என் மலர்
இந்தியா

பேரணியில் ராகுல் காந்தியை முத்தமிட்ட இளைஞரை தாக்கிய பாதுகாப்பு அதிகாரி - வீடியோ வைரல்
- பூர்னியா மாவட்டத்தில் புல்லெட் பைக்கில் பேரணியாக சென்றார்.
- தேஜஸ்வி யாதவ் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்களும் அவருடன் புல்லெட்டில் ஊர்வலமாக சென்றனர்.
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரையை தொடங்கினார்.
செப்டம்பர் 1-ல் தலைநகர் பாட்னாவில் யாத்திரையை முடிக்கிறார். ராகுல்காந்தி இன்றயை யாத்திரையின் போது பூர்னியா மாவட்டத்தில் புல்லெட் பைக்கில் பேரணியாக சென்றார்.
பீகார் முன்னாள் துணை முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவ் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்களும் அவருடன் புல்லெட்டில் ஊர்வலமாக சென்றனர்.
இந்நிலையில் பைக்கில் அமர்ந்திருந்த ராகுல் காந்தியை நெருங்கிய இளைஞர் ஒருவர் அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
உடனே அங்கிருந்து ஓடிய அவரை துரத்திய ராகுலின் பாதுகாப்பு அதிகாரி அவரது கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.






