என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பரமக்குடி அருகே உள்ள உலகநாதபுரத்தில் அற்புதக் குழந்தை ஏசு கோவில் அர்ச்சிப்பு விழாவை சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் திறந்து வைத்தார்.
பரமக்குடி அருகே உள்ள உலகநாதபுரத்தில் அற்புதக் குழந்தை ஏசு கோவில் அர்ச்சிப்பு விழா நடந்தது.இதற்கு சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் கோவிலை அர்ச்சித்து திறந்து வைத்தார். மறைமாவட்ட பொருளாளர் அருட்தந்தை சந்தியாகு கல்வெட்டை திறந்து வைத்தார். அருட்தந்தை திரவியம், செபஸ்தியான் ஆகியோர் நன்கொடையாளர்கள் கல் வெட்டை திறந்து வைத்தனர்.
பின்பு புதிய கொடி மரத்தை அர்ச்சிப்பு செய்து திருவிழா கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அர்ச்சிப்பு திருப்பலி மேலாளர் சூசை மாணிக்கம் தலைமையில் நடந்தது. அருட்தந்தை பங்கு பணி தாமஸ் மறை உரை நிகழ்த்தினார். பங்கு பணியாளர் சிங்கராயர் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் ரிச்சர்ட் அற்புத குழந்தை ஏசு ஆலயம் வரலாற்றினை எடுத்துக்கூறினார்.
சிவகங்கை மறைமாவட்ட திருவெளிப்பாட்டு பணிக்குழு செயலாளர் அருட்தந்தை யோசுவா மற்றும் திருவரங்கம் திரு இருதய பள்ளியின் தாளாளர் சிங்கராயர் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். ஆனந்தா கல்லூரி பேராசிரியர் அருள்தந்தை டென்சிங் பாடல் குழுவினர் வழிநடத்தினர்.
இதில் ஏராளமான அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள், மரியா, மகிமை மெடிக் கல்ஸ் உரிமையாளர் சார்லஸ், பரமக்குடி கமிஷன் கடை உரிமையாளர்கள் இருதயம், செபஸ்தியான், மாணிக்கம், சந்தியாகு, சார்லஸ், சேசு அருள், அந்தோணிச்சாமி, சூசை ரெத்தினம், தோமையார், தாமஸ் ஆரோக்கியராஜ், ஜெரால்டு, ஸ்டீபன் பன்னீர்செல்வம், குழந்தை தனிஸ்லாஸ், ஜார்ஜ் தாமஸ், அந்தோணி, குழந்தை ராஜ், சேவியர், சூசை மாணிக்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதுப்பிக்கப்பட்டுள்ள சடையால் புதூர் கிறிஸ்து அரசர் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
வெள்ளிச்சந்தை அருகே உள்ள சடையால்புதூரில் கிறிஸ்து அரசர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்டுள்ள ஆலயத்தில் அர்ச்சிப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
விழாவில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தை அர்ச்சித்து வைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை கிளேட்டன் தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள் கட்டிட பணிக்குழுவினர் பங்கு பேரவையினர் இனைந்து செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை புறநகர் பகுதியான திருநின்றவூரைச் சேர்ந்த ஸ்ரீமத் ராமானுஜ கைங்கர்ய அறக்கட்டளை பிரதிநிதிகள் கோவிலுக்கு 2 குடைகளை காணிக்கையாக வழங்கினர்.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கோவிலில் நேற்று பிரம்மோற்சவ விழா கருடசேவை நடந்தது. அதையொட்டி தமிழகத்தில் சென்னை புறநகர் பகுதியான திருநின்றவூரைச் சேர்ந்த ஸ்ரீமத் ராமானுஜ கைங்கர்ய அறக்கட்டளை பிரதிநிதிகள் கோவிலுக்கு 2 குடைகளை காணிக்கையாக வழங்கினர்.
அந்தக் குடைகளை கோவிலில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பெற்றுக் கொண்டார். அந்தக் குடைகள் கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு பயன்படுத்தப்பட்டது.

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் வெள்ளி தேர்த்திருவிழாவையொட்டி கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.
