என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
களிநண்டில் வைட்டமின் பி, வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், தாமிரம், அயோடின் மற்றும் மெக்னீசியம் இருக்கிறது. இச்சத்துகள் இருப்பதனால் களி நண்டை சமைத்து சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் சளியை கட்டுப்படுத்துகிறது.
காவிரி ஆற்றில் இருந்து ஆடி மாதத்தில் நன்னீர் சிதம்பரம் அருகில் உள்ள கிள்ளை ஆற்றுக்கு வருகை தரும். அவை வருகை தந்ததற்கு அடையாளமாக கிள்ளை ஆறு முழுவதும் தாமரை மலர்கள் நிறைந்திருக்கும். உலகின் இரண்டாவது மிகப் பெரிய சதுப்புநில சுரபுண்ணை வனம், கிள்ளை ஆற்றை சுற்றி உள்ளது. அவை அலையாத்திக் காடுகள் எனவும் அழைக்கப்படுகிறது.
நாரைகளும்(கொக்கு) அறியாத நான்காயிரம் ஓடைகள் நிரம்பியது கிள்ளை ஆறு. அந்த ஆற்றில் உள்ள சில ஆழமான பகுதிகள் ‘குடா’ என அழைக்கப்படுகிறது. கடலின் முகத்துவாரம் வழியாக வருகிற உப்புநீரும், கொள்ளிடம் ஆற்றின் வழியாக வருகிற காவிரி நீரும் அங்குதான் சங்கமிக்கும். சங்கமிக்கும் அந்த குடா பகுதியில்தான் ஒருசில நீரினங்கள் இனப்பெருக்கம் செய்யும். நண்டு, இறால், மீன் ஆகிய உயிரினங்கள் ஜணிக்க உப்புநீர் மட்டும் போதாது, அதனுடன் மழைநீர் அல்லது நன்னீர் தேவைப்படும். இது நிலப்பகுதியில் வாழும் மக்கள் அறிவதில்லை. வெள்ளநீர் அபாயத்திலிருந்து பாதுகாக்கவே தண்ணீரை கடலிலே கலக்கிறார்கள் என்ற அளவில் மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால் அது ஒரு இயற்கை சுழற்சி.
மீன்வளம் உருவாக நன்னீரின் பங்கு மிக முக்கியமானது. இந்த இரண்டு நீர்களும் சேர்ந்தால்தான் இனப்பெருக்கம் அதிகமாகும். இங்குள்ள சதுப்புநில காடுகளில் கண்டல், சுரபுண்ணை போன்ற மரங்கள் இருக்கும். இதில் சுரபுண்ணை மரம் மூலிகை குணம் நிரம்பியது. சுரபுண்ணை மரங்களின் கீழுள்ள நீரின் சேற்றில் அடியில் நண்டுகள் இனப்பெருக்கம் செய்யும்.
சேற்றில் மூழ்கி தன்னை குளிர்ச்சியான தட்பவெட்ப நிலையில் வைத்து வாழக்கூடியது களிநண்டு. சேற்றின் மறு பெயர் களி என்பதனால் களிநண்டு என்று அழைக்கப்படுகிறது. இயற்கையின் வரமான சுரபுண்ணை மூலிகை குணம் நிரம்பியது. அந்த மூலிகை குணம் உள்ள சுரபுண்ணையின் வேர்களை களிநண்டு தின்று வாழ்கிறது. அதனாலேயே இந்த களிநண்டில் மருத்துவ குணம் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் களிநண்டுகளில் கொழுப்பு 9 சதவீதம் உள்ளது. 3.2 சதவீதம் தாதுப் பொருட்களும் 3.3 சதவீதம் மாவு சத்தும் 50 கலோரி ஏரிச்சத்தும் உள்ளது.
களிநண்டில் வைட்டமின் பி, வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், தாமிரம், அயோடின் மற்றும் மெக்னீசியம் இருக்கிறது. இச்சத்துகள் இருப்பதனால் களி நண்டை சமைத்து சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் சளியை கட்டுப்படுத்துகிறது. இது ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதால் சக்தி நிறைந்த உணவாக இருக்கிறது. இந்த வகை களி நண்டை சூப் செய்து குடித்தால் சளியை முறிக்கவும் செய்கிறது. களி நண்டுகள் கிள்ளை, பழையாறு, பழவேற்காடு, முத்துப்பேட்டை போன்ற பகுதிகளிலும் இன்னும் பல பகுதிகளிலும் கிடைக்கிறது. சதுப்புநில உப்பங்கழி பகுதிகளில் கிடைக்கும் இவ்வகை நண்டுகள் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
கிள்ளை ஆற்றுப் பகுதியில் ஒருசில அரிய வகை மருத்துவ குணம் உள்ள மீன்கள் உள்ளன. காரை, மட்லீஸ், கிழங்கான், பிலிஞ்சான், ஓரா, பொருவா, சித்தாழை, நரிகெண்டை போன்ற மீன்களைக் கொண்டு ஒரு வகையான வட்டார மீன்குழம்பை செய்கின்றனர். அதனை பூண்டு மிளகுடன் சேர்த்து செய்வதால் மருந்து குழம்பு என்றழைக்கின்றனர்.
