என் மலர்tooltip icon

    பீகார்

    • தேஜஸ்வி யாதவ் பீகார் முழுவதும் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்தார்.
    • பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஜன் விஸ்வாஸ் நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது

    பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தயாராகி வருகிறது. லாலு பிரசாத் யாதவின் மகனும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் பீகார் முழுவதும் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்தார்.

    இந்நிலையில், பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஜன் விஸ்வாஸ் நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மத்தியப்பிரதேசத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தனது யாத்திரையை தள்ளி வைத்து விட்டு, பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேஜஸ்வி யாதவின் ஜன் விஸ்வாஸ் பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் கலந்து கொண்ட வீடியோவை தேஜஸ்வி யாதவ் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "15 மணி நேரம் தொடர் மழை, கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய லட்சக் கணக்கான மக்கள், குறுகிய நேரத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் என அனைத்தையும் மீறி, உங்கள் அளப்பரிய அன்பினாலும், தளராத ஆதரவினாலும், அபரிமிதமான ஒத்துழைப்பினாலும் இந்த சாதனைப் பேரணி நிறைவு பெற்றது" என தெரிவித்துள்ளார்.

    • இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என உறுதி அளிக்கிறேன்.
    • நிதிஷ்குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரூ.21,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் முதல் மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்றுப் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறேன். இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.

    நிதிஷ்குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகாரின் முதல் மந்திரியாக பதவி வகிக்கும் நிதிஷ்குமார் கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை கூட்டணி மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நிதிஷ்குமார் கருத்துக்கு ராஷ்டிரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், நிதிஷ்குமாருக்கு நல்வாழ்த்துக்கள். இந்த முறை தான் இருக்கும் இடத்திலேயே இருப்பேன் என்றார். குறைந்தபட்சம் இந்த முறையாவது அவர் சொன்ன வார்த்தையில் உறுதியாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டார்.

    • எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
    • நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் முதல்வர் நிதிஷ் குமாருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    அப்போது பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நம்புவதாக தெரிவித்தார்.மேலும் இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகாரின் முதலமைச்சராக பதவி வகிக்கும் நிதிஷ் குமார் கடந்த பிப்ரவரியில், ராஷ்டீரிய ஜனதாதள கட்சி தலைமையிலான மகா கூட்டணியில் இருந்து விலகி, பின்னர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார். கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை அவர் கூட்டணி மாறியுள்ளார் என்பது குறியப்படத்தக்கது.

    • பீகாரில் பிரதமர் மோடி ரூ.21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • ஏழைகள், தலித், ஆதிவாசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் எங்கள் அரசு அக்கறை செலுத்துகிறது என்றார்.

    பாட்னா:

    பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதில் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்றுள்ளதால் பீகாரில் வாரிசு அரசியல் ஓரம் கட்டப்பட்டுள்ளது.

    ஒரு காலத்தில் பீகார் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்தனர். தற்போது சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகையில் பீகார் மாறியுள்ளது.

    சமீபத்தில் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. இது ஒட்டுமொத்த பீகார் மாநிலத்திற்கே கிடைத்த கவுரவம்.

    பீகாரில் ஏழைகள், தலித், ஆதிவாசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் எங்கள் அரசு அக்கறை செலுத்துகிறது. ஏழைகள் முன்னேறும் போது தான், மாநிலம் வளர்ச்சி அடையும்.

    இங்கிருந்து வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு மக்கள் செல்லும் நிலை இருந்தது. அந்த நிலை மாறி உள்ளது. அது மீண்டும் வந்துவிடக் கூடாது.

    வாரிசு அரசியலில் ஈடுபட்டு வருபவர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் வர முயற்சிக்கின்றனர் என தெரிவித்தார்.

    • 20 கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள்.
    • மற்ற நகரங்களிலும் இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்டமான பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, தி.மு.க. உள்பட 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற புதிய அமைப்பை உருவாக்கின.

    பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் இந்த கூட்டணியில் இருந்து விலகியதால் அந்த கூட்டணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு செய்வதிலும் இந்தியா கூட்டணியில் சலசலப்பு காணப்படுகிறது.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய 4 நகரங்களில் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். ஆனால் அவர்களால் பொதுவான குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்க இயலவில்லை.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் முக்கிய நகரங்களில் பிரமாண்டமான பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு ஆலோசனை நடந்து வந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு முதல் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

    இந்தியா கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. அதுபோல முதல் பிரமாண்ட கூட்டத்தையும் அந்த நகரிலேயே நடத்த தீர்மானித்துள்ளனர். வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். லாலு பிரசாத் யாதவ், சரத்பவார், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

    தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவார் என்று தெரிகிறது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 20 கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள்.

