என் மலர்
ஆரோக்கியம்
40 வயதில் உணவே மருந்து என்ற கருத்திற்கு ஏற்ப கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கம் குறித்து ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.
பெண்களை பொறுத்தவரை 40 வயதை ரெண்டுங்கெட்டான் வயது என்று சொல்வார்கள். மனதளவில் இளமையாக உணர்ந்தாலும் உடலளவில் தளர்வை சந்திக்க தொடங்கும் இந்த கால கட்டத்தில் டயட் என்ற பெயரில் பலரும் வழக்கமான உணவுபழக்கதை மாற்றியமைத்து உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க முயற்சிக்கிறார்கள். அதனால் தேவையான ஊட்டச்சத்து உடலுக்கு கிடைப்பதில்லை. 40 வயதில உணவே மருந்து என்ற கருத்திற்கு ஏற்ப கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கம் குறித்து ஆயுர்வேத மருத்துவர் பிரீத்தா நிலா தரும் ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.
வேக வைத்து உணவு வகைகளாக இட்லி இடியாப்பம், ஆம்லெம்ட, கீரை சூப், வெஜிடபிள் சாலட், தயிர் பச்சடி ஆகியவற்றை காலையில் சாப்பிடலாம்.
உச்சி வெயிலில் உட்கொள்ளும் உணவு வகைகளில் நெய் சேர்த்து கொள்ளலாம். காய்கறிகள் கொண்ட அவியல், கூட்டு ஆகியவற்றுடன் சிக்கன் உணவு வகைகளையும் சாப்பிடலாம்.
இரவு 7 அல்லது 7.30 மணிக்குள் உணவை சாப்பிடுவது நல்லது. பின்னர் பசி எடுத்தால் பால் அல்லது கொய்யா போன்ற பழங்கள், அடை, சாலட் போன்றவற்றை சாப்பிடலாம்.
எப்போதும் நன்றாக பசி எடுத்த பின்னர் சாப்பிடுவதே சிறப்பு. சுவையாக உள்ளது என்பதற்காக அதிகமாகவோ, தேவையற்ற சிற்றுண்டிகளையோ சாப்பிடக்கூடாது.
குறிப்பிட்ட வயதுக்கு மேல் பலருக்கு கை மற்றும் காலில் வலி ஏற்பட்டு நடப்பதற்கே சிரமப்படுவார்கள். அதற்கு உடலில் கால்சியம் சத்து குறைவதே காரணம். அதனால் அன்றாட உணவில் தயிர், பால் பொருட்கள், கேழ்வரகு, எள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். கீரை, கேரட், நாட்டுக்கோழி இறைச்சி ஆகியவற்றை சாப்பிடலாம். உணவிற்கு பின்னர் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி, பாக்கு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.
காய்கறிகள், முட்டை, மீன், பருப்பு வகைகள், முழு தானியங்கள் ஆகிறயவற்றை வேக வைத்து உண்ண வேண்டும்.
கிரீம் வகைளை பயன்படுத்துவதை விட உணவில் பழங்களை சேர்த்து கொள்ளலாம். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதும் நல்லதே. உயிர்ச்சத்து நிறைந்த தேங்காய், பப்பாளி, தக்காளி, அன்னாசி, ஆரஞ்சி, போன்றவற்றை உண்பதால் சருமத்தில் பளபளப்பு ஏற்படும். தினமும் ஒருமுறை கிரீன் டீ அருந்தலாம்.
மாலை நேரங்களில் எள்ளுருண்டை, சுண்டல், கடலை உருண்டை, உளுந்து வடை ஆகியவற்றை சாப்பிடலாம். இரும்பு சத்து குறைபாட்டை அகற்ற தினமும் முருங்கை கீரை சாப்பிடலாம். செரிமான கோளாறுகளை போக்க முருங்கை இலை சூப் பருகலாம்.

இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் கேன்சரையும் கட்டுப்படுத்துகிறது.
தேவையான பொருள்கள்:-
காலிஃப்ளவர் -250 கிராம்
வெங்காயம் -1
பூண்டு - 2
கிராம்பு - 2
கருப்பு மிளகு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பிரியாணி இலை -1
மில்லி - சிறிதளவு
தைம் இலைகள் - 2
ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
வேர்க்கடலை -10 கிராம்
செய்முறை:
வெங்காயம், காலிஃப்ளவர், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும், அதில் ஆலிவ் எண்ணெயைச் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும், பிரியாணி இலை சேர்க்கவும்.
ஒரு நிமிடம் கழித்து, வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இப்போது, தைம் இலையை சேர்க்கவும்.
அடுத்து கடாயில் காலிஃப்ளவர் பூக்களைச் சேர்த்து, வேக வைக்கவும்.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, அடுப்பை அணைத்து, இந்த கலவையிலிருந்து பிரியாணி இலைகள் மற்றும் தைம் இலைகளை அகற்றி மீதமுள்ள கலவையை ஒரு பிளெண்டரில் போட்டு, உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து கலவையை நன்றாக பேஸ்டில் அரைக்கவும்.
இப்போது அரைத்த கலவையை கடாயில் எடுத்துக் கொள்ளுங்கள்.
சிறிது பால் மற்றும் வேர்க்கடலையைச் சேர்த்து, கலவையை சிறிது திக்கான பதம் வரும் வரை கிளறவும்.

பத்தே நிமிடத்தில் சுவையான காலிஃப்ளவர் சூப் தயார்..
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்களே சமையல் எரிவாயுவை சிக்கனமாக செலவிட எளிய வழிமுறைகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி எவ்வாறு சமையல் எரிவாயுவை சிக்கனமாக செலவிடலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
- கியாஸ் ஸ்டவ், சமையல் செய்யும் பாத்திரங்கள் போன்றவைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். பாத்திரங்களின் அடியில் இருக்கும் கரியும், பர்னரில் இருக்கும் அழுக்கும் கியாஸ் செலவை அதிகரிக்கும்.