பொள்ளாச்சி கடை வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் வெள்ளி தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 15-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 22-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. பின்னர் பெண்கள் வீடுகளில் இருந்து மஞ்சள் நீர் கொண்டு வந்து கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.
இதனால் பக்தர்கள் கூட்டம் காரணமாக கடை வீதியில் மாரியம்மன் கோவில் வழியாக கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தடையை மீறி வாகனங்கள் செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் தடுப்புகளை தள்ளி வைத்து விட்டு கார், ஆட்டோக்கள் சென்று வருவதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே போலீசார் கோவில் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவிழா முடியும் வரை இந்த கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி வழிபடுவார்கள். வருகிற 1-ந் தேதி கம்பத்தில் கோவில் பூவோடு வைக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து 4-ந்தேதி முதல் விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து பூவோடு ஏந்தி கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 5-ந்தேதி காலை 10 மணிக்கு கோவிலில் கொடியேற்று விழா நடைபெறுகிறது. 8-ந்தேதி இரவு அபிஷேகம் நடக்கிறது. வருகிற 9-ந்தேதி காலை 6 மணிக்கு மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 3 நாட்கள் தொடர்ந்து வெள்ளித்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறும். இந்த நாட்களில் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
10-ந்தேதி 2-ம் நாள் தேரும், 11-ந்தேதி 3-ம் நாள் தேரும் வீதி உலா வந்து நிலைக்கு வருதல், அதை தொடர்ந்து பாரிவேட்டை, தெப்பத்தேர் விழா நடைபெறுகிறது. 12-ந்தேதி காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 14-ந்தேதி இரவு 8 மணிக்கு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெங்கடாசலபதிக்கு, பல்வேறு பெயர்களில் திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
வெங்கடாசலபதி என்றாலே நம் நினைவுக்கு வருவது, திருப்பதி ஏழுமலையான் கோவில்தான். ஆனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெங்கடாசலபதிக்கு, பல்வேறு பெயர்களில் திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
தலைமலை
நாமக்கல் மாவட்டத்தில் முசிறியில் இருந்து நாமக்கல் செல்லும் வழித்தடத்தில் மணல்மேடு என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து வடக்கு திசையில் நீலயாம்பட்டி அடுத்துள்ளது செவிந்தப்பட்டி. இங்குதான் தலைமலை வெங்கடாசலபதி கோவில் இருக்கிறது. மூலவர் பெயர், வெங்கடாசலபதி. தாயார் திருநாமம், ஸ்ரீதேவி-பூதேவி. 850 அடி உயரம் கொண்ட இந்த மலை மீது ஏறிச்செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மலையின் மீதுள்ள கோவிலைச் சுற்றிவர வழி கிடையாது. ஆனாலும் சில பக்தர்கள் கோவில் சுவற்றின் மீது ஏறியபடி கோவிலை ஆபத்தாக வலம் வருகிறார்கள். பல்வேறு அரிய வகை மூலிகைகள் கொண்ட மலை என்பதால், அதனைச் சிறப்பிக்கும் வகையில் ‘தலைமலை’ என்று அழைக்கிறார்கள். இத்தல இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார்.
சாத்தூர்
விருதுநகரில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சாத்தூர். இங்கு பாய்ந்தோடும் ‘வைப்பாறு’ நதியின் வடகரையில் இருக்கிறது, ஸ்ரீதேவி- பூதேவி உடனாய வெங்கடாசலபதி திருக்கோவில். மூலவர் பெயர், வெங்கடாசலபதி. பக்தர்கள் ‘சாத்தூரப்பன்’ என்றும் அழைக்கிறார்கள். எட்டையபுரம் ஜமீன்தார்கள், அந்த காலத்தில் இந்த ஆலயத்தின் மீது ஈடுபாடு கொண்டு, பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள். திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், இந்த ஆலயத்து இறைவனைப் பற்றி பாடியிருக்கிறார். எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி சுப்பிரமணி பாரதியும் இந்த ஆலய பெருமாளை வழிபட்டதற்கான சான்றுகள் உள்ளன.
