search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் பால் பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான காரணம்
    X
    குழந்தைகளின் பால் பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான காரணம்

    குழந்தைகளின் பால் பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான காரணமும் தடுக்கும் வழிமுறையும்...

    குழந்தைகள் வளர்ப்பில் ஒவ்வொரு விஷயத்தையும கூர்ந்து கவனிப்பது அவசியம். குறிப்பாக அவர்களது பல்லில சொத்தை ஏற்பட்டு விட்டால் அதை குணப்படுத்துவது சிக்கலான விஷயம்.
    குழந்தைகள் வளர்ப்பில் ஒவ்வொரு விஷயத்தையும கூர்ந்து கவனிப்பது அவசியம். குறிப்பாக அவர்களது பல்லில சொத்தை ஏற்பட்டு விட்டால் அதை குணப்படுத்துவது சிக்கலான விஷயம். கவனிக்காமல் விடப்பட்ட பல் சொத்தை காரணமாக குழந்தைகள் பற்களை இழக்கும் அபாயமும் உள்ளது. அதனால் பற்களில் சொத்தை உருவாகாமல் தடுகக வேண்டும்.

    பால் பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான காரணம்

    பெற்றோர் பலர் இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு புட்டியில் பால் ஊட்டுவதுடன் அப்படியே அவர்களை உறங்க வைத்து விடுகிறார்கள். அதனால் பாலில் இருக்கும் இனிப்பு பாக்டீரியாக்களுடன் வினை புரிந்து பற்களை பாதிக்கின்றன.

    சிறு குழந்தைகள் இனிப்பு கலந்த உணவுகளை சாப்பிட்ட பின்னா தண்ணீரால் வாயை கொப்பளிக்கும் பழக்கத்தை பயிற்றுவிக்க வேண்டும். அதனால் இனிப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் தவிர்க்கப்படும். பிஸ்கட், சாக்லேட், கேக் போன்றவறை அடிக்கடி உண்பது. சர்க்கரை அதிகமுள்ள பால், குளிர்பானங்கள் ஆகியவற்றை அருந்துவதன் மூலம் குழந்தைகளின் பற்களில் சொத்தை ஏற்படுகிறது.

    சொத்தை காரணமாக ஏற்படும் பல் வலியால் குழந்தைகள் சரியாக உணவு உண்பது சிரமமாகி அவர்களது உடல் எடை குறையும். ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பற்கள் சொத்தையாக இருந்தால் இதய நோய், சளி, காய்ச்சல், தோல் அரிப்பு, தடிப்பு, முகம் வீங்குதல், கண் பிரச்சனை ஆகியவை ஏற்படக்கூடும்.

    பல் சொத்தை ஏற்டாமல் பாதுகாக்க சில டிப்ஸ்...

    குழந்தை பால் குடித்து முடித்த பின்னர் ஒவ்வொரு முறையும் தாயார் தன் விரலில் சுத்தமன துணியை சுற்றிக்கொண்டு குழந்தைகளின் ஈறுகளை சுத்தம் செய்ய வேண்டும்.

    பற்கள் முளைக்கும் போது அவர்களுக்கென உள்ள பிரத்யோமான பிரஷ் மற்றும் பேஸ்ட் மூலம் காலை இரவு ஆகிய இரு நேரங்களிலும் பற்களையும் நாக்கையும் சுத்தம் செய்ய பழக்க வேண்டும். 7 வயதில் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைப்பதில் பிரச்சனை இருந்தால் உடனடியாக பல் மருந்துவரை அணுக வேண்டும். பால் பற்களின் தன்மையை பொறுத்தே நிரந்தர பற்கள் முளைக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கவனிக்காமல் விடப்படும் பல் சொத்தை மற்ற பற்களையும் எளிதாக பாதித்து விடும். எப்போதும் இனிப்பு சாப்பிட்ட பின்னர் நார்ச்சத்து உள்ள பழங்களை சாப்பிடுவதன் மூலம் பல் சொத்தை உருவாகாமல் தவிர்க்கலாம்.

    குழந்தைகள் சரியாக பேசவும், சாப்பிடவும், ஆரோக்கியமான பற்கள் அவசியம். அதனால் தொடக்க கால பால் பற்களின் அமைப்பையும் ஆரோக்கியத்தையும் கவனித்து பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே குணப்படுத்துவது நல்லது. அதன் மூலம்ஆரோக்கியமான பற்கள் வெளிப்படுத்தும் மழலையின் புன்னகையை பெற்றோர் ரசிக்க இயலும்.
    Next Story
    ×