என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    குழந்தைகள் மாலையில் சாப்பிடுவதற்கு ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? வீட்டில் வாழைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு சிப்ஸ் செய்து கொடுக்கலாம்
    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 1
    உப்பு - தேவையான அளவு
    மிளகுத் தூள்/மிளகாய் தூள் - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



    செய்முறை :

    வாழைக்காயை நீரில் கழுவி, இரு முனைகளையும் வெட்டி தோலுரித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனை மெல்லியதாக, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானதும், அதில் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, ஒரு பௌலில் போட்டு, அதில் மிளகுத் தூள்/மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறினால், வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

    இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    சூப்பரான வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    40 வயதிற்கு பின் ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் சருமம், கூந்தல் என எல்லாமுமே மாறுபடும். கூந்தல் வளர்ச்சி இன்னும் அதிகமாக பாதிக்கப்படும்.
    40 வயதிற்கு பின் ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் சருமம், கூந்தல் என எல்லாமுமே மாறுபடும். கூந்தல் வளர்ச்சி இன்னும் அதிகமாக பாதிக்கப்படும். இளமையாக இருந்த போது இருந்த கூந்தலின் பளபளப்பு, போஷாக்கு இப்போது கிடைக்காது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்களை பார்க்கலாம்.

    பழைய சிறிய பிளாஸ்டிக் சீப்பு உபயோகித்தால் அதனை இனி தொடாதீர்கள். நல்ல தரமான பெரிய பற்கள் கொண்ட சீப்பினால் சீவும்போது ரத்த ஓட்டம் தூண்டப்படுகின்றன. இதனைக் கொண்டு சீவும்போது கூந்தலும் பளபளப்பாகும்.

    அடிக்கடி தலைக்கு குளிப்பதால் இயற்கை எண்ணெய் சுரப்பது தடைபடும். இதனால் அதிக முடி உதிர்தல் பொடுகு ஆகியவை உண்டாகும். ஆகவே தலைக்கு குளிப்பதற்கு பதிலாக ட்ரை ஷாம்பு இப்போது கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி ஸ்ப்ரே செய்தால் கூந்தல் தலைக்கு குளித்தது போலவே அடர்த்தியாக காணப்படும். ஸ்கால்ப்பில் பாதிக்காது.

    ஷவரில் அதிக நேரம் நின்று தலைக்கு குளிக்கும்போது கூந்தல் அதிகம் உடைய வாய்ப்புகள் உண்டு. அதோடு முடிக் கற்றைகளும் பலமிழக்கும். ஆகவே அதிக நேரம் ஷவரில் குளிப்பதை தவிருங்கள். கூந்தல் பலம் பெற ஆர்கானிக் கெரட்டின் கண்டிஷனர் பயன்படுத்தலாம்.

    இந்த சத்துக்கள் எல்லாம் கூந்தலின் வளர்ச்சிக்கு தேவையானவை. 40 வயதில் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். மீன், நட்ஸ், பீன்ஸ், இறைச்சி, கீரை, பேரிச்சம்பழம், உலர் பழங்கள். பயோடின்- முட்டை, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, முட்டை மஞ்சள் கரு, பிரேசில் நட்ஸ் போன்றவற்றை அதிகளவு சேர்த்து கொள்ளுங்கள்.
    பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கர்ப்பிணிகளுக்கு நிறைய குழப்பங்களும் பயமும் அதிகமாக இருக்கும். இது குறித்து விரிவாக அறிந்த கொள்ளலாம்.
    பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கர்ப்பிணிகளுக்கு நிறைய குழப்பங்கள் இருக்கும். மேலும், பயமும் அதிகமாக இருக்கும். உங்கள் பயத்தை போக்க அதன் தொடர்பான (Get rid of top Pregnancy Fears) உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். என்னென்ன பயம்? அதன் உண்மை காரணங்கள் என்னென்ன? என்பது பற்றி பார்க்கலாம்.

    பிறவி குறைபாடுகள்

    டவுன் சிண்ட்ரோம், ஆட்டிசம் இன்னும் பல பிறவி குறைபாடுகளை நினைத்து, நீங்கள் பயப்படலாம். எப்போது கர்ப்பமாக இருக்கிறீர்கள் எனத் தெரிந்ததோ அன்றிலிருந்து குழந்தையின் நன்மைகாக அதிகம் யோசிப்பீர்கள். பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமாகவே பிறக்கிறார்கள் என்பதால் நிம்மதி கொள்ளுங்கள். தற்போதெல்லாம் நிறைய ஸ்கேன், பரிதோசனைகள் வந்துவிட்டன. ஆரம்பத்திலே கண்டுபிடித்துவிடலாம். உங்கள் கர்ப்பக்காலத்தில் நீங்கள் சத்தான உணவு வகைகளை சாப்பிடுங்கள். தினமும் ஃபோலிக் ஆசிட் உணவுகள், மருத்துவர் பரிந்துரைத்தால் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் சாப்பிடலாம்.
    நரம்பு தொடர்பான, வளர்ச்சி தொடர்பான அனைத்துக்கும் ஃபோலிக் ஆசிட் மிக முக்கியம். எனவே சத்துள்ள உணவுகளுக்கே முதலிடம்.
    பயம் குழந்தையை அதிகம் பாதிக்கும் என்பதால் அமைதி கொள்ளுங்கள். தியானம், இசை கேட்பதில் ஈடுபடுங்கள்.

    கருசிதைவு

    10 - 20% கருசிதைவு ஏற்படத்தான் செய்கிறது. க்ரோமோசோமல் அப்நார்மலிட்டி எனும் பிரச்சனை மூலம் கருசிதைவாகுவதை தடுக்க முடியாது என்பதே உண்மை. இதெல்லாம் இருந்தாலும் உங்களது மைண்ட், எண்ணம், மனம் எப்போதுமே பாசிட்டிவ்வாக இருக்க வேண்டும். பாசிட்டிங் எண்ணெங்கள் (நேர்மறை எண்ணங்கள்), இருந்தாலே எதையும் வெல்ல முடியும். கெஃபைன் உள்ள பொருட்களை அறவே தவிர்க்கவும். நிக்கோட்டீன் இருப்பதையும் தவிர்க்கவும். சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் இருக்க வேண்டாம். குடிப்பழக்கம், புகைப்பழக்கம் இருந்தால், கருசிதையும் வாய்ப்புகள் அதிகம். ரத்தப்போக்கு இருந்தால் தொடக்கத்திலே மருத்துவரின் ஆலோசனையை கேளுங்கள்.