சிந்துப்பட்டி
மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி செல்லும் பாதையில் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சிந்துப்பட்டி. இங்குள்ள வெங்கடேசப் பெருமாள் ஆலயம், சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமையானது. விஜயநகர மன்னர்கள் ஆட்சி காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மூலவர்- வெங்கடேசப் பெருமாள், தாயார்- அலர்மேலுமங்கை. சந்திரகிரி பகுதியில் இருந்து இங்குவந்த நாயக்கர்கள், புளியமரங்கள் அடர்ந்திருந்த இந்தப் பகுதியில், தாங்கள் பூஜை செய்து வந்த மூர்த்திகளை, பெருமாள் உத்தரவுப்படி பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர். கோவில் கொடிமரத்தில், கருப்பண்ண சுவாமியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தல பெருமாள், நின்ற கோலத்தில் வீற்றிருந்து அருள்கிறார்.
நன்னகரம்
திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் 63 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, நன்னகரம் என்ற ஊர். இங்கு பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. மூலவர்- பிரசன்ன வெங்கடாசலபதி, தாயார் - ஸ்ரீதேவி மற்றும் பூதேவி. குலசேகர பாண்டியனின் ஆட்சி காலம் அது. அவனது அரசவைக்கு கர்க முனிவர் என்பவர் வந்தார். மன்னன் மனக் குழப்பத்திலும், துயரத்திலும் இருப்பதை அறிந்தவர், ‘துன்பமும், மனக்குழப்பமும் நீங்க, தென்னகம் சென்று திருவேங்கமுடையானுக்கு திருக்கோவில் ஒன்று கட்டு’ என்று உத்தரவிட்டார். அதன்படி மன்னன், நிர்மாணித்ததே இந்த ஆலயம் என்று சொல்லப்படுகிறது.
கிருஷ்ணாபுரம்
திருநெல்வேலியில் இருந்து தென்கிழக்கில் சுமார் 13 கிலோமீட்டர் சென்றால், கிருஷ்ணாபுரம் என்ற ஊர் வரும். தாமிரபரணி ஆற்றின் கரையில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள வெங்கடாசலபதி கோவிலில், மூலவராக பெருமாள் அருள்பாலிக்கிறார். தாயார் திருநாமம், பத்மாவதி என்பதாகும். 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த ஆலயத்திற்கு என்று தல வரலாறு எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இந்த ஆலயத்தின் கல்தூண்கள் அனைத்தும் கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன. ஒரு முறை சிற்பி ஒருவர் இந்தப் பகுதிக்கு வந்துள்ளார். அவர் இங்கிருக்கும் பாறைகளில் செந்நிற ரேகைகள் ஓடுவதைக் கண்டு பரவசடைந்து, தன்னுடைய கற்பனையில் பல சிற்பங்களை செதுக்கி, ஆலயத்திற்கு அர்ப்பணித்ததாக கூறப்படுகிறது.

ஸ்ரீகாளஹஸ்தியில் பிரம்மோற்சவ விழா தொடங்குவதால் பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனால் கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.வரவேற்பு தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவில் கோபுரங்கள் மற்றும் சிவன் அம்பாள் உலாவரும் மாடவீதிகளில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வீதி உலாவிற்கு பயன் படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் சீரமைப்பு செய்து வண்ணம் பூசப்பட்டு உள்ளன. கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலை அரங்கம் சீரமைக்கப்பட்டுள்ளது. கோவில் அருகில் கூடுதல் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சொர்ணமுகி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக கரைகளில் தற்காலிக குளியலறைகள், உடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.இதுதவிர பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 1-ந் தேதி மகா சிவராத்திரியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி அன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரி அருங்காட்சியகத்தில் உள்ள இந்த சிலையில் சரஸ்வதிதேவியை ஒரு நதி என்பதைப் போல உருவகப்படுத்தியே செதுக்கப்பட்டிருக்கிறது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது, இந்த சரஸ்வதிதேவியின் சிலை. மிகவும் நுணுக்கமான சிற்ப வேலைபாடுகளோடு அமைந்த இந்த சிலையானது, யானையின் தந்தத்தில் உருவாக்கப்பட்டதாகும். சரஸ்வதியை, கல்விக்கு அதிபதியாகவும், பிரம்மனின் துணையாகவும் புராணங்கள் கூறினாலும், இந்திய தேசத்தில் சரஸ்வதி என்ற நதி இருந்ததாகவும் சில தகவல்கள் சொல்கின்றன.
