என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    இன்றைய வாழ்க்கை சூழல், நிஜங்களை தொலைத்துவிட்டு, போலி மயமாகிக் கொண்டிருக்கிறது. நாம் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாற குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும் நாம் சில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டும்.
    ‘வாழ்க்கை என்பது வியாபாரம்’ என்று கவியரசு கண்ணதாசன் பாடியது போல் வாழ்க்கையே வியாபாரமாகி வருகிறது. பலரும் தன்னுடைய வாழ்க்கை, தன்னுடைய எதிர்காலம் என்று சுயநலமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். அதனால்தான் மக்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து வெகு தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

    இயல்பான வாழ்க்கை என்பதுதான் யதார்த்தமானது, நிஜமானது. இன்றைய வாழ்க்கை சூழல், நிஜங்களை தொலைத்துவிட்டு, போலி மயமாகிக் கொண்டிருக்கிறது. தான் மட்டும் வாழவேண்டும். தனது வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனை மேலோங்கி நிற்கிறது.

    ஒரு குழந்தை, தாயின் அரவணைப்பில் வளர்வதுதான் அதற்கு பாதுகாப்பு, மகிழ்ச்சி. இன்றைய முரண்பாடான வாழ்க்கை, குழந்தைக்கு அந்த அரவணைப்பை தருவதில்லை. மாறாக வருங்கால வசதி, வைப்பு நிதி, சமூக அந்தஸ்து, ஆடம்பரம் இவைகளை எல்லாம் தரப்போவதாக வாக்குறுதி அளிக்கிறது. அதனால் ஒரு மழலையை கூட வஞ்சித்து விடுகிறது இன்றைய வியாபார வாழ்க்கை. அதில் லாப-நஷ்ட கணக்குப்போட்டு பெற்ற பிள்ளைகளை சமாதானம் செய்து கொண்டு, தங்களையும் ஏமாற்றி தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

    வயதான பெற்றோரை காப்பாற்றுவது பிள்ளைகளின் கடமை. ஆனால் இன்றைய வாழ்க்கை, அந்த கடமையை பின்னுக்கு தள்ளிவிட்டது. அதையும் மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

    இன்றைய வியாபார வாழ்க்கைக்கு அன்பு, பாசம் தேவையில்லை. தன்னுடைய தேவை, ஆசை, மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு போன்ற எல்லாவற்றையும் நோக்கி, உற்றார்- உறவினர்களைக்கூட பின்னுக்கு தள்ளிவிட்டு தலைதெறிக்க ஓடுவதே மிகப்பெரிய சாதனை என்று நினைக்கிறார்கள்.

    ‘அது தவறல்லவா?’ என்று அவர்களிடம் கேட்டால், ‘தான் ஒரு பிராக்டிகல் மனிதன்’ என்கிறார்கள். இப்படி சொல்வதை ஒரு அறிவாளித்தனம் என்று கருதிக்கொண்டு, வாழ்வதற்கு என்றே படைக்கப்பட்ட நல்ல விஷயங்களை பற்றிய சிந்தனையே இல்லாமல், எல்லாவற்றையும் பிராக்டிகல் என்ற மண்ணைப்போட்டு மூடிவிட்டு, மேலே முள் செடியையும் நட்டு வளர்த்து, வாழ்க்கையையே ஒரு முட்காடாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு அழகான ரோஜா மலரைப் பார்த்து ரசிக்க கூட இந்த பிராக்டிகல் மனசுகாரர்களால் முடியாது. விளைவு வாழ்க்கையும் முள்ளாகிப் போகிறது. விட்டுக் கொடுத்தல், பணிந்து போதல், மற்றவர்கள் கருத்துக்களை காது கொடுத்து கேட்டல் இவை எதுவுமே பிராக்டிகல் எனப்படும் வியாபார வாழ்க்கையில் இருக்காது. அந்த வாழ்க்கை தனக்கு ஒரு அந்தஸ்தை தரும். சமூகத்தில் ஒரு அங்கீகாரத்தை தரும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும். ஆனால் ஏமாற்றத்தில் முடிந்துவிடும்.

    ‘பிராக்டிகல்’ என்ற ஒன்று நம்மோடு ஒட்டிக் கொண்டிருந்தால் தான் நம்மால் நிம்மதியாக வாழ முடியும் என்ற எண்ணம் பலபேர் மனதில் வேரூன்றி விட்டது. இதனால் தங்களுடைய `தனித்துவத்தை' தொலைத்துவிட்டு கடனே என்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே கற்பனைகள் அற்புதமாக இருக்கும். ஆனால் அந்த கற்பனையில் மனிதனால் வாழ முடியாது. பிராக்டிகல் என்ற ஒன்று வாழ்க்கையை திசைமாற்றிவிடக் கூடாது. தவறுகளை நியாயப் படுத்தவும் அது பயன்படக்கூடாது. உண்மைகளை அது மறைக்க கூடாது. உறவுகளையும் சிதைத்து விடக்கூடாது.

    வாழ்க்கை வியாபாரம் ஆகிக்கொண்டிருக்கிறது. அதோடு சேர்ந்து நாமும் வியாபாரி ஆகிவிடாமல் நிஜ வாழ்க்கை, நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து உறவுகளுக்கு கைகொடுத்து மனிதனின் மாண்பை பாதுகாக்கவேண்டும். நாம் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாற குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும் நாம் சில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டும்.
    மகளிர் மற்றும் மகப்பேறு துறையில் குழந்தையின்மையை கண்டுபிடிக்க அதிநவீன கருவிகள் இப்பொழுது இந்தியாவில் கிராமங்களில் கூட வந்துவிட்டது.
    லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை வந்த பிறகு மருத்துவ துறையின் எல்லா பிரிவுகளிலும் அதிநவீன மருத்துவ முறைகள் சிறு கிராமங்களிலும் கூட கையாளப்படுகின்றன.

    முதல் முதலில் லேப்ராஸ் கோபிக் மருத்துவ முறைகள் மகளிர் மற்றும் மகப்பேறு துறையில்தான் பிரபலமானது. குறிப்பாக லேப்ராஸ்கோபிக் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மிகவும் பிரபலம் அடைந்தது.

