் உலக ஐகான்கள் வரை இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடந்த திருமணத்திலும் பிரதமர் மோடி உட்படப் பல பிரபலங்கள் கடந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர்களும் அம்பானி பத்திரிகை வைத்த நிலையில் அவர்களது தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம் மோடியை பின் இருந்து இயக்குவது அம்பானி- அதானி என்ற இரு தொழிலதிபர்களே என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருவதே ஆகும்.

இந்தநிலையில்தான், நேற்று மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பாஜக எம்.பி நிஷாந்த் துபே, அம்பானி வீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார் என்று தெரிவித்தது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பட்ஜெட் மீது அவர் உரையாற்றும்போது , அம்பானி வீட்டு விழாவில் யார் தான் கலந்துகொள்ளவில்லை, அனைத்து அரசியல்வாதிகளையும் அங்கு பார்க்க முடிந்தது. மும்பையில் உள்ள அம்பானியின் வீட்டில் வைத்து நடந்த இரவு விருந்தில் தனது குழந்தைகளுடன் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். ஆனாலும் அம்பானியை அவையில் காங்கிரஸ் தாக்கிப் பேசுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதனை மறுத்து காங்கிரஸ் தரப்பு எம்.பிக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பிரியங்கா அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றும் அந்த சமயத்தில் அவர் நாட்டிலேயே இல்லை என்றும் காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மோடியின் சக்கர வியூகத்தில் நாடு மாட்டிக்கொண்டுள்ளது என்றும் அவரை இயக்கும் 6 பேரில் அம்பானியும் ஒருவர் என்று தெரிவித்தார். மேலும், அம்பானி A 1[அக்யூஸ்ட் நம்பர் 1] அதானி A 2[அக்யூஸ்ட் நம்பர் 2] என்று அவர்களின் படத்தைக் காட்டி மக்களவையில் கடுமையாக தாக்கிப் பேசியது குறிப்பிடத்தக்கது.

மேலும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ராகுல் காந்தியை ஜாதி தெரியாதவர்கள் என்று கூறியது சர்ச்சையான நிலையில் அதுகுறித்து அவையில் பேசிய நிஷிகாந்த் தூபே, ராகுல் ஒரு துறவி, துறவிகளுக்கு ஜாதி கிடையாதுதான், எனவே அனுராக் பேசியது தவறுதான் என்று தெரிவித்தார்.
- அமலாக்கத்துறை சார்பில் 7,083 அமலாக்க வழக்கு தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன.
- 1.39 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் சொத்துக்கள் பறிமுதல் அல்லது முடக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கில் 93 சதவீதம் வரை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு சார்பில் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேட்ட கேள்விக்கு மத்திய இணை நிதி மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அப்போது ஜூலை 31-ந்தேதி வரை அமலாக்கத்துறை சார்பில் 7,083 அமலாக்க வழக்கு தகவல் அறிக்கைகள் அல்லது ECIRs பதியப்பட்டுள்ளன. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 93 சதவீதம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டம் (PMLA) 2002-ல் இயற்றப்பட்டது. 2005 ஜூன்-1ல் அமல்படுத்தப்பட்டது.
1.39 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் சொத்துக்கள் பறிமுதல் அல்லது முடக்கப்பட்டுள்ளது. 3725.76 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 4,651.68 ரூபாய் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 1,31,375 கோடி ரூபாய் அளவிலான் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வங்காளதேச போராட்டத்தில் வெளிநாடு சக்திகளின் தலையீடு இருப்பதாக தகவல்.
- குறிப்பாக பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக தகவல் வெளியானது குறித்து ராகுல் காந்தி கேள்வி.
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்துள்ளார். ராணுவம் இடைக்கால அரசு அமைக்க இருப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
வங்காளதேச தேசத்தில் அசாதாரண நிலை நிலவி வரும் நிலையில் இந்திய அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்தில், போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த கடந்த சில வாரங்களாக டாக்காவில் நடந்த செயல்களில் வெளிநாட்டு சக்திகளின், குறிப்பாக பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாக செய்திகள் வந்ததாக ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய அரசு "இந்த கோணத்தில் விசாரித்து வருகிறோம். வன்முறை எதிர்ப்புகளுக்கு மத்தியில் வங்காளதேசத்தின் நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் பாகிஸ்தான் டிப்ளோமேட்டிக் அதிகாரி ஒருவர் தனது சமூக ஊடக டிஸ்பிளே படத்தை தொடர்ந்து மாற்றி வந்ததாக செய்திகள் வெளியானது. இது ஏதாவது பெரிய விஷயத்தை சுட்டிக் காட்டுகிறதா? என்று ஆய்வு செய்து வருகிறோம்" என பதில் அளித்தது.
மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், ஜே.பி. நட்டா, கிரண் ரிஜிஜூ, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரசின் கே.சி. வேணு கோபால், தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு, தேசியவாத காங்கிரசை சேர்ந்த (சரத்பவார் அணி) சுப்ரியா சுலே உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
- எச்சரிக்கையாக இருக்கும்படி எல்லைக் காவல் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- வங்காளதேசத்தில் 19,000 இந்தியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
புதுடெல்லி:
வங்காளதேச விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று மதியம் அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருவதற்கு மிகக் குறுகியகால ஒப்புதல் ஒன்றை கோரினார்.
அண்டை நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி எல்லைக் காவல் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வங்காளதேசத்தின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
வங்காளதேசத்தில் 19,000 இந்தியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 9,000 மாணவர்கள் உள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் கடந்த ஜூலை மாதத்தில் இந்தியா திரும்பியுள்ளனர்.
ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று ஊரடங்கு உத்தரவையும் மீறி டாக்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்தனர். பாதுகாப்பு அமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யும் முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
வங்காளதேச அதிகாரிகளிடமிருந்து விமான அனுமதிக்கான கோரிக்கையையும் நாங்கள் பெற்றோம். அவர் நேற்று மாலை டெல்லி வந்தார் என தெரிவித்தார்.
- எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- அவரது உடல்நிலை நலமுடன் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி (96), முதுமை காரணமாக உடல்நல பாதிப்புகளுக்காக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை நலமுடன் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல பாதிப்புகளுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
- பட்டு நூலினால் ஆன பொருட்களையும், தோல் பொருட்களையும் வாங்குவது இல்லை
- பிரியங்கா, மாஹி ஆகியோரை அவர்கள் மகள்களாக தத்தெடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தான் சமீபத்தில் சைவமாக மாறியுள்ளதகவும் மாறியதற்கான அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த வளாகத்தில் நரம்பியல் பிரச்சனை கொண்டவர்கள் தொடங்கிய கேன்டீனை திறந்து வைத்து சந்திரசூட் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், எனக்குப் பிரியங்கா, மாஹி என்ற இரண்டு மாற்றுத்திறனுடைய குழந்தைகள் இருக்கின்றனர். நான் செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் அவர்கள் எனக்கு இனஷ்பிரேஷனாக உள்ளனர்.

சமீபத்தில் நான் சைவமாக மாறினேன். எனது மகள் என்னிடம் வந்து, நாம் எதற்கும் கொடுமை செய்யாத வாழ்க்கையை வாழவேண்டும் என்று கூறியதே அதற்குக் காரணமாகும் என்று தெரிவித்தார், மேலும், தானும் தனது மனைவியும் பட்டு நூலினால் ஆன பொருட்களையும், தோல் பொருட்களையும் வாங்குவது இல்லை என்றும் சந்திரசூட் தெரிவித்தார்.
சந்திரசூட் - ராஷ்மி தம்பதிக்கு அபினவ், சிந்தன் என்ற மகன்கள் உள்ள நிலையில் பிரியங்கா, மாஹி ஆகியோரை அவர்கள் மகள்களாக தத்தெடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
- வங்கதேசம் நாடு முன்பு பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது.
- வங்கதேசத்தில் ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீடு காரணமாக ஏற்பட்ட வன்முறையால் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு உள்ளது.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா ஹெலிகாப்டர் மூலம் அந்த நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந்துள்ளார்.
வங்கதேசம் நாடு முன்பு பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது. 1971-ம் ஆண்டு அந்த நாடு ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் சுதந்திர போராட்டம் நடத்தி தனி நாடாக மாறியது. இதனால் ஷேக் முஜிபுர் ரஹ்மானை வங்கதேசத்தின் தந்தை என்று போற்றுகிறார்கள்.
அவரது மகள்தான் ஷேக் ஹசீனா. வங்கதேசத்தில் 5-வது முறையாக ஆட்சியில் அமர்ந்த சிறப்பு அவருக்கு உண்டு. ஆனால் வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது அவருக்கு எதிராக மாறியது.
வங்கதேசத்தில் ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு மட்டும் 30 சதவீதம் வாய்ப்பு கொடுக்கப்படுவதால் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக மாணவர்கள், இளைஞர்கள் கருதினார்கள்.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த மாதம் அவர்களது போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
இந்த நிலையில் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து வங்கதேச சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதனால் மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் ஏற்கனவே நடந்த போராட்டத்தில் கைதான சுமார் 11 ஆயிரம் மாணவர்கள், இளைஞர்களை அரசு விடுவிக்காததால் நேற்று முன்தினம் முதல் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டத்தில் மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஷேக் ஹசீனா சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் மாணவர்கள் ஏற்கவில்லை. நேற்று அவர்கள் வங்கதேசத்தில் தலைநகர் டாக்காவில் மிக பிரமாண்டமான ஊர்வலத்தை நடத்தினார்கள்.
