என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவ சில விஷயங்களில் ரகசியம் காப்பது அவசியம் என்று உளவியல் மற்றும் வாழ்வியல் நெறிமுறைகள் வலியுறுத்தி இருக்கின்றன. அவற்றில் முக்கியமாக 5 விஷயங்களை பார்க்கலாம்.
    வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவ சில விஷயங்களில் ரகசியம் காப்பது அவசியம் என்று உளவியல் மற்றும் வாழ்வியல் நெறிமுறைகள் வலியுறுத்தி இருக்கின்றன. அவற்றில் முக்கியமாக 5 விஷயங்களை பார்க்கலாம்.

    அடைய வேண்டிய லட்சியம்

    எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் சொல்பவர்கள் எப்போதுமே எல்லா விஷயங்களிலும் வெற்றி பெற இயலாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். குறிப்பாக ஒருவரது லட்சியத்தை ஒரு சிலரிடம் சொல்வது வெற்றிக்கான வழியல்ல என்பது வாழ்வியல் அனுபவம் பெற்றவர்கள் கருத்தாகும். நமது லட்சியம் யாரிடமும் வெளிப்படுத்தப்படாமல் இருக்கும் போது தான் அதை அடைவதறகான மன உறுதி ஏற்படுகிறது என்று உளவியலாளர்கள் சொல்வது சிந்தனைக்குரியது

    பொருளாதார நிலைமை

    ஒருவரது சம்பளத்தை வெளியில் சொல்லக்கூடாது என்பதை அனைவரும் அறிவார்கள். தற்போதைய பொருளாதரா சூழலில் கணவன் மனைவி ஆகிய இருவரும்சம்பாதிக்கும் நிலையில் அவர்களை சந்திக்கும் உறவினர்களின் முதல் கேள்வியே இருவரும் எவ்வளவு சம்பளம் வாங்கிறீர்கள் என்பதாக இருக்கும். இந்த விஷயத்தில் மவுனமாக இருந்து விடுவதே சிறந்தது. உண்மையை சொல்லும் நிலையில் நல்ல விளைவுகள் ஏற்படுவதை விட உறவுக்கு பாதகமான சூழலே ஏற்படக்கூடும். பணம் என்ற விஷயம் உறவினர்களையும் நண்பர்களையும் பகைவர்களாக மாற்றும் சக்தி பெற்றது என்பதை மனதில் கொள்வது நல்லது.

    தனிப்பட்ட விஷயங்கள்

    கணவன் மனைவி இருவருக்கிடையிலான உறவு இரு நண்பர்களுக்கிடையிலான நட்பு, ஒருவருக்கு நடந்த சங்கடமான விஷயம், அலுவலக நட்பு ஆகிய விஷயங்களில் ஒருவர் மவுனமாகவும், அமைதியாகவும் இருப்பதே நல்லது. அதன் மூலம் பல எதிர்கால சங்கடங்கள் தவிக்கப்படும். சில விஷயங்களில் ஆலோசனை பெற விரும்பினால் அனுபவமும், அக்கறையும்  உள்ள நெருக்கமான உறவுகள் அல்லது நண்பர்களை மட்டுமே அணுக வேண்டும். அலுவலகத்தில் அலுவலக பணிகள் பற்றி மட்டும் பேசுவது நல்லது.

    உடல் ஆரோக்கியம்

    உளவியல் அல்லது உடலியல் ரீதியாக ஒருவருக்கு ஏற்பட்டுள்ள ஆரோக்கிய குறைபாடுகளை பொதுவெளியில் தெரிவிப்பதுஅவசியமற்றது. அதன் காரணமாக சுயமரியாதை பாதிக்கப்படக்கூடும் என்பதுடன் அனைவரும் பரிதாபமாக பார்க்கக்கூடிய நிலையும் ஏற்படலாம். மேலும் ஒரு சிலர் தற்காலிக மருத்துவ ஆலோசகர்களாக மாற அவர்களுக்கு தெரிந்த வைத்திய முறைகளை கடைப்பிடிக்க சொல்லி வலியுறுத்துவார்கள். அதனால் தக்க மருத்துவரை தவிர எல்லோரிடமும் உடல் சார்ந்த குறைகளையோ அல்லது ஆரோக்கிய பாதிப்புகளையோ வெளிப்படுத்துவது கூடாது.

