என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாராக, ராமபிரான் அவதரித்தார். அப்போது லட்சுமணன் புளியமரமாக நின்று அவருக்கு நிழல் தந்து சேவை புரிவதாக ஒரு கதை சொல்லப்படுகிறது.
    ராமாவதாரம் முடிவுறும் தருவாயில் இருந்தது. இன்னும் சில நாட்களில், ராமபிரான் தன்னுடைய அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்ல வேண்டும். அதைப் பற்றி ரகசியமாக பேசுவதற்காக, ராமபிரானை சந்திக்க எமதர்மன் வந்திருந்தார். ராமரும், எமதர்மனும் ஒரு அறைக்குள் நுழைந்தனர். அதற்கு முன்பாக தம்பி லட்சுமணனை அழைத்த ராமபிரான், “நாங்கள் பேசும் சமயத்தில் யார் வந்தாலும், உள்ளே அனுமதிக்க வேண்டாம்” என்று கட்டளையிட்டுச் சென்றார்.

    ஆனால் விதி துர்வாச முனிவரின் உருவத்தில் வந்தது. ராமபிரானும், எமதர்மனும் இருந்த அறைக்கு வெளியே காவலுக்கு நின்று கொண்டிருந்தான், லட்சுமணன். அந்தநேரம் பார்த்து துர்வாச முனிவர் அங்கு வந்தார். கோபத்திற்கு பெயர் போன அவர் லட்சுமணனிடம், “நான் உடனடியாக ராமபிரானைப் பார்க்க வேண்டும். என்னை உள்ளே அனுமதி” என்று கேட்டார்.

    அதற்கு லட்சுமணன் மறுப்பு தெரிவித்தான். ஆனால் துர்வாசரோ, “நீ என்னை அனுமதிக்காவிட்டால், இந்த அயோத்தி நகரையே எரித்து சாம்பலாக்கி விடுவேன்” என்று கர்ஜித்தார்.

    இதனால் பயந்து போன லட்சுமணன், வேறு வழியின்றி அவரை உள்ளே அனுமதித்தான்.

    ஆனால் தன்னுடைய கட்டளையை மீறிய லட்சுமணன் மீது கோபம் கொண்ட ராமபிரான், “நீ மரமாகப் போ” என்று சபித்தார். அதைக் கேட்டதும் கண் கலங்கிய லட்சுமணனைக் கண்டு, ராமபிரானும் வருந்தினார். கோபத்தில் இப்படி ஒரு சாபத்தை தம்பிக்கு கொடுத்து விட்டோமே என்று மனம் கலங்கினார்.

    இப்படியொரு சாபத்தை அளித்ததற்காக தன்னை மன்னிக்கும்படி ராமபிரான் கேட்டார். பதறிப்போன லட்சுமணன், “அண்ணா.. நீங்கள் சாபம் அளித்ததற்காக நான் கண் கலங்கவில்லை. இதுநாள் வரை உங்களுக்கு சேவை செய்வதே என்னுடைய பாக்கியம் என்று கருதினேன். இந்த சாபத்தால் உங்களுக்கு நான் சேவை செய்ய முடியாமல் போய் விடுமே என்றுதான் வருந்துகிறேன்” என்றான்.

    அதைக் கேட்டு மகிழ்ந்து போன ராமபிரான், “லட்சுமணா.. எல்லாம் விதிப்படியே நடக்கிறது. சீதையை காட்டுக்கு அனுப்பிய பாவத்திற்காக, நானும் பூலோகத்தில் 16 ஆண்டுகள் அசைவின்றி தவ வாழ்வில் ஈடுபட வேண்டியதிருக்கிறது. அப்போது மரமாக மாறும் நீயே, எனக்கு நிழல் தரும் பேறு பெறுவாய்” என்றார்.

    அதன்படியே திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாராக, ராமபிரான் அவதரித்தார். அப்போது லட்சுமணன் புளியமரமாக நின்று அவருக்கு நிழல் தந்து சேவை புரிவதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. இந்த மரத்தை ‘தூங்காப்புளி’ என்பார்கள். ஏனெனில் இதன் இலைகள் எப்போதும் மூடுவதே இல்லை. மரமாக இருக்கும் லட்சுமணன், ராமரை கண் இமைக்காமல் பாதுகாப்பதாக ஐதீகம்.
    திருவண்ணாமலை மலையைச் சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில், ஓரிடத்தில் மட்டும் இப்பெருமலையை ஒரு சிறு மலை மறைத்து நிற்கிறது. இந்த மலையில் கண்ணப்பனார் கோவில் இருக்கிறது.
    திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவில் பஞ்ச பூதத் தலங்களில் ஒன்று. இங்கு சிவபெருமானே, மலையாக வீற்றிருப்பதாக ஐதீகம். இந்த மலையைச் சுற்றிதான் கிரிவலப் பாதை அமைந்துள்ளது. 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த கிரிவலப் பாதையில், ஓரிடத்தில் மட்டும் இப்பெருமலையை ஒரு சிறு மலை மறைத்து நிற்கிறது. உண்ணாமுலையம்மன் பெயரில் இந்த சிறு மலை அழைக்கப்படுகிறது. சக்தி தனக்குள் சிவனை நிறுத்தி, மறைத்து வைத்திருக்கும் சூட்சுமம் நிறைந்ததாக இந்த இடம் ஆன்மிகவாதிகளால் போற்றப்படுகிறது.