    மகளிர் மற்றும் மகப்பேறு துறையில் குழந்தையின்மையை கண்டுபிடிக்க அதிநவீன கருவிகள் இப்பொழுது இந்தியாவில் கிராமங்களில் கூட வந்துவிட்டது. ஏன் பாவூர்சத்திரம் என்ற சிறிய ஊரில் கூட இந்த வசதி இப்பொழுது கிடைக்கிறது. இந்த நவீன முறையின் மூலம் கருவறைக்கு உள்ளே உள்ள நோய்கள், சிறு கட்டிகள், கருவறை குழாயில் அடைப்பு, சாதாரண முறையில் கண்டு பிடிக்க முடியாத காப்பர் டி போன்ற கருத்தடை சாதனங்களையும் மற்றும் கர்ப்பப்பையில் உள்ள எண்டோமெட்ரியல் பாலிப்புகள், மையோமோ கட்டிகள், கருவறையை இரண்டாக பிரிக்கும் சுவர்கள் (யூட்டரின் செப்டம்) போன்றவைகளை கண்டுபிடிக்கவும் அதை நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்யவும் இந்த நவீன முறைகள் உதவுகின்றன. இது பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த முறைக்கு ஹிஸ்டராஸ்கோபி என்று பெயர்.

    ஹிஸ்டராஸ்கோபி என்றால் என்ன?

    ஹிஸ்டராஸ்கோபி என்பது கருவறையின் உட்பகுதியை நவீன டெலஸ்கோப், நவீன கேமரா மற்றும் கேபிள் லைட்டுகள் மூலமாக சோதனை செய்யவும், அறுவை சிகிச்சை செய்யும் முறையுமாகும். இதில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து (முழு மயக்கமும் கொடுக்கலாம். இடுப்புக்கு கீழ்பகுதி மட்டும் மரத்துப் போகும்படியும் செய்யலாம்). மிகவும் சிறிய டெலஸ்கோப் கர்ப்பப்பையின் வாய் வழியாக (2.9 mm அளவு டெலஸ்கோப்) செலுத்தப்படுகிறது. டெலஸ் கோப்பின் மறுமுனையில் பக்கவாட்டின் லைட் கேபிள் இணைக்கப்படுகிறது. (ஆரம்ப காலத்தில் சாதாரண ஹேலோஜன் லைட்டுகள் பயன்படுத்தப்பட்டன. பிறகு LED லைட்டுகளும் தற்சமயம் செனான் என்ற லைட்டுகளும் பயன்படுத்தப்படுகிறது)

    டெலஸ்கோப்பின் இன்னொரு முனையில் அதிநவீன கேமராக்கள் இணைக்கப்படுகின்றன. இந்த கேமராக்கள் அறிமுகமான நிலையில் சிங்கிள் சிப் கேமரா பயன்படுத்தப்பட்டது. அதில் மூன்று பிரைமரி கலர்களும் ஒரே கேபிள் வழியாக செலுத்தப்பட்டது. பிறகு மூன்று சிப் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. அதிலும் இரண்டு வகைகள் இருந்தன. த்ரி சிப் அனலாக், த்ரி சிப் டிஜிட்டல் கேமராக்களும் அறிமுகமாயின. இதில் பிரைமரி கலர்கள் மூன்றும் தனித்தனி பைபர் வழியாக சென்றன. இதனால் சிறு வியாதிகளையும் கூட நன்றாக கண்டுபிடிக்க உதவியது. ஆனால் தற்பொழுது ஹைடெ பனிசன் த்ரி டி போன்ற நவீன கேமராக்கள் வந்துவிட்டன.

    இதனால் ஆரம்பத்திலேயே நோய்களைக் கண்டறியவும் அறுவை சிகிச்சை செய்யவும் முடிகிறது. இதில் ஹைடெபனி சன் த்ரிடி கேமராக்கள் கருவறையின் உட்பகுதியை பெரிதாக்கி காண்பிக்கிறது.

    இந்த கேமராவின் மறுபகுதி மெடிக்கல் மானிட்டருடன் இணைக்கப்படுகிறது. இதனால் கருவறையின் உட்பகுதியை சினிமாவில் பார்ப்பது போல் டிவியில் பார்க்க முடிகிறது. பழைய காலங்களில் அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள் மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால் நவீன முறையில் பக்கத்தில் நிற்கின்ற மற்ற டாக்டர்களும் பார்த்து அறுவை சிகிச்சை செய்கின்ற டாக்டருக்கு ஆலோசனையும் வழங்கலாம்.

    இதில் கருவறையின் உட் பகுதியை பெரிதாக்க கிளைசின் என்ற திரவம் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் மோனோ போலார், பைபோலார் போன்ற டையத்தெரிமிய சாதனங்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது.

    நன்மைகள்

    கருவறை உட்பகுதியில் உள்ள மையோமா கட்டிகள், கருவறைக் குழாய் அடைத்து குழந்தை இல்லாமல் இருப்பதை சரி செய்யவும், கருவறை (இரண்டாக பிரிக்கும் சுவர் (யூட்டரின் செப்டம்) இதனால் அடிக்கடி அபாஷன் ஆகும்). இந்த கருவறையை பிரிக்கும் சுவரை நவீன டையத்தெரிமின் மூலமாகவோ சிசர் மூலமாகவோ சரிசெய்ய முடிகிறது.

    எண்டோமெட்ரியல் பாலிப்பை அகற்றவும் கருவறையின் உட்பகுதியில் மறைந்துள்ள காப்பர் டி போன்ற கருத்தடை சாதனங்களை அகற்றவும் முடிகிறது. இந்த முறையில் எந்தவித வெளித்தழும்பும் ஏற்படுவதில்லை. கருவறை உட்பகுதியில் பையாப்சி கொண்ட சோதனைகளை செய்யவும் பயன்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையில் சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்திற்குள் வீடு திரும்பலாம்.

