என் மலர்
பீகார்
- காங்கிரஸ் கட்சி வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை தீவிரப்படுத்தி வருகிறது.
- இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.
பாட்னா:
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2017-ல் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, நாம் 5 முதல் 10 ஆண்டுகள் ஆள்வதற்காக ஆட்சிக்கு வரவில்லை. குறைந்தது 50 ஆண்டுகள் ஆட்சி செய்வோம். அடுத்த 40-50 ஆண்டுகளில் அதிகாரத்தின் மூலம் நாட்டில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க.வின் 50 ஆண்டு கால ஆட்சி ரகசியம் இப்போது வெளியே வந்துள்ளது. அது வாக்குத் திருட்டின் மூலமே நடப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அமித்ஷாவின் கூற்றை மையமாக வைத்தே மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி தற்போது பா.ஜ.க. மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக, பீகாரில் நடந்த 'வாக்காளர் அதிகார யாத்திரை'யில் ராகுல் காந்தி பேசியதாவது:
மத்திய பா.ஜ.க. அரசு 40 முதல் 50 ஆண்டுகள் நீடிக்கும் என்று அமித்ஷா பலமுறை கூறியுள்ளார். எப்படி அவரால் அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடிகிறது என்று நான் யோசித்தேன்.
அந்த விசித்திரமான கருத்தின் உண்மை இப்போது வெளியே வந்துள்ளது. அவர்கள் 'வாக்குத் திருட்டில்' ஈடுபடுகிறார்கள். குஜராத் தொடங்கி 2014-ல் தேசிய அளவிலும், பின்னர் மற்ற மாநிலங்களிலும் பரவியது. நான் பொய் சொல்வதில்லை; உண்மைகளும் ஆதாரங்களும் உள்ளன என தெரிவித்தார்.
- மு.க.ஸ்டாலின் உடன் எடுத்த புகைப்படத்தை ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- எனது சகோதரர் மு.க.ஸ்டாலினை பீகாருக்கும், வாக்காளர் அதிகார யாத்திரைக்கும் வரவேற்கிறேன்.
பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரயின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி SELIFE எடுத்துக்கொண்டார்.
இந்த புகைப்படத்தை ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
எனது சகோதரர் மு.க.ஸ்டாலினை பீகாருக்கும், வாக்காளர் அதிகார யாத்திரைக்கும் வரவேற்கிறேன். உங்களுடைய வருகையும், சோரிக்கு எதிரான எங்கள் வாக்குச் சேகரிப்பு போராட்டத்திலும் பங்கேற்றது வலுப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராகுல் காந்தி இந்தியாவின் வழக்கறிஞராக இருக்கிறார்.
- மக்களவை தேர்தலில் 400 இடங்கள் என கனவு கண்டவர்களை 240-ல் அடக்கியது இந்தியா கூட்டணி.
பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தமிழில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ராகுலின் கண்களில் ஒருபோதும் அச்சம் இருந்தது இல்லை.
* இந்தியா கூட்டணிக்கான அடித்தளம் பாட்னாவில் தான் இடப்பட்டது.
* பா.ஜ.க.வின் அதிகாரத்தை மக்கள் ஒருநாள் பறிப்பார்கள்.
* தேர்தலுக்கு முன்னதாகவே பீகாரில் உங்களின் வெற்றி உறுதியாகி உள்ளதால் பேரணியை தடுக்க பார்க்கின்றனர்.
* ராகுல் காந்தி இந்தியாவின் வழக்கறிஞராக இருக்கிறார்.
* மக்கள் சக்தியே உயர்ந்தது என காட்டியிருக்கிறார் தேஜஸ்வி யாதவ்.
* ராகுல், தேஜஸ்வியை வெல்ல முடியாததால் கொல்லைப்புறமாக நுழைய பார்க்கிறது பா.ஜ.க.
* மக்களவை தேர்தலில் 400 இடங்கள் என கனவு கண்டவர்களை 240-ல் அடக்கியது இந்தியா கூட்டணி.
* பீகாரில் பெறும் வெற்றி தான் இந்தியா கூட்டணி அடுத்தடுத்து பெறப்போகும் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.
* மக்களின் வாக்குகளை பறிப்பவர்களை மக்கள் பறிப்பர் என்பதற்கு அடையாளம் தான் இங்கு கூடிய கூட்டம்.
* மெஜாரிட்டி மெஜாரிட்டி என கூறிக் கொண்டிருந்தவர்களை மைனாரிட்டியாக மாற்றிக்காட்டியது இந்தியா கூட்டணி.
