சைவமாக மாறிய தலைமை நீதிபதி சந்திரசூட்.. வெளியே சொன்ன கியூட் காரணம்

பட்டு நூலினால் ஆன பொருட்களையும், தோல் பொருட்களையும் வாங்குவது இல்லைபிரியங்கா, மாஹி ஆகியோரை அவர்கள் மகள்களாக தத்தெடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
சைவமாக மாறிய தலைமை நீதிபதி சந்திரசூட்.. வெளியே சொன்ன கியூட் காரணம்
Published on

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தான் சமீபத்தில் சைவமாக மாறியுள்ளதகவும் மாறியதற்கான அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த வளாகத்தில் நரம்பியல் பிரச்சனை கொண்டவர்கள் தொடங்கிய கேன்டீனை திறந்து வைத்து சந்திரசூட் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், எனக்குப் பிரியங்கா, மாஹி என்ற இரண்டு மாற்றுத்திறனுடைய குழந்தைகள் இருக்கின்றனர். நான் செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் அவர்கள் எனக்கு இனஷ்பிரேஷனாக உள்ளனர்.

சமீபத்தில் நான் சைவமாக மாறினேன். எனது மகள் என்னிடம் வந்து, நாம் எதற்கும் கொடுமை செய்யாத வாழ்க்கையை வாழவேண்டும் என்று கூறியதே அதற்குக் காரணமாகும் என்று தெரிவித்தார், மேலும், தானும் தனது மனைவியும் பட்டு நூலினால் ஆன பொருட்களையும், தோல் பொருட்களையும் வாங்குவது இல்லை என்றும் சந்திரசூட் தெரிவித்தார்.

சந்திரசூட் - ராஷ்மி தம்பதிக்கு அபினவ், சிந்தன் என்ற மகன்கள் உள்ள நிலையில் பிரியங்கா, மாஹி ஆகியோரை அவர்கள் மகள்களாக தத்தெடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com