    செய்த தர்ம காரியங்கள்

    பண்பாட்டின் அடிப்படையில் ஒருவர் செய்த நல்ல காரியங்களை வெளியில் சொல்லக்கூடாது. வலது கையில் கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்ற சொல்வழக்கு நம்முடைய தமிழ் மரபில் உண்டு. அந்த அளவுக்கு தர்ம காரியங்களில் ரகசியம் காக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான மதிப்பு குறைவதுடன், எதிர்மறையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேரிடலாம்.
    இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினமான மே 12-ந்தேதியை உலக செவிலியர் தினமாக கொண்டாட உலக செவிலியர் அமைப்பு முடிவு செய்து, கொண்டாடி வருகிறது.
    மருத்துவ பணிகளில் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள். செவிலியர்கள் செய்யும் பணி எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அது அவர்களுக்கு ஒருபோதும் ஒரு சுமையாக எப்போதும் இருந்ததில்லை. உலக செவிலியர் அமைப்பு, 1965-ம் ஆண்டில் இருந்து பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகரிய உணர்த்தும் விதமாக சர்வதேச செவிலியர் தினத்தை கொண்டாடி வருகிறது. 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினமான மே 12-ந்தேதியை உலக செவிலியர் தினமாக கொண்டாட உலக செவிலியர் அமைப்பு முடிவு செய்து, கொண்டாடி வருகிறது.

    உலகத்தையே தனது கோர பிடிக்குள் வைத்துள்ள கொரோனா பெருந்தொற்று காலமான இந்த காலக்கட்டத்தில், நம் சமூகத்திற்கு செவிலியர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஆளான ஒருவரின் ரத்த சொந்தங்களே அவர்களது அருகே சென்று நின்று பார்க்க அஞ்சுகிற இந்த காலக்கட்டத்தில் தனது உயிரை துச்சம் என நினைத்து முன்களத்தில் நின்று போராடி வருபவர்களில் செவிலியர்களின் பங்கு அளப்பரியதாகும். இதை நாம் யாரும் மறுக்கவும் முடியாது, மறந்து விடவும் கூடாது.

    முன்களத்தில் நின்று போராடும் செவிலியர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி தங்களது இன்னுயிரை இழந்து இருக்கிறார்கள். அவ்வாறு இருந்தும், செவிலியர்கள் தங்களது பணியை செவ்வனே செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால் தான் அவர்களை நமது மருத்துவத்தின் உயிர் நாடி என்கிறோம். கொரோனா சிறப்பு பணிகளை சுழற்சி முறைகளில் செவிலியர் முடித்து கொண்டு வீட்டுக்கு போனாலும், தனிமைப்படுத்துதல் போன்ற காரணங்களால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரிடம் சரியாக நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கக் கூடிய கடினமான சூழ்நிலையை தான் இன்றைய காலக்கட்டதில் அவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். கொரோனா சிறப்பு பணியால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக செவிலியர்கள் பலர் தங்களது குழந்தையை கூட கொஞ்ச முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    மருத்துவத்தின் இதய துடிப்பாக இருக்கும், இவர்களது தூய சேவையில், நம்பிக்கையில் இயங்குகிறது உலகம். ஆகையால் இந்த உலக செவிலியர் தின நன்னாளில் நாம் அனைவரும் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்வோம்.
    கர்ப்பகாலத்தில் பெண்கள் கோடைக்காலத்தை எதிர்கொள்ளும்போது வழக்கத்தை விட அதிக சோர்வை உணர்வார்கள். இதை எதிர்கொள்ள உதவும் சிறந்த கோடை பழங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
    கர்ப்பிணிக்கு இயல்பாகவே தலை சுற்றலும் சோர்வும் இருக்கும். அது கோடைக்காலத்தில் இரண்டு மடங்காக பிரதிபலிக்கும். இலேசான தலை சுற்றலும் வீக்கமும் உண்டாகும். கோடைக்காலத்தில் ஏராளமான சுவையான பழங்கள் நம்மிடம் உள்ளது. இது கடுமையான வெப்பத்திலிருந்து காப்பதோடு கர்ப்பகால அறிகுறிகளின் தீவிரத்தை தடுக்கவும் உதவும். அப்படி என்ன மாதிரியான பழங்களை எடுத்துகொள்ள வேண்டும். அது எந்த மாதிரியான அறிகுறிகளை போக்குகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

    ​தர்பூசணி

    கோடையில் இயற்கை தந்த வரம். இது நீரிழப்புக்கு எதிரானது. கோடை நேர உணவில் உடலில் நீர் இழப்பு குறையாமல் இருக்க அதிலும் கர்ப்பகால வாந்தியால் உடலில் நீரிழப்பு அதிகம் எதிர்கொள்பவர்களுக்கு இது சிறந்த பழம். கர்ப்பகாலத்தில் நீரிழப்பு தடுக்க தர்பூசணி பழங்கள் சிறப்பாக உதவும். இது கர்ப்பம் முழுவதும் தேவையான நீர்ச்சத்தை கொடுக்க கூடியது. கர்ப்பகால சோர்வு மற்றும் தலைவலி அறிகுறியை குறைக்க செய்கிறது. மேலும் கருப்பை சுற்றி இருக்கும் அம்னோடிக் திரவத்தின் அளவை தக்கவைக்க செய்கிறது.

