என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
மருத்துவம் பல்வேறு வழிகளிலும் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் குழந்தையின்மை என்பதை பெரிய கவலையாகவோ பிரச்சனையாகவோ நினைக்க வேண்டியதில்லை.
குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும்.
திருமணத்துக்குப் பிறகு இயல்பான தாம்பத்தியம் இருந்தும், 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தரிக்காவிட்டால், அதற்கு மலட்டுத்தன்மை (Infertility) காரணமாக இருக்கலாம். இந்த குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்… பெண்ணும் காரணமாக இருக்கலாம். சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகள் என பொது காரணிகளும் இருக்கலாம்.மன அழுத்தம் குழந்தையின்மைக்குக் காரணமாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரிஸ், ஃபைப்ராய்ட் கட்டிகள், குழந்தைப் பருவத்தில் பருவம் அடைந்துவிடுவதைப் போலவே 30, 35 வயதிலெல்லாம் மெனோபாஸ் ஏற்படச் செய்கிற ஹார்மோன் கோளாறுகள், காசநோய் போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை ஏற்படலாம்.
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு புகைப்பழக்கம், மது, பருமன், விந்தணுக்களின் உற்பத்தி போதுமான அளவு இல்லாமல் போவது, உயிரணுக்கள் கருமுட்டையைச் சென்றடையும் வேகம் குறைந்திருப்பது, ஹார்மோன் குறைபாடுகள், மற்ற பாலியல் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
* இன்று ஆண்கள், பெண்கள் இரண்டு தரப்பினரும் தாமதமாக திருமணம் செய்துகொள்ளும் சூழல் உருவாகி வருகிறது. அதனால், தாமதமாக திருமணம் செய்து கொள்கிறவர்கள் திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை ஒன்று செய்துகொள்வது சிறந்தது.
* ஆண்கள் விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சாதாரண ரத்தப்பரிசோதனை நிலையத்திலேயே இதை செய்துகொள்ளலாம்.
* இன்று ஜீன்ஸ் அணிவது கலாசாரமாகிவிட்டது. குறைந்தபட்சம், அணிகிற ஜீன்ஸ் தளர்வானதாகவாவது இருக்க வேண்டும். நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கிறவர்களாக இருந்தால், உடையால் ஏற்படும் அழுத்தமும் இதனால் கூடுதலாகிவிடும். ஜீன்ஸ் அணிகிற நேரத்தையும் முடிந்த வரை குறைத்து, மற்ற நேரங்களில் தளர்வான காட்டன் உடைகள் அணிவது நல்லது.

* லேப்டாப், மொபைல் என்ற எலெக்ட்ரானிக் பொருட்களினால் ஏற்படுகிற பாதிப்புகள் நேரடியாக நிரூபிக்கப்படாவிட்டாலும், கவனமாகப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை பார்ப்பது, மொபைல் போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்வது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
* உடன்பிறந்தவர்களில் யாருக்காவது குழந்தையின்மை பிரச்னை இருந்தால், மற்றவர்கள் அதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்துகொள்ளலாம்.
* சில ஆண்களுக்கு விதைப்பையே இருக்காது. இவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். ஆணுறுப்பில் வீக்கம் உள்ளவர்கள், அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுகிறவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.
* புகை, மது ஆகியவை ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்குவதில் முக்கிய காரணிகளாக இருக்கின்றன என்பதால், அப்பாவாக ஆசை உள்ளவர்கள் இந்தப் பழக்கங்களைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.
* பெண்களில் முறையான மாதவிலக்கு இல்லாதவர்கள், மாதவிலக்கு ஏற்படுவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்வதைவிட பாலிசிஸ்டிக் ஓவரி குறைபாடு இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பது முக்கியம்!
* முக்கியமாக இன்று ஆண்மைக்குறைவு, குழந்தையின்மைக்கு சிகிச்சை என்ற பெயரில் போலி மருத்துவர் பலர் இருப்பதால், உங்கள் மருத்துவரை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.

* சிலர் தூங்குகிற நேரங்களில் கூட இறுக்கமான ஆடைகள் அணிந்துகொள்வார்கள். இதனால் விதைப்பைக்குப் போதுமான ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் கிடைக்காமல் போகும்.