    இதன் தொடர்ச்சியாக மற்ற நகரங்களிலும் இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்டமான பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    • பீகாரில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் மோகனியா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அதில் 2 பெண்கள் உள்பட 8 பேர் பயணித்தனர்.

    தேவ்காளி என்ற கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் முன்னே சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது. அதன்பின் ஜீப்பும், பைக்கும் சாலையின் எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது மோதின.

    இந்த கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், பீகாரில் நடந்த கோர விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ₹35 காணாமல் போனதால், 122 மாணவர்களை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்ய வைத்த ஆசிரியர் நீட்டூ குமாரி பணியிடமாற்றம்
    • சத்தியம் செய்தும் ஆசிரியருக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பீகார் மாநிலம் பன்கா மாவட்டத்தில் தனது பையிலிருந்த ₹35 காணாமல் போனதால், 122 மாணவர்களை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்ய வைத்த ஆசிரியர் நீட்டூ குமாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆசிரியரின் இச்செயலை பொறுத்துக்கொள்ளாத மாணவர்களின் பெற்றோர் புகாரளித்த நிலையில் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    கடந்த புதன்கிழமை (பிப் 21) பள்ளிக்கு வந்த ஆசிரியர் நீட்டூ குமாரி, தனது பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை கொண்டு வரச் சொல்லி ஒரு மாணவருக்கு சொல்லியுள்ளார். பின்னர் அவர் தனது பையிலிருந்த 35 ரூபாய் காணாமல் போனதை கண்டுபிடித்துள்ளார்.

    பின்னர் ஒவ்வொரு மாணவர்களிடமும் அவர் பணம் காணாமல் போனதை பற்றி விசாரித்துள்ளார். அதில் மாணவர்கள் சொன்ன பதிலால் திருப்தியடையாத ஆசிரியர், மாணவர்களை பக்கத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று பணம் திருடவில்லை என்று சத்தியம் செய்ய வைத்துள்ளார். சத்தியம் செய்தும் ஆசிரியருக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சில மாநிலங்களில் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
    • தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் கூட, இது ஒவ்வொருவருடைய பாதுகாப்பாக இருக்கும்.

    பீகார் மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் ஆட்சி செய்து வருகிறார். தற்போது பீகார் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

    சட்டமன்றத்தில் பேசும்போது இலவச மின்சாரம் வழங்கமாட்டோம் என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நிதிஷ் குமார் கூறியதாவது:-

    மின்சாரம் இலவசமாக வழங்கப்படமாட்டாது என்பதை நான் தொடக்கத்தில் இருந்தே தெரிவித்து வருகிறேன். நாங்கள் எவ்வளவு குறைந்த விலைக்கு வழங்க முடியுமோ, அந்த அளவிற்கு வழங்குவோம். இது தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும்.

    சில மாநிலங்களில் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நாங்கள் இலவசமாக வழங்கமாட்டோம். தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் கூட, இது ஒவ்வொருவருடைய பாதுகாப்பாக இருக்கும். ஆகவே, இலவசமாக வழங்கப்படமாட்டாது" என்றார்.

    பீகார் எரிசக்தி மந்திரி பிஜேந்திர யாதவ் கூறுகையில் "மற்ற மாநிலங்களை காட்டிலும் பீகாரில் மின்சார கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டால், நிச்சயமாக நாங்கள் அதைவிட குறைவான விலைவில் வழங்குவோம். எவ்வளவு காலம் இந்த இலவச மின்சாரம் மூலம் இழப்பை சந்திக்க முடியும்?. பணம் எங்கிருந்து வரும்?. 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மானியம் வழங்குகிறோம். புறநகர் பகுதிகளில் அதிக அளவில் வழங்குகிறோம். தற்போது இதைவிட அதிக வாய்ப்பு தேவைப்படுகிறா?" என்றார்.

    • நேரு குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி 4-வது தலைமுறையைச் சேர்ந்தவர்.
    • லாலு பிரசாத்துக்கு உயிர் கொடுக்க தற்போது ஆள் இல்லை என்றார்.

