search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bajra Recipes"

    தினந்தோறும் காலை உணவாக கம்பு கூழ் அல்லது கம்பு களியாக சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடலை திடமாக வைத்திருக்க உதவும்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு - 1 கப்
    பால் - 1 ½ கப்
    தயிர் - ½ கப்
    கேரட் - 1
    கடுகு - சிறிதளவு
    உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    காய்ந்த மிளகாய் -2
    இஞ்சி - 1 துண்டு
    பெருங்காயம் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    முதலில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கம்பை புடைத்து சுத்தம் செய்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.

    சுத்தம் செய்த கம்பை மிக்ஸியில் போட்டு, ரவைப் பதத்தில் உடைத்துக்கொள்ளவும்.

    உடைத்த கம்புடன் ஐந்து கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வேக வைக்கவும்.

    4 விசில் வந்ததும் இறக்கி, பால் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    பின் கடாயைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றைத் தாளிக்கவும்.

    அத்துடன்  கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவும்.

    கடைசியாக, உப்பு, துருவிய கேரட், தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கம்பு தயிர் சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சிறுதானிய உணவுகளை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு, கம்பு சேர்த்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு - ஒரு கப்
    கொள்ளு - கால் கப்
    சுக்கு - 2
    தேங்காய் துருவல் - 1 கப்



    செய்முறை :

    கம்பு மற்றும் கொள்ளுவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும்.

    ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்கு சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

    பொடித்த மாவுடன் உப்பு சேர்த்த தண்ணீர் தெளித்து பிசையவும். பிடித்தால் உருண்டையாகவும், உடைத்தால் உடையும் பதம் வரும் வரை பிசையவும்.

    மாவை புட்டு குழலில் வைத்து இடை இடையே தேங்காய் துருவல் சேர்த்து ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான கொள்ளு - கம்பு புட்டு தயார்.

    இதில் கொள்ளு சேர்ப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கம்பு, பாலக்கீரை உடலில் உள்ள எலும்புகளை பலப்படுத்தும். வயிற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றும். டயட் செய்பவர்களுக்கு இது ரொம்ப ருசியான சத்தான உணவு.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு - 1 கப்
    ப. மிளகாய் - ஒன்று
    வெங்காயம் - ஒன்று
    கரகரப்பாக திரித்த மிளகு தூள் - அரை தேக்கரண்டி
    பாலக் கீரை (பசலை கீரை) - பொடியாக அரிந்தது அரை கப்
    நெய் - ஒரு தேக்கரண்டி
    தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
    உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பு மாவை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.

    கம்பு மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், பாலக்கீரை, தேங்காய் துருவல், உப்பு மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை சம உருண்டைகளாக பிரிக்கவும்.

    ஒரு தட்டில் சதுர வடிவ ஈரதுணியை விரித்து அதில் ஒரு உருண்டையை வைத்து உள்ளங்கை அளவிற்கு உள்ள ரொட்டியாக தட்டவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது பட்டர் அல்லது நெய் தடவி தட்டிய ரொட்டியை இட்டு இரண்டு புறமும் நன்கு சிவக்க வேகவைத்து லேசாக நெய் தடவி இறக்கவும்.

    நெய் வேண்டாமெனில் ஆலிவ் ஆயில் தடவி சுட்டு எடுக்கவும்.

    சுவையான கம்பு பாலக் ரொட்டி ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பு, கேரட் சேர்த்து ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு - 1 கப்
    இட்லிமாவு - 1/4 கப்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    கேரட் - 2
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, இட்லிமாவு, சிறிது உப்பு போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதம் கரைத்துக்கொள்ளவும்..

    அத்துடன் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கேரட் துருவல் போட்டு நன்கு கலந்து அரைமணிநேரம் அப்படியே வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் ஒருகரண்டி மாவு ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சுவையான கம்பு - கேரட் ஊத்தப்பம் ரெடி..

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் கம்பு, கீரையை உணவில் தினமும் சேர்த்து கொள்வது நல்லது. இன்று இந்த இரண்டையும் வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிறுகீரை - 200 கிராம்
    பச்சரிசி மாவு - 100 கிராம்
    கம்பு மாவு - 300 கிராம்
    முந்திரிப் பருப்பு - 50 கிராம்
    நெய் - 50 கிராம்
    மிளகு - ஒரு டீஸ்பூன்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 2
    பூண்டுப்பல் - 8
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டுப்பல்லை நன்றாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.

    முந்திரி, மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக வறுத்து, பொடியாக்கிக் கொள்ளவும்.

    சிறுகீரையை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கழுவி, தண்ணீரை வடிக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், கீரையைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

    கீரையில் இருக்கும் தண்ணீர் முழுவதுமாக சுண்டியதும், நெய் சேர்த்துக் கிளறி நன்கு வதக்கி இறக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு மற்றும் கம்பு மாவைக் கொட்டி, இத்துடன் வதக்கிய கீரையைச் சேர்த்து, வெங்காயம், நன்றாகத் தட்டியப் பூண்டுப்பல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையுடன், வறுத்துப் பொடித்தவற்றை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து தளதளவென கரைத்துக் கொள்ளவும். (மாவை கெட்டியாகக் கரைத்தால் கம்பு மாவு வேகாது).

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கம்பு சிறுகீரை அடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் உணவில் கம்பை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கம்பு, சோம்பு கீரையை வைத்து பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கம்பு மாவு - 1 கப்
    சோம்பு கீரை (Dill leaves) - அரை கப்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 1
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - தேவைக்கு ஏற்ப
    சீரகத்தூள் - அரை தேக்கரண்டி



    செய்முறை

    சோம்பு கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, நறுக்கிய சோம்பு கீரை,வெங்காயம், ப.மிளகாய், உப்பு, மிளகாய் தூள், சீரகத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து சிறிய எண்ணெய் ஊற்றி மாவை பணியாரங்களாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சத்தான கம்பு - சோம்பு கீரை பணியாரம் ரெடி.

    இதனை தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் சாப்பிட் அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×