பேறு கால பெண்களுக்கு வலி நிவாரணியாகவும், சோர்வை போக்குவதற்கு உதவுவதாகவும் இக் குழம்பு இருக்கிறது. கடல் மற்றும் உப்பங்கழியில் உள்ள மீன்களின் மருத்துவ குணங்கள் கணவாய் மீனில் உள்ள மக்னீசியம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. திலேப்பியாவில் உள்ள செலன்யம் புற்றுநோய் வருவதை தடுக்கிறது. பால்சுறா மற்றும் திருக்கை மீன் தாயப்பால் சுரப்பதை அதிகரிக்கிறது. சாளை மீனில் உள்ள அயோடின் கழுத்து கழலை நோயை தடுக்கிறது. கெளுத்தி மீனில் உள்ள துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கெண்டை மீனில் உள்ள பொட்டாசியம் தசை செயல்பாடுகளை அதிகரிக்கிறது. ஆளி மீனில் உள்ள தாமிரத்தில் இன்சுலின் சுரக்க செய்யும் மருத்துவ குணம் உள்ளது.
மத்தி, சூடை, கவளை போன்ற மீன்களில் உள்ள ஒமேகா 3 அமிலமானது மூளையின் செயல்பாட்டை அதிகரித்து நினைவாற்றலை வளர்த்து ரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை நீக்கி, நரம்புகளின் செயல்பாட்டை அதிகரித்து நல்ல பார்வை திறனை தந்து, உடம்பில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடிய சிறந்த அருமருந்தாக திகழ்கிறது. அசைவத்தில் கால்நடை உணவுகளால் உண்டாகும் கொழுப்பைக் குறைக்கும் மருந்தாக இருக்கும் இக்கடல் உணவுகளை விரும்பி உண்டு நோயற்ற வாழ்வு வாழலாம்.
நெய்தல் வய் நீதிமணி

சாம்பார் சாதம், தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முட்டை அவியல். இன்று இந்த அவியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 4
உப்பு - சிறிது
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிது
மசாலாவிற்கு...
தேங்காய் துருவல் - அரை கப்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 1
மிளகு - 1 தேக்கரண்டி

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு இரு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், வெங்காயம், மிளகு, பூண்டு போட்டு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அரைத்த மசாலாவை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
மசாலா கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வேக வைத்த முட்டையை அதில் போட்டு கலந்து மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி முட்டை மசாலாவில் ஊற்றவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சுவையான முட்டை அவியல் ரெடி.
முட்டை - 4
உப்பு - சிறிது
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிது
மசாலாவிற்கு...
தேங்காய் துருவல் - அரை கப்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 1
மிளகு - 1 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு இரு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், வெங்காயம், மிளகு, பூண்டு போட்டு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அரைத்த மசாலாவை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
மசாலா கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வேக வைத்த முட்டையை அதில் போட்டு கலந்து மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி முட்டை மசாலாவில் ஊற்றவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சுவையான முட்டை அவியல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பேபி வைப்ஸ் போலவே தற்போது பெரும்பாலானோர் ஸ்கின் கேர் வைப்ஸ் பயன்படுத்துகிறார்கள். இதனை முகத்திற்கு அடிக்கடி பயன்படுத்தலாமா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
பேபி வைப்ஸ் போலவே தற்போது பெரும்பாலானோர் ஸ்கின் கேர் வைப்ஸ் பயன்படுத்துகிறார்கள். காற்று புகாத வண்ணம் டைட்டான பாக்ஸில் ஈரப்பசையுடன் வைப்ஸ் இருக்கும்.
இதனை நாம் எளிதாக பயன்படுத்தலாம். தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவ முடியாத சமயங்களில் இதனைப் பயன்படுத்தலாம். மேக்கப் ரீமூவ் செய்வதற்கு சருமம் வறண்டு காணப்பட்டால் இதனைப் பயன்படுத்தி முகத்தை துடைக்கலாம்.
இதனைப் பயன்படுத்த எளிதாக இருந்தாலும் இதனால் ஏராளமான தீமைகள் ஏற்படுகிறது.