    ஆப்பிள்

    சோர்வுக்கு எதிராக வைத்திருக்க உதவும் சிறந்த பழங்களில் ஆப்பிளும் ஒன்று. கோடைக்காலங்களில் சோர்வு இயல்பாகவே இருக்கும். இதனோடு கர்ப்பகாலமும் இணையும் போது அதிக சோர்வை எதிர்கொள்வீர்கள் இதை எதிர்கொள்ள உடலுக்கு வேண்டிய ஆற்றலை ஆப்பிள் அளிக்கும். சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட ஆப்பிள் இயற்கையான ஆற்றல் ஊக்கத்தை அளிக்க செய்யும். தினசரி ஆப்பிளை சிற்றுண்டியாக எடுத்துகொள்வதன் மூலம் கூடுதல் நன்மைகளை பெறமுடியும்.

    ​ஆப்ரிகாட் மற்றும் ஆரஞ்சு

    ஊட்டச்சத்துகள் தேவை என்னும் போது நீங்கள் உங்கள் கவனத்தை இந்த இரண்டு பழங்களின் மீது திருப்பலாம். ஆப்ரிகாட் என்னும் பாதாமி பழம் இரும்புச்சத்து நிறைவாக கொண்டிருக்ககூடியவை. இது இரத்த சோகைக்கு எதிராக போராடக்கூடியவை. கர்ப்பகாலத்தில் அதிக அளவு இரத்தம் தேவைப்படும் நிலையில் குழந்தைக்கு வேண்டிய இரும்புச்சத்து தாயிடம் இல்லாத போது அது அம்மாவின் உறுப்புகளிலிருந்து உறிஞ்சிகொள்கிறது. இந்த இரும்புச்சத்து ஆப்ரிகாட் பழத்தில் உள்ளது. இரும்பை உறிஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் சி ஆனது ஆரஞ்சு பழத்தில் இருப்பதால் இதையும் சேர்த்து எடுப்பது நல்லது.

    எலுமிச்சை

    கர்ப்பகாலத்தில் காலை நோய் என்னும் மசக்கைக்கு காரணமான அறிகுறியை விரட்ட எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சை சாறை நீரில் பிழிந்து குடிப்பதன் மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம். காலை நோய் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். குமட்டல், தலைசுற்றல் உணர்வு அதிகமாக இருந்தால் நீங்கள் எலுமிச்சையை நுகர்வதன் மூலம் அறிகுறிகள் குறையக்கூடும். இந்த வாசனை உங்கள் வயிற்று பிரட்டலை குறைக்க செய்யும்.

    ​வாழைப்பழங்கள்

    கர்ப்பகாலத்தில் உடலில் ஆங்காங்கே தசைபிடிப்புகள் உண்டாகலாம். குறிப்பாக கால் பிடிப்புகள் இருக்கும். நீண்ட நேரம் நின்று கொண்டே இருப்பது, அதிக நேரம் உட்கார்ந்திருப்பது என எல்லாமே உங்கள் கால்களில் பிடிப்பை உண்டாக்க கூடும். வாழைப்பழம் பொட்டாசியம் உள்ளடக்கம் கொண்டவை இது கால் பிடிப்புகளை எளிதாக்க உதவுகிறது. தினசரி ஒரு வாழைப்பழத்தை சேருங்கள். உங்களுக்கு நீரிழிவு கட்டுக்குள் இருந்தால் இது பிரச்சனையில்லை. இல்லையெனில் மருத்துவரின் அறிவுரையோடு உணவில் சேருங்கள்.

    ​பெர்ரி பழங்கள்

    கர்ப்பகாலத்தில் பெர்ரி மலச்சிக்கலுக்கு எதிராக அல்லது அதை தடுக்க உதவக்கூடும். நீங்கள் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி என உங்களுக்கு பிடித்தவற்றை சேர்க்கலாம். அதிக நார்ச்சத்துக்களை உள்ளடக்கியுள்ள இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் வராமல் தவிர்க்கலாம். இது செரிமான பிரச்சனைகளையும் தடுக்க செய்யும். பெர்ரி பழங்களை சாறாக்கி குடிக்கலாம்.

    ​செர்ரி பழங்கள்

    கர்ப்பகால தூக்கமின்மை பிரச்சனை என்பது பொதுவானது. அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அசெளகரியமான படுக்கை, ஹார்மோன் போன்றவற்றுக்கு இடையில் தூக்கமின்மையை எதிர்கொள்ள செர்ரி பழங்கள் உதவக்கூடும். செர்ரிகளில் பல முக்கியமான வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கர்ப்பகாலத்தில் சாப்பிட வேண்டிய பழங்களில் இதுவும் ஒன்று. இதில் உள்ள மெலடோனின் தூக்கமின்மையை எதிர்கொள்ள உதவும்.

