search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெயில் காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்
    X
    வெயில் காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்

    வெயில் காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்

    கர்ப்பகாலத்தில் பெண்கள் கோடைக்காலத்தை எதிர்கொள்ளும்போது வழக்கத்தை விட அதிக சோர்வை உணர்வார்கள். இதை எதிர்கொள்ள உதவும் சிறந்த கோடை பழங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
    கர்ப்பிணிக்கு இயல்பாகவே தலை சுற்றலும் சோர்வும் இருக்கும். அது கோடைக்காலத்தில் இரண்டு மடங்காக பிரதிபலிக்கும். இலேசான தலை சுற்றலும் வீக்கமும் உண்டாகும். கோடைக்காலத்தில் ஏராளமான சுவையான பழங்கள் நம்மிடம் உள்ளது. இது கடுமையான வெப்பத்திலிருந்து காப்பதோடு கர்ப்பகால அறிகுறிகளின் தீவிரத்தை தடுக்கவும் உதவும். அப்படி என்ன மாதிரியான பழங்களை எடுத்துகொள்ள வேண்டும். அது எந்த மாதிரியான அறிகுறிகளை போக்குகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

    ​தர்பூசணி

    கோடையில் இயற்கை தந்த வரம். இது நீரிழப்புக்கு எதிரானது. கோடை நேர உணவில் உடலில் நீர் இழப்பு குறையாமல் இருக்க அதிலும் கர்ப்பகால வாந்தியால் உடலில் நீரிழப்பு அதிகம் எதிர்கொள்பவர்களுக்கு இது சிறந்த பழம். கர்ப்பகாலத்தில் நீரிழப்பு தடுக்க தர்பூசணி பழங்கள் சிறப்பாக உதவும். இது கர்ப்பம் முழுவதும் தேவையான நீர்ச்சத்தை கொடுக்க கூடியது. கர்ப்பகால சோர்வு மற்றும் தலைவலி அறிகுறியை குறைக்க செய்கிறது. மேலும் கருப்பை சுற்றி இருக்கும் அம்னோடிக் திரவத்தின் அளவை தக்கவைக்க செய்கிறது.

    ஆப்பிள்

    சோர்வுக்கு எதிராக வைத்திருக்க உதவும் சிறந்த பழங்களில் ஆப்பிளும் ஒன்று. கோடைக்காலங்களில் சோர்வு இயல்பாகவே இருக்கும். இதனோடு கர்ப்பகாலமும் இணையும் போது அதிக சோர்வை எதிர்கொள்வீர்கள் இதை எதிர்கொள்ள உடலுக்கு வேண்டிய ஆற்றலை ஆப்பிள் அளிக்கும். சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட ஆப்பிள் இயற்கையான ஆற்றல் ஊக்கத்தை அளிக்க செய்யும். தினசரி ஆப்பிளை சிற்றுண்டியாக எடுத்துகொள்வதன் மூலம் கூடுதல் நன்மைகளை பெறமுடியும்.

    ​ஆப்ரிகாட் மற்றும் ஆரஞ்சு

    ஊட்டச்சத்துகள் தேவை என்னும் போது நீங்கள் உங்கள் கவனத்தை இந்த இரண்டு பழங்களின் மீது திருப்பலாம். ஆப்ரிகாட் என்னும் பாதாமி பழம் இரும்புச்சத்து நிறைவாக கொண்டிருக்ககூடியவை. இது இரத்த சோகைக்கு எதிராக போராடக்கூடியவை. கர்ப்பகாலத்தில் அதிக அளவு இரத்தம் தேவைப்படும் நிலையில் குழந்தைக்கு வேண்டிய இரும்புச்சத்து தாயிடம் இல்லாத போது அது அம்மாவின் உறுப்புகளிலிருந்து உறிஞ்சிகொள்கிறது. இந்த இரும்புச்சத்து ஆப்ரிகாட் பழத்தில் உள்ளது. இரும்பை உறிஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் சி ஆனது ஆரஞ்சு பழத்தில் இருப்பதால் இதையும் சேர்த்து எடுப்பது நல்லது.

    எலுமிச்சை

    கர்ப்பகாலத்தில் காலை நோய் என்னும் மசக்கைக்கு காரணமான அறிகுறியை விரட்ட எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சை சாறை நீரில் பிழிந்து குடிப்பதன் மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம். காலை நோய் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். குமட்டல், தலைசுற்றல் உணர்வு அதிகமாக இருந்தால் நீங்கள் எலுமிச்சையை நுகர்வதன் மூலம் அறிகுறிகள் குறையக்கூடும். இந்த வாசனை உங்கள் வயிற்று பிரட்டலை குறைக்க செய்யும்.

    ​வாழைப்பழங்கள்

    கர்ப்பகாலத்தில் உடலில் ஆங்காங்கே தசைபிடிப்புகள் உண்டாகலாம். குறிப்பாக கால் பிடிப்புகள் இருக்கும். நீண்ட நேரம் நின்று கொண்டே இருப்பது, அதிக நேரம் உட்கார்ந்திருப்பது என எல்லாமே உங்கள் கால்களில் பிடிப்பை உண்டாக்க கூடும். வாழைப்பழம் பொட்டாசியம் உள்ளடக்கம் கொண்டவை இது கால் பிடிப்புகளை எளிதாக்க உதவுகிறது. தினசரி ஒரு வாழைப்பழத்தை சேருங்கள். உங்களுக்கு நீரிழிவு கட்டுக்குள் இருந்தால் இது பிரச்சனையில்லை. இல்லையெனில் மருத்துவரின் அறிவுரையோடு உணவில் சேருங்கள்.

    ​பெர்ரி பழங்கள்

    கர்ப்பகாலத்தில் பெர்ரி மலச்சிக்கலுக்கு எதிராக அல்லது அதை தடுக்க உதவக்கூடும். நீங்கள் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி என உங்களுக்கு பிடித்தவற்றை சேர்க்கலாம். அதிக நார்ச்சத்துக்களை உள்ளடக்கியுள்ள இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் வராமல் தவிர்க்கலாம். இது செரிமான பிரச்சனைகளையும் தடுக்க செய்யும். பெர்ரி பழங்களை சாறாக்கி குடிக்கலாம்.

    ​செர்ரி பழங்கள்

    கர்ப்பகால தூக்கமின்மை பிரச்சனை என்பது பொதுவானது. அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அசெளகரியமான படுக்கை, ஹார்மோன் போன்றவற்றுக்கு இடையில் தூக்கமின்மையை எதிர்கொள்ள செர்ரி பழங்கள் உதவக்கூடும். செர்ரிகளில் பல முக்கியமான வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கர்ப்பகாலத்தில் சாப்பிட வேண்டிய பழங்களில் இதுவும் ஒன்று. இதில் உள்ள மெலடோனின் தூக்கமின்மையை எதிர்கொள்ள உதவும்.

    ​அவகேடோ

    அவகேடோ பசி உணர்வை உண்டாக்காத நிறைவான உணவு. கர்ப்பகாலத்தில் அடிக்கடி பசி உணர்வை எதிர்கொள்ளும் போது அதை எதிர்கொள்ள அவகேடோ சிறப்பாக உதவக்கூடும்.
    Next Story
    ×