* பீகார் சட்டசபையில் வெற்றி பெற்றதற்கான விழாவில் விரைவில் நான் பங்கேற்பேன்.
* மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை பீகார் மக்கள் நிரூபிக்க வேண்டும்.
* அரசியலுக்காக பேசுபவர் அல்ல ராகுல், உண்மையின் குரலாக இருப்பவர், அவர் கண்களில் உண்மையும் தைரியமும் உள்ளது.
* பீகாரில் பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 1 மாத காலமாக இந்தியாவே பீகாரை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது.
- கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாறி விட்டது தேர்தல் ஆணையம்.
பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தமிழில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* உங்களையெல்லாம் பார்ப்பதற்காக 2000 கி.மீ. கடந்து வந்திருக்கிறேன்.
* பீகார் என்றாலே லாலு பிரசாத் யாதவ் தான் நினைவிற்கு வருவார். கலைஞரும் லாலு பிரசாத்தும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.
* பா.ஜ.க.வின் அடக்குமுறையை தாண்டி அரசியல் செய்வதால் லாலு பிரசாத் உயர்ந்து நிற்கிறார்.
* எத்தனையோ வழக்கு இருந்த போதிலும் தைரியமாக எதிர்கொண்டதால் உயர்ந்த அரசியல்வாதியாக இருக்கிறார் லாலு பிரசாத்.
* லாலுவின் வழியில் அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளையாக உழைத்துக்கொண்டிருக்கிறார் தேஜஸ்வி யாதவ்.
* 1 மாத காலமாக இந்தியாவே பீகாரை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது.
* தேசத்திற்கு பிரச்சனை வரும் போதெல்லாம் போர்க்குரல் எழுப்பி உள்ளது பீகார் மாநிலம்.
* ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவின் நட்பு அரசியல் நட்பு மட்டுமல்ல, 2 உடன்பிறப்புகளுக்கு இடையேயான நட்பு. இந்த நட்பு வெற்றியை பெற்று தரும்.
* பீகாரில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை பறிக்க நினைக்கின்றனர்.
* மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்கின்றனர் பா.ஜ.க.வினர்.
* ஜே.பி.நாராயணன் செய்த பணியை தான் ராகுல் காந்தி செய்து வருகிறார்.
* 65 லட்சம் பீகார் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை.
* கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாறி விட்டது தேர்தல் ஆணையம்.
* ராகுல் முன்னெடுத்துள்ள போராட்டத்தை வாழ்த்துவதற்காக பீகார் வந்துள்ளேன்.
* ராகுல் காந்தி வாக்கு திருட்டு மோசடிகளை அம்பலப்படுத்தி கொண்டிருக்கிறார்.
* சொந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குபவர்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனி விமானம் மூலம் பீகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை புறப்பட்டார்.
- தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரும் கடந்த 17-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பீகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை புறப்பட்டார்.
இந்நிலையில் வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார்.
இந்த பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
- வாக்காளர் வாக்குரிமையை உறுதிசெய்ய வலியுறுத்தி ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
- இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்க ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பீகார் செல்கிறார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பீகாரில் வாக்காளர் வாக்குரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
ராகுல் காந்தியின் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பீகார் செல்கிறார்.
இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஒருவேளை பீகார் வருகிறார் என்றால் அதனால் என்ன மாற்றம் இங்கு நிகழ்ந்துவிட போகிறது? அவரின் வருகையால் பீகார் முன்னேறிவிடுமா?
பீகாரின் பிரச்சனைகளுக்கு பீகாரிலேயே தான் தீர்வு காணப்பட வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கு வருவதாக இருந்தாலும் சரி அல்லது கர்நாடகா முதல்வர் வருவதாக இருந்தாலும் சரி, அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
பீகாருக்கு வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவேண்டும் என்ற ஒரு யாத்திரை தான் தற்போது வேண்டும். பிரயோஜனம் இல்லாத மற்ற யாத்திரையால் என்ன ஆதாயம் கிடைத்துவிடப் போகிறது?
காங்கிரசை குற்றம் சுமத்துகிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் பிரதமர் மோடியை குற்றம் சுமத்துகிறது. ஆனால் பீகார் இளைஞர்கள் கேட்பது எல்லாம், இங்கு வேலைவாய்ப்புகள் எப்போது கிடைக்கும், புலம்பெயர்ந்து செல்வோரை எப்போது தடுப்பீர்கள் என்பதுதான் என தெரிவித்தார்.
