என் மலர்tooltip icon

    டெல்லி

    • மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும்.
    • டாக்டர்கள் போராட்டம் காரணமாக, சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி என்ற அரசு ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு ஒரு பெண் டாக்டர் கடந்த 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையை சிபிஐயிடம் கொல்கத்தா ஐகோர்ட்டு ஒப்படைத்தது.

    கடந்த 14-ம் தேதி நள்ளிரவு, ஒரு மர்ம கும்பல் புகுந்து ஆஸ்பத்திரியை சூறையாடியது.

    இதற்கிடையே, பெண் டாக்டர் கொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்களின் 24 மணி நேர போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்தது. நேற்றுமுன்தினம் காலையில் இருந்து நேற்று காலைவரை போராட்டம் நடந்தது.

    மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும், ஆஸ்பத்திரிகளை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த போராட்டம் காரணமாக, அனைத்து மாநிலங்களின் போலீஸ் துறைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் அனுப்பி வைத்தது.

    அதில், உள்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:-

    டாக்டர்கள் போராட்டம் காரணமாக, சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

    இப்போது இருந்து 2 மணி நேரத்துக்கு ஒரு தடவை சட்டம்-ஒழுங்கு நிலவர அறிக்கையை டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறைக்கு பேக்ஸ் அல்லது இ-மெயில் அல்லது வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.
    • பத்ம விருதுகள் பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மருத்துவ ஊழியர் சஞ்சய் சிங் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு மேற்கு வங்காள போலீசால் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

    இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி நாடு முழுக்க மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்றைய தினமும் நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் காலவரையற்ற வேலை நிறுத்தமும் போராட்டமும் நடந்து வருகிறது. உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும், குற்றவாளியை விரைந்து தண்டிக்க வேண்டியும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் பத்ம விருதுகள் பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், 'கொல்கத்தா பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவம் நாட்டில் பெண்கள் மற்றும் மருத்துவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்பதையே காட்டுகிறது.

    நமது நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில், தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகளால் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர். 

    • இந்த விபத்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாலை 7 மணியளவில் நடந்துள்ளது.
    • இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லியின் கரோல் பாக் பகுதியில், மூன்றாவது மாடியில் இருந்து ஏர் கண்டிஷனர் விழுந்ததில் 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாலை 7 மணியளவில் நடந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவில், தனது பைக்கில் அமர்ந்தவாறு ஒரு இளைஞர் தனது நண்பருடன் பேசி வருகிறார். அப்போது ஏர் கண்டிஷனர் ஒன்று திடீரென்று பைக்கில் அமர்ந்திருந்த இளைஞரின் தலைமேல் விழுந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிந்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • மேசையில் வைக்கப்பட்ட லஞ்ச பணத்தை 3 காவலர்கள் பங்கு பிரிக்கின்றனர்.
    • 3 காவலர்களின் முகமும் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

    டெல்லியில் 3 போக்குவரத்து காவலர்கள் லஞ்சப் பணத்தை பிரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில், ஒரு போக்குவரத்து காவலர் தனக்கு பின்னால் ஒரு மேசையில் லஞ்ச பணத்தை வைக்குமாறு சைகை காட்டுகிறார். பின்பு மேசையில் வைக்கப்பட்ட பணத்தை 3 காவலர்கள் பங்கு பிரிக்கின்றனர். 3 காவலர்களின் முகமும் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

    வீடியோ வைரலானதை அடுத்து, 2 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்கள் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைதுசெய்தனர்.
    • சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதால் தற்போது சி.பி.ஐ. இந்த வழக்கின் விசாரணை நடத்துகிறது.

    புதுடெல்லி:

    மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த 31 வயது பயிற்சி பெண் டாக்டர், கல்லூரி கருத்தரங்கு அறையில் கடந்த 9-ம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைதுசெய்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதால், தற்போது சி.பி.ஐ. இந்த வழக்கின் விசாரணையை நடத்தி வருகிறது.