    குறை பிரசவம்

    பெரும்பாலான தாய்மார்கள் குறைபிரசவத்தை நினைத்து பயப்படுகிறார்கள். 37 வாரம் முடியாமல் முன்னராக குழந்தை பிறந்தால், அந்த பிரசவத்தை குறை பிரசவம் எனச் சொல்லப்படுகிறது. இப்போதெல்லாம் 37-வது வாரத்துக்கு முன் குழந்தை பிறந்தாலும் அதற்கேற்ற தக்க சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குகிறார்கள். யூட்டரின், சர்விகல் அப்நார்மலிட்டி இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை வர வாய்ப்புகள் அதிகம். மருத்துவர்களின் ஆலோசனை பெறுங்கள். குறை பிரசவம் வரலாம் என டாக்டர்கள் முன்னரே யூகிக்கப்பட்டால், அதற்கேற்ற சிகிச்சையை அளிப்பார்கள். பயம் வேண்டாம்.
    உடல் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு இவற்றை சீராக, சரியாக வைத்துக் கொள்வது தாய்மார்களின் பொறுப்பு. இந்த 3 விஷயங்களிலும் நீங்கள் சரியாக இருந்தால் பயம் எதற்கு? உடல் எடையை நன்றாக கவனித்து கொள்ளுங்கள்.

    தொப்புள் கொடி சுற்றிக் கொள்வது

    நிறைய கதைகளை கேட்டிருப்போம் குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றி உள்ளது. வயிற்றில் உள்ள அந்த நீர் மூலமாக தானாக தொப்புள் கொடி சரியாகிவிடும். சிலருக்கு சரியாகவில்லை என்றாலும் பயப்பட வேண்டாம். மருத்துவர்கள் கவனித்து கொள்வார்கள்.

    உடல் எடை அதிகரிப்பது

    இது எல்லாருக்கும் நடக்க கூடிய விஷயம். உங்களது உடலின் தோற்றம் மாறுகிறதால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். சில மாதங்களிலே பிரசவத்துக்கு பின்னர் சரியாகிவிடும். எடையை பற்றி அதிகம் கவலை கொள்ளாமல், கர்ப்பக்காலத்தை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். நீங்களாக எந்த வொர்க்அவுட்டும் செய்ய வேண்டாம். குழந்தை பிறந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

    வலி மிகுந்த பிரசவம் இருக்குமா…

    பிரசவத்தை நினைக்கும்போது பயம். பிரசவ வலி வந்தவுடன் மருத்துவமனைக்கு சரியாக செல்ல முடியுமா எனப் பயம். பிரசவ வலி, பனிக்குடம் உடைதல் இதுபோன்ற நிறைய விஷயங்கள் குறித்து பயம் இருக்கும். உங்களுக்கு நீங்களே விழிப்புணர்வு ஊட்டிக் கொள்ளுங்கள். எல்லாம் சரியாக நடக்கும். சுலபமான பிரசவம் நடக்கும்.
    என்றும் இளமையாக இருக்க தினமும் சாலட் சாப்பிடுவது நல்லது. இன்று, லிச்சி பழம், வெள்ளரிக்காய் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    லிச்சி பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 6,
    வெள்ளரிக்காய் - 1
    தேன் - ஒரு டீஸ்பூன்,
    எலுமிச்சம்பழம் - ஒன்று,
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    உப்பு - ஒரு சிட்டிகை.



    செய்முறை :

    லிச்சி பழம், வெள்ளரியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    எலுமிச்சையை பிழிந்து சாறு பிழிந்து வைக்கவும்.

    லிச்சிபழத் துண்டுகள், நறுக்கிய வெள்ளரித் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போடவும்.

    அதனுடன் உப்பு, தேன், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

    சத்தான லிச்சி - வெள்ளரி சாலட் ரெடி.

    குறிப்பு: லிச்சி பழத்துக்குப் பதில், நுங்குத் துண்டுகள் சேர்த்தும் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆசனங்கள் வழக்கமான உடற்பயிற்சியில் இருந்து பெருமளவு மாறுபடுகின்றன. இவற்றைச் செய்யும் முறையும் வேறு, இதனால் கிடைக்கும் பலன்களும் வேறு.
    தற்போது யோகாசனம் பிரபலமாகி வருகிறது. அதே சமயம், அதை பெரும்பாலானோர் ஓர் உடற்பயிற்சி வடிவமாகவே எண்ணுகிறார்கள். அது ஒரு தவறான புரிந்து கொள்ளல் ஆகும். உண்மையில் யோகாவில் உடல் சார்ந்த அம்சங்கள் தான் ஆசனங்கள் என்பவை. ஆசனங்கள் வழக்கமான உடற்பயிற்சியில் இருந்து பெருமளவு மாறுபடுகின்றன. இவற்றைச் செய்யும் முறையும் வேறு, இதனால் கிடைக்கும் பலன்களும் வேறு.

    யோகாசனம் நிலையான அமைப்புகளிலும், தசைகளை தளர விடுவதிலும் அதிக கவனம் செலுத்துகிறது. ஆசனம் ஒரு திடமான மற்றும் சவுகரியமான நிலை. அசைவுகள் மெதுவாகவும், கட்டுப்படுத்தப்பட்டவையாகவும் இருக்க வேண்டும். மூச்சும் அதனுடன் ஒத்துழைக்க வேண்டும். வழக்கமான உடற்பயிற்சியில், அசைவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, தசைகளில் அழுத்தம் தரப்படுகிறது. உடற்பயிற்சியில் சில குறிப்பிட்ட அசைவுகளைத் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டியிருக்கும். அங்கே சுவாசம் அவற்றுடன் ஒருங்கிணைவதில்லை.

    யோகாசனம், எலும்பு பரப்பில் தசைகள் ஒரே மாதிரியாக இருக்க உதவுகிறது, இதனால் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது. யோகாசனமானது ஆற்றலை சிறப்பாக பயன்படுத்துகிற ஒரு செயலாகும். உடற்பயிற்சியானது, பொதுவாக தசையின் அளவை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. இதனால் தசையின் நீளம் குறைகிறது. நெகிழ்வுத்தன்மை குறைகிறது. உடற்பயிற்சி செய்கிற ஒருவர், நிறைய ஆற்றலைப் பயன்படுத்துகிறார்.