    சுசிலா மருத்துவமனை, பாவூர்சத்திரம்
    கோடை காலத்தில் (summer) எல்லாருக்குமே உடலில் வியர்வை வெளியேறிக்கொண்டே இருக்கும். அதன் விளைவாக துர்நாற்றம் ஏற்படும்.
    கோடை காலத்தில் தோல் பராமரிப்பு குறித்து கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் தேவ்ஆனந்த் கூறியதாவது:-

    கோடை வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது அவசியம். இந்த வெயிலில் முதலில் பாதிக்கப்படுவதும் நம்முடைய தோல்களே. இதை பராமரிப்பது மிக முக்கியம். இதற்கு முக்கியமாக தினமும் 2 முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

    பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும். கருப்பு நிற ஆடைகளை தவிர்க்க வேண்டும். வாசனை திரவியங்கள், பவுடர்களை தவிர்க்க வேண்டும். காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

    அப்படி செல்ல வேண்டுமானால் குடை, தொப்பி, ஹெல்மெட் போன்றவைகளை பயன்படுத்த வேண்டும். கோடை காலத்திற்கேற்ற உணவுகளான கீரைகள், இளநீர், நுங்கு, மோர் மற்றும் பழச்சாறு, நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தகுந்த சோப்பு மற்றும் ஷாம்புகளை உபயோகப்படுத்த வேண்டும். குறிப்பாக மதுபானங்களை தவிர்த்தல் நல்லது.

    இவ்வாறு டாக்டர் தேவ்ஆனந்த் கூறினார்.
    சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. இன்று சோளத்தில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஸ்வீட் காரன் - 1
    பொடியாக நறுக்கிய கேரட்  - 2 மேஜைக்கரண்டி
    துருவிய தேங்காய் - 2 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - 3/4 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    சிகப்பு மிளகாய் - 1
    கறிவேப்பிலை - 1 கொத்து
    பெருங்காயம் - 2 சிட்டிகை

    செய்முறை

    ஸ்வீட் கார்னை உரித்து, உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில், என்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் கேரட்டை சேர்த்து வதக்கவும்.

    பிறகு வேகவைத்த சோளத்தை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

    தண்ணீர் சுண்டியவுடன் துருவிய தேங்காய் சேர்த்து இறக்கவும்.

    சத்தான ஸ்வீட் காரன் சுண்டல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    15 மாதத்திற்கு பிறகும் குழந்தை நடக்க ஆரம்பிக்கவில்லை என்றால் மட்டுமே நீங்கள் கவலை கொள்ள வேண்டும். மருத்துவரை அணுகி என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
    நடக்க ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு வழிகளை பின்பற்றுவார்கள். சில நேரங்களில் மற்ற குழந்தைகளை பார்க்கும் போது நீங்கள் அவர்களோடு ஒப்பிட்டு வருத்தம் அடைவீர்கள். ஆனால் 15 மாதத்திற்கு பிறகும் குழந்தை நடக்க ஆரம்பிக்கவில்லை என்றால் மட்டுமே நீங்கள் கவலை கொள்ள வேண்டும். மருத்துவரை அணுகி என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    வாக்கரை தவிர்த்து விடுங்கள். உங்கள் குழந்தையின் இயல்பான, சீரான, நிலையான வளர்ச்சி தடைப்படும்.

    குழந்தைகள் நடை பயில்வதில் அவர்களின் எடை ஒரு காரணமாக இருக்கின்றது. குழந்தைகள் பருமனாக இருந்தால் சிறிது தாமதமாகலாம்.

    முதல் குழந்தையை விட இரண்டாவது குழந்தை வேகமான நடை பயில்கிறார்கள் என்று நம்பப்படுகின்றது. இதற்கு காரணம் உடன்பிறந்தவர்களின் ஊக்கத்தால் சீக்கிரமே நடை பயில்கிறார்கள்

    சில குழந்தைகள் நடக்க ஆரம்பித்த பிறகும், வேகமாக செல்ல தவழ்வார்கள். இது முற்றிகும் இயல்பானது. தங்களுக்கு பிடிமானம் கிடைக்கும் வரை இதை பின்பற்றுவார்கள் அதன் பிறகு எழுந்து வேகமாக நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

    குழந்தைகள் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களை நிறுத்தவே முடியாது. நிறுத்தவும் கூடாது. வீட்டில் அவர்களுக்கு பெரும்பாலான பொருட்களை எடுக்க முடியும். அதனால் குழந்தையின் செயலையும், இயக்கத்தையும் தடுக்காமல் வீட்டை அவர்களுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொடுப்பதே அவர்கள் வளர்ச்சி சிறப்பாக அமைய வழிவகுக்கும்.
    கொரோனா வழிகாட்டும் விதிமுறைகளை சரிவர பின்பற்றி வந்து, கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல், சிகிச்சை, பரிசோதனை ஆகியவற்றை கடைபிடித்து வந்தால், எல்லா இடங்களிலும் 3-வது அலை தாக்கம் இருக்காது, எங்கும் தாக்காமல் கூட போகலாம்.
    புதுடெல்லி :

    இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வீசிக்கொண்டிருக்கிறது. இரட்டை உருமாறிய கொரோனாவும் கண்டறியப்பட்டுள்ளது.

    கடந்த 2 மாதங்களாக தொற்றுப்பரவல் தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. முதல் அலையை விட இந்த 2-வது அலைதான் இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. முதல் அலையைத் தொடர்ந்து மக்களிடம் நிலவிய சாதாரண அணுகுமுறைதான் கொரோனா மீண்டும் தலையெடுக்க காரணமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். உருமாறிய கொரோனாவை சுட்டிக்காட்டுகிற ஆராய்ச்சியாளர்களும் உள்ளனர்.

    முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன், 3-வது அலை தவிர்க்க இயலாதது. புதிய அலைகளுக்கு தயாராக வேண்டியது அவசியம் என்று கடந்த வாரம் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்.

    2 நாட்களுக்கு பின்னர் இதுபற்றி அவர் பேசும்போது, “கொரோனா வழிகாட்டும் விதிமுறைகளை சரிவர பின்பற்றி வந்து, கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல், சிகிச்சை, பரிசோதனை ஆகியவற்றை கடைபிடித்து வந்தால், எல்லா இடங்களிலும் 3-வது அலை தாக்கம் இருக்காது, எங்கும் தாக்காமல் கூட போகலாம் ” என்றும் அவர் தெரிவித்தார்.