    இச்சம்பவத்தை கண்டித்தும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரியும் மாநிலம் முழுவதும் பயிற்சி டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் பேரணி நடத்தினார்.

    இந்நிலையில், பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது.

    அதன்படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆகஸ்ட் 20-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • அக்டோபர் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை.

    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர், அரியானா, மராட்டியம், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்ட சபை தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.

    இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

    காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    இதேபோல அரியானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 1-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 3-ந்தேதியுடன் அங்கு சட்டசபை பதவி காலம் முடிவடைகிறது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 4-ந்தேதி நடக்கிறது.

    இந்த தேர்தலோடு மராட்டியம் மாநிலத்துக்கான தேர்தல் தேதியை அறிவிக்காததால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தன.

    இந்த நிலையில் காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான தேர்தல் முடிவு வெளியான பிறகே மராட்டியம், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப் படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    அக்டோபர் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடை பெறுகிறது. அதன் பிறகு தான் மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்க ளுக்கான சட்டசபை தேர்தல் தேதி வெளியாகும்.

    மராட்டிய மாநில சட்ட சபையின் பதவி காலம் நவம்பர் 26-ந்தேதியும் , ஜார்க்கண்ட் மாநில சட்ட சபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதியும் முடிவடைகிறது.

    மராட்டிய மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும் மராட்டிய தேர்தலோடு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா காரணமாக போக்குவரத்து மாற்றம்.
    • நாணய வெளியீட்டு விழாவில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

    முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது.

    இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட உள்ளார். இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த விழாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தயில், "கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் புகழ்மிக்க தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக நடைபெறும் இந்நிகழ்ச்சி முக்கியமானது.

    இந்திய அரசியல், இலக்கியம், சமுதாயத்தில் உயர்ந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் எப்போதும் ஆர்வம் கொண்டவராக கருணாநிதி திகழ்ந்தார்.

    அரசியல் தலைவராக முதலமைச்சராக கருணாநிதி நாட்டின் வரலாற்றில் அழியாத சுவடுகளை விட்டுச்சென்றுள்ளார். மக்களால் முதலமைச்சராக பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருணாநிதி மக்கள், கொள்கை, அரசியலை மிகவும் நன்றாக புரிந்து வைத்திருந்தார்.

    கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட உள்ள நிலையில் அவரின் நினைவுகளையும், அவரின் கொள்கைகளையும் நினைவுகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நாளில் கருணாநிதிக்கு எனது இயதப்பூர்வமான மரியாதையை செலுத்துகிறேன்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • மருத்துவர்கள் நாடு முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருபத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்து, கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

     


    மருத்துவர்கள் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்கள் குறித்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மாநில அரசுகள் இது தொடர்பாக நடைபெறும் போராட்டங்கள் குறித்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.

    • டாக்டர்கள் போராட்டத்தால் மேற்குவங்கத்தில் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
    • டாக்டர்கள் பாதுகாப்புக்கான பரிந்துரைகளை பெற குழு அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

    புதுடெல்லி:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

    டாக்டர்கள் போராட்டத்தால் மேற்குவங்கத்தில் மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, இந்திய மருத்துவ கூட்டமைப்பு உள்ளிட்ட மருத்துவ சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை மந்திரியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு அவர்களின் பணியிடங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், மருத்துவ சங்கங்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், டாக்டர்களின் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளைப் பெறவும் பரிந்துரை குழு அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

    அந்தக் குழுவிடம் பரிந்துரைகளை வழங்க மாநில அரசுகள் உள்பட அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மம்தா பானர்ஜி பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்.
    • இந்தச் சூழ்நிலையை சரியாகக் கையாள தவறியதால் மம்தா பானர்ஜி பதவி விலகவேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த 31 வயது பயிற்சி பெண் டாக்டர், கல்லூரி கருத்தரங்கு அறையில் கடந்த 9-ம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைதுசெய்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதால், தற்போது சி.பி.ஐ. இந்த வழக்கின் விசாரணையை நடத்தி வருகிறது.