    யோகாசனத்தில், உடல் ஒரு தளர்ந்த நிலையில் உள்ளது, ஆகவே சுவாச அமைப்பில் வேலைப்பளு குறைகிறது. ஆனால், வழக்கமான உடற்பயிற்சியில் தொடர்ச்சியான அசைவுகள் இருப்பதால், தசைகளுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கிறது. இதனால் சுவாசிக்கும் வேகம் அதிகரிக்கிறது, நுரையீரல்கள் அதற்கேற்ப அதிகம் உழைக்கிறது.

    யோகாசனம் உடலில் கார்டிசால் அளவைக் குறைக்கிறது. கார்டிசால் என்பது, கொலஸ்ட்ராலிலிருந்து உண்டாகும் ஒரு ஹார்மோன். இது உணரப்படும் அழுத்தத்துடன் தொடர்புடையது. உடற்பயிற்சியானது உடலில் கார்டிசால் அளவை அதிகரிக்கக்கூடும். காரணம், உடற்பயிற்சியை உடல் ஓர் அழுத்தமாக உணர்கிறது.

    யோகாசனத்தின்போது, ஒரு குறிப்பிட்ட நாசித்துவாரத்தின் வழியே சுவாசம் நிகழும்போது, அறிவாற்றல் தூண்டப்படுகிறது. வழக்கமான உடற்பயிற்சியில் இது சாத்தியமில்லை. யோகாசனத்துக்கு பிறகு, உடல் தளர்ந்த நிலையில் உள்ளது. இதற்குக் காரணம், நரம்பு அமைப்புக்குக் கிடைக்கும் இதமான தாக்கம் தான். உடற்பயிற்சியின் போது, லாக்டிக் அமிலம் உண்டாகிறது. இது களைப்பு மற்றும் சோர்வை உண்டாக்கலாம். உடற்பயிற்சியின் பெரும்பாலான பலன்களை யோகாசனம் வழங்குகிறது. அதோடு, மன அமைதி, திருப்தி மற்றும் மகிழ்ச்சி போன்ற அம்சங்களையும் மேம்படுத்துகிறது.
    உங்களுக்கு கோபம் வருமா? குட்டீஸ் கோபத்தால் விளையும் தீமைகள் என்ன? கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி அறிந்து கொள்ளலாம்...
    உங்களுக்கு கோபம் வருமா? குட்டீஸ். அம்மா, நீங்கள் கேட்ட பொம்மையை, சாக்லெட்டை வாங்கித் தராவிட்டால் கோபம் வந்துவிடுகிறதா? அம்மா கூப்பிட்டாலும் சத்தம் கொடுக்காமல் முகத்தை திருப்பிக் கொள்கிறீர்களா? கோபம் கொடியது என்பதை நீங்கள் அறிவீர்களா? கோபம் ஏன் வருகிறது? கோபத்தால் விளையும் தீமைகள் என்ன? கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி அறிந்து கொள்ளலாம்...

    * உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடாக கோபம் வருகிறது. வெறுப்பு, வலி, பயம் ஆகியவையே கோபத்தின் வேர்களாக உள்ளன. ஆரம்பத்தில் எதிர்பார்ப்பின் காரணமாக வெறுப்பும், வலியும் ஏற்படலாம். நம்பிக்கையின்மை, அறியாமை, சந்தேகம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பயமும், கோபம் உருவாக காரணமாகலாம். நீங்களாக யோசித்துப் பார்த்தால் கோபத்தின் அடியில் இந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு இருப்பதை உணரலாம். எதிர்பார்ப்பை குறைப்பதன் மூலம் வெறுப்பை தணிக்கலாம். வெறுப்பை கைவிட்டால் கோபமும், துன்பமும் பறந்துபோகும்.

    * பலரும் தங்கள் கோபத்தின் காரணத்தை உணராமல் இருக்கிறார்கள். சகிப்புத்தன்மை குறைவே கோபம் வெளிப்பட காரணமாகும்.

    * கோபம் ஏற்படும்போது மூளையை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், ‘அமிக்டாலா’ என்ற பகுதியில் இருந்து கோப உணர்வுகள் வெளிப்படுவதை கண்டுபிடித்தனர். உற்சாகம் தரும் விஷயங்களில் மனதை ஈடுபடுத்தினால் இந்த அமிக்டாலா பகுதியின் செயல்பாட்டை குறைத்து கோபத்தை கட்டுப்படுத்திவிடலாம் என்றும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

    * உடலில் செரொடானின் ரசாயனப் பொருள் அதிகமானால் தீவிர மனப்போக்கு தூண்டப்படும். இதுவே கோபம், எரிச்சல், வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்வுகளை தூண்டுகின்றன. செரோடானின் திரவத்தை கட்டுப்படுத்தினால் அமிக்டாலா பகுதியின் செயல்பாட்டை தடுத்து கோபத்தையும் இல்லாமல் செய்துவிடலாம்.

    * கோபமானது அட்ரினலின், கார்டிசோல் போன்ற ஹார்மோன்களை அதிகமாக தூண்டுகின்றன. இவை ஒருவகையில் உடலுக்கு சில நிமிடங்களுக்கு தீவிர ஆற்றலை வழங்குகின்றன. அதனால் கோபம் அளவாக வரு வது நல்லதுதான் என்று சொல்லப்படுகிறது. அளவுக்கு அதிகமான கோபமே, உடல் எந்திரத்தின் வேகத்தை அதிகமாக்கி எளிதில் சூடாக்கிவிடுகிறது. அது பலவித சிக்கல்களை தந்துவிடுகிறது.

    * கோபம் உணர்வுகளின் வடிகால் என்றும் கருதப்படுகிறது. கவலை, வலி, ஏமாற்றம் போன்ற வேதனையான உணர்வுகளின் வடிகாலாக கோபம் வெளிப்படுவதால் அது கொடிய உணர்வல்ல என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். எனவே மற்றவர்களை காயப்படுத்தாத அளவுக்கு கோபத்தை வெளிப்படுத்துவது ஒன்றும் தவறல்ல.