- எப்போதும் தரம் உயர்ந்த ஸ்டவ்வை வாங்குங்கள். பர்னர், கியாஸ் பைப், ரெகுலேட்டர் போன்றவைகள் வழியாக மிகக்குறைந்த அளவில் கியாஸ் லீக் ஆக வாய்ப்பிருக்கிறது. அதனை பரிசோதனை செய்யுங்கள்.
- ஸ்டவ்வில் தீ நீலநிறத்துடனோ, நிறமற்றதாகவோ எரியவேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் எரிந்தால், ஏதோ தடைகள் இருப்பதாக அர்த்தம். எண்ணெய், அழுக்கு, தண்ணீர், கறை ஏதாவது பர்னரில் தடையை ஏற்படுத்தியிருந்தால்தான் எரியும் தீயின் நிறம் மாறும்.
- வாரத்தில் ஒரு நாள் பர்னரை சுத்தப்படுத்தவேண்டியது அவசியம். கொதிக்கும்போது ஸ்டவ்வில் உணவுப் பொருட்கள் விழுந்தால், சமையல் முடிந்ததும் அதை சுத்தம் செய்துவிடவேண்டும்.
- எளிதாக சூடாகி, விரைவாக சமையலை முடிப்பதற்கு உதவும் பாத்திரங்களை கியாஸ் ஸ்டவ்வில் பயன்படுத்தவேண்டும். காப்பர் பிளேட்டிங் கொண்டவைகளும், அடிப்பாகம் அதிகம் விரியாதவைகளும் விரைவாக சமையலை முடிக்க வகைசெய்யும். சமையல் பாத்திரங்களின் உள்ளேயோ, வெளியேயோ கீறலோ, வளைவோ இருந்தால் கியாஸ் செலவு அதிகமாகும். அதனால் சேதமடைந்த பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தவேண்டாம்.
- காப்பர் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் வேகமாக சூடாகும். அதுபோல் சூடு அனைத்து பகுதிகளுக்கும் சீராக பரவவும் செய்யும். ஒருமுறை சூடாகிவிட்டால் அந்த சூடு அதிக நேரம் நிலைத்து நிற்கவும் செய்யும். அத்தகைய பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்துவது அவசியம்.
- சமையல் செய்யும் பாத்திரத்தை கழுவி, துடைத்த பின்பு அடுப்பில் வைத்தால் போதும். துடைக்காவிட்டால் பாத்திரத்தில் தண்ணீர் ஒட்டியிருக்கும். அது சூடாகி, ஆவியாகவும் கியாஸ் செலவாகும்.
- லைட்டரை கையில் எடுத்துவைத்துக்கொண்டு ஸ்டவ்வில் கியாசை திறந்தால்போதும். கியாசை திறந்துவைத்துக்கொண்டு லைட்டரையோ, தீப்பெட்டியையோ தேடிக்கொண்டிருந்தால் கியாஸ் வீணாகும். நாபை திறந்தாலே தீ எரியும் `செல்ப் இக்னிஷன் ஸ்டவ்'வை பயன்படுத்துவதும் நல்லது.
- சமையலுக்கு தேவையான அனைத்தையும் தயாராக்கி கைக்கு அருகில் வைத்துவிட்டு சமையலை தொடங்குங்கள். சமையலை ஆரம்பித்துவிட்டு இடையே வெங்காயம் நறுக்கவும், கறிவேப்பிலை கிள்ளவும் செல்லாதீர்கள். தேவையில்லாமல் ஸ்டவ்வை எரியவிட்டால் கியாஸ் வீணாகிக் கொண்டிருக்கும். இடையில் வேறு வேலைகள் செய்யவேண்டியிருந்தால், சிறிது நேரத்திற்கு கியாசை ஆப் செய்துவிடுங்கள்.
- சமையலுக்கு சிறிய பர்னரை உபயோகித்தால், பெரிய பர்னரைவிட பத்து சதவீத கியாஸ் மிச்சமாகும். பர்னரின் அளவுக்கு தகுந்த பாத்திரங்களை சமையலுக்கு பயன் படுத்தவேண்டும். தீ, பாத்திரத்தின் அடிப்பகுதியில் முழுவதும் பரவி எரியவேண்டும். அடிப்பாகம் குறுகிய பாத்திரமாக இருந்தால், தீயின் அளவை குறைக்கவேண்டும். குறைக்காமல் `புள் பிளேம்' கொடுத்தால் ஓரங்களிலும் தீ எரிந்து, கியாஸ் வீணாகும். கொஞ்சமாக சமைக்கவேண்டும் என்றால் சிறிய பாத்திரம் போதுமானது.
- உணவுப் பொருள் கொதிக்கத் தொடங்கியதும், பிளேமை மீடியத்திற்கோ, சிம்மிற்கோ மாற்றிவிட்டு பாத்திரத்தை மூடிவைத்திடவேண்டும். அந்த குறைந்த அளவு தீயே உணவு நன்றாக வேகுவதற்கு போதுமானது. இப்படி செய்தால் 25 சதவீதம் அளவுக்கு கியாஸ் மிச்சமாகும்.
- குழம்பு வகைகளில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் சேர்க்கவேண்டாம். அதிகமாக தண்ணீர் சேர்த்தால் அது வற்றுவதற்கு அதிக நேரமாகும். அதனால் கியாஸ் வீணாகும்.