    கொரோனா 3-வது அலைத்தாக்கம், மாநிலங்களில், உள்ளூர் மட்டத்தில், நகரங்களில், மாவட்டங்களில் கொரோனா வழிகாட்டும் விதிமுறைகளை எந்தளவுக்கு வலுவாக அமல்படுத்தப்படுகிறது என்பதைப்பொறுத்துத்தான் அமையும் எனவும் குறிப்பிட்டார்.

    சில மாதங்களில் இயல்பாகவே பொதுமக்கள் நோய் எதிர்ப்புச்சக்தியை இழந்து விட்டாலோ, தடுப்பூசியால் பெற்ற எதிர்ப்புச்சக்தி மங்கத்தொடங்கினாலோ மீண்டும் வைரஸ் தாக்குகிறது, மக்கள் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் வைரஸ் தாக்கத்தை நிறுத்தும் என்று நிபுணர்கள்கூறுகின்றனர்.

    கொரோனா வைரஸ்

    டெல்லி மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவன இயக்குனர் டாக்டர் அனுராக் அகர்வால் கூறியதாவது:-

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய பாதிப்புகள் குறைந்தபோது, வைரஸ் இல்லாததுபோல தொடர்புகொள்ளத்தொடங்கி விட்டனர். நோய் எதிர்ப்புச்சக்தி குறையத்தொடங்கியது. கூட்டம் கூடினார்கள். முகக்கவசம் அணியவில்லை. வைரஸ் மீண்டும் தாக்குவதற்கான வாய்ப்பினை உருவாக்கி தந்தார்கள்.

    3-வது அலையை நாம் எதிர்பார்க்கிறபோது, அது எப்போது வரும் எவ்வளவு கடுமையானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனால் வரும் மாதங்களில் கொரோனா கால நடத்தைகளைப் பின்பற்றினால், அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசிபோட முடிந்தால், 3-வது அலை தாக்கம் குறைவானதாக இருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேசிய உயிரி மருத்துவ மரபியல் நிறுவனத்தின் இயக்குனர்டாக்டர் சவுமித்ரா தாஸ் கூறுகையில், எங்கள் கவலை என்னவென்றால், உருமாற்றம் மேலும் பரவுகிறதா, தீவிரமானதாக இருக்கிறதா என்பதுவும், தற்போதுள்ள மருந்துகளையும், தடுப்பூசிகளையும் பயனற்றவை ஆக்குகின்றனவா என்பதுதான். அப்படி இருந்தால் உருமாற்றம், கவலைக்குரிய ஒன்றாகத்தான்வகைப்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

    சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் அருண் சர்மா, “3 அடுக்கு முகக்கவசம், அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கூட்டத்தை தவிர்த்தல், ஆகியவை வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும். தடுப்பூசி மூலம் மக்களை காக்கிறோம். இதுதான் பரவல் சங்கிலியை உடைக்கும்” என்கிறார்.

    மேலும், கொரோனா பரவல் அதிரடி வேகத்தில் இருக்கிறது. எல்லா உருமாற்றத்தையும் அடையாளம் காண விஞ்ஞானிகளுக்கு போதிய அவகாசம் இல்லை. எனவே வைரஸ் பரவலை தடுப்பதில், வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றுவது முக்கியமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
    சர்வதேச அன்னையர் தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைவரும் தம்முடைய தாய்க்கு வாழ்த்தை கூறி விலை மதிக்க முடியாத வாழ்த்தை பெறலாம்.
    அம்மா என்றால் அன்பு, கருணை, இனிமை, தியாகம். அம்மா என்ற சொல்லை உச்சரிக்கும் போது அனைவருடைய உள்ளங்களும் உணர்ச்சி மிகுதியால் தழுதழுக்கின்றன. அன்னையின் அன்பு தனித்துவமானது. மற்ற எவரோடும் அன்னையின் அன்பை ஒப்பிட முடியாது. தாய்மையின் தன்னலமற்றத் தியாகத்தை கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

    அன்னையர் தினத்தை உலகம் கொண்டாடுவதற்கு முன்பே நமது முன்னோர்கள் நாட்டினையே 'தாய்நாடு என்றும், மொழியை தாய்மொழி என்றும், மாதா, பிதா, குரு, தெய்வம்' என்றும் 'தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை' என்ற முதுமொழிக்கு ஏற்ப கூறி தாயை பெருமைப்படுத்தி உள்ளனர். அன்னையின் சிறப்பை எடுத்துக் கூறவும், தாயை கொண்டாடுவதற்கு ஒரு நாள் மட்டும் போதாது.

    ‘ஒரு குழந்தைக்கு அதனுடைய தாயின் அன்பைவிட சிறந்த ஒன்று இந்த உலகில் கிடையாது. தாயின் அன்பு சட்டத்தை அறியாது, பரிதாபத்தை அறியாது. அந்த தாயின் அன்பு பாதையில் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை அடித்து நொறுக்கி அதன் அன்பு வழியில் தொடர்ந்து செல்லும்' என்று தாயின் அன்பைப் பற்றி பிரபல எழுத்தாளர் அசுதா கிறிஸ்டி கூறுகிறார்.

    அதனைப் போன்று ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் சர்வதேச அன்னையர் தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தங்களுடைய தாய்க்கு பரிசு பொருட்களை வாங்கி தந்து கடமைக்கு வாழ்த்துக்கள் கூறுவதைவிட்டு விட்டு, தாயிடம் தொடர்ந்து மனம் விட்டு பேசுவதுடன் அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று அவள் கருத்தையும் கேட்டு அவளையும் சகமனுஷியாக மதித்து, தாய் தான் குடும்பத்தின் ஆணி வேர் என்பதை உணர்ந்து நடந்து கொள்வதே தாய்க்கு நாம் அளிக்கும் சிறந்த அன்னையர் தின பரிசாக அமையும். நம்முடன் வாழும் நம் தாய்க்கு இதனை அளித்து விலை மதிப்பு மிக்க வாழ்த்தை பெறலாம்.
    பழங்களில் பலவகையான பழங்கள் இருக்கின்றன. அதில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பழம் என்றால் அது ஆரஞ்சு பழம் தான். ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு ஒரு பெயரும் உண்டு.
    ஆரஞ்சு பழத்தில் ப்ரோட்டீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது.

    ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது. ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

    ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

    ஆரோக்கியமான குழந்தை பிறப்பதில் ஆரஞ்சு பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. ஏனென்றால் ஆரஞ்சு பழத்தில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்து ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாக உருதுணையாக உள்ளது. இதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்கின்றன.

    ஆரஞ்சு பழத்தை அதிக அளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் ஏற்படுவது மிக குறைவு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் அதில் உள்ள சிட்ரிக் ஆசிட் எனும் அமிலமாகும். உடலில் ஏற்படும் அதிகப்படியான கொழுப்பினை கரைத்து வெளியேற்ற பெரிதும் பயன்படுகிறது.

    ஆரஞ்சு பழத்தின் மருத்துவ பயன்கள்

    * ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.
    * ஜீரண சக்த்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது.
    * ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் உடலில் புற்று நோயை உருவாக்கும் செல்களை அழித்து உடலை பாதுகாத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது.
    * உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவு சாப்பிடும் முன் ஆரஞ்சு பழத்தை ஜூஸாக குடித்து வருவது நல்லது.
    * ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தினமும் ஒரு பழம் சாப்பிடுவதால் பெண்களுக்கு 50% புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்.
    * ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
    * ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அமுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமல் பாதுக்கிறது.
    * முடி கொட்டுவது குறைந்து முடியின் வளர்ச்சியை அதிபடுத்துகிறது.
    * ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கும் சக்தி ஆரஞ்சு பழத்திற்கு உண்டு. இதில் உள்ள பொலேட் ஆண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது. விந்தணுக்களை ஆரோக்கியமாக மாற்றி மலட்டுத்தன்மை பிரச்னை ஏற்படாமல் தடுக்கிறது.
    * வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல ஈறுகளில் வீக்கம், சொத்தை பல், வாய் கிருமிகளை கட்டுப்படுத்தும்.
    * தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன் ஆரஞ்சு பழ சாறுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும்.
    பெண்களின் சரும பராமரிப்பு பொருட்களில் இடம் பிடித்திருக்கும் ரோஸ் வாட்டரை கோடை காலத்தில் தவறாமல் பயன்படுத்த வேண்டும். அதற்கான காரணங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    கோடை காலத்தில் சரும பிரச்சினைகள் தலைதூக்குவது தவிர்க்கமுடியாதது. ஏனெனில் நீர்ச்சத்துதான் சரும பராமரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கோடையில் நிலவும் வெப்ப தாக்கத்தின் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறையும்போது சருமமும் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக சிவத்தல், எரிச்சல், தடிப்புகள் போன்ற பிரச்சினைகளை சருமம் எதிர்கொள்ள நேரிடும்.

    இந்த பிரச்சினைக்கு ‘ரோஸ் வாட்டர்’ எனப்படும் ரோஜா நீர் தீர்வு தரும். ரோஜா இதழ்களை நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டர், பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. பெண்களின் சரும பராமரிப்பு பொருட்களில் இடம் பிடித்திருக்கும் ரோஸ் வாட்டரை கோடை காலத்தில் தவறாமல் பயன் படுத்த வேண்டும். அதற்கான காரணங்கள்:

    ரோஸ் வாட்டரில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் சருமத்தை பாதுகாக்கவும், நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு தண்ணீர் பருகுவது அவசியம் என்றாலும் சருமத்தின் உள் அடுக்குகளை நீரேற்றத்துடன் வைத் திருப்பதற்கு அது போதுமானதல்ல. ரோஸ் வாட்டர் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படும் தன்மை கொண்டது. அதனால் தினமும் மாய்ஸ்சரைசருடன் ரோஸ்வாட்டரையும் கலந்து சருமத்தில் தடலாம். அது சருமத்தில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுவதுடன் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் அளிக்கும்.

    ரோஸ் வாட்டர் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. மேலும் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியது. சரும எரிச்சல், தடிப்புகளை போக்கக்கூடியது. கண்கள் சிவத்தல், வீக்கம் அடைதல் போன்ற பிரச்சினைகளுக்கு ரோஸ் வாட்டர் நிவாரணம் தரும். காட்டன் பஞ்சுவில் ரோஸ் வாட்டரை முக்கி கண்களின் புருவம், அடிப் பகுதியில் தடவுவதன் மூலம் கண் சோர்வை போக்கலாம். வெண் படல அழற்சி, உலர்ந்த கண், கண்புரை போன்ற பிற கண் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ரோஸ் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது. ரோஸ் வாட்டரில் கிருமி நாசினி பண்புகளும் உள்ளன. இது தவிர பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    வெட்டு காயங்கள், வடுக்கள், தீக்காயங்கள் போன்ற பிற காயங் களுக்கு சிகிச்சை அளிக்கவும் ரோஸ் வாட்டர் உதவும். ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவுவதன் மூலம் சரும செல்கள் வலுப்பெறும். சரும திசுக்களை மீண்டும் உருவாக்கவும் ரோஸ் வாட்டர் உதவும். ரோஸ் வாட்டரின் வாசம் மன நிலையை மேம்படுத்த உதவும். நன்றாக தூங்கவும் உதவும். ஒப்பனையை நீக்கிய பிறகு ரோஸ் வாட்டரை உபயோகிக்கலாம். அது சருமத்தை குளிர்விக்க துணைபுரியும். சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசைத்தன்மையை கட்டுப்படுத்தி சருமத்தின் பி.எச். சமநிலையை பராமரிக்கவும் ரோஸ் வாட்டர் உதவும்.
    எதிர்பாராதவிதமாக துயரத்தை அனுபவிக்க நேரிடும்போது மனம் வேதனைக்குள்ளாகிவிடும். ஆனால் அது நீண்டகால சோகமாக பின் தொடர்ந்தால் உடல் நலனையும், மன நலனையும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.
    நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகக்கூடும். அவர்களிடம் சோகமும் குடிகொள்ளும். எப்போதாவது இதுபோன்ற நிலைமையை எதிர்கொண்டால் பரவாயில்லை. அடிக்கடி நடந்தால் அது கவலைக்குரிய விஷயம். எப்போதும் ஒருவரால் நேர்மறையான சிந்தனையுடன் இருக்க முடியாது. இன்பமும், துன்பமும் வாழ்வில் இரண்டற கலந்தது. எதிர்பாராதவிதமாக துயரத்தை அனுபவிக்க நேரிடும்போது மனம் வேதனைக்குள்ளாகிவிடும். ஆனால் அது நீண்டகால சோகமாக பின் தொடர்ந்தால் உடல் நலனையும், மன நலனையும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும். அதுபோலவே நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள்:

    சோகம்: அடிக்கடி சோகமாக இருப்பதாக உணர்ந்தால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். வேலையினால் ஏற்படும் மன அழுத்தம், தனிப்பட்ட பிரச்சினைகள், பணி இடத்தில் ஊக்கமின்மை, தூக்கமின்மை உள்ளிட்ட பாதிப்புகள் அதற்கு காரணமாக இருக்கலாம். அவற்றை சரி செய்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    இடைவெளி: வேலைக்கு இடையே சிறிது நேரம் ஓய்வு எடுப்பது, வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது சிக்கலான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு உதவும். குறிப்பாக விடுமுறை நாட்களில் மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு கொடுக்க முன் வர வேண்டும். அந்த சமயத்தில் வேலை பற்றிய சிந்தனைக்கு இடம் கொடுக்கக்கூடாது. வேலையை தவிர்த்து மனதுக்கு பிடித்தமான விஷயங்களில் கவனத்தை திசை திருப்ப வேண்டும். சமையல், நடனம், பயணம் என ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிட வேண்டும். அப்படி செய்து வந்தால் மீண்டும் வேலைக்கு திரும்பும்போது புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.

    கனவு: சோகத்தில் இருந்து மீள்வதற்கு சிறந்த வழி உற்சாகத்துடன் செயல்படுவதுதான். கனவுகள், இலக்குகளை எட்டிப்பிடிக்க ஊக்கமளிக்க வேண்டும். செய்யும் வேலையை நேசிக்க வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்ற வேண்டும். சிலர் செய்யும் வேலையை நேசிப்ப தில்லை. அது மன அமைதியையும், மகிழ்ச்சியையும் பறிகொடுக்க காரணமாகிவிடுகிறது. அடிக்கடி மனசோர்வுக்கு ஆளானால் அதில் இருந்து மீள்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

    சாதனை: வேலையில் ஏதேனும் எதிர்பாராத தவறு நடந்து மன உளைச்சலுக்கு ஆளானால் கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டு சாதித்த தருணங்களை பற்றி சிந்தியுங்கள். அது இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற உதவும். நல்ல விஷயங்களை பற்றி சிந்திப்பது தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். மன நிலையையும் மேம்படுத்த உதவும். தோல்வி அடைந்தால் துவண்டு போகாதீர்கள். தோல்வியும், கஷ்டங்களும் வாழ்வியலுடன் இணைந்தவை. தோல்வியில் இருந்து ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள முயலுங்கள். அது அடுத்த முறை சிறப்பாக செயலாற்ற வழிகாட்டும்.

    இலக்கு: ஏதாவதொரு இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி பயணிக்க வேண்டும். மனசோர்வுக்கு ஆளாகும்போதெல்லாம் இலக்கு பற்றி சிந்தித்து அதிலிருந்து மீள்வதற்கு முயல வேண்டும். நெருக்கமானவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். சிறந்த ஆலோசனைகள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை கொண்டு வர துணைபுரியும்.
    இது கொரோனா காலகட்டமாகவும் இருப்பதால், நோன்பு கால உணவின் மீது அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிவிட்டது.
    நோன்பு, இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்று சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உண்ணா ஒன்று நோன்பு இருக்கும் காலகட்டம் இது. தற்போதைய ரமலான் நோன்பு, கொரோனாவின் அசுரப்பிடியில் உலகம் சிக்கியிருக்கும் சூழலில் நடந்து கொண்டிருக்கிறது, நோன்பு காலத்தில் (சஹர்- இப்தார் வேளையில்) ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும், அத்துடன் இது கொரோனா காலகட்டமாகவும் இருப்பதால், நோன்பு கால உணவின் மீது அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிவிட்டது.

    நோன்புகால உணவுப் பட்டியல்..

    உடலுக்கு தேவையான வலிமையை மாவுச்சத்து உணவுகள் தருகின்றன. அரிசி, ஓட்ஸ், உருளைக்கிழங்கு, கோதுமை, மக்காச்சோளம், மரவள்ளி கிழங்கு போன்றவற்றில் பெருமளவு மாவுச்சத்து அடங்கியுள்ளது. பாலில் அரிசியை இட்டு வேக வைத்து செய்யப்படும் சுவையான ‘பிர்மி’ என்ற அரிசிக்களியில் மாவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. அதன் சுவையை கூட்டும் வகையில் பழங்கள் அல்லது பருப்பு வகைகளையும் அதில் சேர்த்துக்கொள்ளலாம்.

    உருளைக்கிழங்கில் கட்லெட், சிப்ஸ், ஆலூ கோபி, பட்டர் பன்னீர் மசாலா, உருளைக்கிழங்கு பொரியல், ஆலூ மட்டர் மசாலா உள்ளிட்ட சுவையான உணவு வகைகளை தயார் செய்து, கோதுமை ரொட்டி வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    ஓட்ஸை தண்ணீரிலோ அல்லது பாலிலோ வேகவைத்து சாப்பிடலாம். கொஞ்சம் காரமான உணவை விரும்பு பவர்கள் காய்கறிகள் சேர்த்து தயாரித்த ஓட்ஸ் கிச்சடியை உண்ணலாம்.