    * கோபம் நமது திறன்களை பாதிக்ககக்கூடியது. கோபத்துடன் தொடர்புடைய ரசாயனப் பொருட்கள் மூளை செல்களை அழிக் கிறது. மேலும் புதிய மூளை செல்கள் வளர்வதையும் தடுக்கிறது. இதனால் கோபமானது நமது நினைவுத்திறனில் தடுமாற்றத்தை உருவாக்கும்.



    * உலகில் சரிபாதிக்கும் மேலானவர்கள் கோப வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்கிறது ஒரு உளவியல் ஆய்வு.

    * கோபத்தின் விளைவால் பகை, விரோதம், உறவு முறிவு, போர்கள், வன்முறைகள் நிகழ்வதால் கோபம் கட்டுப்படுத்தக்கூடிய உணர்வாக வலியுறுத்தப்படுகிறது. கோபம் அழிவின் பாதை என்பது அனைத்து மத போதனைகளிலும் சொல்லப்பட்டுள்ளது.

    * ஆண்களைவிட பெண்கள் கோபக்காரர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அவர்கள், ஆண்களைவிட 12 சதவீதம் அதிகமாக கோபத்தை வெளிப்படுத்துகிறார்களாம். ஆனால் கோபத்தின் விளைவாக ஆண்களே அதிகமாக வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

    * போதைப் பழக்கம் கோப உணர்வை அதிகமாகத் தூண்டி கொடுமையானதாக மாற்றும் என்றும் ஆய்வு கூறுகிறது.

    * கோபத்தால் ஏற்படும் மன அழுத்தம் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளதாம். எனவே கோபம் கொள்ளக்கூடாது.

    * வீடியோ கேம்ஸ் விளையாட்டுகள் கோபத்திற்கும், தீவிர உணர்வுகளுக்கும் ஒரு காரணம் என்று நம்பப்பட்டது. ஆனால் விளையாட்டு நேரத்தில் மட்டுமே அவை தீவிர எண்ணத்தை உருவாக்குவதாக அறியப்பட்டு உள்ளது. விளையாட்டும், உடற்பயிற்சியும் கோபத்தை கட்டுப்படுத்தும் என்றே ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பழு தூக்கும் பயிற்சியைவிட, நீச்சல் பயிற்சி பலமடங்கு கோபத்தை கட்டுப்படுத்துகிறதாம். உங்களுக்கு கோபம் அதிகமாக வருகிறது என உணர்ந்தால் விளையாட்டிலாவது, உடற்பயிற்சியிலாவது கவனம் செலுத்துங்கள்.

    * ஆண்களின் பாலின ஹார்மோன்களான டெஸ்டோஸ் டிரோன்கள், கோபத்தை அதிகம் தூண்டுவதாக அறியப்படுகிறது.

    * டிஸ்னி லேண்ட் உள்ளிட்ட பொழுதுபோக்கு பூங்காக்கள் நிறைந்த அமெரிக்க நகரங்களான ஆர்லாண்டோ மற்றும் புளோரிடா போன்றவை அதிக கோபக்காரர்கள் வசிக்கும் பகுதியாக கணக் கெடுப்பில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியான உண்மையாகும்.

    * ரோவியோ நிறுவனம் ‘அங்கிரிபேர்டு’ விளையாட்டையும், சினிமாவையும் உருவாக்கி புகழ்பெற்றது. ‘அங்கிரிபேர்டு’ சினிமா அதிகம் வசூல் செய்த சினிமா படங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    * ‘இன்டர்லுகின்-6’ என்ற வைட்டமின்கள் குறைவு கோபத்தை தூண்டுவதாக ஆய்வு கூறுகிறது. இந்த வைட்டமின் பற்றாக் குறையால் இதய பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். வைட்டமின்கள் நிரம்பிய காய்கறிகள், பழங்களை சாப்பிட்டால் இதன் பற்றாக்குறையை ஈடுசெய்யலாம்.

    * கோபத்தை கட்டுப்படுத்தும் பயிற்சிகள் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்துவதாகவும் உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் வெற்றியாளராக உயர விரும்பினால் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். 
    அல்சைமர் நோய் என்பது மூளையின் செல்களைத்தாக்கி, நம்முடைய நினைவுகளை தொடர்ந்து அழித்து, சிந்திக்கும் திறனை முற்றிலும் பாதித்து விடுகிறது.
    இன்று (செப்டம்பர் 21-ந்தேதி) உலக அல்சைமர் தினம்.

    உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகமக்களை அதிக அளவில் கொல்லும் ஐந்து முக்கிய நோய்களில் அல்சைமரும் ஒன்று. உலகில், அல்சைமர் நோயில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்தியாவில் தான் உள்ளார்கள். அல்சைமர் நோய் என்பது மூளையின் செல்களைத்தாக்கி, நம்முடைய நினைவுகளை தொடர்ந்து அழித்து, சிந்திக்கும் திறனை முற்றிலும் பாதித்து விடுகிறது.

    இறுதியில் மிக சாதாரணமான வேலைகளை செய்யும் திறன்களைக்கூட முழுமையாக இழக்கிறோம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் குணப்படுத்த தற்போது வாய்ப்புகள் இல்லை. ஆரம்பக்கட்டத்தில் அறிந்தால், மேலும் சீர்கெடுவதை தவிர்க்க முடியும். அல்சைமர் என்பது டெம்னீஷியா என்கிற நோயின் ஒரு வகையாகும். டெம்னீஷியா என்பது மூளைக்கும் உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை துண்டித்தும், ஒருவரின் அன்றாட செயல்பாடுகளை பாதிக்கவும் செய்கிறது.

    அல்சைமர் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளை அழித்து, நினைவுகள், மற்றும் மொழியாற்றலை செயலிழக்க செய்கிறது. இந்நோயினை முதன்முதலாக கண்டறிந்த மருத்துவர் அலோய்ஸ் அல்சைமர் பெயரிலேயே இந்நோய் அழைக்கப்படுகிறது. தன்னிடம் நோயாளியாக வந்து இறந்துப் போன பெண் ஒருவரின் மூளை திசுக்களை ஆராயும்போது அவைகள் இயல்பாக இன்றி, ஒன்றுக்கொன்று பிணைந்தும், முறுக்கிக்கொண்டும் இருந்தன.

