என் மலர்
செய்திகள்
தி.மு.க.வை சபைக்கு அழைக்க வேண்டுமென்று சட்டசபையில் எதிர்க்கட்சியினர் பேசியதற்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர், முதல்-அமைச்சர் சொல்வது சரியான தகவல் அல்ல என்றார்.
உடனே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உண்மையை சொன்னால் ஏன் எரிகிறது என்று கோபத்துடன் பதில் அளித்தார். அவருடன் அபுபக்கர் வாக்குவாதம் செய்தார்.
உடனே சபாநாயகர், “முதல்வர் பேசும் போது குறுக்கிட கூடாது. இதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்” என்றார். #TNAssembly
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இவ்வாறு அவர் கூறினார். #NaamThamizharKatchi #Seeman #Rajinikanth
அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சித்தலைவி அம்மாவில் ரஜினி பேட்டிக்கு ஆதரவு தெரிவித்து மர்மயோகி என்ற பெயரில் செய்தி வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* விஷக்கிருமிகளான சமூக விரோதிகளை புரட்சித்தலைவி அம்மா ஒடுக்கி வைத்திருந்தார்.
* ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்ததால்தான் அது கலவரமாக மாறியது.
ஒருவர் ராஜினாமா செய்வதால் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு கிட்டிவிடாது.
நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டுமே தவிர எல்லாவற்றிற்கும் போராட்டம் நடத்தக்கூடாது என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
இப்படியாக, தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனச்சாட்சியோடு பேசி இருக்கிறார்.

அது மட்டுமல்ல, ஸ்டெர்லைட் எதிர்ப்பு கலவரம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எக்கருத்தை முன் வைத்தாரோ, அதனையே வழிமொழிந்து சமூக விரோதிகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்ததால்தான் அது வன்முறை வெறியாட்டமாக வடிவம் எடுத்தது என்பதை ரஜினிகாந்தும் எடுத்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
குறிப்பாக, 99 நாளாக நடைபெற்று வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், அமைதி வழியில் நிகழ்ந்து வந்த நிலையில், 100-வது நாள் போராட்டத்தில் கீதாஜீவன் தலைமையில் தி.மு.க.வினர் உட்புகுந்ததற்குப் பிறகு தான், அமைதி வழிப் போராட்டம், கண்ணீர் புகைகுண்டு, துப்பாக்கிச் சூடு என களேபரமானது என்பதை கருக்கொண்டு பார்க்கிறபோது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கும் விஷக் கிருமிகளும், சமூக விரோதிகளும் தி.மு.க.வினர்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
அது மட்டுமல்லாமல், ராஜினாமா என்பது பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்ற நெத்தியடி பதில் மூலம் பதவி பித்துப்பிடித்து அலைகிற “மாதிரி” தலைவர்களுக்கு ரஜினிகாந்த் சரியாக வேப்பிலை அடித்திருக்கிறார்.
ஒரு அரசு, பதவிப் பிரமாணம் எடுத்து முடிப்பதற்கு முன்பாகவே, ராஜினாமா செய்... ராஜினாமா செய்... என்று எதற்கெடுத்தாலும் ஊளையிடுகிற எதிர்மறை சித்தாந்தவாதிகளான கம்யூனிஸ்டுகளுக்கும், ரஜினிகாந்தின் பதில் புத்தி உரைக்க புகட்டப்பட்ட மருந்துதான்.