- கர்நாடகாவில், 1 லட்சம் வாக்காளர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கேட்டேன், ஆனால் தேர்தல் ஆணையத்தால் இன்னும் இதற்கு பதிலளிக்க முடியவில்லை.
- அவர்கள் பாரபட்சமற்றவர்களாக இருந்தால், அனுராக் தாக்கூரிடமிருந்து பிரமாணப் பத்திரம் கோரப்பட்டிருக்கும்.
பீகாரில் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய யாத்திரை வரும் 1 ஆம் தேதி வரை நடக்கிறது. இன்றைய யாத்திரையில் தேஜஸ்வி யாதவ் மற்றும் தொண்டர்களுடன் பைக் பேரணி சென்றார் ராகுல்.
இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல், "தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இன்றுவரை, எனது கேள்விகளுக்கு எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. கர்நாடகாவில், 1 லட்சம் வாக்காளர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கேட்டேன், ஆனால் தேர்தல் ஆணையத்தால் இன்னும் இதற்கு பதிலளிக்க முடியவில்லை.
நான் பத்திர்கையாளர் சந்திப்பில் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரமாணப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஏற்க மாட்டோம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. சில நாட்களுக்குப் பிறகு அனுராக் தாக்கூரும் இதேபோன்ற பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். ஆனால் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் கேட்கவில்லை.
இந்தத் தேர்தல் ஆணையம் யாருடன் நிற்கிறது என்பது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியும். அவர்கள் பாரபட்சமற்றவர்களாக இருந்தால், அனுராக் தாக்கூரிடமிருந்து பிரமாணப் பத்திரம் கோரப்பட்டிருக்கும். எனவே தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையர் மற்றும் பாஜக இடையே ஒரு தொடர்பு உள்ளது.
நீங்கள் மகாராஷ்டிராவில், கர்நாடகாவில், அரியானாவில் வாக்குகளை திருடினீர்கள். ஆனால் இங்கே பீகாரில் அதை நடக்க நாங்கள் விடமாட்டோம்" என்று தெரிவித்தார்.
- பூர்னியா மாவட்டத்தில் புல்லெட் பைக்கில் பேரணியாக சென்றார்.
- தேஜஸ்வி யாதவ் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்களும் அவருடன் புல்லெட்டில் ஊர்வலமாக சென்றனர்.
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரையை தொடங்கினார்.
செப்டம்பர் 1-ல் தலைநகர் பாட்னாவில் யாத்திரையை முடிக்கிறார். ராகுல்காந்தி இன்றயை யாத்திரையின் போது பூர்னியா மாவட்டத்தில் புல்லெட் பைக்கில் பேரணியாக சென்றார்.
பீகார் முன்னாள் துணை முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவ் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்களும் அவருடன் புல்லெட்டில் ஊர்வலமாக சென்றனர்.
இந்நிலையில் பைக்கில் அமர்ந்திருந்த ராகுல் காந்தியை நெருங்கிய இளைஞர் ஒருவர் அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
உடனே அங்கிருந்து ஓடிய அவரை துரத்திய ராகுலின் பாதுகாப்பு அதிகாரி அவரது கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
- கதிகாரில் உள்ள மக்கானா (அல்லி விதை) விவசாயிகளுடன் வயலில் இறங்கி உற்சாகமாக வேலை செய்தார்.
- 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ம் தேதி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரையை தொடங்கினார்.
செப்டம்பர் 1-ல் தலைநகர் பாட்னாவில் யாத்திரையை முடிக்கிறார்.
ராகுல்காந்தி நேற்று, யாத்திரையின் போது கதிகாரில் உள்ள மக்கானா (அல்லி விதை) விவசாயிகளுடன் வயலில் இறங்கி உற்சாகமாக வேலை செய்தார். அவர்களுடன் கலந்துரையாடினார். விவசாயிகள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில் ராகுல்காந்தி இன்றயை யாத்திரையின் போது புல்லெட் பைக்கில் பேரணியாக சென்றார். பீகார் முன்னாள் துணை முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவ் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்களும் அவருடன் புல்லெட்டில் ஊர்வலமாக சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கவனம் ஈர்த்து வருகிறது.
இந்த யாத்திரையில் வரும் 26, 27-ம் தேதிகளில் பிரியங்காவும், 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ம் தேதி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இதேபோல் உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், முதல் மந்திரிகள் ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), சுக்விந்தர் சுகு (இமாசலப் பிரதேசம்) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்
- பகல் இரவாக உழைக்கும் விவசாயிகளுக்கு அதில் ஒரு சதவீத லாபம் கூட கிடைப்பதில்லை.