    படலங்கள் திசுக்கள் மீது படர்ந்து இருந்தது. இதன்காரணமாக, நரம்புமண்டலத்திற்கும் மூளைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. மூளையிலிருந்து நரம்புமண்டலத்தின் வாயிலாகத்தான் உடலிலுள்ள வெவ்வேறு உறுப்புகளுக்கும் உத்தரவுகள் செல்கின்றன. இத்துண்டிப்பின்காரணமாக உறுப்புகள் செயல்பாட்டினை இழக்கிறது. மூளையில் ஏற்பட்டிருந்த இந்நோயின் காரணமாகவே அப்பெண் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை அல்சைமர் கண்டறிந்தார்.

    அல்சைமர் நோய்க்கான ஆரம்பக் கட்டத்தில் நோயாளிக்கு தகவல்களை உள்வாங்குவதிலும், அதனை நினைவில் தக்கவைத்துக் கொள்வதிலும் சிரமம்உண்டாகும். இதனால், நினைவில் நிறுத்த திரும்ப திரும்பகேள்விகள் கேட்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு பொருளைஎங்கே வைத்தோம் என்றுநினைவுக்கு வராமல் தேடிக்கொண்டே இருத்தல், தினமும் சென்று வரும் இடங்களுக்கான வழிகளைக்கூட மறந்துவிடுதல் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. மேலும், தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறனும், முடிவெடுக்கும்ஆற்றலும் மங்கிவிடுகிறது. இதனால், சாதாரண முடிவுகள் உதாரணமாக, சாலையை கடப்பதில் கூட தவறுகள் உண்டாகி விபத்தில் முடிகின்றன. மேலும், பேச்சு, படிப்பு, எழுதுதல் போன்றவை பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

    பெரும்பாலும் அறுபது வயதானவர்கள், அறுபது வயதினை கடந்தவர்களை இந்நோய் தாக்கினாலும், இளம் வயதினருக்கும் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. அல்சைமர் நோய் ஏற்படுவதற்கு வயது மூப்பு மட்டுமின்றி, முன்னோர்களிடமிருந்து மரபணுக்கள் வாயிலாக சந்ததியினருக்கு கடத்தப்படுகிறது. இவைகளைத்தவிர விபத்துகளில் தலையில் காயம் ஏற்பட்டு மூளைபாதிக்கப்பட்டால் அல்சைமர் நோய் ஏற்படுகிறது. இதனால்தான் மோட்டார் வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவதும், காரில்பயணிப்போர் இருக்கை பட்டை அணிவது அவசியம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.



    அல்சைமர் நோய் வராமல் எப்படிதடுப்பது?

    தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், இதயம் சீராக இயங்கும் வகையில் உடலை பேணுதல், நீரழிவு நோயினைக்கட்டுப்பாட்டில் வைத்தல், உடல் பருமனை குறைத்தல், புகைப்பிடித்தலை தவிர்த்தல், ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருத்தல் போன்றவைகள் உதவுகின்றன. மேலும் மிக முக்கியமாக, மூளையை சுறுசுறுப்பாக வைத்திருத்தல்அவசியம்.

    வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டோம், நமக்கு வயதாகிவிட்டது என்று, தூங்குவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற மூளைக்குவேலைத்தராத எளிமையான, செயல்களை செய்வது அல்சைமர் நோய்க்கு வழிவகுத்துவிடும். மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க புதியதிறன்களை கற்றுக்கொள்ள முயற்சிப்பது நன்று.

    உதாரணமாக, புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். புதிர்கள், அறிவு விளையாட்டுகள், போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள வேண்டும். சதுரங்கம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகள் நன்று. புத்தகங்கள் படிப்பது, படித்ததை மற்றவர்களிடம் பகிர்வது, எழுதுவது போன்றவைகளும் மூளைக்கு வேலைத்தரக் கூடியவைகள்.

    தன்னார்வ தொண்டராக, பொது தொண்டாற்றுவது அல்சைமர் நோய் வருவதை தடுப்பதாக கனடா நாட்டிலுள்ள பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு ஒன்று சொல்கிறது. புதியவர்களை சந்திக்கும் போதும், புதிய வேலைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் போதும் நமதுமூளையில் என்டோர்பின்ஸ் என்கிற ஹார்மோன் சுரக்கிறது, இது மூளையை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும்வைத்திருக்க உதவுகிறது.ஒரேவிதமான வேலைகளை தினம் தொடர்ந்து செய்யும் போது மூளைதானியங்கி முறைக்கு சென்றுவிடுகிறது.

    நாளடைவில், மூளைசெல்கள் இறக்கத்தொடங்குகின்றன. புதியவைகள், வித்தியாசமானவைகளை முயற்சிக்கும் போது மூளைவிழிப்புநிலையில் இயங்குகிறது. காலை எழுந்தவுடன் பல்துலக்கும்போது, வலதுகையில் குச்சியை வைத்து தேய்ப்பவராக இருந்தால் அதைமாற்றி இடது கையில்தேய்க்க முயற்சி செய்யுங்கள். பல்தேய்க்கும் போது ஏதோ எண்ண ஓட்டத்தில் இருக்கும் மூளை அன்றைக்கு விழிப்பு நிலைக்கு வந்துவிடும்.

    இந்த எளிய உதாரணம், மூளையை எப்படி தானியங்கி நிலையிலிருந்து விழிப்புநிலைக்கு கொண்டு வருவது என்பதை விளக்கும். இதுப்போன்று, கடைக்கு தினம் செல்லும் வழியில்செல்லாமல், வேறு வழிகளில் செல்லமுயற்சிக்கலாம். இது போன்ற பயிற்சிகள் மூலமாகவும், உடலினை சரியாக பேணுவதன் மூலமாகவும் மூளையை சுறுசுறுப்பாக்கி, அல்சைமர் நோய் வருவதைதடுக்கலாம்.

