என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் ஆணையத்துடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது.. பீகாரில் வாக்குகளை திருட விடமாட்டோம் - ராகுல் காந்தி
    X

    தேர்தல் ஆணையத்துடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது.. பீகாரில் வாக்குகளை திருட விடமாட்டோம் - ராகுல் காந்தி

    • கர்நாடகாவில், 1 லட்சம் வாக்காளர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கேட்டேன், ஆனால் தேர்தல் ஆணையத்தால் இன்னும் இதற்கு பதிலளிக்க முடியவில்லை.
    • அவர்கள் பாரபட்சமற்றவர்களாக இருந்தால், அனுராக் தாக்கூரிடமிருந்து பிரமாணப் பத்திரம் கோரப்பட்டிருக்கும்.

    பீகாரில் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய யாத்திரை வரும் 1 ஆம் தேதி வரை நடக்கிறது. இன்றைய யாத்திரையில் தேஜஸ்வி யாதவ் மற்றும் தொண்டர்களுடன் பைக் பேரணி சென்றார் ராகுல்.

    இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல், "தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இன்றுவரை, எனது கேள்விகளுக்கு எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. கர்நாடகாவில், 1 லட்சம் வாக்காளர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கேட்டேன், ஆனால் தேர்தல் ஆணையத்தால் இன்னும் இதற்கு பதிலளிக்க முடியவில்லை.

    நான் பத்திர்கையாளர் சந்திப்பில் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரமாணப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஏற்க மாட்டோம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. சில நாட்களுக்குப் பிறகு அனுராக் தாக்கூரும் இதேபோன்ற பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். ஆனால் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் கேட்கவில்லை.

    இந்தத் தேர்தல் ஆணையம் யாருடன் நிற்கிறது என்பது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியும். அவர்கள் பாரபட்சமற்றவர்களாக இருந்தால், அனுராக் தாக்கூரிடமிருந்து பிரமாணப் பத்திரம் கோரப்பட்டிருக்கும். எனவே தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையர் மற்றும் பாஜக இடையே ஒரு தொடர்பு உள்ளது.

    நீங்கள் மகாராஷ்டிராவில், கர்நாடகாவில், அரியானாவில் வாக்குகளை திருடினீர்கள். ஆனால் இங்கே பீகாரில் அதை நடக்க நாங்கள் விடமாட்டோம்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×