- பிரஷர் குக்கரின் பயன்பாடு எரிவாயு செலவைக் குறைக்கும். அதோடு சமையல் செய்யும் நேரத்தின் அளவையும் குறைத்துவிடும். சாதாரண பாத்திரத்தில் பயறு வேகுவதற்கு தேவையான கியாசைவிட, பிரஷர் குக்கரில் வேகவைத்தால் 46 சதவீத எரிவாயு மிச்சமாகும். பிரஷர் குக்கரில் செப்பரேட்டர் பயன்படுத்தி கூடுதலாக சில பொருட்களை வேகவைத்தால் பெருமளவு எரிபொருள் மிச்சமாகும்.
- பிரஷர் குக்கர் பயன்படுத்தும்போது சில விஷயங்களை கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். குக்கரை அடைத்து அடுப்பில் வைத்து, ஆவி வந்த பின்பே வெயிட்டை பொருத்தவேண்டும். சிறிய, பெரிய குக்கரை வாங்கிவைத்துக்கொண்டு சமைக்கும் உணவுப்பொருட்களின் அளவுக்குதக்கபடி அவைகளை பயன்படுத்தவேண்டும்.
- தானியங்கள், பயறு வகைகளை தண்ணீரில் ஊறவைத்த பின்பு வேகவையுங்கள். பிரிட்ஜ்ஜில் இருக்கும் பொருட்களை அவசரமாக வெளியே எடுத்து வேகவைக்கக் கூடாது. வெளியே எடுத்த பொருளின் குளிர்ச்சி நிலை மாறி, இயல்பான தட்பவெப்ப நிலைக்கு வந்த பின்பே வேகவைக்கவேண்டும். குளிர்ச்சி நிலையிலே சமைத்தால் அதிக அளவு எரிவாயு செலவாகும்.
- சமைக்கும் பொருள் எந்த அளவுக்கு வேகவேண்டும் என்ற கணக்கு சமைப்பவருக்கு தெரிந்திருக்கவேண்டும். தேவையில்லாமல் அதிக நேரம் பொருட்களை வேகவைத்தால் சமையல் எரிவாயு அதிகமாக செலவாகுவதோடு, உணவுப் பொருளின் சுவையும் குன்றிவிடும்.
- குடும்பத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு, அத்தனை பேரின் தேவைக்கு தக்கபடி மட்டும் சமையல் செய்யுங்கள். எவ்வளவு அரிசிக்கு எத்தனை கப் தண்ணீர் என்பதை சரியான அளவில் சேர்த்தால் கியாஸ் வீண் ஆகாது.
- குடிநீர் ஐந்து நிமிடங்களாவது கொதிக்கவேண்டும். ஆனால் முதல் கொதி வந்ததும், பிளேமை சிம்மில் ஆக்கிவிடவேண்டும். இப்படி ஒவ்வொரு பொருளை சமைக்கும்போதும் லோ, மீடியம், ஹை என்று தேவைக்கு தக்கபடி பயன்படுத்துங்கள்.
- மதியத்திற்கும், இரவுக்கும் தேவையான உணவை ஒரே நேரத்தில் சமைத்து ஹாட் பாக்சில் வைத்திருக்கவேண்டும். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடவேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் சூடாக்கவேண்டியதிருக்கும். அதனால் கியாஸ் அதிகமாக செலவாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக சமைப்பதையும் தவிர்க்கவேண்டும்.
- ஒன்றுக்கு மேற்பட்ட உணவுப் பொருட்களை ஒரே பாத்திரத்தில் வைத்து சமைக்க முயற்சி செய்யுங்கள். பாஸ்தா வேகவைக்கும் பாத்திரத்தின் மேலேவைத்து காய்கறிகளை ஆவிஏற்றி வேகவைக்கலாம்.
இப்படிப்பட்ட முறையில் சமையல் செய்ய தேவையான மல்ட்டி ஸ்டீமர்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.

குழந்தைகள் வளர்ப்பில் ஒவ்வொரு விஷயத்தையும கூர்ந்து கவனிப்பது அவசியம். குறிப்பாக அவர்களது பல்லில சொத்தை ஏற்பட்டு விட்டால் அதை குணப்படுத்துவது சிக்கலான விஷயம்.
குழந்தைகள் வளர்ப்பில் ஒவ்வொரு விஷயத்தையும கூர்ந்து கவனிப்பது அவசியம். குறிப்பாக அவர்களது பல்லில சொத்தை ஏற்பட்டு விட்டால் அதை குணப்படுத்துவது சிக்கலான விஷயம். கவனிக்காமல் விடப்பட்ட பல் சொத்தை காரணமாக குழந்தைகள் பற்களை இழக்கும் அபாயமும் உள்ளது. அதனால் பற்களில் சொத்தை உருவாகாமல் தடுகக வேண்டும்.
பால் பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான காரணம்
பெற்றோர் பலர் இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு புட்டியில் பால் ஊட்டுவதுடன் அப்படியே அவர்களை உறங்க வைத்து விடுகிறார்கள். அதனால் பாலில் இருக்கும் இனிப்பு பாக்டீரியாக்களுடன் வினை புரிந்து பற்களை பாதிக்கின்றன.
சிறு குழந்தைகள் இனிப்பு கலந்த உணவுகளை சாப்பிட்ட பின்னா தண்ணீரால் வாயை கொப்பளிக்கும் பழக்கத்தை பயிற்றுவிக்க வேண்டும். அதனால் இனிப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் தவிர்க்கப்படும். பிஸ்கட், சாக்லேட், கேக் போன்றவறை அடிக்கடி உண்பது. சர்க்கரை அதிகமுள்ள பால், குளிர்பானங்கள் ஆகியவற்றை அருந்துவதன் மூலம் குழந்தைகளின் பற்களில் சொத்தை ஏற்படுகிறது.