ஸ்கின் கேர் வைப்ஸில் ஏராளமான கெமிக்கல்ஸ் இருக்கும். எப்போதும் அவை ஈரப்பதத்துடன் இருப்பதற்காக அவற்றில் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இவற்றால் சென்ஸிட்டிவ் ஸ்கின் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் சருமம் வரண்டு போகும். இதனால் பல்வேறு சரும பாதிப்புகள் உண்டாகும்.
தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளில் தான் அதிகமாக இதனை பயன்படுத்துகிறார்கள் ஆனால் இதனை பயன்படுத்துவதால் முகம் முழுவதுமாக சுத்தம் ஆகாது. சில நுண்ணிய துகள்கள் முகத்தில் ஒட்டியபடியிருக்கும். இப்படியே அடிக்கடி செய்து வந்தால் அது சருமத்திற்கு பாதிப்பையே உண்டாக்கும்.
வைப்ஸில் இருக்கும் ஆல்கஹால் நம் சருமத்தை வறட்சியாக்கிடும். இது சீக்கிரத்திலேயே சருமத்தில் சுருக்கம் விழுவதற்கு காரணமாக அமைந்திடும். இதனால் பருக்கள், கரும்புள்ளி தோன்றும்.

முதல் குழந்தை பிறந்ததற்குப் பின் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக அடுத்த குழந்தை பிறக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் அபாயம் உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஒரு குழந்தைக்குப் பின் குறுகிய இடைவெளியில் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கு `ஆட்டிசம்’ பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சுமார் 5 லட்சம் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது.
பிறருடன் தொடர்புகொள்ளும் திறன் குறைவாக இருத்தல், குறுகிய கவனத்திறன் போன்ற பாதிப்புகள் கொண்டது `ஆட்டிசம்’ எனப்படுகிறது. இந்த ஆட்டிசம்தான் குழந்தைகளை அச்சுறுத்துகிறது.
முதல் குழந்தை பிறந்த பிறகு, குறைந்தபட்சம் மூன்றாண்டுகளுக்குப் பின் பிறக்கும் குழந்தையைவிட, இரண்டு ஆண்டுகளுக்குள் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் ஆபத்து அதிகம் என்கிறார்கள், இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.
முதல் குழந்தை பிறந்ததற்குப் பின் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக அடுத்த குழந்தை பிறக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் அபாயம் உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள். பெற்றோருக்கு என்ன வயதாக இருந்தாலும் அது பிரச்சினையில்லை என்றும் கூறுகிறார்கள்.
ஆட்டிசத்தை ஏற்படுத்தும் மற்ற காரணங்களையும் ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிறப்பு இடைவெளிக் குறைவால் ஏற்படும் பாதிப்பை அவர்களால் புறந்தள்ள முடியவில்லை.
“நாங்கள் பல்வேறு கோணங்களில் அலசினாலும், இந்த உண்மையைப் புறக்கணிக்க இயலவில்லை” என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட நியார்க் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வுக் குழுவின் முன்னணி ஆய்வாளரான பீட்டர் பியர்மான் கூறுகிறார். அதேநேரத்தில், இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
முறையாகத் திட்டமிடாமையால் அமெரிக்காவில் குறுகிய கால இடைவெளியில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது, 1995-ம் ஆண்டில் மொத்தக் குழந்தை பிறப்பில் 11 சதவீதமாக இருந்தது என்றால், 2002-ல் 18 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சிறுதானிய உணவுகளை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு, கம்பு சேர்த்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கம்பு - ஒரு கப்
கொள்ளு - கால் கப்
சுக்கு - 2

செய்முறை :
கம்பு மற்றும் கொள்ளுவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்கு சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
பொடித்த மாவுடன் உப்பு சேர்த்த தண்ணீர் தெளித்து பிசையவும். பிடித்தால் உருண்டையாகவும், உடைத்தால் உடையும் பதம் வரும் வரை பிசையவும்.
மாவை புட்டு குழலில் வைத்து இடை இடையே தேங்காய் துருவல் சேர்த்து ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான கொள்ளு - கம்பு புட்டு தயார்.
கம்பு - ஒரு கப்
கொள்ளு - கால் கப்
சுக்கு - 2
தேங்காய் துருவல் - 1 கப்

செய்முறை :
கம்பு மற்றும் கொள்ளுவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்கு சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
பொடித்த மாவுடன் உப்பு சேர்த்த தண்ணீர் தெளித்து பிசையவும். பிடித்தால் உருண்டையாகவும், உடைத்தால் உடையும் பதம் வரும் வரை பிசையவும்.