இந்த சிலையில் சரஸ்வதிதேவியை ஒரு நதி என்பதைப் போல உருவகப்படுத்தியே செதுக்கப்பட்டிருக்கிறது. அதற்குச் சான்றாகத்தான், சரஸ்வதிதேவியின் இடது கரம், புனித நீர் கொண்ட பானையை ஏந்தியிருக்கிறது.

குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய ஒரு சிறந்த விரதம் தான் வியாழக்கிழமை விரதம். இந்த விரதத்தின் மகிமை பற்றியும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.
வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த வியாழ விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.
பிரகஸ்பதி எனும் குரு பகவானை குறித்து மேற்கொள்ளப்படும் இந்த வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து தலைக்கு ஊற்றி குளித்து முடித்து விட வேண்டும். பிறகு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அருகிலுள்ள கோயிலின் நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்து, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் இருப்பது விரதத்தின் முழுமையன பலன்களை தரும். அன்றைய தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது நல்லது. மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை ஏழ்மையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.
பலன்கள்
குரு பகவானுக்குரிய இந்த வியாழக்கிழமை விரதத்தை முறையாக மேற்கொள்பவர்களுக்கு வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும். சரியான காலத்தில் திருமணம் நடக்கும். ஜாதகத்தில் குரு கிரக தோஷம் இருப்பவர்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அவை நீங்கும். தொழில், வியாபாரங்களில் சரியான வருமானம் இல்லாதவர்கள், குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இல்லாதவர்கள் இந்த விரதம் மேற்கொள்வதால் குரு பகவானின் அருள் கிடைக்கப்பெற்று தொழில், வியாபாரங்களில் சிறந்து செல்வ வளம் பெருகும். மேலும் எதிர்பார்க்காத சிறந்த வாழ்க்கை உண்டாகும் என்பது நம்பிக்கை.

நடராஜரும், அவரது நடனத்திற்கு ஏற்ப தாளமிடும் சிவகாமி அம்மையும், புல்லாங்குழல் இசைக்கும் மகாவிஷ்ணும் வேறு எந்த ஆலயங்களிலும் காண முடியாத கலைநயம் மிக்க படைப்பு ஆகும்.
கும்பகோணம் அருகே உள்ள நாகேஸ்வரா் கோவில், நாக தோஷ வழிபாட்டிற்கு மிகவும் சிறப்புபெற்றது. இந்த ஆலயத்தில் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்ததும், இடது பக்கத்தில் நந்தவனமும், சிங்க முக தீர்த்தக் கிணறும் இருக்கும். வலது பக்கத்தில் பெரிய நாயகி சன்னிதி மற்றும் ஆனந்த தாண்டவ நடராஜர் சபை காணப்படும்.
இந்த சபையானது, தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்பானதாகும். இந்த சபையை இரண்டு குதிரைகள், நான்கு யானைகள் இழுப்பதுபோல் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் தேர் சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்திற்குள் நுழைந்தாலே, ஒருவரது கிரக தோஷம் நீங்கிவிடும் என்கிறார்கள். இங்குள்ள நடராஜரும், அவரது நடனத்திற்கு ஏற்ப தாளமிடும் சிவகாமி அம்மையும், புல்லாங்குழல் இசைக்கும் மகாவிஷ்ணும் வேறு எந்த ஆலயங்களிலும் காண முடியாத கலைநயம் மிக்க படைப்பு ஆகும்.

திருப்பதிக்கு வந்துவிட்ட பக்தர்களில் சிலர் திருமலைக்கு செல்லாமலேயே திருச்சானூர், பத்மாவதி தாயார், கபிலேஸ்வரர் சாமி, சீனிவாசமங்காபுரம் என சில கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து திரும்பி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக 3 இடங்களில் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி செல்கின்றனர். ஆனால் அவர்கள் தரிசனம் செய்ய 3 அல்லது 4 நாட்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளது.