    கலையரசி, சிறப்பு கல்வி பயிற்சியாளர்
    இறாலை வறுவல், குழம்பு, கிரேவி, பிரியாணி என பலவகைகளில் சமையல் செய்து உண்ணுகிறார்கள். அதில் இறால் மசாலா தொக்கு செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 1/2 கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி -2
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    சோம்பு தூள் - 1/ 2டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
    மல்லித்தூள் -2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு போட்டு லேசாக நிறம் மாறியதும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு குழைய நன்றாக வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் அதில் இறாலை போட்டு 10 நிமிடம் வதக்கியதும் சோம்புத்தூள், மிளகுத்தூள் போட்டு கிளறி விடவும்.

    தொக்கு சுருள வதங்கி வந்தவுடன் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    ருசியான இறால் மசாலா தொக்கு ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கணவன் - மனைவி இடையே ஏற்படும் இன்றைய இல்லற சிக்கல்களுக்கு முக்கிய காரணமாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன சமூக வலைத்தளங்கள்.
    கணவன் - மனைவி இடையே ஏற்படும் இன்றைய இல்லற சிக்கல்களுக்கு முக்கிய காரணமாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன சமூக வலைத்தளங்கள். எங்கோ மூலை முடுக்குகளில் இருப்பவர்களை ஒன்றிணைப்பதாக கூறப்படும் சமூக இணைய தளங்கள் ஒரே வீட்டில், ஒரே அறையில் இருக்கும் தம்பதிகளை பிரித்துவிடுகிறது. இளம் பெண்கள், காதலால் கற்பிழப்பது, தற்கொலை செய்வது, மானபங்கப்படுவது போன்ற சம்பவங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, வேடிக்கையாய் வெளியிடும் புகைப்படங்களும், விமர்சனங்களும்கூட கணவன்-மனைவி இடையே மனக்கசப்பை வளர்த்து, விவாகரத்து வரை கொண்டுபோய்விடுகிறது.

    அமெரிக்காவில் 20 சதவீத விவாகரத்திற்கு சமூக வலைத்தளங்கள் காரணமாக இருக்கின்றன என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அதாவது 5 விவாகரத்துகளில் ஒன்று சமூக வலைத்தள பிரச்சினையால் உருவானதாக அறியப்படுகிறது. இந்தியாவில் இதுபோன்ற புள்ளிவிவரங்கள் வெளியாவதில்லை என்றாலும், கணக்கெடுப்பு நடத்தினால் இந்திய விவாகரத்து சதவீதம் இதையும் மிஞ்சும் என்று கூறலாம்.

    ஏனெனில் இங்கு சமூகவலைத்தளம் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கையாளத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். எவை, எவை அச்சுறுத்தலாக மாறும் என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் சகஜமாக, விதவிதமான போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். செல்போன் எண்கள், உண்மையான முகவரி முதல் தங்களது தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு பதிவிடுகிறவர்களும் உண்டு. எல்லோரும் தொடர்புகொள்ளும் விதத்தில் இணைய பக்கத்தை வைத்திருப்பவர்கள் தங்களை அறியாமலே சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

    சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாதவர்கள் நுழைவார்கள் என்ற விழிப்புணர்வு கொண்ட பெண்கள்கூட, வாட்ஸ் ஆப் வலைத்தளத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். நமக்கு அறிமுகமுள்ள, நம்மை அறிந்தவர்கள்தானே நமது வாட்ஸ் ஆப் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு பிரச்சினையை வரவழைத்துக் கொள்கிறார்கள். புகைப்படங்கள் நண்பர் மூலமாகவோ, பகிர்தல் மூலமாகவோ, குழு மூலமாகவோ மற்றவர்களுக்குச் செல்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

    சமூக இணையதளங்கள் வந்ததில் இருந்து அறிமுகமில்லாத புதிய நட்பால் கற்பை இழந்தவர்கள், நகை, பணம் இழந்தவர்கள், மானபங்கப்படுத்தப்பட்டவர்கள் என உலகம் முழுக்க பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். பலர் மேலும் அசிங்கப்பட வேண்டியிருக்கும் என்று கருதி காவல் நிலையம் செல்லாமல், வலைத்தள கணக்கை மூடிவிட்டு, செல்போன் எண்களை மாற்றிக்கொள்வதும் அதிகரித்து வருகிறது.



    விவாகரத்திற்கு வழிவகுத்த தகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்த சமூக வலைத்தளங்கள் எவை என்பது பற்றி அமெரிக்காவில் ஒரு புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டது. அதில் 66 சதவீதம் பேர் பேஸ்புக்கை குறிப்பிட்டுள்ளனர். மை ஸ்பேஸ் தளம் 15 சதவீதமும், டுவிட்டர் 5 சதவீதமும் பாதிப்புக்கு துணையிருந்ததாக விவாகரத்திற்கு விண்ணப்பித்தவர்கள் கூறி உள்ளனர்.

    மனைவி படுக்கை அறைக்கு வந்தபிறகு, கணவர் தன்னுடைய நண்பர்களுடன் நீண்ட நேரம் செல்போனில் சமூகவலைத்தளம் வழியாக உரையாடுவது மனைவிமார்களை ஆத்திரப்பட வைத்திருக்கிறது. அதே நேரம் மனைவி தனது நெருங்கிய வட்டத்துடன் சமூகவலைத்தளங்களில் உறவாடும்போது, கணவர் இன்னும் ஆக்ரோஷம் காட்டுவதும், சந்தேகம் அடைவதும் அதிகரித்து பிரச்சினைக்கு வழிவகுத்துவிடுகிறது.

    வாட்ஸ் ஆப் வலைத்தளம் வந்தபிறகு இந்த பிரிவுகளும், உறவு மோதல்களும் பெருமளவு அதிகரித்திருக்கின்றன. இந்த தளத்தில் ஒருவர் எப்போது செய்தியை பார்த்தார் என்பதை அறிய முடியும் என்பதால் அன்புக்குரியவர், தான் அனுப்பிய தகவலைப் பார்த்தாரா, பார்க்கவில்லையா என்பதை கணித்து அதையும் பிரச்சினை யாக்கிவிடுகிறார்கள். ‘ஆன்லைனில் இருந்துகொண்டு தன் கேள்விக்கு பதில் அளிக்காமல் இருக்கிறாரே, நீண்ட நேரம் யாருடன் உரையாடிக் கொண்டிருப்பார்?’ என்பது போன்ற கேள்விகளும், சிந்தனைகளும் நிறைய குடும்பங்களில் சந்தேக விதைகளைத் தூவுகின்றன.