மாவை புட்டு குழலில் வைத்து இடை இடையே தேங்காய் துருவல் சேர்த்து ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான கொள்ளு - கம்பு புட்டு தயார்.
இதில் கொள்ளு சேர்ப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடல் எடையை குறைக்க, என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன்…’என்று, சில "டீன் ஏஜ்’ பெண்கள், வெளிப்படையாகவே கூறுகின்றனர்.
உடல் மெலிய வேண்டுமென்பதற்காக, உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது, தற்போது ஒரு பேஷன் போல் பரவிக் கொண்டிருக்கிறது. இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்றவர்கள் கூட, "நான் டயட்டில் இருக்கிறேன்…’ என சொல்வதும், உடல் எடை, சற்று அதிகமாகி விட்டாலே, "அய்யய்யோ என் அழகே கெட்டு விட்டது…’ என்று அழும் பெண்களும் சென்னை போன்ற பெரும் நகரங்களில் உண்டு.
அதிக எடை உள்ளவர்கள், கொழுப்பு சத்து நிறைந்த உணவை தவிர்ப்பதால், நீரிழிவு, மாரடைப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படாது. மேலும், மாடலிங் பெண்களை போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, தீவிரமான உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தால், ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவது நிச்சயம். உயரத்துக்கு பொருத்தம் இல்லாத அளவுக்கு, உடல் எடை அதிகரித்தால் மட்டுமே, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.
உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதற்கு முன், டாக்டரை சந்தித்து, உடல் குண்டாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை அறிய வேண்டும். நிபுணத்துவம் பெற்ற ஒருவரது ஆலோசனையின் பேரில், உணவுக் கட்டுப்பாட்டை துவக்க வேண்டும்.
ஒருவரது உடல் குண்டாக இருக்கிறது என்றால், அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகமாக சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்யாமை போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கும். இதனை, உணவுக் கட்டுபாடு மூலம் நிவர்த்தி செய்யலாம். ஆனால், பரம்பரை ரீதியாக உடல் குண்டாக இருப்பவர்கள், மெலிவது எளிதான காரியம் அல்ல. தைராய்டு சுரப்பி, அட்ரினல் சுரப்பிகளில், நோய் இருந்தாலும், உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைத்து, கவர்ச்சியான உடல்வாகு பெற வேண்டும் என்று, உணவின் பெரும் பகுதியை வெட்டி, குறைத்து விடக் கூடாது.

அதுபோல, திடீரென்று உடலை அதிகமாக வருத்தும் உடற்பயிற்சியை துவங்கி விடக்கூடாது. மிதமான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதாலும், கலோரி குறைந்த உணவை சாப்பிடுவதாலும், உடல் எடையை குறைய வைக்கலாம். மூன்று வேளை ஆகாரத்தை என்ன காரணம் கொண்டும் குறைத்து விடக் கூடாது. சத்து நிறைந்த உணவு, காலை நேரத்துக்கு மிகவும் தேவை.
உணவுக் கட்டுப்பாடு என்றாலே, முழுமையாக உணவை தவிர்ப்பது என்று அர்த்தமல்ல. அதனால், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கலாம். அதே நேரம் பால், மீன், முட்டை போன்றவைகளை உணவில் சேர்க்காதவர்கள், விட்டமின், தாது சத்துகள் நிறைந்த காய்கறி, பழ வகைகள் அதிகம் சாப்பிட வேண்டும்.
உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சாப்பிடும் உணவு, சமச்சீர் சத்துக்கள் நிறைந்ததாக இருப்பது அவசியம். கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், விட்டமின், மினரல் சத்துகள், போதுமான அளவு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சாலட், பழ வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். பழங்களை ஜூஸ் ஆக்காமல், அப்படியே சாப்பிட்டால், நார்ச்சத்து முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.
மாடலிங் அழகிகள் போல, உடல் மெலிய விரும்புவோர், சாப்பிடுவ தற்கு முன், சாலட் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தண்ணீர் தன்மை அதிகமுள்ள சாலட்டை, முதலிலேயே சாப்பிட்டால், வயிறு சீக்கிரமாக நிறையும். இதனால், அதிகமான அளவு சாதம் சாப்பிட முடியாது. பாஸ்ட் புட் உணவுகள், குளிர்பானங்கள், இனிப்புகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் போது, சரியான நேரத்திற்கு, சரியான உணவுகளை சரியான முறையில் சாப்பிட வேண்டும்.

இந்த ஆசனம் செய்வதால் கை, கால், இடுப்பு, முதுகு என அனைத்து உறுப்புகளும் வலுப்பெறும். முக்கியமாக முதுகெலும்பிற்குள் இருக்கும் சுஷூம்ணா நாடியை இந்த ஆசனம் வலுப்படுத்தும்.
