என் மலர்
இந்தியா

பா.ஜ.க.வின் 50 ஆண்டு கால ஆட்சி திட்டம்: அமித்ஷாவின் ரகசியத்தை வெளிப்படுத்திய ராகுல் காந்தி
- காங்கிரஸ் கட்சி வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை தீவிரப்படுத்தி வருகிறது.
- இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.
பாட்னா:
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2017-ல் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, நாம் 5 முதல் 10 ஆண்டுகள் ஆள்வதற்காக ஆட்சிக்கு வரவில்லை. குறைந்தது 50 ஆண்டுகள் ஆட்சி செய்வோம். அடுத்த 40-50 ஆண்டுகளில் அதிகாரத்தின் மூலம் நாட்டில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க.வின் 50 ஆண்டு கால ஆட்சி ரகசியம் இப்போது வெளியே வந்துள்ளது. அது வாக்குத் திருட்டின் மூலமே நடப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அமித்ஷாவின் கூற்றை மையமாக வைத்தே மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி தற்போது பா.ஜ.க. மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக, பீகாரில் நடந்த 'வாக்காளர் அதிகார யாத்திரை'யில் ராகுல் காந்தி பேசியதாவது:
மத்திய பா.ஜ.க. அரசு 40 முதல் 50 ஆண்டுகள் நீடிக்கும் என்று அமித்ஷா பலமுறை கூறியுள்ளார். எப்படி அவரால் அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடிகிறது என்று நான் யோசித்தேன்.
அந்த விசித்திரமான கருத்தின் உண்மை இப்போது வெளியே வந்துள்ளது. அவர்கள் 'வாக்குத் திருட்டில்' ஈடுபடுகிறார்கள். குஜராத் தொடங்கி 2014-ல் தேசிய அளவிலும், பின்னர் மற்ற மாநிலங்களிலும் பரவியது. நான் பொய் சொல்வதில்லை; உண்மைகளும் ஆதாரங்களும் உள்ளன என தெரிவித்தார்.