    ​அவகேடோ

    அவகேடோ பசி உணர்வை உண்டாக்காத நிறைவான உணவு. கர்ப்பகாலத்தில் அடிக்கடி பசி உணர்வை எதிர்கொள்ளும் போது அதை எதிர்கொள்ள அவகேடோ சிறப்பாக உதவக்கூடும்.
    கோடை வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும் உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இந்த வகையில் இந்த பானம் உடலுக்கு குளுமை தரும். செய்வதும் மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள்:

    கெட்டித் தயிர் - 1 கப்
    தண்ணீர் - 1 கப்
    கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
    மோர் மிளகாய் - 1
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/4 டீஸ்பூன்

    அரைப்பதற்கு...

    பச்சை மிளகாய் - 1/2
    கறிவேப்பிலை - 3 இலை
    இஞ்சி - 1/4 இன்ச்

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரை ஒரு பௌலில் போட்டு, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

    அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும்.

    கடைந்து வைத்துள்ள மோரில் அரைத்த விழுது, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி கலந்து பரிமாறினால், மசாலா மோர் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காதணி, கழுத்தணி என்று ஆரம்பித்து தற்போது நகங்களில் கூட நகைகள் அணிவிக்கப்படுகின்றன. நகங்களில் ஓவியங்கள் வரைந்து துளையிட்டு சலங்கைகள் அணிவது போன்றவை தான் ட்ரெண்டில் இருந்தன.
    பெண்களையும் நகைகளையும் பிரிக்கவே முடியாது. பண்டைய காலம் முதல் இன்றைய நவநாகரிக காலம் வரை பெண்களின் ரசனைக்கேற்ப நகைகள் பல்வேறு விதங்களில் மாற்றம் பெற்று வந்திருக்கின்றன.

    காதணி, கழுத்தணி என்று ஆரம்பித்து தற்போது நகங்களில் கூட நகைகள் அணிவிக்கப்படுகின்றன. நகங்களில் ஓவியங்கள் வரைந்து துளையிட்டு சலங்கைகள் அணிவது போன்றவை தான் ட்ரெண்டில் இருந்தன. தற்போது அவற்றுக்கெல்லம் ஒருபடி மேலே போய் நகங்களை அலங்கரிப்பதற்கென நகைகள் வந்து விட்டன. அவை தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் சாதாராண உலோகங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. சில நூறு ரூபாய்களில் ஆரம்பித்து பல லட்சங்கள் வரை அவற்றின் விலை உள்ளது.

    முழுமையாக நகத்தை மறைக்கும் கவசம் போலவும், விரலையும் நகத்தையும் இணைக்கும் சங்கிலி போலவும், நகங்களில் ஒட்டிக்கொள்ளும் வகையிலும் விதவிதமாக அவை கிடைக்கின்றன. சந்தையில் புதிதாக வந்திருக்கும் நகங்களுக்கான நகைகளை கல்லூரி மாணவிகளும், மணப்பெண்களும் விரும்பி அணிகின்றனர்.
    நாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு நமக்கு நாமே செய்து கொள்ளும் தொண்டாகும். எனவே சமுதாய தொண்டுகளில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.
    நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும்.

    இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோருக்கு உதவுதல் அதாவது வீட்டு வேலைகளை செய்தல், கிராமங்கள் என்றால் ஓய்வு வேளையில் வயல்களுக்கு சென்று தந்தைக்கு உதவுதல் போன்றவைகளில் இன்றைய மாணவர்கள் ஈடுபடுதல் அவசியம்.

    மனித நேயம் வளர மாணவர்கள்தான் சீரிய முறையில் பாடுபடவேண்டும். சமூக தொண்டுகளில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும். சமூக தொண்டுகளில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தால் நிச்சயமாக ஒவ்வொரு கிராமமும் சிறந்து விளங்கும். தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்களின் ஆலோசனைப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடவேண்டும். மூட பழக்க வழக்கங்களை ஒழிக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சமுதாய தொண்டாற்றினால் வெற்றி பெறுவது உறுதி. கிராமங்களில் உள்ள முட்புதர்களை வெட்டி அழிக்க வேண்டும்.

    குளம், குட்டைகளை தூரிவாரியும் ஆழப்படுத்தலாம். இதன் மூலம் மழை பெய்யும் போது மழை நீரை சேமிக்க முடியும். வயதானவர்கள், கண் பார்வையற்றவர்கள் சாலையை கடக்க முற்படும்போது நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு சேமிப்பின் அவசியம் குறித்து எடுத்து கூறவேண்டும். விவசாயிகளிடம் அவர்களுக்கு அறியாத வேளாண் தொழில்நுட்பங்களை விளக்கி கூறி பயிர் விளைச்சலுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். தங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்குவதாலும், குப்பைகளை சாலையில் கொட்டுவதாலும் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    மாணவர்கள் பொழுதுபோக்கு நேரத்தை வீணடிக்காமல் சமுதாய பணிகள் செய்வதில் ஈடுபட்டால் தேவையில்லாத வீண்பிரச்சினைகளில் சிக்காமல் நல்வழியில் செல்வதற்கு வழிவகுக்கும். இன்னும் சில மாணவர்கள் தங்கள் படிக்கும் நேரம் போக மீதி நேரத்தில் செல்போனில் இணையதளம் மூலம் கழிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை. மாறாக சமூக விரோத செயல்களில் ஈடுபட மாணவர்களை தூண்டுகிறது. இதனால் அவர்கள் வாழ்க்கை சீர்கேடாகிறது. இளம் வயதில் படித்து முன்னேறாமல் தவறான எண்ணங்கள் தோன்றி திசை மாறி செல்கின்றனர்.