சொத்தை காரணமாக ஏற்படும் பல் வலியால் குழந்தைகள் சரியாக உணவு உண்பது சிரமமாகி அவர்களது உடல் எடை குறையும். ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பற்கள் சொத்தையாக இருந்தால் இதய நோய், சளி, காய்ச்சல், தோல் அரிப்பு, தடிப்பு, முகம் வீங்குதல், கண் பிரச்சனை ஆகியவை ஏற்படக்கூடும்.
பல் சொத்தை ஏற்டாமல் பாதுகாக்க சில டிப்ஸ்...
குழந்தை பால் குடித்து முடித்த பின்னர் ஒவ்வொரு முறையும் தாயார் தன் விரலில் சுத்தமன துணியை சுற்றிக்கொண்டு குழந்தைகளின் ஈறுகளை சுத்தம் செய்ய வேண்டும்.
பற்கள் முளைக்கும் போது அவர்களுக்கென உள்ள பிரத்யோமான பிரஷ் மற்றும் பேஸ்ட் மூலம் காலை இரவு ஆகிய இரு நேரங்களிலும் பற்களையும் நாக்கையும் சுத்தம் செய்ய பழக்க வேண்டும். 7 வயதில் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைப்பதில் பிரச்சனை இருந்தால் உடனடியாக பல் மருந்துவரை அணுக வேண்டும். பால் பற்களின் தன்மையை பொறுத்தே நிரந்தர பற்கள் முளைக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கவனிக்காமல் விடப்படும் பல் சொத்தை மற்ற பற்களையும் எளிதாக பாதித்து விடும். எப்போதும் இனிப்பு சாப்பிட்ட பின்னர் நார்ச்சத்து உள்ள பழங்களை சாப்பிடுவதன் மூலம் பல் சொத்தை உருவாகாமல் தவிர்க்கலாம்.
குழந்தைகள் சரியாக பேசவும், சாப்பிடவும், ஆரோக்கியமான பற்கள் அவசியம். அதனால் தொடக்க கால பால் பற்களின் அமைப்பையும் ஆரோக்கியத்தையும் கவனித்து பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே குணப்படுத்துவது நல்லது. அதன் மூலம்ஆரோக்கியமான பற்கள் வெளிப்படுத்தும் மழலையின் புன்னகையை பெற்றோர் ரசிக்க இயலும்.

பகல் பொழுதில் கூந்தல் மீது செலுத்தும் கவனத்தை இரவில் தொடர்ந்து கடைப்பிடிப்பதில்லை. இரவு நேரத்தில் சரியாக கூந்தலை பராமரிக்காவிட்டால் அதுவே பல்வேறுவிதமான கூந்தல் பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டுவிடும்.
பெரும்பாலான பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கூந்தலை அலங்கரிப்பதற்கு காண்பிக்கும் அக்கறையை வீட்டில் இருக்கும்போது காண்பிப்பதில்லை. அதிலும் பகல் பொழுதில் கூந்தல் மீது செலுத்தும் கவனத்தை இரவில் தொடர்ந்து கடைப்பிடிப்பதில்லை.
இரவு நேரத்தில் சரியாக கூந்தலை பராமரிக்காவிட்டால் அதுவே பல்வேறுவிதமான கூந்தல் பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டுவிடும். இரவு நேரத்தில் கூந்தல் பராமரிப்பில் செய்யும் தவறுகள் பற்றியும், அதனை சரிசெய்யும் வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.
* பெண்கள் நிறைய பேர் இரவில் தூங்கும்போது கூந்தலை இறுக்கமாக கட்டிக்கொள்ளும் வழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். அது தவறானது. அப்படி இறுக்கமாக கூந்தலில் கொண்டை போட்டுக்கொள்வது மயிர்கால்களை கடுமையாக பாதிக்கும். கூந்தலின் அடிப்பகுதியில் இருக்கும் வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைக்காது. அதனால் கூந்தல் முடிகள் பாதிப்புக்குள்ளாகும்.
* இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கூந்தலை நன்றாக சீவுவதும் நல்லது. அப்படி செய்தால் கூந்தல் முடியில் சிக்கல் விழாமல் இருக்கும். இரவில் தூங்கும்போது சிக்கல்கள் விழுந்தாலும் எளிதில் சரிப்படுத்திவிடலாம். அதைவிடுத்து சிக்கல் முடியுடன் தூங்க சென்றால் அதன் பாதிப்பு அதிகமாகி விடும். அதனால் முடியின் அடர்த்தியும், வலிமையும் குறையும். முடி கொட்டுதல் பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடும்.
* இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பின்னந்தலையில் வியர் வையோ, ஈரப்பதமோ படிந்திருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியமானது. ஏனெனில் அப்படி ஈரப்பதம் இருந்தால் அது மயிர்கால்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பொடுகு தொல்லை, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். இரவில் குளித்தால் கூந்தலை நன்றாக உலரவைத்துவிட்டுத்தான் தூங்க வேண்டும்.
* இரவு நேரத்தில் தலையில் எண்ணெய் தேய்த்து மயிர்கால்களுக்கு மசாஜ் செய்துவிடுவது நல்லது. அதன் மூலம் மயிர்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். மயிர்கால்கள் வலுப்படுவதால் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். இரவில் மசாஜ் செய்துவிட்டு தூங்கினால் காலை யில் எழுந்ததும் தலைக்கு குளித்துவிடுவது நல்லது.
* தலையணை உறைகளை வாரத்திற்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும். ஏனெனில் தினமும் அதில் தலையை வைத்து படுக்கும்போது அதில் அழுக்குகள் சேர்ந்துவிடும். தலையில் இருக்கும் எண்ணெய்யும் தலையணை உறையில் படிந்து அழுக்குடனும் சேர்ந்துவிடும். அதில் தொடர்ந்து தலைவைத்து படுப்பது முடிக்கு பாதிப்பாகிவிடும்.