    இந்த மலையில் கண்ணப்பனார் கோவில் இருக்கிறது. ஒற்றைப் பாறையில் அமைந்த திருக்கோவில் இது. உள் கிரிவலப்பாதை முடியும் இடமாக இந்த பகுதி உள்ளது. ஆரம்ப காலத்தில் ரமண மகரிஷி இங்கு அடிக்கடி வந்து சென்றதாக சொல்கிறார்கள். இந்த ஆலயத்தின் கீழ் பகுதியில் ஒரு குகை உள்ளது. முன்காலத்தில் சித்தர்கள் பலரும் தவம் செய்த குகை இது என்கிறார்கள். திருவண்ணாமலை மலையில் பழங்காலத்தில் புலிகள் வாழ்ந்ததாகவும், சித்தர்கள் வாழ்ந்த இந்தக் குகைக்குள் புலிகள் நுழைவதில்லை என்பதால், இதற்கு ‘புலிப்புகா குகை’ என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

    காளஹஸ்தி செல்ல முடியாதவர்கள், நாகதோஷம், ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலில் வந்து வழிபட்டால், தோஷங்கள் விலகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளில் உற்சவர்களான சோமஸ்கந்தமூர்த்தி-காமாட்சி தாயார் பூத வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை உற்சவர்களான சோமஸ்கந்தமூர்த்தி-காமாட்சி தாயார் பூத வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

    அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    திருப்பதி சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் இரவு கருடசேவை நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை பல்லக்கு சேவை நடந்தது.

    அதில் உற்சவர் கல்யாணவெங்கடேஸ்வரசாமி மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இரவு கருடசேவை நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்க லட்சுமி ஆரம் திருமலையில் இருந்து சீனிவாசமங்காபுரம் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் நேற்று இரவு கருடசேவை நடந்தது. அதில் எழுந்தருளிய உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு அணிவித்து அலங்காரம் செய்வதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்க லட்சுமி ஆரம் திருமலையில் இருந்து சீனிவாசமங்காபுரம் கோவிலுக்கு நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தங்க லட்சுமி ஆரத்தை தலையில் சுமந்தபடி கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலுக்கு ஊர்வலமாகக் கொண்டு சென்று கோவில் அர்ச்சகரிடம் சமர்ப்பித்தாா். கோவிலுக்கு வந்த அதிகாரிகளை கோவில் துணை அதிகாரி, அர்ச்சகர்கள் வரவேற்றனர். அந்தத் தங்க லட்சுமி ஆரம் கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு அணிவித்து, அலங்காரம் செய்யப்பட்டது.
    கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு அலங்காரம் செய்வதற்காக திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலைகள், கிளிகள் ஊர்வலமாக சீனிவாசமங்காபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று இரவு கருடசேவை நடந்தது. அதில் எழுந்தருளிய உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு அலங்காரம் செய்வதற்காக நேற்று காலை திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலைகள், கிளிகள் ஊர்வலமாக சீனிவாசமங்காபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அந்த மாலைகளில் ஒன்றை மூலவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கும், மற்றொரு மாலைைய இரவு கருடசேவையின்போது கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டது. ஆண்டாள் சூடிய மாலைகள், கிளிகள் சீனிவாசமங்காபுரத்துக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் பெரிய, சின்னஜீயர்சுவாமிகள், தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், கோவிந்தராஜசாமி கோவில் துணை அதிகாரி ராஜேந்திரடு, கோவில் அர்ச்சகர் பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    திருச்சேறை ஸ்தலத்தில் (கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவரை வழிபட்ட திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.
    விரித்த பல்கதிர்கொள் சூலம்
    வெடிபடு தமருகம்கை
    தரித்ததோர் கோலகால பைரவனாகி
    வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
    ஒண்திருமேனி வாய் விள்ளச்
    சிரித்தருள் செய்தார் சேறைச்
    செந்நெறிச் செல்வனாரே

    திருச்சேறை ஸ்தலத்தில் (கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவர் அற்புதமாகக் காட்சி தருகிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.
    தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன கால சம்ஹார பைரவருக்கு மாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதை முன்னிட்டு பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜ சுவாமி கோவிலில் அஷ்ட பைரவர், வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் உள்ள பைரவர் கோவில், உள்ளிட்ட கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    மகா சிவராத்திரி விழாவையொட்டி வருகிற 1-ந் தேதியன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நள்ளிரவு விடிய, விடிய அபிஷேக பூஜைகள் நடைபெறும். எனவே பக்தர்கள் இரவு முழுவதும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 1-ந் தேதி இரவு மகா சிவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது. மகா சிவராத்திரி விழாவையொட்டி 1-ந் தேதி இரவு முதல் கோவில் திறக்கப்பட்டு அபிஷேக, தீபராதனைகள் 2-ந் தேதி அதிகாலை வரை நடைபெறும்.