    எனவே மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் சிறந்து விளங்குவதற்கு அறிவு செல்வத்தை தேடி செல்லவேண்டும். இளம் பருவத்தில் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுங்கள். நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையான புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிவதில் ஆர்வம் காட்ட மாணவர்கள் முயல வேண்டும். நாட்டுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று மாணவர்கள் எண்ணி செயலாற்ற வேண்டும். ஏனென்றர்ல் மாணவர்களை நம்பித்தான் வருங்காலம் இருக்கிறது.

    இதனை ஒரு போதும் மறக்கலாகாது. நாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு நமக்கு நாமே செய்து கொள்ளும் தொண்டாகும். ஏனென்றால் நாம் இல்லாமல் நாடு இல்லை. சிறு துளி பெரு வெள்ளம் போல் நாம் ஒவ்வொரு வரும் செய்யும் சிறு தொண்டு பெரு தொண்டாய் நாட்டை வளப் படுத்தும். எனவே சமுதாய தொண்டுகளில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.
    ஆண்களை விட பெண்கள் தான் சிக்கமாக செயல்படுவதில் கெட்டிக்காரார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அது ஏன் என்று தெரியுமா..? காரணங்கள் இதோ..
    தேவைக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கும் சிக்கனம் என்பது நம்மை தரும் விஷயமாகும். இன்றைய சூழலில் சிக்கனம் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஆண்களை விட பெண்கள் தான் சிக்கமாக செயல்படுவதில் கெட்டிக்காரார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அது ஏன் என்று தெரியுமா..? காரணங்கள் இதோ..

    வீட்டில் எவ்வளவு பணப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் பெண்கள் அஞ்சறைப்பெட்டியில்  சேமித்துவைத்திருக்கும் பணத்திற்கு மட்டும் எப்போதும் தட்டுப்பாடு ஏற்படாது.

    ஆண்களில் பலரும் ஆடம்பரத்திற்காக வரவை மீறிய செலவு செய்வதுண்டு. ஆனால் பெண்கள் அனைவருமே இந்த பொருள் இப்போது நமக்கு தேவை தானா? என்பதை ஒன்றுக்கு பலமுறை யோசித்தே செலவிடுவார்கள்.

    தங்கத்தை கைகளிலும், கழுத்திலும் ஆபரணங்களகாக அணிந்து எதிர்கால முதலீடாக சேமித்து வைக்கும் திறன் கொண்டவர்கள்.

    மளிகை பொருட்கள் தொடங்கி மருந்துபொருட்கள் வரை அன்றாட செலவுகளை குறித்து வைத்துக்கொண்டு அதற்கு மேல் செலவு செய்வதை தவிர்ப்பதுடன் தேவையற்ற செலவுகளை இனம் கண்டு அவற்றை தவிர்த்தும் விடுவார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இருவருடைய சம்பளத்தையும் குடும்ப செலவுகளுக்காக பயன்படுத்தி விடாமல் பட்ஜெட் போட்டு செலவு போக மீதி பணத்தை சேமித்து வைக்கும் குணம் கொண்டவர்கள் பெண்கள்.

    பெருபாலான அப்பாக்கள், குழந்தைகள் கேட்பதை சற்றும் யோசிக்காமல் வாங்கி கொடுப்பது வழக்கம். ஆனால் அதிக அளவு செலவில் பொம்மை வாங்கி தருவதை அம்மாக்கள் அனுமதிப்பதில்லை என்பதை குழந்தைகள் அறிவார்கள்.

    கையில் உள்ள பணத்தில் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு என ஆண்கள் செலவு செய்வது வழக்கம். பெண்கள் மீதப்படுத்திய பணத்தை பத்திரமாக சேமித்து வைப்பார்கள்.

    கடன் பெற்றாவது விரும்பிய பொருளை வாங்க வேண்டும் எனற மனநிலை பெண்களுக்கு இருப்பதில்லை. பெண்களுக்கு கடன் என்றாலே அலர்ஜி. அதனால் திட்டமிட்டே பொருட்களை வாங்குவார்கள்.

    சமையலிலும் பெண்கள் சிக்கனத்தை பின்பற்றுவார்கள். பருவ காலத்துக்கு ஏற்ப விலை குறைவாக உள்ள காய்கறிகள், பழங்களை வாங்குவது மீதமான உணவுப்பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்துவது எனற வழிகளில் சிக்கனத்தை கடைப்பிடிப்பார்கள்.