* லேப்டாப், மொபைல் என்ற எலெக்ட்ரானிக் பொருட்களினால் ஏற்படுகிற பாதிப்புகள் நேரடியாக நிரூபிக்கப்படாவிட்டாலும், கவனமாகப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை பார்ப்பது, மொபைல் போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்வது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
* உடன்பிறந்தவர்களில் யாருக்காவது குழந்தையின்மை பிரச்னை இருந்தால், மற்றவர்கள் அதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்துகொள்ளலாம்.
* சில ஆண்களுக்கு விதைப்பையே இருக்காது. இவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். ஆணுறுப்பில் வீக்கம் உள்ளவர்கள், அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுகிறவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.
* புகை, மது ஆகியவை ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்குவதில் முக்கிய காரணிகளாக இருக்கின்றன என்பதால், அப்பாவாக ஆசை உள்ளவர்கள் இந்தப் பழக்கங்களைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.
* பெண்களில் முறையான மாதவிலக்கு இல்லாதவர்கள், மாதவிலக்கு ஏற்படுவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்வதைவிட பாலிசிஸ்டிக் ஓவரி குறைபாடு இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பது முக்கியம்!
* முக்கியமாக இன்று ஆண்மைக்குறைவு, குழந்தையின்மைக்கு சிகிச்சை என்ற பெயரில் போலி மருத்துவர் பலர் இருப்பதால், உங்கள் மருத்துவரை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.
உங்களுக்குள் பயணித்து நீங்கள் யார் என்பதை உணரச் செய்வதே தியானத்தின் நோக்கம். இறுதியில் பேரமைதியை உங்கள் மனம் உணரும்.
உங்களுக்குள் பயணித்து நீங்கள் யார் என்பதை உணரச் செய்வதே தியானத்தின் நோக்கம். இறுதியில் பேரமைதியை உங்கள் மனம் உணரும். ஒருவருக்கு தியானப்பயிற்சி பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. சாதாரண மனிதரை மற்றவருக்குப் பயன்தரும் நல்ல குணங்கள் கொண்டவராக மாற்றுகிறது. நமது பொறுப்புகளை உணரச் செய்கிறது. வாழும் உயிர்களுக்கும் நமக்குமான உறவில் உண்மையாக இருக்க நெறிப்படுத்துகிறது.
நம் மனதுக்கு உண்மையாக இருக்கும்படி நம்மைப் பண்படுத்துகிறது. உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைப்பதும் கைவரும். தனக்காக மட்டுமே வாழாமல் பிறரின் நலனுக்காகவும் வாழ வேண்டி யதன் அவசியம் புரியும். தன்னை உணர்வதன் வழியாக எந்தச் சூழலிலும் மகிழ்வாக இருக்க முடியும். மனதைச் சமநிலைக்குக் கொண்டு வருவதால் நம் நடத்தைகளைக் கவனித்துச் சரி செய்வது எளிதாகும். சுய மதிப்பீடு செய்து, நம்மை நாமே சரி செய்வதால் எண்ணங்கள் சுத்தமடையும். இதுவே செயலாக நம்மிலிருந்து வெளிப்படும். தியானம் உங்களுக்குள் இவ்வளவு மாற்றங்கள் நிகழ உதவுகிறது.
மனப்பயிற்சியின் வழியாக நீங்கள் சந்திக்கும் எந்த ஒரு சிக்கலான சூழலையும் புரிந்து கொள்வது எளிதாகும். அந்தச் சூழலைத் தெளிவாகக் கையாள்வதுடன் மன இறுக்கம், மன அழுத்தம், டென்ஷன் போன்ற வார்த்தைகள் உங்களை விட்டு விலகி நிற்கும். மனநிலையே உங்களது மூளையில் சுரக்கும் ரசாயனங்களின் விகிதத்தைத் தீர்மானிக்கிறது. இந்த ரசாயனங்கள் உங்களது ஹார்மோன் மாற்றங்களுக்குக் காரணம் ஆகின்றன.
ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் நம் மனநிலையையும் உடல் நிலையையும் பாதிக்கின்றன. மனம் சமநிலையில் இருக்கும்போது உங்களுக்குள் அதிகமாக பாசிட்டிவ் அதிர்வலைகளை உணர முடியும். மன அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் இப்படியான ஒரு நிலைக்கு உங்கள் மனம் நகர வேண்டும். தியானத்தின் வழியாகவே இந்த நிலையை நீங்கள் அடைய முடியும்.
பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி மிக முக்கியமானது. தியானத்தைத் துவங்கும் முன்பாக மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். மூச்சின் வழியாகவே நம் உயிருக்குத் தேவையான ஆக்சிஜனை உடல் எடுத்துக்கொள்கிறது. தேவையற்ற கார்பன் டை ஆக்சைடை சுவாசத்தின் வழியாக வெளியே அனுப்பி வைக்கிறது. ஆழமான மூச்சுப்பயிற்சியின் வழியாக உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கிறது. போதிய ஆக்சிஜன் கிடைக்கும்போது மூளை சுறுசுறுப்பாக இருக்கும். கிரியேட்டிவாக சிந்திக்கும்.
மூச்சுப்பயிற்சியின்போது உள் இழுக்கும் காற்று, நம் உடலுக்குள் பயணிப்பதை உணர வேண்டும். அதேபோல் வெளிவிடும் காற்றின் பயணத்தையும் கவனிக்கும்போது மனமும் மூச்சும் ஒற்றைப்பாதையில் பயணிக்கத் துவங்கும். மனம் ஒரு விஷயத்தில் ஆழமாய் பயணிக்கும்போது எண்ண அலைகள் ஓய்வெடுக்கும். மனதில் நடக்கும் உரையாடல் மௌனமாகும். இப்படித் தான் எண்ண அலைகளைப் பேரமைதிக்கு இழுத்துச் செல்ல முடியும். தியானத்தில் அமர்ந்து பேரமைதி நிலையை அடைய முடியும்.
‘‘இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஏன் இவ்வளவு டென்ஷன் என உங்களிடம் நீங்களே கேட்டுப்பாருங்கள், விடை கிடைக்கும். மனதைக் கட்டுப்படுத்தத் தெரியாத காரணத்தால்தான் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் நம்மையும் சேர்த்துக் கஷ்டப்படுத்திக் கொள்கிறோம். எல்லோரும் நம்மைப்போலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம்மைச் சுற்றிலும் உள்ள மனிதர்களின் மன மாசுக்களை நம் மூளையில் ஏற்றுவதால் ஏற்படும் அழுத்தம், நம்மைப் பாதி மனநோயாளியாக மாற்றி விடுகிறது. மற்ற உடல் நோய்கள் நம்மை எளிதில் தாக்குவதற்கான வழிகளையும் இதுவே திறந்து வைக்கிறது. தியானத்தை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம், உடல், மன நோய்களில் இருந்து நம்மை முழுமையாகத் தற்காத்துக் கொள்ளலாம்.

