என் மலர்

  செய்திகள்

  பரணிபுத்தூரில் மின்வாரிய அலுவலகம், துணைமின் நிலையம் அமைக்க வேண்டும் - தா.மோ.அன்பரசன் கோரிக்கை
  X

  பரணிபுத்தூரில் மின்வாரிய அலுவலகம், துணைமின் நிலையம் அமைக்க வேண்டும் - தா.மோ.அன்பரசன் கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரணிபுத்தூரில் மின்வாரிய அலுவலகம் மற்றும் துணைமின் நிலையம் அமைக்க வேண்டும் என்று தா.மோ.அன்பரசன் கோரிக்கை விடுத்துள்ளார். #TNassembly

  சென்னை:

  குன்றத்தூர் ஒன்றியம் பரணிபுத்தூர் ஊராட்சியில் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகத்திற்கு துணை மின்நிலையத்துடன் கூடிய கட்டிடம் கட்ட அரசு முன் வருமா? என்று சட்டசபையில் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

  இதற்கு மின்துறை அமைச்சர் தங்கமணி பதில் கூறியதாவது:-

  பரணிபுத்தூரில் புதிய கட்டிடம் தேவையென்று சொன்னால் ஏற்கனவே துணைமின் நிலையம் அமைப்பதற்காக ஒரு மயானப் புறம்போக்கை பார்த்திருக்கிறோம்.

  உறுப்பினரும் அதற்கு ஒத்துழைத்து அந்த இடத்தை வாங்கிக் கொடுத்தால், புதிய கட்டிடம் கட்ட அரசால் நடவடிக்கை எடுக்கப்படும். தா.மோ.அன்பரசன் பரணிபுத்தூரில் ஊராட்சி மன்றத்துக்கு சொந்தமான 600 சதுரடி கட்டிடத்தில் மின் வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது.

  இது பழுதடைந்த நிலையில் இடவசதி இல்லாமல் மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கி கட்டிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

  அமைச்சர் தங்கமணி:- அந்த பகுதி வளர்ந்து வரும் பகுதி என்பதால் துணை மின்நிலையம் அமைக்க இடம் தேடிக் கொண்டிருக்கிறோம். அந்த துணைமின் நிலையம் அமைக்கிறபோது உதவி பொறியாளர் அலுவலகத் தையும் அங்கேயே கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

  தா.மோ. அன்பரசன்:- பரணிபுத்தூரில் நுகர்வோர் எண்ணிக்கை 16 ஆயிரமாக உள்ளதால் அங்கு அரசுக்கு சொந்தமான இடத்தில் துணைமின் நிலையத்துடன் கூடிய மின்சார வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும். அதோடு 60 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின் கம்பிகளை மாற்றி விட்டு புதிய மின் கம்பிகளை அமைக்க வேண்டும்.

  அமைச்சர் தங்கமணி:- இதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார். #TNassembly

  Next Story
  ×