தனிமை என்பது தன்னை பற்றிய சுய மதிப்பீட்டை தீர்மானம் செய்யும் சந்தர்ப்பத்தை ஒருவருக்கு அளிக்கிறது. அதன் மூலம் தனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.
தனிமை என்பது தன்னை பற்றிய சுயமதிப்பீட்டை தீர்மானம் செய்யும் சந்தர்ப்பத்தை ஒருவருக்கு அளிக்கிறது. அதன் மூலம் தனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை அறிந்து கொள்ளவும் உதவுகிறது. இனிமையான தனிமை என்பது ரசிப்பதற்குரியதாக இருப்பினும் பலருக்கு அது கொடிய நோயாக மாறி விடக்கூடிய அபாயமும் உள்ளது.
இன்றைய காலகட்ட பெண்கள் பலரையும் பாதிக்கும் விஷயமாக தனிமை மாறி வருகிறது. கணவன், குழந்தைகளுக்காக காலை முதல் இரவு வரை பம்பரமாய் சூழலும் இல்லத்தரசிகள் இதில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தனிமையை உணர்வதால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் காரணமாக உடல் பருமன், ரத்த ழுததம், மனச்சோர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் ஆயுட்காலம் குறைவதாகவும் ஆய்வுகளில் தெரியவந்ததுள்ளது.
தனிமையை வெல்லும் வழி என்று நினைத்து இல்லததரசிகள் பலரும் டிவி, மொபைல், பேஸ்புன் வாட்ஸ்அப் ஆகியவற்றில் பலமணிநேரத்தை செலவிடுகின்றனர். அதன் காரணமாக புறச்சூழலை அறிய இயலாத மனநோயாளிகளாக தங்களை அறியாமல் மாறி விடுகின்றனர். சிறிது முயற்சி செய்தால் தனிமையை கடந்து வாழ்க்கையை வென்றெடுக்கலாம். அதற்கான சில வழிகள்...
கணவன் குழந்தைகளுக்கு பிடிக்கும் என ஆர்வத்துடன் விதவிதமான புதுமையான உணவுகள் தயாரிப்பவர்கள் அவற்றை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிடலாம். அதுமட்டுமின்றி, வீட்டை அலங்கரித்து சமையல் குறிப்புகள் போன்றவற்றை பதிவிடலாம்.
கல்வித்தகுதி குறைவாக உள்ள குடும்பத்தலைவிகளுக்கு அரசு சார்பில் உதவித் தொகையுடன் இலவச வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அவற்றை பெற்று வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டும் தனிமை உணர்வை தவிர்க்கலாம்.
பட்டப்படிப்பு முடிந்த இல்லத்தரசிகளுக்கு குடும்ப நிர்வாகத்திலேயே காலம் கழிவது ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தக்கூடும். அனால் கிடைக்கும் நேரத்தில் அடிப்படை கம்யூட்ட்ர் பயிற்சி உள்ளிட்ட தொழில் நுட்ப பயிற்சிகளை பெற்று வீட்டிலிருந்தே திறமைகேற்ப பணிகளை செய்து வருமானம் ஈட்டலாம்.
தொலைக்காட்சி மற்றும் மொபைல்போன் ஆகியவற்றில் செலவழிக்கும் காலத்தை குறைத்து ஆர்வம் மற்றும் திறமைக்கேற்ப சிறிய கைவினைப்பொருட்களை தயார் செய்து அவற்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய முயற்சிக்கலாம்.
தையல் கலையில் விருப்பம் உள்ளவர்கள், அடிப்படை தையல் பயிற்சி, எம்பிராய்டரி, புடவைகளுக்கு குஞ்சம் வைப்பது போன்றவற்றை
கற்றுக்கொள்ளலாம். வீட்டில் இருந்தபடியே இணையம் மூலமாக நடக்கும் ஆன்லைன் தையல்கலை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதன் மூலம் இல்லத்தரசிகள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு வருமானம் ஈட்ட முடியும்.
தனிமை உணர்வு மனதை ஆக்கிரமித்து விட அனுமதிக்காமல் புதிய விஷயங்களை கற்று கொண்டு அவற்றை பயனுள்ளதாக மாற்றி கொண்டால் வாழ்க்கையில் சிகரத்தை அடையலாம்.

நோன்பிருப்பவர்கள் உடனடியாகப் புத்துணர்ச்சிப் பெறவும் உதவும் ஓர் அற்புதமான உணவே 'நோன்புக் கஞ்சி'. இதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
ரமலான் நோன்பு காலத்தில் காலையில் இருந்து மாலை வரை எந்த உணவும் உண்ணாமல் இருந்து, நோன்பு திறந்த பிறகு திட உணவுகளை உண்பதால், அது உடலுக்குச் சில தொந்தரவுகளைத் தர வாய்ப்பு உள்ளது. அதைத் தவிர்ப்பதற்காகவும், நோன்பிருப்பவர்கள் உடனடியாகப் புத்துணர்ச்சிப் பெறவும் உதவும் ஓர் அற்புதமான உணவே 'நோன்புக் கஞ்சி'. இதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இந்த நோன்புக்கஞ்சியை நோன்பு இருப்பவர்கள் மட்டுமின்றி, மற்றவர்களும் குடித்தால், அது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும்.
நோன்பு இருப்பதால், நம் உடலில் உள்ள தேவையற்ற ரசாயனப் பொருள்கள் சுத்தப்படுத்தப்படும். நோன்பு ஆரம்பித்து முதல் இரண்டு நாள்கள் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். மேலும், உடலில் நீர்வறட்சி ஏற்படும். இதைத் தவிர்க்க நோன்பு காலங்களில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான உணவு நோன்புக்கஞ்சி. இது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 'கஞ்சி' என்று அழைக்கப்படுகிறது.