ஆண்டுதோறும் அடுக்கடுக்காக பல ‘தினங்கள்’ கொண்டாடப்பட்டு வந்தாலும், இதில் கவனிக்கத் தகுந்த தினமாக ஜனவரி 24-ந் தேதி தேசிய பெண்குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இன்று (ஜனவரி 24-ந் தேதி) தேசிய பெண் குழந்தைகள் தினம்.
மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் கவிமணி. ஆண்டுதோறும் அடுக்கடுக்காக பல ‘தினங்கள்’ கொண்டாடப்பட்டு வந்தாலும், இதில் கவனிக்கத் தகுந்த தினமாக ஜனவரி 24-ந் தேதி தேசிய பெண்குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. பெண்களைத் தாயாக, சகோதரியாக, அதற்கும் ஒருபடி மேலே போய்த் தெய்வமாகப் பார்க்கப் பண்படுத்தப்பட்ட சமூகம் நம்முடையது. ஆனால் இன்று பெண் குழந்தை என்றாலே முகம் சுழிக்கும் நிலை. கருவிலேயே பெண் குழந்தை என்று தெரிய வந்தால் அந்த பச்சிளம் கருவை கலைக்கும் படுபாதக சம்பவங்களும் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.
இந்த இழி நிலையை மாற்ற வேண்டும் என்று சட்டங்கள் மூலம் தடுக்கப்பட்டு வந்தாலும் மூடத்தனமும், மூர்க்க குணமும் மாறியதாக தெரியவில்லை. எங்கே தடம் புரண்டோம்? எதனால் தடம் புரண்டோம் என்பதை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப்பார்க்க வேண்டிய நேரம் இது.தமிழ்நாட்டில், மூட நம்பிக்கைகளைக் களைந்த தந்தை பெரியார் போட்ட பாதையில் பீடுநடைபோடுகிற பெண்கள் ஆண்களோடு ஒப்பிடுகையில் (ஆண்கள் 86.81 சதவீதம்) 73.86 சதவீதமெனில் ஏனைய மாநிலங்களைப்பற்றிக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள்தான் எத்தனை? குழந்தை திருமண தடைச்சட்டம், சிறப்பு திருமண சட்டம், மண கொடை அல்லது வரதட்சணை தடைச்சட்டம், இந்திய விவாகரத்து சட்டம்-மகப்பேறு நன்மைகள் சட்டம், கருவுற்றிருத்தலை மருத்துவ முறையில் கலைப்பதற்கான தடுப்பு சட்டம், பணியிடங்களில் பெண்களை பாலியல் வன்கொடுமையில் இருந்து காக்கும் சட்டம், மகளிர் தம்மை இழிவுபடுத்தி காட்டுவதை (தடையுறுத்தும்) சட்டம், தேசிய பெண்கள் ஆணைய சட்டம், சமமான பணி ஊதிய சட்டம்-இத்தனை சட்டங்களுக்குமான தேவை இருப்பதே பெண் குழந்தைகளின் மீதான மக்களின் கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது இல்லையா?
பெண் இன்றளவும் மண்ணோடும் பொன்னோடும் சேர்ந்த போகப் பொருளாகப் பார்க்கப்படுகிறாள் எனில் நம் சமூகம் கல்வியறிவு பெற்றதனால் பயன் என்ன? ஒரு வீட்டில் ஆணும் பெண்ணும் வளர்க்கப்படுகையில் ஆணுக்கான முக்கியத்துவம் இன்றும் அதே அளவுதான் உள்ளது. தரமான கல்வி உள்பட எவ்வளவுதான் பெண்கள் படித்து முன்னேறினாலும் கூட மிக எளிதாக அவளது வளர்ச்சியைக் கொச்சைப்படுத்த முடிகிற சமூகம் இன்னும் தேவையா? என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
பாரதி சொல்வான், “கற்பு நெறியென்று சொல்லவந்தால் இருகட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்” என்று. ஒழுக்க நெறிஎன்பது ஆண்,பெண் இருபாலருக்கும் முக்கியம். பெண்ணைத் தெய்வமாக்க வேண்டியதில்லை. சக மனுஷியாகப் பார்க்கும் பார்வையை ஆண்கள் பெற வேண்டும்.
குழந்தைத் திருமணங்கள் இன்றளவும் கூட நடை பெறுவதைச் சட்டம் போட்டே தடுத்துக் கொண்டிருக்கிறோம். மாற்றம் மனதில் வர வேண்டும். பெண் மீதான பாலியல் வன் கொடுமைகள் கட்டவிழ்க்கப்படுவதில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கப் பூர்வமான செயல்களுக்கு உதவுவதைவிட பெண்ணை நுகர்வுப் பண்டமாக மாற்றுவதற்கே அதிகம் பயன்படுத்தப்படுவது வேதனையான உண்மை.
எதற்காக இத்தினம் 2008 ஜனவரி 24-ல் இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா? பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பும், அங்கீகாரமும் கிடைக்கப்பெறுவதற்கு. அப்படியென்றால் இதுவரை அப்படி இல்லையா? என்று கேட்டால் “இல்லை” என்பதே பதிலாக இருக்கும். இது வருந்தத்தக்க உண்மை. எட்டும் அறிவினில் ஆணுக்கு பெண்கள் இளைப்பில்லை என்று அனைத்து துறையிலும் கொடிகட்டி பறக்கின்றனர்.
பெண் குழந்தைகள் உறவுகளின் மூல உற்று. இல்லறத் தேரின் அச்சாணி. தொட்டில் தேவதைகள். அவர்களை போற்றி கொண்டாடவேண்டும். பெண் நுகர்வுப் பண்டமாக மட்டுமே பார்க்கப்பட்டால் அது எந்தக் காலத்திலும் மாறாது என்பதைக் கருத்தில் கொண்டு அவளைத் தோழியாக, மனைவியாகத், தாயாக, சுருங்கச் சொல்வதெனில் சக மனுஷியாக பார்க்கக் கற்றுக்கொள்வோம். கற்றுக் கொடுப்போம். பெண் ஓர் ஆணிடம் வேண்டுவது வேறெதையும் அல்ல. மரியாதையை மட்டுமே.
வே.வனிதா, டி.ஐ.ஜி, வேலூர் சரகம்.

தோசை, இட்லி, சப்பாத்தி, இடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் வெள்ளை காய்கறி குருமா. இன்று இந்த குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 3
உருளைக்கிழங்கு - 2
பீன்ஸ் - 50கிராம்
கேரட் - 50கிராம்
பட்டாணி - 50கிராம்
பச்சை மிளகாய் - 5
தேங்காய்துருவல் - கால்மூடி
கசகசா - அரை ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு,
சோம்பு - 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 5 ஸ்பூன்
தாளிக்க
கிராம்பு
பட்டை

செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை மிளகாய், தேங்காய்துருவல், கசகசா, சோம்பு, முந்திரி பருப்பு அனைத்தையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் நறுக்கிய காய்கறிகள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.
காய்கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 3
உருளைக்கிழங்கு - 2
பீன்ஸ் - 50கிராம்
கேரட் - 50கிராம்
பட்டாணி - 50கிராம்
பச்சை மிளகாய் - 5
தேங்காய்துருவல் - கால்மூடி
கசகசா - அரை ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு,
சோம்பு - 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 5 ஸ்பூன்
தாளிக்க
கிராம்பு
பட்டை
ஏலக்காய்

செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை மிளகாய், தேங்காய்துருவல், கசகசா, சோம்பு, முந்திரி பருப்பு அனைத்தையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் நறுக்கிய காய்கறிகள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.
காய்கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இதோ சுவையான வெஜிடபிள் வெள்ளை குருமா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சிப் பசிக்கு குடும்ப பெண்களும் தப்பவில்லை. இத்தகைய இணையதள வன்முறைகள் ஆண்களை விட பெண்களுக்கு 27 மடங்கு அதிகமாக நடக்கிறது.
சமூக வலைத்தளங்கள் தவிர்க்கமுடியாத அங்கமாக சமூகத்துடன் இணைந்துவிட்டன. கணினி வழியாக பரிமாறிக்கொள்ளப்பட்டு வந்த தகவல்கள் கையடக்க கைப்பேசிக்குள் சுலபமாக புகுந்துவிட்டன. அவற்றுள் எவை அவசியமானவை? எவை அவசியமற்றவை? என்பதை வகைப்படுத்தி பிரித்து பார்க்கும் சிந்தனைத் தெளிவு இல்லாமல் அனைத்து தகவல்களையும் பார்வையிடும் நிர்பந்தத்திற்கு பெரும்பாலானவர்கள் உள்ளாகிவிட்டார்கள். அடுத்தவர்கள் அனுப்பும் தகவல்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் சமூக வலைத்தளத்திலேயே மூழ்கி கிடப்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள்.
பயனுள்ள விஷயங்களை அறிந்து கொள்வதற்கு நேரத்தை செலவிடுவதற்கு பதில், வீண் விஷயங்களில் கவனம் செலுத்தி பொழுதை போக்குவது பேஷனாகவே மாறிக்கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சிப் பசிக்கு குடும்ப பெண்களும் தப்பவில்லை. ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனி தீவுகளைப்போல் தனிமையில் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடப்பது குடும்ப கட்டமைப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கிறது. சமூகவலைத்தளங்கள் சமூகத்தை எந்த அளவிற்கு தன் பிடிக்குள் அடி பணிய வைத்திருக்கிறது என்பதை உணர்த்தும் சர்வே இது!
‘சமூக வலைத்தளங்களில் தினமும் எத்தனை மணி நேரத்தை செலவிடுகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, 68 சதவீதம் பேர் “தினமும் 4 முதல் 5 மணி நேரத்தை ஒதுக்குகிறோம்” என்று கூறி இருக்கிறார்கள். “நேரத்தை கவனத்தில் கொள்ளாமல் டேட்டா தீர்ந்து போகும் வரை அதிலேயே மூழ்கி கிடப்போம்” என்று பத்து சதவீதம் பேர் பதில் சொல்லியிருக்கிறார்கள். “வீட்டில் இருக்கும் நேரத்தில் வீடியோ பார்ப்பது, சாட்டிங் செய்வது என்று பொழுதை போக்கிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் முகம் கொடுத்து பேச நேரம் கிடைப்பதில்லை” என்றும் 8 சதவீதம் பேர் வருத்தப்பட்டிருக்கிறார்கள். டேட்டா தீர்ந்துபோன பிறகும் மற்றவர்களின் வை-பை மூலம் நெட் பயன்படுத்துவதாக 9 சதவீதம் பேர் சொல்கிறார்கள்.
இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் சமூக வலைத்தளங்களில் ஐந்தாறு மணி நேரத்தை செலவிடுபவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள். அவர்கள், அதன் பிறகு குடும்பத்தோடு செலவிட தங்களுக்கு ஒரு மணி நேரம்கூட கிடைப்பதில்லை என்றும் கூறுகிறார்கள். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எல்லாம் சமூக வலைத்தளத்துடனேயே தொடர்பில் இருப்பதாக 5 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள்.
‘இரவு 11 மணிக்கு மேல் இணைய தளத்தை பயன்படுத்துவீர்களா?’ என்ற கேள்விக்கு, 26 சதவீதம் பேர் ‘ஆம்’ என்று பதில் அளித்திருக்கிறார்கள். 39 சதவீதம் பேர் ‘இல்லை’ என்று கூறி இருக்கிறார்கள். 35 சதவீதம் பேர் எப்போதாவது இரவில் இணையதளத்தை பயன்படுத்துவதாக சொல்லியிருக்கிறார்கள்.
‘வீட்டில் உள்ளவர்களுடன் குடும்ப விஷயங்களை பேசுவதற்கு தினமும் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறீர்கள்?’ என்ற கேள்விக்கான பதிலில், சமூக வலைத்தளம் எந்த அளவுக்கு குடும்பத்தினர் மத்தியில் இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 21 சதவீதம் பேர் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவதற்கு 1 மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் செலவிடுவதாக கூறி இருக்கிறார்கள்.
2 மணி முதல் 3 மணி நேரம் வரை பேசுவதாக 23 சதவீதம் பேர் சொல்லி இருக்கிறார்கள். 2 முதல் 4 மணி நேரம் வரை ஒதுக்குவதாக 27 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். உறவு பந்தத்திற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக 29 சதவீதம் பேர் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக பேசுவதாக கூறி இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவது விவாகரத்து அதிகரிப்பதற்கும் காரணமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