    கடைசியாக எப்போது வாட்ஸ் ஆப்பை திறந்தார் என்ற நேரத்தை கணிக்க முடிவதால், இரவு வெகுநேரம் கழித்து இணையத்தை திறக்கும் கணவர் மனைவியிடமும், மனைவி கணவரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கும் சூழலை உருவாக்குகிறது. நாம் தூங்கிய பிறகு யாரிடம் உரையாடினார், என்ன பேசியிருப்பார் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும், சந்தேகமும் பிரச்சினைக்கு அடித்தளமிடுகிறது.

    நண்பர்கள், தோழிகள், காதலிகளின் புகைப்படத்தை ஸ்டேட்டஸாக வைத்தாலோ அல்லது பாராட்டி எழுதினாலோ அதை தவறாக புரிந்து கொண்டு அவருக்கும், இவருக்கும் என்ன உறவு? என்ற சந்தேக கண்ணோட்டத்துடன் சிலர் பின்தொடர தொடங்குகிறார்கள். அது மோசமான பின்விளைவுகளை உருவாக்குகிறது. பிறந்த நாள் கொண்டாட்டம், சுற்றுலா சென்றது, விழாக்களில் பங்கேற்றது போன்ற மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக வெளியிடுவதை இன்று பலரும் விரும்புகிறார்கள். ஆனால் அதுவும் பிற்காலத்தில் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.



    விழாவில் தோழியுடன் எடுத்த படத்தைக் காட்டி அவள் யார்? என்று விசாரிக்கும் மனைவிமார்கள் உண்டு. அடுத்து அவளை எப்போதெல்லாம் சந்திக்கிறார் என்பதை அறிந்து கொள்ள ஆவல் காட்டுவார்கள், அல்லது அதையே சந்தேக நோக்குடன் பார்ப்பார்கள். அடுத்து அலுவலக மீட்டிங் என்றோ, விழா என்றோ கூறினால் அந்த தோழியும் இடம்பெறுவாளா என்று நோட்டமிடுவார்கள். இது கணவன், மனைவி இருவருக்கும் பொருந்தும்.

    கணவரின் பேஸ்புக், டுவிட்டர் பாஸ்வேர்டுகள் தங்களுக்கும் தெரியவேண்டும் என்று விரும்பும் பெண்கள் நிறைய பேர் உள்ளனர். அதிலும் இணையதள பிரச்சினைகளை அறிந்தவர்கள் கணவரின் கணக்கையே தனது கணக்காக பயன்படுத்துவதும் உண்டு. அப்படியிருக்கும்போது நண்பன் என நினைத்து அவருடைய மனைவியிடம் உறவாடும் ஆண் நண்பர்கள், ரகசியங்களை பகிர்ந்து கொண்டு சிக்கலை கிளப்பியிருக்கிறார்கள். மனைவியின் தோழிகளுடன் நட்பு பாராட்டி, அதனால் மனைவியின் கோபத்துக்கு ஆளான ஆண்களும் இருக்கிறார்கள்.

    வலைத்தளங்களில் ஞாபகப்படுத்தும் விதமாக பழைய புகைப்படங்களையெல்லாம் அள்ளிக் கொண்டுவந்து காண்பிக்கும் வசதி உண்டு. அப்போது பழைய தோழிகள், பழைய ஆண் நண்பர்களைப் பற்றிய புகைப்படத்தை கணவரோ, மனைவியோ பார்க்கும் சூழல் ஏற்பட்டதால், சிலரது வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. தற்கால விவாகரத்து வழக்குகளின்போது வாட்ஸ் ஆப் மெசேஜ்கள், வலைத்தள புகைப்படங்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்படுகின்றன. விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சம் கேட்ட பெண்கள், விவாகரத்திற்குப் பிறகு, கணவர் சுற்றுலா சென்றது, கொண்டாட்டங்களில் கலந்து கொண்டது பற்றிய புகைப்படங்களைக் காட்டி, அதிக சம்பாத்தியம் இருப்பதாக கூறி ஜீவனாம்சத்திற்கும், குழந்தை பராமரிப்பிற்கும் கூடுதல் தொகை கேட்ட முறையீடுகளும் நிகழ்ந்துள்ளன.

    குழந்தைகளை தாங்கள்தான் பராமரிப்போம் என்று கூறி குழந்தையை தன்வசம் வைத்துக் கொண்ட தாய், வேலைக்குச் சென்று தாமதமாக வருவதையும், பார்ட்டிகளில் கலந்து கொண்டதையும், அப்போது மற்றவர்களுடன் சேர்ந்திருப்பதையும் வலைத்தளங்களில் அறிந்து கொண்டு, அவற்றை காரணம் காட்டி, குழந்தை மீது அதிக அக்கறை காட்டாதவர் என்று கூறி குழந்தையை தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி கேட்டும் மேலைநாடுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    எனவே சாதாரண விஷயங்களும், சமூக வலைத்தளங்களால் பிரச்சினைக்குரியதாக மாறும் அபாயம் நிறைய உண்டு. எனவே திருமணத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி, விவாகரத்து ஆனாலும் சரி, இணையதளம் என்றால் எச்சரிக்கை அவசியம். இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கை மற்றவர் ரசிக்கும் வேடிக்கைக் களமாக மாறிவிடும். 
    உட்கார்ந்தே அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு கழுதது வலி வரும். அவர்கள் கழுத்து வலியை முற்றிலும் போக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி சில முக்கிய குறிப்புகளை பார்ப்போம்.
    இதயத்தில் இருந்து மூளைக்கும், மூளையில் இருந்து உடம்போடு மற்ற இடங்களுக்கும் ரத்தத்தை கொண்டு செல்கின்ற நரம்புகள் கழுத்து பகுதியில் தான் உள்ளது. இத்தகைய கழுத்து பகுதியில் ஏற்படும் கழுத்து வலியை சாதாரண வலி என்று நினைத்து விட்டாலோ அல்லது வெறும் வலி நிவாரணிகள் எடுத்தாலோ நிச்சயம் கழுத்து வலி தொடர்ந்து பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

    கழுத்து வலியை முற்றிலும் போக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி சில முக்கிய குறிப்புகளை பார்ப்போம்.