    பாட்னா:

    பீகார் துணை முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் சாம்ராட் சவுத்ரி. இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    2ஜி என்றால் 2வது தலைமுறை அரசியல்வாதி என்றும், 3ஜி என்றால் 3-வது தலைமுறை என்றும், 4ஜி என்றால் 4-வது தலைமுறை அரசியல்வாதி என்றும் நம்புகிறோம்.

    ராகுல் காந்தி 4-வது தலைமுறையைச் சேர்ந்தவர். ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, இன்று ராகுல் காந்தி என 4 பேரும் நாட்டைக் கொள்ளையடிக்க உழைத்தவர்கள்.

    பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம் என இரு தலைமுறை அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இரு தலைமுறையினரையும் இழிவுபடுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இவர்களுக்கு எல்லாம் 2024-ல் பீகார் மக்களும், நாட்டு மக்களும் கணக்கு கொடுப்பார்கள்.

    லாலு பிரசாத் யாதவ் 2005-ல் இருந்து தொடர்ந்து தேர்தலில் தோல்வி அடைந்து வருகிறார். நிதிஷ்குமார் அவருக்கு இடையில் உயிர் கொடுத்தார். ஆனால் இப்போது அவருக்கு உயிர் கொடுக்க ஆள் இல்லை என தெரிவித்தார்.

    • காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.
    • லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    லக்கிசராய்-சிகந்திரா பிரதான சாலையில் உள்ள பிஹராவுரா கிராமத்தில், இன்று அதிகாலை 3 மணியளவில் லாரியும் டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில், திருமண விழாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த குறைந்தது ஒன்பது பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

    உயிரிழந்தவர்களில் வீர் பாஸ்வான், விகாஸ் குமார், விஜய் குமார், திபானா பாஸ்வான், அமித் குமார், மோனு குமார், கிசான் குமார் மற்றும் மனோஜ் கோஸ்வாமி என கண்டறியப்பட்டுள்ளது.

    லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் நடந்த சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.

    மாநில அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு கூறினார்.

    • 10 நாள் யாத்திரையில் 38 மாவட்டங்களில் ஆதரவு திரட்ட அவர் திட்டமிட்டுள்ளார்.
    • 32 பொதுக்கூட்டங்களிலும் அவர் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தயாராகி வருகிறது. இரு கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு இன்னமும் முடிவடையாத நிலையில் லாலு பிரசாத் யாதவின் மகனும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் பீகார் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். 10 நாட்கள் நடக்கும் அவரது யாத்திரை 29-ந்தேதி நிறைவு பெற உள்ளது. இந்த 10 நாள் யாத்திரையில் 38 மாவட்டங்களில் ஆதரவு திரட்ட அவர் திட்டமிட்டுள்ளார். 32 பொதுக்கூட்டங்களிலும் அவர் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • யார் என்ன சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம்.
    • விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களை (ஆர்.ஜே.டி.) விட்டு வெளியே வந்தேன்.

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆர்.ஜே.டி. கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகி மீண்டும் பா.ஜனதாவுடன் இணைந்து கூட்டணி அமைத்து முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.

    இந்தியா கூட்டணியை வலிமையாக்க தான் எடுத்த முயற்சிகளுக்கு உரிய ஒத்துழைப்பு இல்லை என்பதால் அதில் இருந்து விலகியதாக நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் பீகார் சட்டசபைக்கு வந்தார். அப்போது லாலுவும், நிதிஷ் குமாரும் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்து கை குலுக்கி கொண்டனர்.

    அப்போது ஆர்.ஜே.டி.- ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் கூட்டணி அமையுமா? என்று லாலுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு லாலு பதில் அளிக்கும்போது, "அவர் (நிதிஷ்குமார்) திரும்பி வரட்டும். பிறகு பார்ப்போம். அவருக்காக எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்து இருக்கும்" என்றார்.

    இதற்கிடையே லாலுவின் கோரிக்கையை நிதிஷ்குமார் நிராகரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    யார் என்ன சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களை (ஆர்.ஜே.டி.) விட்டு வெளியே வந்தேன்.

    இந்தியா கூட்டணியில் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். வேறு ஏதோ மனதில் இருந்ததால் கூட்டணிக்கு இந்த பெயரை கூட நான் ஆதரிக்கவில்லை. கூட்டணி முறிந்து நீண்ட நாட்களாகிவிட்டது. தற்போது பீகார் மக்களுக்காக உழைக்கிறேன். அதை தொடர்ந்து செய்வேன்.

    இவ்வாறு நிதிஷ்குமார் கூறி உள்ளார்.

    ×