என் மலர்

  வழிபாடு

  ஆண்டாள் சூடிய மாலைகள், கிளிகள் சீனிவாசமங்காபுரத்துக்கு அனுப்பி வைப்பு
  X
  ஆண்டாள் சூடிய மாலைகள், கிளிகள் சீனிவாசமங்காபுரத்துக்கு அனுப்பி வைப்பு

  பிரம்மோற்சவ விழா: ஆண்டாள் சூடிய மாலைகள், கிளிகள் சீனிவாசமங்காபுரத்துக்கு அனுப்பி வைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு அலங்காரம் செய்வதற்காக திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலைகள், கிளிகள் ஊர்வலமாக சீனிவாசமங்காபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று இரவு கருடசேவை நடந்தது. அதில் எழுந்தருளிய உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு அலங்காரம் செய்வதற்காக நேற்று காலை திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலைகள், கிளிகள் ஊர்வலமாக சீனிவாசமங்காபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  அந்த மாலைகளில் ஒன்றை மூலவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கும், மற்றொரு மாலைைய இரவு கருடசேவையின்போது கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டது. ஆண்டாள் சூடிய மாலைகள், கிளிகள் சீனிவாசமங்காபுரத்துக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் பெரிய, சின்னஜீயர்சுவாமிகள், தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், கோவிந்தராஜசாமி கோவில் துணை அதிகாரி ராஜேந்திரடு, கோவில் அர்ச்சகர் பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×