    இந்தச் சம்பவத்தை கண்டித்தும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரியும் மாநிலம் முழுவதும் பயிற்சி டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 14-ம் தேதி ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்குள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெண் டாக்டர் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் பேரணி நடத்தினார்.

    இந்நிலையில், நிலைமையை சரியாக கையாள தவறியதால் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலகவேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆஷா தேவி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

    மம்தா பானர்ஜி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்காமல், பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்.

    இந்தப் பிரச்சனையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப மம்தா பானர்ஜி போராட்டம் நடத்துகிறார்.

    மாநில முதல் மந்திரி என்ற பொறுப்பை பயன்படுத்தி குற்றவாளிகள்மீது அவர் கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையை சரியாகக் கையாள தவறியதால் மம்தா பானர்ஜி பதவி விலகவேண்டும்.

    கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் ஒரு பெண்ணுக்கு எதிராக இதுபோன்ற காட்டுமிராண்டித்தனம் நடந்துள்ளது எனில், நாட்டின் பிற பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும் என தெரிவித்தார்.

    • ஆளுநர் அனுப்பிய நோட்டீசில் என்ன உள்ளது? என்பதை பார்க்கவில்லை.
    • அதுபோல் என்ன காரணத்திற்காக அனுமதி அளித்தார் என்பது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை.

    முடா முறைகேட்டில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் அனுமதி வழங்கியுள்ளார்.

    இதற்கு கர்நாடக மாநில மந்திரிகள் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் தவறு ஏதும் செய்யவில்லை. இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் காங்கிஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக நியமித்துள்ள பாஜக அரசு அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்துகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    ஆளுநர் அனுப்பிய நோட்டீசில் என்ன உள்ளது? என்பதை பார்க்கவில்லை. அதுபோல் என்ன காரணத்திற்காக அனுமதி அளித்தார் என்பது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை. என்னால் தற்போது நோட்டீஸ் சரியா அல்லது தவறா? எனக் கூற முடியாது.

    ஆனால் ஒருவிசயம் என்னவென்றால், மேற்குவங்கம், கர்நாடகா, தமிழ்நாடு அல்லது வேறு எங்கெல்லாம் பாஜக அல்லாத அரசு ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்துள்ளதோ, அங்கெல்லாம் அவர்கள் அதிகப்பட்டியான இடர்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றனர். வழக்கின் முழு விவரம், வழக்கறிஞர் ஆலோசனைக்குப் பிறகு இது தொடர்பாக பதில் அளிப்பேன்.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    • இந்த விவகாரத்தில் இனி அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.
    • நாங்கள் மிகவும் அடிப்படை உரிமையை, வாழ்வதற்கான உரிமையை கேட்கிறோம்.

    கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன் என ஐஎம்ஏ தேசிய தலைவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் அசோகன் கூறுகையில், " இனி அரசு தான் பதில் சொல்ல வேண்டும். இனி பதில் சொல்லும் அரசியல் விருப்பம் அவர்களுக்கு இருக்கும்.

    ஏனென்றால் நாம் கேட்டது அவர்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. நாங்கள் மிகவும் அடிப்படை உரிமையை, வாழ்வதற்கான உரிமையை கேட்கிறோம். இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதுவோம்.

    அவரது தலையீட்டிற்கான நேரம் கனிந்துள்ளது. நிச்சயமாக, அது (பிரதமர் மோடி தனது ஆகஸ்ட் 15 உரையில் பெண்கள் பாதுகாப்பு பற்றி குறிப்பிட்டது) அவர் அக்கறையுடன் இருப்பதைக் காட்டும் ஒரு அம்சமாகும். பிரதமருக்கு கடிதம் எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஐஎம்ஏ அதைச் செய்யும்." என்றார்.

    ×