நோன்புக்கஞ்சியை சாப்பிட்டதும், நம் உடலில் நீர்வறட்சி சரியாகி உடல் சராசரி நிலைக்கு வந்துவிடும். மேலும், நாள் முழுவதும் நோன்பு இருப்பதால், உடல் சூடாகி விடும். நோன்புக் கஞ்சியில் இருக்கும் மசூர் பருப்பானது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தருகிறது.

நோன்புக்கஞ்சி வயிற்றில் உள்ள கழிவுகளைச் சுத்தப்படுத்தும்; அல்சர் தொந்தரவுகளையும் சரி செய்யும். கஞ்சியில் சேர்க்கப்படும் கொத்தமல்லி, புதினா, மஞ்சள், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, தக்காளி ஆகியவை நம் வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. எளிதில் செரிமானம் ஆக்கக்கூடிய எளிய வகை உணவு. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது.
மலச்சிக்கலைத் தீர்க்கும். நோன்புக் கஞ்சியானது வயிறு நிறைந்த ஓர் உணர்வைத் தரக்கூடியது. அதற்கும் மேலாக உடலுக்குத் தேவையான அத்தனைச் சத்துகளையும் தரக்கூடியது. நோன்பு இருப்பவர்கள் மட்டுமின்றி அனைவரும் இதை உட்கொள்ளலாம். இது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் சிவப்பு முள்ளங்கி பெரும்பங்கு வகிக்கிறது.
தேவையான பொருட்கள் :
சிவப்பு முள்ளங்கி (ராடிஷ்) - கால் கிலோ,
பொட்டுக்கடலை - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 5,
புளி - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய்
செய்முறை:
சிவப்பு முள்ளங்கியை துருவிக்கொள்ளவும்.
காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், புளி, உப்பு, பெருங்காயத்தூள், பொட்டுக்கடலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைத்து, கடைசியில் துருவிய சிவப்பு முள்ளங்கியைச் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானம் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
‘டீன் ஏஜ்’ பெண்கள் ஆர்வம் செலுத்தாமலே இருந்தாலும் அடிப்படையான ஆரோக்கிய பாடங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதோடு நிறுத்தாமல் அதை அவர்கள் கடைப்பிடிக்கவும் தாய்மார்கள் தொடர்ந்து வற்புறுத்தவேண்டும்.
‘டீன் ஏஜ்’ பெண்கள் ஆர்வம் செலுத்தாமலே இருந்தாலும் அடிப்படையான ஆரோக்கிய பாடங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்துதான் ஆகவேண்டும். சொல்லிக்கொடுப்பதோடு நிறுத்தாமல் அதை அவர்கள் கடைப்பிடிக்கவும் தாய்மார்கள் தொடர்ந்து வற்புறுத்தவேண்டும். அதனை அவர்கள் வாழ்வியல் பாடமாக ஏற்றுக்கொள்ளும் வரை கண்காணிப்பது தாய்மார்களின் பொறுப்பாகும்.
இன்றைய மாணவிகளில் பெரும்பாலானவர்கள் பள்ளிகளில் கழிவறை சுத்தம் இல்லாமல் இருந்தால், அதனை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுகிறார்கள். டாய்லெட் செல்வதற்கு வருத்தப்பட்டு தண்ணீர் பருகுவதையும் தவிர்க்கிறார்கள். காலை முதல் மாலை வரை சிறுநீர் கழிக்காமலே இருந்தால் ‘யூரினரி இன்பெக்ஷன்’ தோன்றும்.
தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் பருகுவதும், அடக்கிவைக்காமல் சிறுநீர் கழிப்பதும் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும். மாதவிலக்கு நாட்களில் சுத்தத்தில் அதிக அக்கறை தேவை. தினமும் 3 முதல் 5 பேடுகள் மாற்றவேண்டும். பள்ளியில் வைத்து பேடு மாற்றுவதற்கு தயங்கி காலை முதல் மாலை வரை ஒரே பேடு பயன்படுத்தினால் அது தொற்றுக்கு வழிவகுத்துவிடும்.
அந்த நாட்களில் சிறுநீர் கழித்ததும் உறுப்பு பகுதியை தண்ணீரால் சுத்தம் செய்வது அவசியம். உறுப்பு பகுதியில் சொறி ஏற்படுவதும், வாடை வீசும் விதத்தில் வெள்ளைப்படுதல் ஏற்படுவதும் தொற்று உருவாகியிருப்பதின் அறிகுறியாகும். எல்லாவிதமான வெள்ளைப்படுதலும் தொற்றின் அறிகுறியல்ல.
சினைமுட்டை வெளிப்படும் காலகட்டத்திலும், மாதவிலக்கு தொடங்குவதற்கு முன்பும் இயற்கையாகவே வெள்ளைப்படுதல் உருவாகும். உறுப்பு பகுதியில் சுடுநீரை பயன்படுத்தி கழுவக்கூடாது. அது நல்ல பாக்டீரியாக்களையும் கொன்றுவிடும். அதனால் எப்போதுமே உறுப்பு பகுதியை தண்ணீரால் மட்டுமே கழுவவேண்டும். குளிக்கும்போது மட்டும் வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்தி கழுவலாம்.
ஆனால் உறுப்பு பகுதியை அடிக்கடி சோப் பயன்படுத்தி கழுவக்கூடாது. உள்ளாடைகளை துவைத்து சூரிய ஒளியில் காயவைத்து பயன்படுத்தவேண்டும். தொற்று ஏற்பட்டிருந்தால் அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. டாக்டர் பரிந்துரைக்கும் ‘ஆன்டி பங்கல் கிரீம்’ பூசுவதும், ‘வஜைனல் வாஷ்’ உபயோகிப்பதும் தொற்றை நீக்கும்.