    ஐஸ் கட்டியை எடுத்து ஒரு துண்டில் சுற்றி வலி இருக்கும் இடத்தில் அந்த துண்டை வைத்து ஒத்தி எடுக்கவும். 2 நிமிடம் தொடர்ந்து இதனை செய்யதால் கழுத்து வலி குணமாகும்.

    நொச்சி இலையை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளியுங்கள்.

    இரவு வேளையில் கண்டதிப்பிலியை இடித்து பால், நீர் சேர்த்து வேக வைத்து பனங்கற்பண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் கழுத்துவலி காணாமல் போகும்.

    கழுத்து வலியை போக்க உடற்பயிற்சி ஒரு சிறந்த தீர்வாகும். காய் கால்களை நீட்டி செய்யும் பயிற்சிகள் கழுத்து பகுதியை நெகிழ்வுத்தன்மையோடு வைக்க உதவும். இதனால் கழுத்து பகுதி வலிமை அடையும்.

    தலையை முன்னும் பின்னும் சில நிமிடங்கள் தொடர்ந்து அசைக்கவும். பிறகு இரண்டு பக்கமும் மாறி மாறி தலையை திருப்பவும். 20 முறை தொடர்ந்து இந்த பயிற்சியை மேற்கொள்ளவும். சிறிது நேரத்தில் உங்கள் கழுத்து வலி பறந்து விடும்.

    எந்த வலியையும் குணமாக்க அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறை பயன்படுத்தப்படுகிறது அக்குபஞ்சர் செய்வதால் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்பட்டு வலிகள் குறைகிறது.

    ஒரு டிஷ்யூ பேப்பரை வினிகரில் முக்கி எடுத்து கழுத்தில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து அதனை எடுத்து விடலாம். ஒரு நாளில் 2 முறை இதனை செய்து கழுத்து வலியில் இருந்து விடுதலை அடையலாம்.

    செய்ய கூடாதவை

    படுத்துக்கொண்டே டி.வி. பார்க்கக்கூடாது. கடுமையான வேலைகளை தொடர்ந்து செய்யக்கூடாது. வண்டி ஓட்டுதல், வீட்டு வேலை தொடர்ந்து மணிக்கணக்கில் செய்தல், கழுத்துவலியினை அதிகப்படுத்தும்.

    உணவு முறைகளில் கவனம் இருத்தல் வேண்டும். பித்த உணவுகளை அதிகம் எண்ணெய் மன அழுத்தம் உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

    உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம். இன்று தேங்காய் பால் சேர்த்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்,
    தேங்காய் - அரை மூடி
    வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 2,
    இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்,
    பட்டை - 3,
    லவங்கம் - 5,
    ஏலக்காய் - 3,
    பிரியாணி இலை - 2,
    கறிமசால் பொடி - கால் டீஸ்பூன்,
    முந்திரி - 50 கிராம்,
    நெய் - 100 கிராம்,
    புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    தேங்காயை அரைத்து 4 கப் பால் எடுத்து கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி ஊறவைத்து கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றிச் சூடேறியவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

    பின்பு பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், புதினா சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால், கறி மசால் பொடி, உப்பு சேர்த்துக் கொதி வரும் வரை காத்திருக்கவும்.

    கொதி வந்ததும் அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

    பின்னர் மீதம் உள்ள நெய்யில் முந்திரியை வறுத்து, சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.

    கமகம வாசனைக்குக் கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.

    இதனுடன் பெப்பர் சிக்கன் அல்லது மட்டன் குழம்பு சேர்த்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொடுகுத் தொல்லையை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், தலைமுடியை இழக்க வேண்டி வரும். பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் 5 ஆயுர்வேத குறிப்புகளை பார்க்கலாம்.
    பொடுகுத் தொல்லையை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், தலைமுடியை இழக்க வேண்டி வரும். சிலருக்கு தலைக்கு ஷாம்பு போட்டு அலசிய பின், தலைச்சருமத்தில் வெள்ளையாக தோல் உரியும். இதற்கு ஷாம்புவில் உள்ள கெமிக்கல் ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய் பசையை முழுமையாக வெளியேற்றிவிடுவது தான் காரணம். மேலும் பொடுகுத் தொல்லை இருந்தால், தலைமுடியின் மேல் வெள்ளை நிறத்தில் தூசி படிந்தது போன்று அசிங்கமாக காணப்படும். ஆனால் ஆயுர்வேதத்தில் பொடுகுத் தொல்லையில் முழுமையாக விடுதலைத் தரும் வழிகள் உள்ளது.

    * எலுமிச்சையில் உள்ள அமிலம், ஸ்கால்ப்பில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்கால்ப்பிற்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    * 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில், சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

    * தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் ஓர் அற்புதமான கலவை. இதனைக் கொண்டு ஸ்கால்ப்பை பராமரித்தால், வறட்சி நீங்குவதோடு, கற்பூரத்தில் உள்ள ஆன்டி-பாக்டீயரில் தன்மை ஸ்கால்ப்பில் பொடுகை ஏற்படுத்திய கிருமிகளை அழிக்கும். தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை பொடி செய்து சேர்த்து கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அதனை இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.



    * ஆயுர்வேதத்தின் படி, வினிகர் பொடுகைப் போக்கும் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வினிகர் ஸ்கால்ப்பை ஈரப்பசையூட்டவும் செய்கிறது. ஒரு கப்பில் சிறிது வினிகரை எடுத்து, அதனை ஒரு பஞ்சு பயன்படுத்தி ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

    * வெந்தயம் மயிர்கால்களை வலிமையடையச் செய்வதோடு, ஊட்டமளித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் வெந்தயத்தில் உள்ள கசப்புத்தன்மை ஸ்கால்ப்பில் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுத்து, முடி உதிர்வதையும் தடுக்கும். இரவில் படுக்கும் முன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

    * மிளகுத் தூளும் ஓர் அற்புதமான பொடுகைப் போட்டும் பொருள். இதில் உள்ள காரத்தன்மை நுண்கிருமிகள் மற்றும் பூஞ்சைகளை அழித்து, பொடுகு ஏற்படுவதைத் தடுத்து, ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். சிறிது வால் மிளகை பொடி செய்து, நீரில் அல்லது தேங்காய் எண்ணெயில் கலந்து ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
    ×