என் மலர்

  வழிபாடு

  வேதாரண்யேஸ்வரர் கோவில்
  X
  வேதாரண்யேஸ்வரர் கோவில்

  வேதாரண்யேஸ்வரர் கோவில் மாசிமக விழா திருமறை உற்சவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தேரோட்டம், தெப்பத்திருவிழா, திருக்கதவு திறக்க அடைக்கபாடும் நிகழ்ச்சி என விழாக்கள் நடந்து முடிந்தது.
  வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

  இந்த ஆண்டு மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தேரோட்டம், தெப்பத்திருவிழா, திருக்கதவு திறக்க அடைக்கபாடும் நிகழ்ச்சி என விழாக்கள் நடந்து முடிந்தது. இந்தநிலையில் இரவு தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் போன்ற திருமறைகள் யானை வாகனத்தில் வண்ண மலர்களாலும், ஆபரணங்களாலும் அலங்கரித்து வீதிஉலா நடந்தது. விழாவில் கோவில் ஓதுவாமூர்த்தி பரஞ்சோதி தேசிகர் தலைமையில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்த ஓதுவாமூர்த்திகள் முன்செல்ல யானை வாகனத்தில் திருமறைகள் ஊர்வலமாக வீதிஉலா நடந்தது.
  Next Story
  ×