    அன்றைய தினம் சுந்தரேசுவரர் சுவாமி, மீனாட்சி அம்மன் மற்றும் உற்சவர் சன்னதிகளில் விடிய, விடிய பூஜைகள் நடைபெறும். எனவே பக்தர்கள் அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், பன்னீர், இளநீர், பன்னீர், பழ வகைகள், தேன், மஞ்சள்பொடி, நெய், எண்ணெய் என அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை 1-ந் தேதி மாலைக்குள் கோவிலுக்குள் உள்ள உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம். பக்தர்கள் இரவு முழுவதும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    சிவராத்திரி விழாவையொட்டி அன்று இரவு 4 கால பூஜைகள் நடைபெறும். அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை இரவு 10 மணிக்கு தொடங்கி 10.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், 3-ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், 4-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும் நடைபெறும்.

    அதே போன்று சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை இரவு 12 மணிக்கு தொடங்கி 12.45 மணி வரையிலும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும், 4-ம் கால பூஜை 2 மணிக்கு தொடங்கி 2.45 மணி வரையிலும் நடைபெறும். அதை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அர்த்த சாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெற உள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிக்கலாம்....தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த வெங்கடாசலபதி ஆலயங்கள்
    விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.
    1. திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவனின் பரிபூரண அன்பைப் பெறலாம்.
    2. செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.
    3. புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.
    4. வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.
    5. வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
    6. சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
    7. ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

    ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும். எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.
    பிரசித்திப் பெற்ற ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கைலாசகிரி மலையில் உள்ள பக்தகண்ணப்பர் கோவிலில் பக்தகண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பஞ்ச பூத தலங்களில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வாயு தலமாக விளங்குகிறது. இக்கோவில் தென் கயிலாயமாக அழைக்கப்படுகிறது. ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் என்பதற்கு ‘ஸ்ரீ’ என்றால் சிலந்தி, ‘காள’ என்றால் 5 தலை பாம்பு, ‘ஹஸ்தி’ என்றால் யானை என்பது பொருளாகும்.

    இந்த 3 ஜீவராசிகளும் சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்டதால், பக்தியை மெச்சிய சிவன் தன்னுடன் ஐக்கியப்படுத்தி கொண்டார். இதனால் கோவிலின் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சிவன் பெயராலேயே ஊரின் பெயரும் ஸ்ரீகாளஹஸ்தி என விளங்குகிறது.

    சுயம்பு மூலவரான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசிக்க வந்த ஆதிசங்கரர், மூலவர் ஞானப்பிரசுனாம்பிைக தாயார் எதிரில் ‘ஸ்ரீசக்ரம்’ பிரதிஷ்டை செய்துள்ளார். அப்போது கோவிலில் படிக லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்துள்ளார். மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சர்ப்ப வடிவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண தலமாக திகழ்கிறது.

    பிரசித்திப் பெற்ற ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று கைலாசகிரி மலையில் உள்ள பக்தகண்ணப்பர் கோவிலில் பக்தகண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இருந்து உற்சவர் பக்தகண்ணப்பர் சிறப்பு அலங்காரத்தில் கைலாசகிரி மலைக்கு ஊர்கலமாகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு உற்சவருக்கு சிறப்புப்பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க பிரதான அர்ச்சகர்கள் கொடியேற்றினர். அதன் பிறகு நைவேத்தியம், தீபாராதனை நடந்தது.

    மேற்கண்ட நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.பியப்பு.மதுசூதன் ரெட்டி தம்பதியர், கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    திருநள்ளாறில் உலகபுகழ்பெற்ற சனீஸ்வரபகவான் தர்பாரண்யேஸ்வரர் கோவிலை சேர்ந்த நளநாராயணப்பெருமாள் கோவில் 5 நாள் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருநள்ளாறில் உலகபுகழ்பெற்ற சனீஸ்வரபகவான் தர்பாரண்யேஸ்வரர் கோவிலை சேர்ந்த நளநாராயணப்பெருமாள் கோவில் 5 நாள் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத நளநாராயணப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிகம்பம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் சிறப்பு ஹோமம் நடத்தி, வேதமந்திரங்கள் கூறி கொடிக்கம்பத்தில் கருடக்கொடியை ஏற்றி வைத்தனர்.

    பின்னர் சாமிக்கும், கொடி கம்பத்திற்கும் சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சனீஸ்வரர் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
    ×