‘மகளின் செல்போனின் பாஸ்வேர்டு தெரியுமா?’ என்ற கேள்விக்கு, 52 சதவீதம் பேர் தெரியும் என்கிறார்கள். 42 சதவீதம் பேர் ‘தெரியாது’ என்று கூறி இருக்கிறார்கள். மீதி உள்ள 6 சதவீதம் பேர் கட்டாயப்படுத்தி கேட்டால் சொல்வாள் என்று பதிலளித்திருக்கிறார்கள். அதேபோல் மனைவியின் செல்போன் பாஸ்வேர்டு பற்றிய கேள்விக்கு 56 சதவீதம் ஆண்கள் ‘தெரியும்’ என்கிறார்கள். 25 சதவீதம் பேர் ‘தெரியாது’ என்றும், 11 சதவீதம் பேர் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி இருக்கிறார்கள். “நாங்கள் கேட்டாலும் அவள் சொல்வதில்லை” என்று 8 சதவீதம் பேர் கூறியுள்ளார்கள்.
‘டீன் ஏஜ்’ பருவத்தினர் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதும் சர்வேயில் கண்டறியப்பட்டிருக்கிறது. 26 சதவீதம் பேர் செக்ஸ் சார்ந்த விஷயங்களையும், செக்ஸ் ரீதியான தமாஷ்களையும் பகிர்ந்துகொள்வதாக சொல்கிறார்கள். காதலர்களும் சமூகவலைத்தளங்கள் மூலம் அரட்டை அடிப்பதை பிரதானமாக கொண்டிருக்கிறார்கள். அப்போது செக்ஸ் சார்ந்த விஷயங்களும் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. சர்வேயில் பங்கெடுத்த பெண்களில் 24 சதவீதம் பேர் காதலிக்கும் நபருக்கு தங்களின் நிர்வாண படங்களை அனுப்புவதாக கூறி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்கள். தங்களுடைய முகத்தை மறைத்து படம் அனுப்புவதாக 5 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 71 சதவீதம் பேர் அப்படிப்பட்ட படங்களை அனுப்புவதில்லை என்று கூறி சற்று நிம்மதி பெருமூச்சுவிட வைத்திருக்கிறார்கள்.
குளிக்க செல்லும்போதுகூட சமூகவலைத்தளங்களில் தங்கள் பிரியமானவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலர் அங்கிருந்துகொண்டே புகைப்படங்களை பகிர்வது, வீடியோ கால் செய்து பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். 7 சதவீதம் பேர் குளியல் அறையில் இருந்து வீடியோ காலில் காட்சிகளை பகிர்ந்துகொள்வதாக கூறி இருக்கிறார்கள். ஸ்கிரீன் ரெக்கார்டிங் போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தி தனிமையில் இருக்கும்போது எடுக்கப்படும் காட்சிகளை பதிவுசெய்து பின்னர் எடிட்டிங் செய்து மற்றவர்களுக்கு அனுப்பலாம் என்பது நிறைய பெண்களுக்கு தெரியவில்லை.
தனக்கு விருப்பமான அவர் மட்டும்தான் பார்த்து ரசிப்பதாக தவறாக நினைத்து விடுகிறார்கள். இந்த மாதிரியான ஆபாச வீடியோ பதிவுகளை எடுக்கும் ஆண்கள் முதலில் பாத்ரூமில் தங்களை அதுபோன்ற கோணத்தில் படம் பிடித்துக்கொள்கிறார்கள். அதனை காண்பித்து அதுபோன்ற கோணத்தில் தனக்கு விருப்பமான பெண்ணிடம் வீடியோ பதிவு செய்து அனுப்பும்படி சொல்கிறார்கள். அப்படி எடுக்கப்படும் படங்கள் பல கைமாறி அந்த பெண்ணுக்கு விபரீதத்தை உருவாக்கிவிடுகிறது.
போலி கணக்குகள் தொடங்கி அதன் மூலம் தங்களுக்கு பிடிக்காதவர்களை அவமானப்படுத்தவும் நிறைய பேர் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள். ‘உலகில் 9 கோடி பெண்கள் சைபர் கிரைம் குற்ற வழக்குகளால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்’ என்று ஐ.நா.வின் பிராட்பேண்ட் கமிஷன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையதளங்கள் மூலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்து கொண்டிருக்கின்றன.
இத்தகைய இணையதள வன்முறைகள் ஆண்களை விட பெண்களுக்கு 27 மடங்கு அதிகமாக நடக்கிறது. சமூகவலைத்தளங்களில் போலி கணக்குகள் தொடங்கி இருப்பதை சர்வேயில் 17 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோருக்கு தெரியாமல் இருப்பதற்காகவும், தாங்கள் காதலிக்கும் நபருக்கு தெரியாமல் இருப்பதற்காகவும் போலி கணக்குகள் தொடங்கி இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இது சமூக அமைப்பு ஒன்று மேற்கொண்ட சர்வே தகவலாகும்.
சமூகவலைத்தளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதே சமூகத்திற்கும், உபயோகிப்பவர்களுக்கும் நன்மை சேர்க்கும்.

சாப்பிட்டு சிறிது நேரத்தில் மீண்டும் பசிப்பது போல உணர்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்கள் தான் காரணம் என்பதை புரிந்து கொண்டு. உடலின் தேவையை சரியாக முறைப்படுத்தினாலே பிரச்சினைகள் தீர்ந்து போகும்.
* காலை உணவைத் தவிர்த்தாலோ அல்லது மிகக் குறைவாகஈ தேவைப்படுகிற கலோரியை விட குறைவாகச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பது, உடல் சோர்வு போன்ற பல பிரச்சினைகள் உடல் சார்ந்தும் மனம் சார்ந்தும் ஏற்படுகிறது. குறிப்பாக, உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. வயிறு நிரம்ப காலை உணவு சாப்பிடுகின்றவர்களுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவும் இன்சுலின் அளவும் மிகக் குறைந்த அளவிலேயே சுரக்கிறது. இது உடனடியாக பசி எடுப்பதையும் கட்டுப்படுத்துகிறது. அதனால் தான் காலை உணவை நிறைவாகச் சாப்பிட வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
* நம்முடைய உடலுக்குத் தேவையான போதிய தூக்கம் இல்லாமல் இருந்தாலும் அகோரப் பசி வந்து உங்களை வாட்டும். அறிவியல் முறைப்படி, எப்போது நாம் சரியாகத் தூங்கவில்லையோ அந்த சமயங்களில் பசி மற்றும் திருப்தியின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகிற ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. நம்முடைய உயிர்வேதியியல் மாற்றங்களால் அது வழக்கத்தை விடவும் அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்று நம்மைக் கேட்கும்.
* வயிறு பசிக்கிறது என்று நாம் சொல்வோம். அதையும் தாண்டி சில சமயங்களில் நம்முடைய உடல் நம்மிடம் அதிகமாக உணவைக் கேட்கும். அதிலும் குறிப்பாக, நம்முடைய உடலில் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைகின்ற பொழுது, உடல் நம்மிடம் அந்த குளுக்கோஸின் தேவையை நிறைவு செய்யச் சொல்லி கேட்கும். அதனால் நமக்கு பசி உண்டாகிறது.
அதனால் தான் மூன்று வேளையாகச் சாப்பிடாமல், நல்ல ஊட்டச்சத்தான உணவுகளையும் இடையிடையே ஆரோக்கியம் நிறைந்த சிற்றுண்டிகளையும் அன்றைய நாள் முழுக்க குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு உங்களுடைய உணவில் நல்ல ஆரோக்கியமான நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகப்படுத்துவது நல்லது. அது குறிப்பாக, நடு இரவில் ஏற்படுகிற பசியைக் கட்டுப்படுத்தும்.
* நம்முடைய உடல் எப்போதெல்லாம் நீர்ச்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிக்கிறதோ அப்போது, அதன் தேவையை நிறைவு செய்து கொள்ளும் ஒரு வழியாகத் தான் அகோரப் பசியை உண்டாக்குகிறது. நம்முடைய உடல் நீர்ச்சத்தை இழக்க ஆரம்பிக்கிற போதெல்லாம் நம்முடைய மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ் பகுதி தண்ணீர் மற்றும் உணவுத் தேவைக்கான சிக்னலை நமக்குக் கொடுக்கிறது. ஏதாவது சாப்பிடுங்கள் என்று நம்மை அறிவுறுத்துகிறது. இந்த சமயத்தில் உங்களுக்குப் பசிப்பது போல் இருந்தாலும் கூட, உங்களுக்குத் தேவைப்படுவது தண்ணீர் தான். அதனால் எது வயிற்றுப் பசி. எது நீர்ச்சத்துப் பற்றாக்குறையால் ஏற்படுகிற பசி என்பதை உணர்ந்து நிறைய தண்ணீர் குடியுங்கள்.
* மன அழுத்தத்துக்கும் பசிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். சிலரைப் பார்த்திருப்பீர்கள். விரக்தியிலோ அல்லது கோபத்தில் இருக்கும்போது தான் நிறைய சாப்பிடுவார்கள். மன அழுத்தத்தில் இருக்கிற பொழுது நம்முடைய உடல் கார்ட்டிசோல் மற்றும் அட்ரீனலின் ஆகிய ஹார்மோன்களைச் சுரக்கும். இந்த ஹார்மோன்கள் பல்வேறு காரணங்களுக்காக நம்முடலில் சுரக்கும். இதற்கான காரணத்தை நம்மால் பெரிதாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதனால் இறுதியில் அது பசியாக உருவெடுத்துவிடுகிறது.
சாப்பிட்டு கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் பசிப்பது போல உணர்வதற்கு மேற்கண்ட ஐந்து விஷயங்களும் தான் காரணம் என்பதை புரிந்து கொண்டு. உடலின் தேவையை சரியாக முறைப்படுத்தினாலே இந்த மாதிரியான பிரச்சினைகள் தீர்ந்து போகும்.