செய்முறை : விரிப்பில் நேராக நிமிர்ந்து நின்று கைகளை உயர தூக்கவும். மூச்சை மெல்ல வெளியிட்டவாறே குனிந்து கால் பாதத்தை தொடவும். பின் மெல்ல தலையை காலுடன் ஒட்டியவாறு சேர்த்து வைக்கவும்.
இந்த நிலையில் முடிந்த அளவு இருந்த பின் மூச்சை மெல்ல வெளியேற்றியவாறே தலையை நிமிர்த்தவும்.
பயன்கள் : தலைக்கு ரத்தம் பாய்வதால் சிரசாசனம் செய்த பலனை இந்த ஆசனம் கொடுக்கும். கை, கால், இடுப்பு, முதுகு என அனைத்து உறுப்புகளும் இதனால் வலுப்பெறும். முக்கியமாக முதுகெலும்பிற்குள் இருக்கும் சுஷூம்ணா நாடியை இந்த ஆசனம் வலுப்படுத்தும். உடல் முழுவதுமான ரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது.

வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கிய காரணங்கள்.
சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்பு தசைகள் விரிகின்றன. மார்புக்கும், வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது. உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது.
இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாக தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது. இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு. சில நேரங்களில், மார்பு பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாக திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாக திறப்பதில்லை.
அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல் நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரலுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்த காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்... விக்...’ என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்’.
வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கிய காரணங்கள். வலி நிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளை சாப்பிட்டாலும் விக்கல் வரும். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உதாரணத்துக்கு, இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய் தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய் தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும். மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில்விட வேண்டாம்.
பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும். வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதை தானாக கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும். சில நிமிடங்கள் நீடிக்கும் விக்கலுக்கே நாம் பயந்துபோகிறோம். அமெரிக்காவில் சார்லஸ் ஆஸ்பார்ன் என்பவர் 68 ஆண்டுகளுக்கு தொடர்ந்து விக்கல் எடுத்துக் கின்னஸ் ரிக்கார்டு செய்திருக்கிறார். அம்மாடியோவ்!

தீபாவளி மற்றும் சிறப்பு நாட்களில் செய்யப்படும் ஒரு பாரம்பரிய தென்னிந்திய ஸ்நாக்ஸ் இது. இன்று பட்டர் முறுக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 3 கப்
கடலை மாவு - 1/2 கப்
உளுந்து மாவு - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 மேசைக் கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 5 தேக்கரண்டி

செய்முறை :
எண்ணெய் தவிர அனைத்து பொருட்களும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும்.
வெண்ணெயை உதிர்த்து மற்ற பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சிறிது வெந்நீர் விட்டு நன்றாக பிசையவும். மாவு சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.
பிசைந்த மாவின் மீது ஒரு துணி போட்டு மூடி வைக்கவும்.
முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி, தேவையான அளவு மாவை அச்சில் போட்டுக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் எண்ணெயில் மாவை முறுக்குகளாக பிழியந்து பொன்னிரமாக எடுக்கவும்.
சூடான, மொறு மொறுவென பட்டர் முறுக்கு தயார்.
அரிசி மாவு - 3 கப்
கடலை மாவு - 1/2 கப்
உளுந்து மாவு - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 மேசைக் கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 5 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை :
எண்ணெய் தவிர அனைத்து பொருட்களும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும்.
வெண்ணெயை உதிர்த்து மற்ற பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சிறிது வெந்நீர் விட்டு நன்றாக பிசையவும். மாவு சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.
பிசைந்த மாவின் மீது ஒரு துணி போட்டு மூடி வைக்கவும்.
முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி, தேவையான அளவு மாவை அச்சில் போட்டுக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் எண்ணெயில் மாவை முறுக்குகளாக பிழியந்து பொன்னிரமாக எடுக்கவும்.
சூடான, மொறு மொறுவென பட்டர் முறுக்கு தயார்.
இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரித்து பயன்படுத்தினால் கூந்தலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இயற்கையான வழியில் ஷாம்பூ தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
இன்றைய வாழ்க்கைமுறை, பணிச்சுமை ஆகியவை நமது உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றுக்கு பல பிரச்சனைகளைத் தருகிறது. அவற்றில் தலைமுடிப் பிரச்சனை முக்கியமானது. ரசாயன ஷாம்பூக்களை அளவு தெரியாமல் பயன்படுத்துவதால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகிறது. அதில் உள்ள சோடியம் லாரில் சல்ஃபேட் (Sodium lauryl sulfate), சோடியம் லாரத் சல்ஃபேட் (Sodium laureth sulfate) போன்ற வேதியியல் பொருட்கள் முடி உதிர்தல், தோல்வீக்கம், நோயெதிர்ப்புக்கேடு, ஒவ்வாமை, கண்புரைக்கேடு போன்றவற்றை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு மாற்றாக இயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரித்து பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும். இன்று இயற்கையான வழியில் ஷாம்பூ தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
சீயக்காய் ஷாம்பூ
தேவையான பொருட்கள்
சீயக்காய்- 1 கிலோ
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு - 100 கிராம்
எலுமிச்சை தோல் காய வைத்தது - 25
பாசிப்பருப்பு - கால் கிலோ
மரிக்கொழுந்து - 20 குச்சிகள்
மல்லிகை பூ காய வைத்தது - 200 கிராம்
கரிசலாங்கண்ணி இலை - 3 கப் அளவு.
செய்முறை
மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் ஷாம்பூவுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். வெறும் தண்ணீர் மட்டும் விட்டு பேஸ்ட் போல கலந்து தலைக்கு தடவி குளிக்கலாம். இந்த சீயக்காய் ஷாம்பூ அழகாக நுரை வரும். பொடுகை நீக்கும். முடி கருமையாகும். முடி ஈரப்பதத்தோடு இருக்கும். வறண்டு போகாது. இந்த இயற்கை ஷாம்பூ தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டவை.
சீயக்காய் பலநூறு ஆண்டுகளாக இயற்கை ஷாம்பூவாக பாரம்பரிய மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இதனுடைய குறைந்த காரத்தன்மை முடியின் இயல்பான எண்ணெய் தன்மையை தக்கவைக்க உதவுகிறது. இதனுடைய கிருமிநாசினித் தன்மையானது பொடுகு போன்ற பரவுநோய்களிலிருந்து முடியைப் பாதுகாக்கிறது. இதில் காணப்படும் சாப்போனின், லேக்டோன், அராபினோஸ், ராம்னோஸ் எனும் மூலக்கூறுகள் முடிக்கு போஷாக்களித்து முடி உதிர்வதிலிருந்து காக்கிறது.
செம்பருத்திப்பூவில் காணப்படும் ஃப்ளேவனாய்ட்கள் மேலும் தயமின், ரிபோஃப்ளேவின், நியாசின், அஸ்கார்பிக் ஆசிட் போன்ற வைட்டமின்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் முடி உதிர்தல், இளநரை, பொடுகு போன்றவற்றை குணமாக்குகிறது. பூலாங்கிழங்கில் உள்ள ஆர்கானிக் அமிலம், ரெசின், க்ளுக்கோசைட், அல்புமின், சைட்டோஸ்டிரொலென்ட், ஃபுரோனாய்ட், 7- ஹைட்ராக்சிகேட்சைனொன் போன்ற பொருட்கள் முடிக்கு வலு சேர்க்கிறது.
எலுமிச்சைத்தோலில் அதன் சாற்றினை விட 5 முதல் 10 சதவிகிதம் அதிகமான கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை முடிக்கு நன்மையையும் உறுதியையும் வழங்குகிறது. பாசிப்பயறில் உள்ள செழுமையான வைட்டமின் A, C மற்றும் தாதுப்பொருட்கள் ஆகியவை முடி பிளத்தல், முடி உதிர்தல் ஆகியவற்றை தடுக்க உதவும்.
மரிக்கொழுந்தில் உள்ள ஏராளமான நறுமண எண்ணெய் முடிக்கு வளமை தருகிறது. மல்லிகைப்பூவில் உள்ள இண்டோல், E-E- ஃபெர்மிசென், Z-3-ஹ்க்செனைல் பென்சோவேட், லினலால் போன்ற வேதிப்பொருட்கள் முடி உதிர்தலைத் தடுத்து பேனை ஒழிக்கிறது.

உடற்பயிற்சியின் போது செய்யும் தவறுகள் உங்களுக்கு உடற்பயிற்சியின் முழுப்பலனை அளிக்காமல் இருப்பதோடு காயங்கள் ஏற்படவும் காரணமாகிறது.
உடற்பயிற்சி செய்ய தொடங்கும் முன் நம் உடலை அதற்கேற்றாற்போல தயார்படுத்த வேண்டும். எடையை தூக்குவதற்கு முன் உங்கள் உடலை நன்கு வளைத்து தயார்படுத்துவது உங்கள் மூட்டுகளுக்கு வரும் இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரிக்கும். இது தசைப்பிடிப்பு ஏற்படுவதை தடுக்கும். எடை தூக்க தொடங்கும் முன் நீங்கள் 10 நிமிடங்கள் நடப்பது, இடுப்பை வளைப்பது, தோள்பட்டைகளை தயார் செய்வது போன்றவற்றை செய்ய வேண்டும். இல்லையெனில் உங்கள் தசைகள் விரைவில் சோர்வடைந்து விடும்.