    காலை சஹர் வேளையில் உண்ண முளைகட்டிய பாசிப்பயறு ஆரோக்கியமான தேர்வாகும். சிவப்பு காராமணி, சுண்டல், பச்சை பட்டாணி போன்ற புரதச்சத்து மிகுந்த தானியங்களை சிறிது வெங்காயம், தக்காளி சேர்த்து சுண்டலாக எடுத்துக்கொள்ளலாம். அவற்றுடன் கொஞ்சம் மசாலா சேர்த்து நாக்கில் நீர் ஊறும் சிற்றுண்டியாகவும் செய்து சாப்பிடலாம்.

    உணவில் தயிர் சேர்த்துக்கொள்வது அவசியமானதாகும். ஏனென்றால், தயிர் உடலை குளிர்ச்சியாக வைத் திருப்பதுடன், அதில் நிறைந்துள்ள புரதம் மற்றும் கால்சியம் ஆகியவை ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்படவும் வைக்கும். அதாவது, குடலை ஆரோக்கியமாக இயங்கவைக்க தயிரில் உள்ள நல்ல நுண்ணியிரிகள் அவசியமானவையாகும்.

    உணவு வகைகளை பொரிப்பதைவிட, வேகவைத்து சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு உகந்தது. ஆலூ டிக்கி, கொழுக்கட்டை ஆகிய சுவையான உணவு வகைகளை ஆவியில் தயார்செய்யலாம்.

    நோன்பு காலத்தில் பகல் நேஇரத்தில் தண்ணீர் அருந்தாதது மற்றும் உணவு முறையில் மாற்றம் ஆகியவற்றால் ஒரு சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். அதை சமாளிக்கும் வகையில் சாப்பாட்டில் நார்ச்சத்து கொண்ட புழுங்கல் அரிசி, கேரட், முட்டைக்கோஸ் மற்றும் முழு தானிய வகைகளை சேர்த்துக்கொள்ளலாம். பெரும்பாலான பழங்களிலும் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. பொதுவாக, நார்ச்சத்து மலத்தின் அளவை கூடுதலாக்குகிறது. அதனால் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக, பெருங்குடல் மலத்தை வேகமாக வெளியேற்றி மலச்சிக்கலை தவிர்க்கச்செய்கிறது. மேலும், உணவு வகைகளை திரவ வடிவத்தில் எடுத்துக்கொள்வதும் நல்லது. அவை அரிசி, ஓட்ஸ், ராகி ஆகியவற்றால் செய்த கஞ்சியாகவோ அல்லது கூழாகவோ இருக்கலாம். அத்துடன், காய்கறி சூப் மற்றும் பழச்சாறு ஆகியவற்றையும் நிறைய சேர்த்துக்கொள்ளலாம். அதன் மூலம் குடல் ஆரோக்கியமாக செயல்பட ஏற்ற நீர்ச்சத்தும் கிடைக்கும்.

    உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் பழங்களிலும், காய்கறிகளிலும் அடங்கி உள்ளன. குறிப்பாக திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, தர்ப்பூசணி, தக்காளி, காலிபிளவர், வெள்ளரி ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் வைட்டமின்-சி நிறைய உள்ளது. அத்துடன், இவை உடலின் நீர்ச்சத்து குறைவதை தடுக்கவும் உதவுகின்றன.

    நோன்பு காலங்களில், உணவு மூலம் கிடைக்கப்பெற்ற கலோரி செலவழிந்த பின்னர் உடல் அதன் இயக்கத்துக்கு தேவையான சக்திக்கு கல்லீரல் மற்றும் தசை பகுதிகளில் மாவுச்சத்தாக சேர்ந்துள்ள கார்போஹைட்ரேட்டை எடுத்துக்கொள்ளும். உடல் இயக்கத்தில் முக்கியமான பங்காற்றும் தண்ணீர், மொத்த உடல் எடையில் பாதி அளவில் இருக்கிறது.

    கோடை காலம் நீண்ட பகல் பொழுது கொண்டதாக இருப்பதால், உடலின் நீர்ச்சத்து குறையாமல் காக்க தண்ணீர் அவசியமானது. அதனால், பழங்கள், காய்கறிகள், தயிர், சூப், கூட்டு வகை ஆகியவற்றுடன் தண்ணீரில் குளுக்கோஸ் கலந்தும் பருகலாம். பழச்சாறு, பழக்கலவை போன்றவையும் நல்ல தேர்வாக இருக்கும். மாமிச உணவு போன்ற சக்தியை அளிக்கும் சோயா பீன்ஸ், பால் பொருட்கள் மற்றும் முட்டை ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    இந்த தருணத்தில் உப்பு அதிகம் சேர்த்த உணவு வகைகளை தவிர்ப்பதே நல்லது. காரணம் அவை தண்ணீர் தாகத்தை அதிகரிக்க செய்வதுடன், உடலில் உள்ள நீர்ச்சத்தை குறைத்து விடக்கூடிய சிக்கலும் உள்ளது.

    சஹர் நேர உணவு வகைகள்:

    ஊற வைத்த பாதாம், முந்திரி, நிலக்கடலை. தானியங்கள் சேர்த்த சாப்பாடு, ஓட்ஸ், கோதுமை, ராகி ஆகியவற்றால் செய்த கஞ்சி. உப்பு குறைவாக இடப்பட்ட காய்கறி கூட்டு அல்லது பொரியல். பழச்சாறு அல்லது பழங்கள்.

    இப்தார் நேர உணவு வகைகள்:

    பேரீட்சை, உலர் திராட்சை அல்லது பழ வகைகள். மோர், பழச்சாறு, சூப் அல்லது பால் பொருட்கள். கொழுக்கட்டை, ஆலூ டிக்கி போன்ற வேக வைத்த உணவுகள். அரிசி, கோதுமை, ஓட்ஸ் ஆகியவற்றில் காய்கறி சேர்த்த பிரியாணி, புலாவ், கிச்சடி அல்லது ரொட்டி. விருப்பமான இறைச்சி மற்றும் அவித்த முட்டைகள்.