    வேலைக்கு செல்லும் பெண்கள் போனஸ் போன்ற திடீர் வருமானம் கிடைக்கும் நிலையில் அவற்றை செலவு செய்யாமல் சேமிப்பாக வைத்து கொள்வார்கள்.

    ஷாப்பிங் செல்லும் பெண்கள் அதிகமாக செலவு செய்வார்கள் என்று பொதுவான கருத்து உண்டு. ஆனால் ஷாப்பிங் செய்வதில் கூட பெண்கள் சிக்கனமாக இருப்பார்கள். மலிவான விலை என்பதற்காக தரம் குறைவான ஆடைகளை வாங்கினால் குறுகிய காலத்தில் மீண்டும் வேறு ஆடைகளை வாங்க வேண்டியதிருக்கும். அதனால் பொறுமையாக தரமான ஆடைகளை கையை கடிக்காத விலையில் தேர்வு செய்வார்கள்.
    பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அசைவ உணவுகளை உண்ணலாமா? கூடாதா? என்ற சந்தேகம் ஏற்படலாம். ஆனால் அசைவ உணவுகளில் உள்ள சத்துக்களும் கரு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    அசைவ உணவுகளை கர்ப்ப காலத்தில் உண்பது குழந்தைக்கும் தாய்க்கும் கேடு விளைவிக்கும் என்று சிலர் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் இது முற்றிலும் தவறானது என்றும், அசைவ உணவுகளை கர்ப்பகாலத்தில் சேர்த்துக்கொள்வதில் எந்தவித தீங்கும் ஏற்படாது என்றும் கூறுகின்றனர்.

    கர்ப்ப காலத்தில் அசைவ உணவுகளை உண்ண தயங்குவதற்கு காரணம், அசைவ உணவுகளில் அதிகமாக உள்ள பொட்டாசியம் மற்றும் கொழுப்பு ஆகும். இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் அசைவ உணவில் இருந்து வெளிவரும் எண்ணெய் தினசரி உணவுகளில் கர்ப்பிணிப் பெண்கள் சேர்த்துக்கொள்ள ஏற்றதல்ல.

    நீங்கள் கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் உங்கள் உணவில் அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இல்லாவிட்டால் நீங்கள் அசைவ உணவுகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். கோழி, மீன், முட்டை போன்றவற்றை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    உணவுகளை உட்கொள்வதன் மூலம் கர்ப்பிணி தாயின் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கிடைக்கிறது என்றும், மேலும் தாயின் மூலம் கருவிற்கு ஆரோக்கிய வளர்ச்சி கிடைப்பதில் இந்த சத்துக்கள் பங்களிக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதிகமான அசைவ உணவுகளின் நுகர்வு கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு ஏற்றதல்ல. இதனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல் நலக் குறைபாடு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

    கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் உண்ண கூடிய அசைவ உணவுகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியலில் உள்ள அசைவ உணவுகளை அளவாக உட்கொள்ள வேண்டும்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல்கள் கர்ப்பிணி பெண்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் கருத்துக்கள் மூலம் சேகரிக்கப் பட்டவை ஆகும். ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும். எனவே கர்ப்பிணிப் பெண்கள் எந்த மாதிரியான அசைவ உணவுகளை விரும்புகிறார்கள் என்பதை ஆய்வில் கண்டுபிடித்து அதன் படி கீழே குறிப்பிட்டுள்ள பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    ​சிக்கன்

    கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உட்கொள்ளக் கூடிய அசைவ உணவுகளில் சிக்கன் இடம்பெறுகிறது. ஆனால் அதிகமாக காரம் உள்ள சிக்கன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். மிதமான காரம் உள்ள சிக்கன் உணவுகளை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளலாம்.

    ​மட்டன்

    கர்ப்ப காலத்தில் உண்ண ஏற்ற உணவு மட்டன் ஆகும். இந்த மட்டனில் புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. மற்ற இறைச்சிகளை காட்டிலும் கர்ப்ப காலத்தில் உள்ள கூடிய ஒரு ஆரோக்கியமான இறைச்சியாக மட்டன் உள்ளது.

    ​மாட்டிறைச்சி

    மாட்டிறைச்சியை கர்ப்பகாலத்தி பெண்கள் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். மாட்டிறைச்சியில் அதிகம் கொழுப்பு இருப்பதன் காரணமாக உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். குறைந்த காரம் மற்றும் மசாலா சேர்த்த மாட்டிறைச்சி உணவுகளை கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    ​வேகவைத்த முட்டை

    முட்டையின் வெள்ளைக்கருவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது கரு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் கரு மற்றும் தாயின் ஆரோக்கியத்தில் முட்டையின் வெள்ளைக்கரு பெரிதும் உதவுகிறது.