தவறான முறையில் பளு தூக்குவது உங்களுக்கு உடற்பயிற்சியின் பலனை அளிக்காமல் இருப்பதோடு காயங்கள் ஏற்படவும் காரணமாகிறது. மற்ற உடற்பயிற்சிகளை காட்டிலும் எடை தூக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் உதவிக்கு பயிற்சியாளரோ அல்லது நண்பரோ உடனிருப்பது அவசியம். ஏனெனில் பளுதூக்கும் போது ஏற்படும் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க உதவிக்கு ஒருவர் இருக்க வேண்டியது அவசியம்.
தினமும் ஒரே பயிற்சியை செய்வது உங்களுக்கு உங்கள் உடலமைப்பில் பாதிப்பை ஏற்படுத்துவது, வலிமை ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். தினமும் எடை தூக்குவதையே செய்யாமல் உடலின் மற்ற தசைகளையும் வலுப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் உடல் வலிமை சமநிலையில் இருக்கும்.
உடற்பயிற்சியின் போது ஏற்படும் பெரும்பாலான காயங்கள் தலைக்கு மேல் எடையை தூக்கி செய்யும் போதுதான் ஏற்படுகிறது. தலைக்கு மேல் எடையை தூக்கும் போது அது உங்கள் தோள்பட்டை சுழற்சியின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் தசைப்பிடிப்பு முதல் எலும்பு முறிவு கூட ஏற்படலாம். தலைக்கு மேல் எடையை தூக்கும் முன் போதுமான முன் பயிற்சி எடுக்க வேண்டியது அவசியம்.

தசைகளை வலிமைப்படுத்த முயலும்போது அதிக எடை தூக்கினால்தான் தசை வலிமையடையும் என்று எண்ணுவது முட்டாள்தனமானது. அதிக எடையை தூக்கும் போது நீங்கள் செய்யும் எண்ணிக்கையின் அளவு குறையும். எண்ணிக்கைதான் வலிமையை தீர்மானிக்கும். சக்திக்கு மீறி அதிக எடையை தூக்குவதை விட குறைவான எடையை அதிகமுறை தூக்குவது உங்களுக்கு அதிக பலனை அளிக்கும்.
உங்கள் உடலின் மையத்தை வலிமையாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அடிவயிறு மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சிகளை செய்யவும் ஆர்வம் காட்டுங்கள். அப்போதுதான் உங்களால் எடையை நன்கு தூக்க முடியும்.
வேகமாக உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு கிடைக்கும் பலனை தடுக்கும் மேலும் காயங்களுக்கும் வழிவகுக்கும். பொறுமையும், கட்டுப்பாடுமே உங்களுக்கு நினைத்த பலனை அளிக்கும். உதாரணத்திற்கு டம்பெல்லை கொண்டு பின்பக்க தசைகளை வலுப்படுத்த முயற்சிக்கும் போது பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். வேகமாக செய்வது அதிக பலனையும் அளிக்க போவதில்லை.
சோர்வாக இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு நீங்களே ஆபத்தை ஏற்படுத்தி கொள்வதாகும். ஏனெனில் சோர்வாக இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு மோசமான காயங்களை உண்டாக்கும். ஜிம்மிற்குள் செல்லும்போதே சோர்வாக உணர்ந்தால் எடை தூக்குவதை தவிர்த்து விட்டு வேறு உடற்பயிற்சிகளை செய்வதில் கவனம் செலுத்துங்கள்.
வெறும் உடற்பயிற்சி மட்டும் உங்களுக்கு நீங்கள் விரும்பும் பலனை அளிக்காது. ஆரோக்கியமான உணவும் அதற்கு அவசியம். உடற்பயிற்சி செய்யும் காலகட்டத்தில் துரித உணவுகள் அதிகம் சாப்பிடுவது உங்களுக்கு எந்த பலனையும் அளிக்காது மேலும் பக்க விளைவுகளையே ஏற்படுத்தும். புரோட்டின், நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்து அதிகம் இருக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தங்கள் விருப்பத்தை பிள்ளைகளிடம் திணித்து பிள்ளைகளையும் அந்த போராட்ட களத்தில் பல பெற்றோர் இறக்கி விட்டிருப்பார்கள். குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யவேண்டியவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
இன்றைய பெற்றோர் பலரின் பிரச்சினையே, `எத்தனை தடவை சொன்னாலும் பிள்ளைகள் படிப்பில் அக்கறை காட்டவே மாட்டேங்கிறாங்க’ என்பதாகத்தான் இருக்கிறது. பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பில் படிக்கும் பிள்ளைகள் உள்ள வீட்டில் இந்த ஆதங்கக்குரல் சற்று அதிகமாகவே கேட்கிறது.