சிறுநீர் கழிக்கும்போது வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுதல், சிறுநீர் நிறம் மாறுதல், அடிவயிற்றில் வலி ஏற்படுதல் போன்றவை சிறுநீர் தொற்று ஏற்பட்டிருப்பதன் அறிகுறியாகும். அதிக அளவில் உடல்பருத்து காணப்படுதல், அதிக ரோம வளர்ச்சி, நெஞ்சுப் பகுதியில் ரோமம் வளருதல், அதிக அளவில் முடி உதிர்தல் போன்றவை இருந்தால், அது ஒருவேளை பி.சி.ஓ.டி. பாதிப்பாக இருக்கலாம்.
வாழ்க்கை முறை மாற்றங்களால் பெரும்பாலான டீன்ஏஜ் பெண்கள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். மகப்பேறு டாக்டரை சந்தித்து இதற்கான ஆலோசனைகளை பெறவேண்டும். தற்போது குண்டான உடல்வாகுவை கொண்ட பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். துரித உணவுகள், பேக்கரி பலகாரங்கள், கலோரி அதிகமுள்ள பதார்த்தங்களை சாப்பிடுதல் போன்றவைகளால் உடல் குண்டாகிறது.
வறுத்த, பொரித்த உணவுகளையும் தவிர்க்கவேண்டும். ஒரு நேரம் உணவே சாப்பிடாமல் இருப்பதும், இன்னொரு தடவை அதிகமாக சாப்பிடுவதும்கூட உடல் குண்டாக காரணமாகிவிடும். பல நிறங்களை கொண்ட பழங்களும், காய்கறிகளும் உணவில் அதிகம் சேர்க்கப்படவேண்டும். வாரத்தில் மூன்று நாட்களாவது டீன்ஏஜ் பெண்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
கைப்பந்து, பேட்மிண்டன் போன்ற ஏதாவது ஒரு விளையாட்டிலும் அவர்களை பங்குபெற செய்ய வேண்டும். சிறுமிகளுக்கு 12-வது வயதில் கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது நல்லது. கருப்பை பகுதியோடு தொடர்புடைய புற்றுநோய்கள் எதிர்காலத்தில் உருவாகுவதை இது தடுக்கும்தன்மைகொண்டது. டீன்ஏஜ் பெண்கள் சுத்தம் மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
நாம் பயணம் செய்யும் போது வீதியின் ஓரங்களில் விளையாடி கொண்டும், வேலைகள் செய்து கொண்டும் இருக்கும் சிறார்களை பார்த்து இருப்போம். இவர்களின் அன்றாட வாழ்க்கையை பற்றி காண்போம்.
நாம் பயணம் செய்யும் போது வீதியின் ஓரங்களில் விளையாடி கொண்டும், வேலைகள் செய்து கொண்டும் இருக்கும் சிறார்களை பார்த்து இருப்போம். இவர்களை தெரு குழந்தைகள் என்று அழைப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை வீதிகளில் வாழ்கிறார்கள். மென்மையான உள்ளம் உடைய இந்த இளம் பிஞ்சுகள் கைகளில் தட்டுகளை ஏந்தி உணவு கிடைக்குமா என தினமும் காத்து இருக்கிறார்கள். இவர்களின் கண்ணீரை துடைத்து அச்சத்தை போக்க தாயின் அரவணைப்பு இவர்களுக்கு இல்லை. இவர்களின் அன்றாட வாழ்க்கையை பற்றி காண்போம்.
வறுமை என்பது ஒருவன் செய்யாத தவறுக்காக பெறும் தண்டனை போன்றது. இயற்கை பேரழிவுகள் பெற்றோரின் அறியாமை, வறுமை, பஞ்சம் போன்ற
காரணங்களால் இவர்கள் வீதிக்கு வருகிறார்கள். அரசின் கணக்கெடுப்பில் இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கான சிறார்கள் வீதியில் வாழ்கிறார்கள். நாம் உண்ணும் உணவு சுவையாக இருக்கிறதா என்பதை பார்த்து நாம் உணர்கிறோம். ஆனால் தெரு குழந்தைகளில் உணவு இல்லாமல் இறந்து போகிறார்கள்.
கைகளை தலையணையாகவும், காகித அட்டைகளை மெத்தையாகவும், கோணிப்பைகளை போர்வையாகவும் போர்த்திக்கொண்டும் தெரு ஓரங்களில் படுத்து அடிமையாகிறார்கள். சிறு வயதிலேயே போதைக்கு அடிமையாகிறார்கள். அதிக வேலை, குறைந்த பணம். இதுவே இவர்கள் வேலை செய்யும் இடங்களில் இவர்களின் நிலைமை, தூய்மை பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாததால் பல நோய்களுக்கு உள்ளாகிறார்கள்.
வறுமை என்பது கடினமானது தான். ஆனால் ஒருவருக்கு உணவு அளிப்பது என்பது கடினமானது அல்ல. இவர்களின் தேவைகளை அறிந்து அரசு இவர்களுக்கு உதவ வேண்டும். மனிதன் என்பவன் மனிதன் தான் அவன் எவ்வளவு சிறியவனாக இருந்தாலும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தெரு குழந்தைகள் பற்றி விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும்.
வறுமையில் வாழும் இவர்களின் வாழ்க்கையை மாற்ற அவர்களுக்கான சரியான கல்வி, பாதுகாப்பான சுற்றுசூழல், ஆரோக்கியமான வாழ்வு கிடைக்க அனைவரும் இணைந்து இவர்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்.
லா.செர்லின் லின்சி, முதலாமாண்டு உயிரியல் அறிவியல் துறை,
கிரேஸ் கல்வியியல் கல்லூரி,
படந்தாலுமூடு.

