பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை நலமுடன் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
LK Advani
Published on

புதுடெல்லி:

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி (96), முதுமை காரணமாக உடல்நல பாதிப்புகளுக்காக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை நலமுடன் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல பாதிப்புகளுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com