இதையடுத்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வங்கதேசத்தில் இருந்து வெளியேறினார். அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
ஷேக் ஹசீனா தன்னுடன் தனது தங்கை ஷேக் ரெஹனாவுடன் ஹெலிகாப்டரில் டாக்காவில் இருந்து புறப்பட்டு வந்தார். அவரது ஹெலிகாப்டரை இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து பாதுகாப்பு வழங்கியது. முதலில் அவரது ஹெலிகாப்டர் திரிபுரா செல்வதாக கூறப்பட்டது.
ஆனால் ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் வந்து இறங்கியது. இந்த விமானப்படை தளம் டெல்லிக்கு மிக அருகில் இருக்கிறது. ஷேக் ஹசீனாவை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் வரவேற்று பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றார்.
ஷேக் ஹசீனாவின் மகள் சய்மா டெல்லியில் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குனராக உள்ளார். அவர் வீட்டுக்கு ஷேக் ஹசீனா சென்றதாக தகவல்கள் வெளியானது. அங்கு தனது பேரக்குழந்தைகளை பார்த்து விட்டு ஷேக் ஹசீனா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
டெல்லியில் ஷேக் ஹசீனா ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இந்திய அரசு சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மத்திய அரசு செய்து கொடுத்துள்ளது.
டெல்லியில் ஷேக் ஹசீனா எந்த பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் டெல்லியில் தற்காலிகமாக தங்கியிருக்க மட்டுமே அனுமதி வழங்கி இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஷேக் ஹசீனா இதற்கு முன்பும் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு லண்டனில் தஞ்சம் அடைந்து இருந்தார். இந்த தடவையும் அவர் லண்டனில் தஞ்சம் அடைய விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தடவை நிரந்தரமாக லண்டனில் குடியேற அவர் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
அதற்கு ஏற்ப அவர் இங்கிலாந்து அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். இங்கிலாந்து அரசு அனுமதி கொடுத்ததும் ஷேக் ஹசீனா லண்டன் புறப்பட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை அவர் டெல்லியில் தங்கி இருப்பார்.
இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் அரசியல் எதிர்ப்பாளர்கள் நேற்றும் இன்றும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறியதை அவரது எதிரிகள் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறார்கள்.
இதற்கிடையே வங்கதேசத்தில் இன்று இடைக்கால அரசும் அமைக்கப்பட்டுஉள்ளது. எனவே அங்கு அமைதி திரும்ப தொடங்கிஉள்ளது.
- பாராளுமன்றத்தில் உள்ள அறையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
- பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
புதுடெல்லி:
வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்து வங்காளேதச நிலவரம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று இரவு எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து மத்திய மந்திரிகளுடன் ஆலோசித்தார்.
இந்த நிலையில் வங்காளதேசம் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது. அதன் படி காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தில் உள்ள அறையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜூ, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரசின் கே.சி. வேணு கோபால், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரசை சேர்ந்த (சரத்பவார் அணி) சுப்ரியா சுலே உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தியா-வங்காள தேச எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வங்காளதேச அரசியல் சூழல், ஷேக் ஹசினா இந்தியாவுக்கு வந்தது உள்ளிட்டவை குறித்து வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கூட்டத்தில் விரிவான விளக்கத்தை அளித்தார்.
பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவினையும், புரிதலையும் பாராட்டுவதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.
#WATCH | Delhi: All-party meeting underway in the Parliament on the issue of Bangladesh. EAM Dr S Jaishankar briefs the members of different political parties. pic.twitter.com/4Cl1rFRkyG
— ANI (@ANI) August 6, 2024
- ராணுவ விமானம், டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
- டெல்லியில் உள்ள தனது மகள் சைமா வாசேத்தை சந்தித்ததாக தெரிகிறது.
வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற இந்தியாவின் உதவியை நாடினார். எனவே அவருக்கு மத்திய அரசு உதவ முன்வந்தது.
அதன்படி ஷேக் ஹசீனாவுடன் டாக்காவில் இருந்து கிளம்பிய ராணுவ விமானம், டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
பின்னர் அவர் டெல்லியில் உள்ள தனது மகள் சைமா வாசேத்தை சந்தித்ததாக தெரிகிறது. அவர் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குனராக உள்ளார்.
இதனிடையே, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசினாவுக்க தற்காலிகமாக இங்கு தங்கும் அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஷேக் ஹசீனா பிரிட்டனுக்கு இடம்பெயர்வதற்கான அனுமதி நிலுவையில் உள்ளதால், அவர் தற்காலிகமாக இந்தியாவில் தங்க வைக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.