கொரோனா நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிற கருப்பு பூஞ்சை நோய் தாக்குவது தெரியவந்துள்ளது. இதற்கான மருந்து உற்பத்தியைப் பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி :
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களைப் பாதித்து வருகிறது.
இந்த தருணத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான, குணமாகிற நோயாளிகளுக்கு, ‘மியூகோர்மைகோசிஸ்’ என்று அழைக்கப்படுகிற கருப்பு பூஞ்சைநோய் தாக்குவதை டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது ஒரு அரிதான மற்றொரு தொற்று நோய் ஆகும்.
இது, பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிற ஒருவகை பூஞ்சையால் உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன. இதுவும் உயிருக்கு ஆபத்தான நோய்தான்.
கொரோனா நோயாளிகளைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு உயிரைக் காக்க தருகிற ஸ்டீராய்டு மருந்துகளால் இந்த நோய் தூண்டப்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
ஸ்டீராய்டுகளைப் பொறுத்தமட்டில், அவை கொரோனா நோயாளிகளின் நுரையீரல் வீக்கத்தை குறைத்து,கொரோனாவை எதிர்த்துப்போராட உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகளவில் செயல்படுகிறபோது, ஏற்படுகிற சில சேதங்களை தடுக்கின்றன. ஆனால் அவை நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து, நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு இல்லாத பிற கொரோனா நோயாளிகளின் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுகின்றன.
நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதுதான் கொரோனா நோயாளிகளின் மியூகோர்மைகோசிஸ் பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நோய் தாக்குதல் பற்றிய தகவல்களை அறிந்ததும் இதற்கான மருந்து தயாரிப்பை அதிகரிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் இப்போது கருப்புபூஞ்சை நோய் பரவல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முக கவசம் அணியவேண்டும். பெரும்பாலும் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
‘சுத்தம் சுகம் தரும்’ என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் தூய்மையாக இருக்க வேண்டும். தூய்மை என்பது உண்ணும் உணவு, உடுக்கும் உடை, இருக்கும் இடம் ஆகியவற்றில் மட்டுமில்லாமல், சுற்றுப்புறச் சூழலிலும் அமைதல் வேண்டும். சுற்றுப்புறச் சூழல் தூய்மையாக இருந்தால்தான், மாசு மறு அற்ற தூய காற்றும், தூய்மையான குடிநீரும் கிடைக்கும். இல்லாவிட்டால் பல்வேறு நோய்கள் தாக்கி இன்னல்களை சந்திக்க நேரிடும். கொரோனா வைரஸ் உருமாறி 2-வது அலையாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது. மத்திய அரசும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. தமிழக அரசு இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதை நாம் அறிவோம். மறுபுறம் கொரோனா தடுப்பூசி போடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
எனவே வைரஸ் பரவாமல் இருப்பதற்கு வீட்டை தினமும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். திருவிழா, பண்டிகை காலங்களில் வீட்டை தூய்மையாக வைத்து கொள்கிறோம். அதுபோல் இந்த காலகட்டத்திலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை கிருமிநாசினி வைத்து தினமும் சுத்தம் செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் வீடுகளின் வாசல்களில் மாட்டு சாணம் தெளித்து சுத்தம் செய்து கோலமிடும் பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் வீடுகளில் வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாப்போடு வாழலாம்.
கொரோனாவின் தாக்கத்தை பலர் அறியாமல் சாலையில் கண்ட இடங்களில் எச்சில் உமிழ்கின்றனர். சாலையில் குப்பைகளை கொட்டுகின்றனர். கண்ட கண்ட இடங்களில் சிறுநீர் கழித்து வருகின்றனர். ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் துணிகளை துவைப்பதன் மூலம் நீரை மாசு படுத்துகின்றனர். இதனால் பல வகையான தொற்று நோய்கள் ஏற்பட நாமே வழிவகுக்கிறோம். இதை தடுக்க பொது இடங்களில் எச்சில் உமிழ்வதை தவிர்க்க வேண்டும். வீடுகள் தோறும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். சாலையோரங்கள், பஸ்நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க வேண்டும். கைகளை சுத்தமாக வைக்க வேண்டும். வீட்டில் இருந்து வெளியே சென்று வந்தால் கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இத்தகைய செயல்களை தொடர்ந்து பின்பற்றினால் கொரோனா போன்ற ஆட்கொல்லி வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முக கவசம் அணியவேண்டும். பெரும்பாலும் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
நாம் சுத்தமாக இருப்பதுடன், மற்றவர்களை சுத்தமாக இருக்க அறிவுறுத்த வேண்டும். அவர்களிடம் நோயின் தாக்கம் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விளக்கி கூற வேண்டும். இதன் மூலம் நோயின் தாக்கத்தை குறைக்கலாம். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியே வந்து வாங்கி செல்ல வேண்டும்.
கடைகள், வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு சென்றால் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும்.
அப்போது தான் நாமும், நம் வீட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்குவதை தடுக்கலாம். கொரோனா என்னும் கொடிய நோய் தாக்கி நம் அன்புக்குரியவர்களை இழப்பதை தவிர்ப்போம். இதற்காக நாம் அனைவரும் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி நடப்பதே சிறந்த பாதுகாப்பாகும். தடுப்பூசி பணி முழுமை அடைவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும். அதுவரை நாமும், நம் வீடுகளையும் சுத்தமாக வைத்து கொரோனா வைரசை விரட்டுவோம் என்று உறுதிமொழி ஏற்போம். இது நமக்கும், நம் நாட்டிற்கும் செய்யும் மிகப்பெரிய கடமையாகும் என்று அனைவரும் உணர்ந்து செயல்படுவோம். கொரோனா பாதிப்பில் இருந்து அனைவரையும் காத்திடுவோம்.