    தகவல்:- பொன்னா ஜி ராமன், கோட்டயம்
    கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவது மிகவும் அவசியமானது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு போடப்படும் தடுப்பூசி குழந்தை பிறந்த சில நாட்களுக்கு நோய்கள் எதுவும் வராமல் காக்க உதவும்.
    கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவது மிகவும் அவசியமானது. கர்ப்ப கால தடுப்பூசி பல தொற்றுகளில் இருந்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றும். கர்ப்ப காலத்தில் தாய்மார்களிடம் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கருவில் வளரும் குழந்தைக்கு போகும். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு போடப்படும் தடுப்பூசி குழந்தை பிறந்த சில நாட்களுக்கு நோய்கள் எதுவும் வராமல் காக்க உதவும். குழந்தை பிறந்தவுடன் மிகவும் மென்மையாக இருப்பதால் உடனே எல்லா தடுப்பூசிகளும் போட முடியாது.

    கர்ப்பம் தரிக்கும் முன்பு போடப்படும் தடுப்பூசி:

    கர்ப்பம் தரிப்பதற்கு முன் ஒரு சில நோய்களுக்கான தடுப்பூசிகளை பெண்கள் போட்டுக் கொள்வது மிகவும் அவசியம்.

    1. ரூபெல்லா ஒரு வைரஸ் நோய். ரூபெல்லா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடிப்பு மற்றும் காய்ச்சல் ஏற்படும். பொதுவாக இது சாதாரணமான காய்ச்சல். ஆனால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டால், கருவிலிருக்கும் குழந்தையை  பாதிக்கும். கருக்கலைவு மற்றும் குழந்தை முன்னதாக பிறப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கும். ரூபெல்லா நோய் எதிர்ப்பு சக்தியை இரத்தப் பரிசோதனை  மூலமாக மதிப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால் ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும். ரூபெல்லா தடுப்பூசி போட்ட 1 மாதத்திற்கு கருத்தரிக்கக்கூடாது.

    2. கர்ப்பிணி பெண்ணுக்கு சிக்கன்பாக்ஸ் தொற்று ஏற்பட்டால் அது கருவில் இருக்கும் குழந்தையை மிகவும் பாதிக்கும். குழந்தைப் பருவத்தில் ஒருபோதும் சிக்கன் பாக்ஸ் வராத மற்றும் அதற்கு தடுப்பூசி போடாத பெண்கள் சிக்கன் பாக்ஸ் தடுப்பூசி குறித்து தங்கள் மருத்துவரிடம் கண்டிப்பாக பேச வேண்டும்.

    3. ஹெபடைடிஸ் பி - இந்த வைரஸ் நோய் ஒரு தாயிடமிருந்து தனது குழந்தைக்கு செல்லக்கூடும். கர்ப்பமாவது குறித்து திட்டமிடுபவர்கள் ஹெபடைடிஸ் பிக்கு தடுப்பூசி போடுவது குறித்து தங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்:

    பொதுவாக, செயலிழந்த வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்களைக் கொண்ட தடுப்பூசிகளை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கலாம். நேரடி வைரஸ்கள் கொண்ட தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை.
     
    கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்:

    1. டெட்டனஸ் டோக்ஸாய்டு (டி.டி) - இந்த தடுப்பூசி தாய் மற்றும் குழந்தையை டெட்டனஸுக்கு எதிராக பாதுகாக்கிறது மற்றும் கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம், பொதுவாக இது நான்காவது மாதத்திற்குப் பிறகு இரண்டு முறை வழங்கப்படுகிறது.

    2. TdaP- டெட்டனஸ் டோக்ஸாய்டு, குறைக்கப்பட்ட டிப்தீரியா டோக்ஸாய்டு மற்றும் அசெல்லுலர் பெர்டுசிஸ் தடுப்பூசி. இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் ஒவ்வொரு கர்ப்ப காலத்திலும் பரிந்துரைக்கப்படுகிறது, இது கர்ப்பத்தின் 27 முதல் 36 வாரங்களுக்கு இடையில் வழங்கப்படுகிறது. மூன்று தீவிர நோய்களிலிருந்து தாய் மற்றும் குழந்தை இருவரையும் இது பாதுகாக்கிறது. குழந்தை பிறந்த 6 வாரத்தில் டிப்தீரியா மற்றும் ஹூப்பிங் இருமல் (பெர்டுசிஸ்) தடுப்பூசி போடப்படும். எனவே முதல் 6 வாரங்களில் குழந்தையைப் பாதுகாக்க இந்த தடுப்பூசி முக்கியமானது.

    3. காய்ச்சல் தடுப்பூசி / ஷாட் - செயலற்ற காய்ச்சல் வைரஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பாதுகாப்பானது. இது கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கப்படலாம், ஆனால் பொதுவாக காய்ச்சல் காலத்தில்  நவம்பர் முதல் மார்ச் வரை கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
     
    கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய தடுப்பூசிகள்:

    கர்ப்ப காலத்தில் சிக்கன் பாக்ஸ் (வெரிசெல்லா), எம்.எம்.ஆர் தடுப்பூசி (தட்டம்மை மற்றும் ரூபெல்லா), இன்ஃப்ளூயன்ஸா நேசல் ஸ்ப்ரே போன்ற தடுப்பூசிகள் தவிர்க்கப்பட வேண்டும்.
     
    பாதுகாப்பு மற்றும் பக்க விளைவுகள்:

    கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பிற்காக உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன. தடுப்பூசிக்கும் கருச்சிதைவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

    தடுப்பூசிகளின் பக்க விளைவுகள்:

    மற்ற மருந்துகளைப் போலவே தடுப்பூசிகளும் வலி, சிவத்தல், தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கம், லேசான காய்ச்சல், தசை வலி, சோர்வு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பக்க விளைவுகளில் பெரும்பாலானவை லேசானவை. அவை தானாகவே போய்விடும்.
     
    பயணம் மற்றும் கர்ப்பம்:

    ஒரு கர்ப்பிணிப் பெண் வெளிநாடுகளுக்குச் சென்றாலோ அல்லது நோய்த்தொற்றுகள் அடிக்கடி ஏற்படும் பகுதிக்குச் சென்றாலோ, ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற கூடுதல் தடுப்பூசிகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். நோய்த்தொற்று ஆபத்து அதிகம் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
    ×