இத்தனைக்கும் பிள்ளைகள் பெற்றோருக்கு அடங்கி நடக்கும் கட்டாயத்தில் உள்ளவர்கள் தான். அவர்களிடம் நல்ல தன்மையாக சொன்னாலே கேட்டுக் கொள்வார்கள். இதை பல பெற்றோர் உணர்வதில்லை. கண்டித்தால் மட்டுமே பிள்ளைகள் சரியான இலக்கை அடைவார்கள் என்பது அவர்கள் எண்ணம். ஒரு கட்டத்தில் பிள்ளைகளிடம் இருந்து இதற்கு எதிர்ப்பு வலுக்கும்போது, தங்கள் வீட்டுப்பிள்ளைகள் படிக்கும் ஆசியர்கள் வசம் விஷயத்தை கொண்டு போய் விடுகிறார்கள். இது பிள்ளைகளின் தன்மானத்தை உசுப்பி விட்டு விடுகிறது. இதனால் பெற்றோரை எப்படி பழி வாங்கலாம் என்ற கோணத்தில் அவர்கள் சிந்திக்கத் தொடங்கி விடுகிறார்கள்.
தங்கள் விருப்பத்தை பிள்ளைகளிடம் திணித்து பிள்ளைகளையும் அந்த போராட்ட களத்தில் பல பெற்றோர் இறக்கி விட்டிருப்பார்கள். இந்த களத்தில் ஓடத்தொடங்கியிருக்கும் தங்கள் வீட்டுக்குழந்தைகள் சரியான இலக்கில் ஓடிக்கொண்டிருக்கிறார்களா என்பதை பார்க்கும்விதமாக அவ்வப்போது பெற்றோர் மூக்கை நீட்டும்போதுதான் பிரச்சினை ஆரம்பமாகிறது.
இந்த மாதிரியான ஏமாற்றம் பெற்றோருக்கு ஏற்படாதிருக்க அவர்கள் செய்யவேண்டியது என்ன?
பிள்ளைகளை தட்டிக்கொடுங்கள். அதுவரை சரியாகப் படித்தவர்களை `இந்த வகுப்பிலும் நீ உன்திறமையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்’ என்று தட்டிக் கொடுங்கள். ஒருபோதும் `இந்த வருஷம் மட்டும் கோட்டை விட்டுட்டா படிப்பு சாம்ராஜ்யமே சரிந்து விடும்’ என்கிற மாதிரி பயமுறுத்தாதீர்கள். ரொம்பவும் கடினப்படுத்தும் பாடத்துக்கு அவசியப்பட்டால் திறமையான ஆசிரியர் வைத்து சிறப்புப்பயிற்சி கொடுங்கள்.
பிள்ளைகளுக்கு படிப்பு விஷயத்தில் எல்லாமே செய்து விட்டோம். இனி படிப்பது அவர்கள் கடமை என்று எண்ணி நீங்கள் சீரியல் பார்க்க உட்கார்ந்து விடக்கூடாது. முக்கிய பரீட்சை நாட்களிலாவது உங்கள் நேரத்தை பிள்ளைகளுடன் செலவழிக்க வேண்டும். பாடத்தில் பிள்ளைகள் கேட்கிற சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் அளவுக்கு நீங்கள் கற்ற கல்வி உதவும் என்றால், அதையும் தயங்காமல் செய்யுங்கள்.
நம் கல்வி முயற்சியில் பெற்றோரின் பங்களிப்பு அதிகம் என்று பிள்ளைகள்உணர்ந்தாலே அவர்கள் படிப்பில் இன்னும் அதிக அக்கறையாகி விடுவார்கள். `நம்மை நேசிக்கும் பெற்றோருக்காவது நாம் சிறப்பான வெற்றியை பெற்றாக வேண்டும்’ என்ற எண்ணம் அவர்களிடம் நிலைவரப் பெற்று எப்படியாவது சாதிக்கத் தூண்டும். இந்த நிலை நீடிக்கும்போது ஆண்டுத் தேர்வு அவர்களை கல்வியில் சாதித்தவர்களாகவும் வெளிப்படுத்தும்.
அன்பான அணுகுமுறைக்கு எப்போதுமே பலன் நிச்சயம்.