சாம்பார் சாதத்துடன் சாப்பிட அவித்த முட்டை பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த முட்டை பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 4
பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை :
கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கத்தியால் முட்டையை சற்று கீறி கொள்ளவும். அப்போது தான் மசாலா உள்ளே போகும்.
அடுப்பில் நான் - ஸ்டிக் பேனை வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பச்சைமிளகாய் பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.
மிளகாயின் பச்சை வாசனை போனதும் புதினாவைச் சேர்த்து ஒரு பிரட்டு புரட்டவும்.
இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும்.
பொடிகளின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும்.
முட்டையில் மசால் ஏறிவிட்டதா என்று உறுதி செய்துவிட்டு அடுப்பை அணைத்து பரிமாறவும்.
முட்டை - 4
பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை :
கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கத்தியால் முட்டையை சற்று கீறி கொள்ளவும். அப்போது தான் மசாலா உள்ளே போகும்.
அடுப்பில் நான் - ஸ்டிக் பேனை வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பச்சைமிளகாய் பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.
மிளகாயின் பச்சை வாசனை போனதும் புதினாவைச் சேர்த்து ஒரு பிரட்டு புரட்டவும்.
இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும்.
பொடிகளின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும்.
முட்டையில் மசால் ஏறிவிட்டதா என்று உறுதி செய்துவிட்டு அடுப்பை அணைத்து பரிமாறவும்.
சூப்பரான அவித்த முட்டை பிரை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நம் குழந்தைகளுக்கு வீட்டில் இருக்கும் போதும், வெளியில் செல்லும் போதும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகளை சொல்லித்தர வேண்டும். அந்த பாதுகாப்பு விதிகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்
* முன்பின் தெரியாத, அறிமுகம் இல்லாத நபர்கள் சாக்லேட், பிஸ்கட் கொடுத்தாலும் கூட வாங்கி சாப்பிடக்கூடாது என்று கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் உணவு, பொம்மை என்னதான், ஆசையைத் தூண்டினாலும் சரி… அதை வாங்கக் கூடாது என்று சொல்லித்தர வேண்டும்.
* குழந்தைகள் அதிக அளவில் தீக்காயங்களுக்கு ஆளாகின்றனர். என்னதான் கவனமாக இருந்தாலும், தீயில் கைவிடுவது, சூடான பொருட்களை தொடுவது என்று காயங்கள் ஏற்படுகிறது. தீயின் பாதிப்பு பற்றி சொல்லிக்கொடுத்து, விளக்கு அருகிலோ, அடுப்பங்கரைப் பகுதியிலோ தீயில் கை வைக்கக் கூடாது என்று சொல்லி புரிய வைக்க வேண்டும்.
* எந்த ரகசியத்தையும் பெற்றோரிடம் சொல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்று இல்லை. குறிப்பாக, அண்டைவீட்டார், உறவினர்கள் குழந்தையின் உடலில் தொடக்கூடாத இடங்களைத் தொட்டு விளையாடுகிறார்கள் என்றால் அதுபற்றி பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.
* மிகச்சிறிய குழந்தை என்றாலும், அப்பா, அம்மாவின் பெயர், வீடு இருக்கும் பகுதி, தொடர்புகொள்ள வேண்டிய நம்பர் உள்ளிட்டவற்றை சொல்லித் தர வேண்டியது மிக மிக அவசியம்.
* நம் வீட்டின் முன்பகுதிதான் என்றாலும், யாரும் இல்லாத நேரத்தில் நடப்பது, தனிமையில் விளையாடுவது பாதுகாப்பானது இல்லை. எப்போதும் பெற்றோர் கண்காணிப்பில் இருப்பதுதான் பாதுகாப்பு என்று சொல்லித்தர வேண்டும்.
* கூட்டத்தில் எங்கேனும் தொலைந்துவிட்டால், அம்மா - அப்பாவைத் தேடி வேறு எங்கும் செல்ல வேண்டாம். காணாமல் போன அந்த இடத்திலேயே பாதுகாப்பான பகுதியில் நின்றுகொள்ள வேண்டும். அப்போதுதான், பெற்றோர் தேடி வரும்போது எளிதில் கண்டறிய முடியும். அருகில், குழந்தையுடன் பெற்றோர் யாராவது சென்றால், அவர்களிடம் உதவி கேட்கச் சொல்லலாம்.