எப்படியானாலும் சரி, தூத்துக்குடிக்கு போன ரஜினிகாந்த், எப்பொழுதுமே வன்முறைக்கு எதிரான இயக்கம் அ.தி.மு.க. என்பதை வழிமொழிந்திருப்பதும், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட சமூக விரோதிகள் யார் என்பதை “கருத்து ஜாடை” காட்டி அம்பலப்படுத்தி இருப்பதுமென மனச்சாட்சி குன்றாது, மக்களிடமும், பத்திரிகையாளர்களிடமும் பேசியிருப்பது வரவேற்கத்தக்கதே.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ThoothukudiFiring #RajiniInThoothukudi #ADMK
தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்ததற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் எனவும், அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், ரஜினியின் கருத்து பற்றி கேட்டனர். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

ரஜினிக்கும் முதல்வருக்கும் ஒரே இடத்தில் இருந்து உத்தரவுகள் வருவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. நாங்கள் யாரையும் சார்ந்து இல்லை. எங்களுக்கு என்று ஒரு தனித்தன்மை உள்ளது. மாற்றான் பேச்சைக் கேட்டு அவர்களுக்கு எடுபிடியாக என்றைக்கும் இருந்தது கிடையாது. தி.மு.க. வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring #RajiniInThoothukudi #Jayakumar
தமிழக சட்டசபையில் இன்று வனத்துறை தொடர்பான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது ஆத்தூர் எம்.எல்.ஏ. சின்னத்தம்பியின் கேள்விக்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் உள்ள வன மற்றும் மலைப்பிரதேசங்களில் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என முதல்வர் அறிவித்தார். மாவட்ட அளவில் ஆய்வு செய்து ஆய்வறிக்கை பெற்று மலைப் பிரதேசங்களில் உள்ள தேவைகளை கண்டறிந்து மத்திய அரசு உதவியுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு தெரிவித்தனர். #TNAssembly #TNCM
கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி கொடைக்கானல் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு காட்டு மிராண்டித்தனமான செயல். இதற்கு காரணமான மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது கண்துடைப்பு நாடகம். சட்டமன்ற கூட்டத்தில் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக இதனை அறிவித்துள்ளனர்.
கூட்டத்தொடர் முடிந்ததும் நீதிமன்றம் உத்தரவிட்டது என கூறி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுப்பார்கள். இனி எக்காலத்திலும் ஸ்டெர்லைட் ஆலையை அங்கு திறக்கவே கூடாது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த தீர்ப்பு இன்னும் 10 நாட்களுக்குள் வரும். சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு போலவே அந்த தீர்ப்பும் இருக்கும். அப்போது தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தயாராக இருகக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #Pugazhendhi
தி.மு.க. சார்பில் அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இப்போதைய அரசு ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது. மக்கள் மீது அக்கறை கொள்ளாமல் தங்கள் மீது மட்டும் அக்கறையுடன் செயல்படுகிறார்கள். நான் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டேன். இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட்டு ஜெயித்தேன்.
என்றாலும், இன்று வரை நடுநிலையுடன்தான் செயல்படுகிறேன். மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்த்து வருகிறேன். தூத்துக்குடியில் அரசு நடந்து கொண்ட விதம் எனக்கு மிகுந்த மனவருத்தத்தை கொடுத்து இருக்கிறது.
தூத்துக்குடியில் அமைதியாக ஊர்வலம் நடத்திய மக்கள் மீது குறிவைத்து சுட போலீசாருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இது பற்றி சட்டசபையில் பேசுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. உதவி வட்டாட்சியர் உத்தரவுப்படி துப்பாக்கி சூடு நடந்தது என்கிறார்கள்.
முதல்-அமைச்சர் இது பற்றி பேசும் போது துப்பாக்கி சூடு என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்னுடைய பாதுகாப்புக்காக நியமித்த அதிகாரியை நீக்கி இருக்கிறார்கள். சட்டசபையில் துப்பாக்கி சூட்டை கண்டித்து நான் பேசியதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.
நான் எப்போதும் நியாயத்தின் பக்கம்தான் இருப்பேன். தி.மு.க. தற்போது மக்களுக்காக குரல் கொடுக்கிறது. நானும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். மக்களுக்காக செயல்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்த ஆட்சி நீக்கப்பட வேண்டும்.
அடுத்து ஜனநாயகத்தை மதிக்கும் ஆட்சி அமைய வேண்டும். இதில், மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சர் ஆக வேண்டும். மக்கள் நலனை மட்டும் சிந்திக்கும் அரசாக அது இருக்க வேண்டும். இன்றைய ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். சாதாரண சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு கூட பணம் கேட்கிறார்கள்.

இன்றைய அரசு பணத்துக்காக நடைபெறும் அரசாக இருக்கிறது. வியாபாரம் போல நடக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். மக்கள் இந்த அரசை விரும்பவில்லை. எனவே, மக்கள் விரும்பும் அரசு, ஜனநாயகத்தை மதிக்கும் அரசு வர வேண்டும். அதற்கு நானும் துணை நிற்கிறேன்.