இதனால் திருப்பதியில் 3 அல்லது 4 நாட்கள் விடுதிகளில் தங்குவதற்கும், ஓட்டல்களில் உணவு உண்பதற்கும் கொண்டு வந்த பணம் கரைந்து விடுகிறது.
பலர் டிக்கெட் வழங்கும் கவுண்டர் பகுதி அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் அல்லது சீனிவாசம், கோவிந்தராஜ சாமி சத்திரம் ஆகிய இடங்களில் உணவை சமைத்து அங்கேயே படுத்து தூங்கி 4 நாட்களை கஷ்டப்பட்டு கழிக்கின்றனர்.
இதனை எதிர்பார்க்காமல் திருப்பதிக்கு வந்துவிட்ட பக்தர்களில் சிலர் திருமலைக்கு செல்லாமலேயே திருச்சானூர், பத்மாவதி தாயார், கபிலேஸ்வரர் சாமி, சீனிவாசமங்காபுரம் என சில கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து திரும்பி வருகின்றனர்.
இலவச தரிசனத்திற்காக இன்று முதல் தினமும் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் திருப்பதியில் நேரடியாக வழங்கப்படுகிறது. அந்த டிக்கெட்டில் 3 அல்லது 4 நாட்களுக்குப் பின்னரே தரிசனம் செய்ய நாள், நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களை வழக்கம்போல் திருமலைக்கு அனுமதிக்க வேண்டும். அவர்கள் ஸ்ரீ வைகுண்டம் காம்ப்ளக்சில் இருந்தால் தங்க இடமும், உண்ண உணவும் தேவஸ்தனம் வழங்கிவிடும்.
அதனால் ஓரிரு நாட்கள் ஆனாலும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் தாமதமானாலும் சாமியை தரிசித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்புவார்கள் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மாசி மகா சிவராத்திரி விழாவையொட்டி ராமேசுவரம் கோவிலில் சுவாமி- அம்பாள் ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளியதால் கோவில் நடை மூடப்பட்டது.
ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 3-வது நாளான நேற்று காலை 5.39 மணி அளவில் சாமி-அம்பாள் கோவிலில் இருந்து தங்க கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் ரதவீதிகளில் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைதொடர்ந்து காலை 8 மணிக்கு சாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் கோவிலிலிருந்து எழுந்தருளி ரதவீதி சாலை, நடுத்தெரு, திட்டக்குடி சவுந்தரி அம்மன் கோவில் தெரு வழியாக கெந்தமாதன பர்வதத்தில் உள்ள ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர்.
இதைதொடர்ந்து அங்கு மாலை 6 மணிக்கு சாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு கோவிலுக்கு வந்தனர். பின்னர் பள்ளியறை பூஜை நடைபெற்று கோவில் நடையானது உடனடியாக மூடப்பட்டது.
சுவாமி, அம்பாள் ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளியதால் நேற்று காலை 8 மணி முதல் இரவு வரையிலும் பக்தர்கள் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும், தரிசனம் செய்யும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல் திருவிழாவின் 4-வது நாளான இன்று இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி கைலாச வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 9-வது நாள் திருநாளான மார்ச் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று சாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தேரோட்டம், தெப்பத்திருவிழா, திருக்கதவு திறக்க அடைக்கபாடும் நிகழ்ச்சி என விழாக்கள் நடந்து முடிந்தது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தேரோட்டம், தெப்பத்திருவிழா, திருக்கதவு திறக்க அடைக்கபாடும் நிகழ்ச்சி என விழாக்கள் நடந்து முடிந்தது. இந்தநிலையில் இரவு தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் போன்ற திருமறைகள் யானை வாகனத்தில் வண்ண மலர்களாலும், ஆபரணங்களாலும் அலங்கரித்து வீதிஉலா நடந்தது. விழாவில் கோவில் ஓதுவாமூர்த்தி பரஞ்சோதி தேசிகர் தலைமையில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்த ஓதுவாமூர்த்திகள் முன்செல்ல யானை வாகனத்தில் திருமறைகள் ஊர்வலமாக வீதிஉலா நடந்தது.