இன்று பலர் ஃபேர்னெஸ் கிரீமுக்குப் பதில் பிபி அல்லது சிசி கிரீம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்களில் பலர் இந்த கிரீம்களையே வைத்திருக்கிறார்கள்.
இன்று பலர் ஃபேர்னெஸ் கிரீமுக்குப் பதில் பிபி அல்லது சிசி கிரீம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்களில் பலர் இந்த கிரீம்களையே வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் சருமத்தன்மையைப் பொறுத்து இந்த இரண்டு கிரீம்களில் பொருத்தமானது எது எனத் தேர்வு செய்வது அவசியம்.
இதோ உங்கள் புரிதலுக்காக…
பிபி கிரீம் (PP Cream)
* இயற்கையாகவே ஆரோக்கியத்துடன் இருப்பதைப்போல சருமத்தைப் பொலிவாகக் காட்டும்.
* ‘திக்’கான கிரீம் போன்ற தன்மையுடையது.
* சருமத்துக்கு ஈரப்பதம் அளிக்கும் மாய்ஸ்சரைசர் மற்றும் சருமத்தின் சுருக்கங்கள், மேடு பள்ளங்களைத் தற்காலிகமாக மறைத்து ஒரே சீராகக் காட்டக்கூடிய ‘பிரைமர்’ என இரண்டின் வேலைகளையும் செய்கிறது.
* ‘நோ மேக்கப்’ போன்ற தோற்றத்தை அளிக்கிறது.

சிசி கிரீம் (CC Cream)
* சருமத்துக்கு மேக்கப் போட்டது போன்ற தோற்றத்தைத் தரும்.
* ‘லைட்’டான லோஷன் போன்ற தன்மையுடையது.
* சருமத்துக்கு ஈரப்பதத்தை தரும் மாய்ஸ்சரைசர், சருமத்தின் சுருக்கங்கள், மேடு பள்ளங்களைத் தற்காலிகமாக மறைத்து ஒரே சீராகக் காட்டக்கூடிய ‘பிரைமர்’ என இரண்டின் வேலைகளையும் செய்கிறது.
* முகப்பருக்களினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள், வடுக்கள், கரும் திட்டுகள் என அனைத்தையும் மறைத்து, சருமத்தை ஒரே சீரான நிறத்துடன், மென்மையாகக் காட்டுகிறது. சருமத்தின் குறைகளைத் தற்காலிகமாக மறைப்பதுடன், தொடர்ந்து பயன்படுத்திவரும் நிலையில் அவற்றை நிரந்தரமாகச் சரிசெய்யும் வேலையையும் செய்கிறது.
* சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. மேக்கப் போட்டது போன்ற தோற்றம் அளிப்பதுடன், சருமத்தின் குறைகளைச் சரி செய்து, மேலும் பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.

* சருமத்துக்கு ஈரப்பதம் அளிக்கிறது. பொலிவான சருமம் போன்ற தோற்றத்தைத் தருவதுடன் மற்றும் சருமத்தைப் பாதிப்படையாமலும் பாதுகாக்கிறது.

சிசி கிரீம் (CC Cream)
* சருமத்துக்கு மேக்கப் போட்டது போன்ற தோற்றத்தைத் தரும்.
* ‘லைட்’டான லோஷன் போன்ற தன்மையுடையது.
* சருமத்துக்கு ஈரப்பதத்தை தரும் மாய்ஸ்சரைசர், சருமத்தின் சுருக்கங்கள், மேடு பள்ளங்களைத் தற்காலிகமாக மறைத்து ஒரே சீராகக் காட்டக்கூடிய ‘பிரைமர்’ என இரண்டின் வேலைகளையும் செய்கிறது.
* முகப்பருக்களினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள், வடுக்கள், கரும் திட்டுகள் என அனைத்தையும் மறைத்து, சருமத்தை ஒரே சீரான நிறத்துடன், மென்மையாகக் காட்டுகிறது. சருமத்தின் குறைகளைத் தற்காலிகமாக மறைப்பதுடன், தொடர்ந்து பயன்படுத்திவரும் நிலையில் அவற்றை நிரந்தரமாகச் சரிசெய்யும் வேலையையும் செய்கிறது.
* சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. மேக்கப் போட்டது போன்ற தோற்றம் அளிப்பதுடன், சருமத்தின் குறைகளைச் சரி செய்து, மேலும் பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று கோதுமை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை - ஒரு கப்,
அரிசி - அரை கப்,
துவரம்பருப்பு - கால் கப்,
உளுந்தம்பருப்பு - சிறிதளவு,
கடலைப்பருப்பு - கால் கப்,
வெங்காயம் - 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமையை தனியாகவும், அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாகவும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து பெருங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்ட அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் தனியாக வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும மாவை அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

