search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தேர் சக்கரம்
    X
    தேர் சக்கரம்

    தேர் சக்கரத்தில் 12 ராசிகள்

    நடராஜரும், அவரது நடனத்திற்கு ஏற்ப தாளமிடும் சிவகாமி அம்மையும், புல்லாங்குழல் இசைக்கும் மகாவிஷ்ணும் வேறு எந்த ஆலயங்களிலும் காண முடியாத கலைநயம் மிக்க படைப்பு ஆகும்.
    கும்பகோணம் அருகே உள்ள நாகேஸ்வரா் கோவில், நாக தோஷ வழிபாட்டிற்கு மிகவும் சிறப்புபெற்றது. இந்த ஆலயத்தில் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்ததும், இடது பக்கத்தில் நந்தவனமும், சிங்க முக தீர்த்தக் கிணறும் இருக்கும். வலது பக்கத்தில் பெரிய நாயகி சன்னிதி மற்றும் ஆனந்த தாண்டவ நடராஜர் சபை காணப்படும்.

    இந்த சபையானது, தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்பானதாகும். இந்த சபையை இரண்டு குதிரைகள், நான்கு யானைகள் இழுப்பதுபோல் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் தேர் சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்திற்குள் நுழைந்தாலே, ஒருவரது கிரக தோஷம் நீங்கிவிடும் என்கிறார்கள். இங்குள்ள நடராஜரும், அவரது நடனத்திற்கு ஏற்ப தாளமிடும் சிவகாமி அம்மையும், புல்லாங்குழல் இசைக்கும் மகாவிஷ்ணும் வேறு எந்த ஆலயங்களிலும் காண முடியாத கலைநயம் மிக்க படைப்பு ஆகும்.
    Next Story
    ×