    ​அசைவ சூப்

    கர்ப்ப காலத்தில் அசைவ உணவில் சமைக்கப்பட்ட சூப்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். சூப்களில் ஆக்சிஜனேற்றிகள் நிரம்பியுள்ளதால் இது ஜீரணமாக எளிதாக உள்ளது. கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய ஆரோக்கிய உணவு பட்டியலில் இது இடம் பெறுகிறது.

    ​தவிர்க்க வேண்டிய அசைவ உணவுகள்

    கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமற்ற மற்றும் எடை அதிகம் ஏற்படக்கூடிய அசைவ உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். இதனால் ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பு, அதிக கொழுப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இதை தவிர்ப்பது நல்லது. மேலும் குறைந்த அளவில் அசைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். பின்வரும் அசைவ உணவுகளை முடிந்தவரை கர்ப்பகாலத்தில் தவிர்த்துவிடுங்கள்.

    பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

    நன்றாக சமைக்கப்பட்ட அசைவ உணவுகள் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமானது. அளவான உணவு என்றுமே ஆரோக்கியத்தை தரும் என்பதால் அசைவ உணவுகளை கர்ப்ப காலத்தில் அளவாக உட்கொள்வது நினைவில் கொள்ளுங்கள்.
    கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து உடல் ஆரோக்கியத்தை காக்கவும், வியர்வை துர்நாற்றத்தை தவிர்க்கவும் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதற்கான குறிப்புகளை பார்க்கலாம்.
    கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க உடலின் ஏர்கண்டிஷன் ஆப்பாக வியர்வை செயல்படுகிறது. வியர்வைக்கு வாசம் இல்லை. ஆனால் சருமத்தின் மீது படிந்து காற்றில் உலரும் போது பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் வாசனை துர்நாற்றமாக உணரப்படுகிறது. அதை தடுக்க விலை உயர்ந்த பர்ஃபியூம்கள் பயன்படுத்தினாலும் சிறிது நேரத்தில் மீண்டும் பழைய வாசனை உடலிலிருந்து வெளிப்படுவதை தவிர்க்க இயலாது.

    பெரும்பாலான நேரம் குளிர் சாதன அறையில் இருப்பவர்களுக்கு வியர்வை வெளியேறாத காரணத்தால் உடல் உபாதைகள் உருவாக்கக்கூடும். அதே சமயம் அதிகப்படியாக வியர்வை வெளியேறுவதால் துர்நாற்றம் ஏற்படும். இந்த நிலையில் ஆரோக்கியத்தை காக்கவும், துர்நாற்றத்தை தவிர்க்கவும் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதற்கான குறிப்புகளை பார்க்கலாம்.

    அக்குள் தூய்மை அவசியம்

    தினமும் இருமுறை குளிக்கலாம். வாசனை சோப்புகளை தவிர்த்து கிருமிகளை நீக்கும் சோப்பு வகைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம். குளித்தவுடன் அக்குளை நன்றாக துடைத்த பின்னர் ஆடை  அணிய வேண்டும். மாதம் இருமுறை அல்லது கட்டாயம் ஒரு முறை அக்குளில் வளர்ந்த முடிகளை அகற்றும் பழக்கம் அவசியம். இறுக்கமான ஆடைகளை அணியாமல் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம்.

    வேப்பிலை

    கிருமிகளை விரட்டி அடிக்க உதவும் வேப்பிலையை கொதிநீரில் போட்டு அந்த நீரை குளிக்கும் நீரில் கலந்து கொள்ளலாம். தர்பூசணி போன்றவற்றை உட்கொண்டாலும் நீர்ச்சத்து அதிகரித்து வியர்வையை கட்டுப்படுத்தும்.

    படுக்கைக்கு செல்லும் முன்

    சந்தனத்தை நீர் விட்டு குழைத்து தினமும் இரவு நேரத்தில் அக்குளில் தடவலாம். சந்தனப்பொடியை பன்னீரில் குழைத்தும் அக்குளில் பூசிக்கொளள்லாம். இரவு குளிக்கும் நீரில் எலுமிச்சை சாறு கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் வராது.

    நார்ச்சத்து உணவுகள்

    கீரைகள், ஆரஞ்சுப்பழம், அன்னாசிப்பழம் ஆகியவற்றை சாப்பிட்டால் அவற்றில் உள்ள நார்ச்சத்து காரணமாக வியர்வை வெளியேற்றம் குறையும். உடலில் அதிக வியர்வை சுரக்கும் பகுதிகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி, பவுடர் பூசிக்கொள்ளலாம். நீரில் கிருமி நாசிகள் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் விலகிவிடும்.
    உணவுகளை வேக வைத்து சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் அழியாது. அந்த வகையில் இன்று ஸ்டீம்டு லெமன் ஃபிஷ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உங்களுக்கு பிடித்த மீன் துண்டுகள் - 6
    மிளகு - ¼ டீஸ்பூன்
    பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பூண்டு விழுது - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - இரண்டு டீஸ்பூன்
    வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
    கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை


    மீன் துண்டுகளை சுத்தம் செய்து, அதனுடன் சிறிது உப்பு பூண்டு பேஸ்ட், மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.