பெருங்காயம், காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமையை தனியாகவும், அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாகவும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து பெருங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்ட அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் தனியாக வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும மாவை அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
சத்தான சுவையான கோதுமை அடை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஒரு கருச்சிதைவு நிகழ்ந்துவிட்டது என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்நிலை மற்றும் கருச்சிதைவுக்கான காரணம் ஆகியவற்றைப் பொறுத்தே, அவர் அடுத்து கருத்தரிக்கக்கூடிய காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும்.
கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு, பெண்களுக்கு எளிதில் அழிக்க முடியாத வடுக்களை விட்டுச்செல்கிறது. அதற்கான ஒரே மருந்து, மீண்டும் கருத்தரித்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதுதான். ஆனால், இன்றைய காலகட்டத்தில், கருச்சிதைவு/கருக்கலைப்புக்குப் பின்னர் கருத்தரிப்பது பெரும் சவாலாக இருக்கிறது.
“பெண்களின் கரு எதிர்பாராதவிதமாக கலைந்துபோவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் கர்ப்பிணி மட்டுமல்லாமல், அந்தக் கருவுக்குக் காரணமான ஆணுடைய விந்துவின் ஆரோக்கியமும் கருச்சிதைவுக்கு சில சமயம் காரணமாக இருக்கலாம். மற்ற காரணிகள், கரு வளர்ச்சி தொடர்பானவையாக இருக்கலாம். இதில் ‘Anatomical Factors’ என்று சொல்லப்படும், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்ரீதியான பாதிப்புகள், 10-லிருந்து 15 சதவிகித கருச்சிதைவுகளுக்குக் காரணமாக இருக்கலாம். அதாவது, கர்ப்பப்பை பலவீனமாக இருப்பது, மாதவிடாய்ப் பிரச்னைகள் போன்றவை இதில் அடங்கும்.
அடுத்தது, ‘Auto-immunal Factors’. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கருவளர்ச்சியைத் தாங்கக்கூடிய சக்தி இல்லாமல், கருச்சிதைவு உண்டாவது. 10-லிருந்து 15 சதவிகிதக் கருச்சிதைவுகளுக்கு இந்த ‘ஆட்டோ இம்யூனல் ஃபேக்டர்ஸ்’ காரணமாக இருக்கலாம். தொற்று காரணமாக 0.5-லிருந்து 5 சதவிகிதக் கருச்சிதைவுகள் நேரலாம். ஹார்மோன் சமச்சீரின்மை, தைராய்டு, சர்க்கரைநோய் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் உள்ளிட்டவை 20 சதவிகிதக் கருச்சிதைவுகள் உண்டாகக் காரணமாகலாம். என்றாலும், கிட்டத்தட்ட 50 சதவிகிதக் கருச்சிதைவுகள் காரணங்கள் கண்டறியப்படாத நிலையில் இருக்கின்றன.
பொதுவாக, கருத்தரிப்புக்கான வாய்ப்புகள் மற்றும் சிக்கலில்லாத பிரசவத்துக்கும், பெண்ணின் வயதுக்கும் நிறைய தொடர்பு உண்டு. 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு இயல்பாகவே கருமுட்டைகள் ஆரோக்கியமாக இருக்கும். வயது அதிகரிக்க அதிகரிக்க, கருமுட்டைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தொய்வுநிலையை எட்டும். இதனால்தான் 30, 35 வயதுக்கு மேல் கருத்தரிப்பு என்பது சற்றே சவாலான விஷயமாகிறது. ஆனால், சரிவிகித, உட்டச்சத்துமிக்க உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டால், கருமுட்டையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். லண்டனில் நடந்த ஆய்வு ஒன்று, கருச்சிதைவுக்கும் வயதுக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டிய அட்டவணை இங்கே…
கருச்சிதைவும் கருக்கலைப்பும் பெண்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கக்கூடியவை. ஒரு கருச்சிதைவு நிகழ்ந்துவிட்டது என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்நிலை மற்றும் கருச்சிதைவுக்கான காரணம் ஆகியவற்றைப் பொறுத்தே, அவர் அடுத்து கருத்தரிக்கக்கூடிய காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும். சராசரியாக, ஒரு கருச்சிதைவுக்கு அடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகே கருத்தரிப்பு நிகழ வேண்டும்.
ஒருவேளை, ஒன்றுக்கு மேற்பட்ட முறை கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், கணவன் - மனைவி இருவரும் மருத்துவ ஆலோசனையின் கீழ் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான உடல்நிலையில் இருக்கும் பெண்களும், கருத்தரிப்புக்குப் பின்னர் கர்ப்பகால ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தம்பதியில் இருவரில் ஒருவருக்கு தைராய்டு, சர்க்கரைநோய் போன்ற பிரச்சனைகள் இருந்தால், கர்ப்பிணி, உட்சுரப்பியல் பரிசோதனை (Endocrinology Test) செய்துகொள்ள வேண்டும். கருவுக்கு மரபணு தொடர்பான சிக்கல் இருக்கிறதா என்பதை `Karyotyping Test’ மூலம் அறிந்துகொள்ளலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்ணின் மனநிலை நிம்மதியாக இருக்கவேண்டியது அவசியம். எனவே ஒரு கருச்சிதைவுக்குப் பின்னர், அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகளே அவரைச் சூழ்ந்திருக்க வேண்டும்; எதிர்மறையான பேச்சுகளையும் அச்சுறுத்தல்களையும் குடும்பமும் சுற்றமும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

தொப்பையை குறைப்பதில் இந்த ஆசனம் முதன்மையான பங்கு வகிக்கிறது. தொப்பையை குறைப்பதோடு தசைகளுக்கு அதிக வலிமையை இது தருகிறது.
தொப்பையை குறைப்பதில் இந்த முறை முதன்மையான பங்கு வகிக்கிறது. தொப்பையை குறைப்பதோடு தசைகளுக்கு அதிக வலிமையை இது தருகிறது. அத்துடன் வயிற்றில் உள்ள தசைகளும் உறுதி பெறுகிறது. கிட்டத்தட்ட “புஸ் அப்ஸ்” போன்ற நிலையில் தான் இதை நீங்கள் செய்ய வேண்டும்.
செய்முறை :
முதலில் விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும் (தொழுகை செய்தல் போல). இது ஆரம்ப நிலை. மெதுவாக முழங்காலிடவும். உள்ளங்கையைத் தரையில் பதித்து முன்நோக்கி உடலை நகர்த்தவும். புட்டத்தை உயர்த்தி முழங்கால் மூட்டை நேர் செய்யவும். சுவாசத்தை உள்ளிழுத்து கைகளை முழுவதுமாக நேர் செய்யவும்.
தலை முதல் குதிங்கால் வரை உடல் ஒரே நேர் கோட்டில் இருத்தல் அவசியம். கால் விரல்களை நன்கு தரையில் ஊன்றி கொள்ளவும்.சுவாசத்தை உள்ளடக்கித் தலையை உயர்த்தி நேராகப் பார்க்கவும். இது இறுதி நிலை. 15 விநாடிகள் இதில் நிற்கவும். சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி ஆரம்ப நிலைக்கு வரவும். 5 - 7 முறைகள் இப்பயிற்சியைச் செய்யலாம்.
பயன்கள் :
நமது நரம்பு மண்டலத்தை சீர்படுத்தி சமன் செய்கிறது.
கை, தோள்பட்டை மற்றும் பின்முதுகுத்தசைகளை வலுவடையச் செய்கிறது.
Core muscle என சொல்லப்படும் முக்கிய தசைகளை வலுவடையச் செய்கிறது.
வயிற்று தசைகள் இறுக்கப் பெறுவதால் தொப்பை குறைய உதவுகிறது.