இவ்வாறு கருணாஸ் பேசினார். #Karunas #Koovathur
சட்டசபையில் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு உயர் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் தேசிய மொத்த மாணவர் சேர்க்கை விகிதமான 25.2 சதவீதத்தை விட தமிழகம் அதிகமாக 46.9 சதவீதம் பெற்று முன்னணி இடத்தை பெற்றுள்ளது.
கடலூர், திருவள்ளூர், சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்க நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரிகளுக்கு கட்டிடம் கட்ட ரூ.9 கோடியும், முதலாம் ஆண்டுக்கு தேவையான கம்ப்யூட்டர், புத்தகங்கள் கொள்முதல் செய்ய ரூ.1½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 48 ஆசிரியர்கள் உள்ளிட்ட 135 பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 கல்லூரிகளும் 2018-19 கல்வி ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் இதன் மீது பேசிய செம்மலைக்கு பதில் அளித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், “உயர்கல்வித் துறையில் கடந்த 7 ஆண்டுகளில் 1,321 புதிய பாட பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 89 புதிய பாட பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே ஆராய்ச்சி படிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. யு.ஜி.சி. மூலம் அதிக நிதி பெற்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் அரசு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். #TNAssembly
சட்டசபையில் இன்று பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது செம்மலை பேசினார். அப்போது அவர் பேசிய கருத்துக்கு பதில் அளித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
இந்த ஆட்சியில் பள்ளிகளை மூடும் எண்ணம் கிடையாது. 854 பள்ளிகளில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. மற்ற பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு குறைவாக இருப்பதால் மாணவர்களை அதிகமாக சேர்க்க அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் வரை கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை.
இந்தியாவிலேயே பள்ளிக் கல்வித்துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்களை மாணவர்கள் நலன் கருதி அரசு செயல்படுத்த உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. சார்பில் மாதிரி சட்டமன்ற கூட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு தி.மு.க. சட்ட மன்ற கொறடா சக்கரபாணி தலைமை தாங்கினார். அவருக்கு சட்டமன்ற சபாநாயகர் இருக்கை போன்று மேடையில் தனி இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக், முக்குலத்தோர் புலிப்படை கட்சியைச்சேர்ந்த எம்.எல். ஏ.க்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் சட்டசபையில் வாசிப்பது போல் சக்கரபாணி திருக்குறள் வாசித்தார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் ஒரு இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தார். அதில், மக்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்யாமல் அலட்சியப்படுத்தியதால்தான் இப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. நேற்று சட்டமன்றத்தில் இதுபற்றி முறையாக பேச அனுமதிக்கவில்லை.
எனவே இன்று மாதிரி சட்டமன்ற கூட்டம் நடத்தப்படுகிறது என்றார். இதைத் தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைவரும் 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பிறகு மு.க.ஸ்டாலின் மாதிரி சட்டமன்றம் சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சார்பில் பல்வேறு விதத்தில் ரூ.100 கோடி வைப்பு தொகை உள்ளது. அதில் இருந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த அனைவரது குடும்பத்துக்கும் தலா ரூ.1 கோடி நிதி வழங்க வேண்டும் என்றார்.
இந்த தீர்மானத்தை ராமசாமி (காங்கிரஸ்), அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகியோர் வழிமொழிந்தனர். தீர்மானத்துக்கு ஆதரவாக உறுப்பினர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

நச்சுக்காற்று, சுகாதாரக் கேடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கடந்த 22-ந்தேதி சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே இப்போராட்டம் குறித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மக்களிடம் அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது.
ஆனால் திடீரென்று அந்த மக்கள் மீது தேவையின்றி துப்பாக்கி சூடு நடத்தி 13 உயிரை பறித்து இருக்கிறார்கள். இதற்கு முறையான விசாரணை நடத்த வேண்டும்.