    பின்னர் அதை ஒரு குக்கரில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். விசில் போட வேண்டாம்.

    மசாலா தடவிய மீன் துண்டுகளை ஸ்டீம் செய்யவும்.

    6 முதல் 8 நிமிடங்கள் வரை வைத்து பின்னர் இறக்கவும்.

    இதன் மேல் கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்தால் சுவையான ஸ்டீம் லெமன் ஃபிஷ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொருத்தமான ஆடைகள் நமது தன்னம்பிக்கையை மேலும் அதிகப்படுத்துகின்றன. அந்த வகையில் சற்றே உயரம் குறைந்த பெண்கள் அணிவதற்கு ஏற்ற ட்ரெண்டி உடைகளை பற்றி ஒரு சிறிய தொகுப்பு உங்களுக்காக...
    ஆள் பாதிஆடை பாதிஎன்பதற்கேற்ப ஒருவரின் தோற்றத்தை மட்டுமின்றி ஆளுமையையும் அவர் அணியும் ஆடைகள் நிர்ணயிக்கின்றன. பொருத்தமான ஆடைகள் நமது தன்னம்பிக்கையை மேலும் அதிகப்படுத்துகின்றன என்பது உளவியல் ரீதியாக அறிப்பட்ட உண்மை. அந்த வகையில் சற்றே உயரம் குறைந்த பெண்கள் அணிவதற்கு ஏற்ற ட்ரெண்டி உடைகளை பற்றி ஒரு சிறிய தொகுப்பு உங்களுக்காக...

    * நீண்ட குர்தாவுடன் கணுக்கால் வரை உயரமுள்ள பேண்ட் அணியும் போது உங்கள் கால்கள் சற்றே நீளமாக தெரியும்.

    * கருப்பு மற்றும் அடர் நிற புடவைகள், சுடிதார்கள் உயரம் குறைந்தவர்களை ஒல்லியானவர்களாகவும், உயரமானவர்களாகவும் காட்டும்.

    * புடவையை பொறுத்தவரை செங்குத்துக்கோடுகள் போட்ட புடவைகள் உங்களை உயரமாக காட்டும்.

    * பாலஸ்ஸோ எனப்படும் பேண்ட்டோடு கூடிய நீளமான குர்த்தாக்கள் உங்களை உயரமானவர்களாக காட்டும்.

    * நீளம் குறைந்த குர்தியுடன் கூடிய சல்வாரும், உயரம் குறைவான பெண்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
    குழந்தைகள் கேட்கிறார்களே என்று ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாகத் தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும்.
    தற்போது நிறைய மாணவர்கள் அதிக உடல் எடையுடனும் ரத்த அழுத்தத்துடனும் இருக்கிறார்கள் என்று எச்சரிக்கை செய்கிறார்கள், மருத்துவர்கள். பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவம் எய்தி விடுகிறார்கள். சிலருக்கு ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் சிக்கல், திருமணத்துக்குப் பிறகும் அவர்களை விடாமல் துரத்துகிறது.

    குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பருமனான பிறகு அவற்றை ஒரேயடியாகத் தவிர்த்துவிடுவது, இதுதான் பல குடும்பங்களிலும் நடந்து வருகிறது. அதுவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், குழந்தைகள் மீது செலுத்துகிற ஆதிக்கம் எல்லை கடந்தது. அவற்றில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் நாக்குக்கு இனிமையே தவிர, உடலுக்கு நல்லதல்ல.

    குழந்தைகள் கேட்கிறார்களே என்று ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாகத் தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும். வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது வேகவைத்த காய்கறிகளையும் உணவுகளையும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பெரியவர்களும் இப்படித்தான் சாப்பிட வேண்டும். குழந்தைப் பருவம் முதலே காய்கறி, கீரையை சாப்பிடுவதை பழக்கி விட்டால், வளர்ந்த பிறகும் அவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    இப்போதெல்லாம் தெருவில் இறங்கி விளையாடுகிற குழந்தைகளை பார்க்கவே முடிவதில்லை. கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என உட்கார்ந்த நிலையிலேயே விளையாடப் பழகிவிட்டார்கள். அதை தவிர்த்துவிட்டு குழந்தைகளை குறைந்தது முக்கால் மணி நேரமாவது, அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடப் பழக்க வேண்டும். இதனால் உடல் தசைகள் வலுப்பெறுவதுடன், உடம்பில் தேவையில்லாமல் கொழுப்பு சேர்வதும் குறையும். முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படும். நம் உணவுப்பழக்கம் சீராக இருந்தாலே எந்தச் சிரமமும் இல்லாமல் நலமுடன் வாழலாம்.
    ×