- மொத்த உழைப்பும் 99% மக்களால் செய்யப்பட்டாலும், லாபம் 1% இடைத்தரகர்களிடம் செல்கிறது.
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றவும் பீகாரில் ஆகஸ்ட் 17 முதல் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக இன்று கதிஹாரில் உள்ள மக்கானா (தாமரை விதை) விவசாயிகளை சந்தித்து ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
அவர்களின் பிரச்சனைகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் பதிவிட்டுள்ளார்.
அதில், இந்தியாவின் 90 சதவீத மக்கானா உற்பத்தி பீகாரில் நடைபெறுகிறது. ஆனால், பகல் இரவாக உழைக்கும் விவசாயிகளுக்கு அதில் ஒரு சதவீத லாபம் கூட கிடைப்பதில்லை. பெரிய நகரங்களில் ஒரு கிலோ மக்கானா ரூ.1000-2000க்கு விற்கப்படும் நிலையில், விவசாயிகளுக்கு சொற்ப பணமே கிடைக்கிறது.

இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்-பகுஜன் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். மொத்த உழைப்பும் 99% மக்களால் செய்யப்பட்டாலும், லாபம் 1% இடைத்தரகர்களிடம் செல்கிறது.
"வாக்குத் திருட்டு" அரசாங்கம் இவர்களை மதிக்கவும் இல்லை, கவனித்துக் கொள்ளவும் இல்லை." என்று தெரிவித்தார்.
- மோடி திறந்து வைத்த பாலம் மறுநாளே இடிந்து விழும்.
- பாலம் இடிந்து விழுவதில் என்டிஏ அரசு உலக சாதனை படைத்துள்ளதாகவும் தேஜஸ்வி கேலி செய்தார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் பீகாரில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (என்டிஏ கூட்டணி) மற்றும் ஆர்ஜேடி (இந்தியா கூட்டணி) இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று பீகார் வந்தார்.
இந்நிலையில் தேஜஸ்வி வெளிட்ட எக்ஸ் பதிவில், "இன்று, கயாவில் பொய்கள் மற்றும் பொய்யான வாக்குறுதிகளின் கடை திறக்கப்படும். எலும்பு இல்லாத நாக்கைக் கொண்ட பிரதமர் பொய்களின் இமயமலையை உருவாக்குவார். ஆனால் பீகார் மக்கள் அவரது பொய் மலைகளை அழிப்பார்கள்" என்று பதிவிட்டார்.
இதை எதிர்த்து மகாராஷ்டிராவில் பாஜக எம்எல்ஏ மிலிந்த் நரோட்டி, தேஜஸ்வி மீது புகார் அளித்தார். இதையடுத்து பிரதமரை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவைப் பகிர்ந்ததாகக் கூறி, மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்ட காவல்துறை தேஜஸ்வி மீது எஃப்ஐஆர் பதிவு செய்தது.
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரிலும் தேஜஸ்வி மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தேஜஸ்வி மற்றொரு பதிவில் மோடியை மீண்டும் கேலி செய்தார். அதில் நேற்று மோடி திறந்து வைத்த பாலம் மறுநாளே இடிந்து விழும் என்றும், ரிப்பன் வெட்டுவதோடு, பொது நலன் கருதி, பாலம் இடிந்துவிலும் என்று பாலத்தின் இருபுறமும் மற்றொரு எச்சரிக்கை பலகையை நிறுவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாலம் இடிந்து விழுவதில் என்டிஏ அரசு உலக சாதனை படைத்துள்ளதாகவும் தேஜஸ்வி கேலி செய்தார்.
தன் மீதான வழக்கு குறித்து பேசிய தேஜஸ்வி, பாஜக உண்மையைப் பற்றி பயப்படுவதாகவும், ஒரு வார்த்தை கூட அவர்களுக்கு குற்றமாகிவிடும் என்றும் கூறினார்.
பாட்னா மற்றும் பெகுசராய் ஆகியவற்றை இணைக்கும் 1.86 கி.மீ நீள சிமாரியா பாலத்தை மோடி நேற்று திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
- எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பீகாரில் யாத்திரை தொடங்கியுள்ளார்.
- இந்த யாத்திரையில் வரும் 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
பாட்னா:
வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி யாத்திரை தொடங்கியுள்ளார்.
இந்த யாத்திரையில் வரும் 26, 27-ம் தேதிகளில் பிரியங்காவும், 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ம் தேதி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இதேபோல் உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், முதல் மந்திரிகள் ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), சுக்விந்தர் சுகு (இமாசலப் பிரதேசம்) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.