அனிதா ராதாகிருஷ்ணன்:- ஊர்வலம் அமைதியாக நடந்தது. யாரிடமும் ஆயுதம் இல்லை. வன்முறையும் நடைபெறவில்லை. ஆனால் திட்டமிட்டு அந்த படுகொலையை நிகழ்த்தி இருக்கிறார்கள். இதற்கு பொறுப்பேற்க வேண்டிய முதல்-அமைச்சர் டி.வி.யில்தான் இதை பார்த்தேன் என்கிறார். சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
துரைமுருகன், தங்கம் தென்னரசு, பொன்முடி, ஐ.பெரியசாமி உள்பட பல்வேறு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார்கள்.
வசந்தகுமார் (காங்):- ஸ்டெர்லைட் ஆலை எங்கள் மாநிலத்துக்கு தேவையில்லை என்று மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்கள் புறக்கணித்தன. ஆனால் இதற்கு அனுமதி வழங்கியது இன்றைய அ.தி.மு.க. அரசு. இவ்வளவு பெரிய போராட்டத்தில் பலர் உயிரிழந்த பிறகும் அதுபற்றி தனக்கு தெரியாது என முதல்-அமைச்சர் சொன்னது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு.
கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் மற்றொரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு முறையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விவாதம் நடந்தது. #DMKSampleAssembly #MKStalin
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புரட்சி தலைவி அம்மா பேரவை நிர்வாகிகளை அறிவித்துள்ளனர்.
தேனி மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளராக பி.ரவிச்சந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஆவார்.
வேலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக புலவர் ரமேசும், திருச்சி புறநகர் மாவட்டத்துக்கு கிருஷ்ணணும், பெரம்பலூர் மாவட்டத்துக்கு உதயம் எஸ்.ரமேசும், மதுரை மாநகர் மாவட்டத்துக்கு எஸ்.எஸ். சரவணனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கே.ஏ. கிருஷ்ணசாமி மகன் கே.ஏ.கே. முகிலனுக்கு அம்மா பேரவை தென்சென்னை வடக்கு மாவட்ட இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
அவர் ஏற்கனவே வகித்த எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதேபோல் அம்மா பேரவையின் தென் சென்னை தெற்கு மாவட்ட இணை செயலாளர் பொறுப்புக்கு ஜெயவர்த்தன் எம்.பி. நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை:
குன்றத்தூர் ஒன்றியம் பரணிபுத்தூர் ஊராட்சியில் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகத்திற்கு துணை மின்நிலையத்துடன் கூடிய கட்டிடம் கட்ட அரசு முன் வருமா? என்று சட்டசபையில் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
இதற்கு மின்துறை அமைச்சர் தங்கமணி பதில் கூறியதாவது:-
பரணிபுத்தூரில் புதிய கட்டிடம் தேவையென்று சொன்னால் ஏற்கனவே துணைமின் நிலையம் அமைப்பதற்காக ஒரு மயானப் புறம்போக்கை பார்த்திருக்கிறோம்.
உறுப்பினரும் அதற்கு ஒத்துழைத்து அந்த இடத்தை வாங்கிக் கொடுத்தால், புதிய கட்டிடம் கட்ட அரசால் நடவடிக்கை எடுக்கப்படும். தா.மோ.அன்பரசன் பரணிபுத்தூரில் ஊராட்சி மன்றத்துக்கு சொந்தமான 600 சதுரடி கட்டிடத்தில் மின் வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது.
இது பழுதடைந்த நிலையில் இடவசதி இல்லாமல் மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கி கட்டிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
அமைச்சர் தங்கமணி:- அந்த பகுதி வளர்ந்து வரும் பகுதி என்பதால் துணை மின்நிலையம் அமைக்க இடம் தேடிக் கொண்டிருக்கிறோம். அந்த துணைமின் நிலையம் அமைக்கிறபோது உதவி பொறியாளர் அலுவலகத் தையும் அங்கேயே கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
தா.மோ. அன்பரசன்:- பரணிபுத்தூரில் நுகர்வோர் எண்ணிக்கை 16 ஆயிரமாக உள்ளதால் அங்கு அரசுக்கு சொந்தமான இடத்தில் துணைமின் நிலையத்துடன் கூடிய மின்சார வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும். அதோடு 60 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின் கம்பிகளை மாற்றி விட்டு புதிய மின் கம்பிகளை அமைக்க வேண்டும்.
அமைச்சர் தங்கமணி:- இதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #TNassembly






