search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரம்மோற்சவம்"

    • 5-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
    • 6-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு திருமஞ்சனம், அனுக்ஞை, சேனை முதல்வர் புறப்பாடு, மிருத்சங்கிரகணம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் ஆகியவை நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு திருப்பாவை பாடல், தொடர்ந்து காலை 7.20 மணிக்கு கருட கொடி ஏற்றப்பட்டது. அதையடுத்து திருமலை அப்பன் அலங்காரத்தில் உபநாச்சியாருடன் வீதி உலாவும், இரவு ஹம்ச வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (திங்கட்கிழமை) திருப்பல்லக்கு, இரவு சூரிய பிரபை வாகனத்தில் சாமி வீதி உலா, நாளை (செவ்வாய்க்கிழமை) திருப்பல்லக்கு, சேஷ வாகனத்தில் சாமி வீதி உலா, நாளை மறுநாள் (புதன்கிழமை) தங்க கருட சேவை, 29-ந்தேதி நாச்சியார் திருக்கோலம், ஊஞ்சல் சேவை, 30-ந்தேதி யானை வாகனம், 1-ந்தேதி சூர்ணாபிஷேகம், 108 கலச திருமஞ்சனம், 2-ந்தேதி குதிரை வாகனம், வேடுபறி உற்சவம், 3-ந்தேதி சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடக்கிறது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். தொடர்ந்து கோபுர வாசலில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. 10-வது நாள் திருவிழாவான 4-ந்தேதி திருமஞ்சனமும், மாலையில் துவாதச ஆராதனம், புஷ்பயாக உற்சவம், துவஜா அவரோஹணம், பூர்ணாகுதி நடக்கிறது. 5-ந்தேதி திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 6-ந்தேதி காலையில் திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

    • பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.
    • காலையும், மாலையும் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் உற்சவ உலா மாட வீதியில் நடைபெற்றது.

    பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையும், மாலையும் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் உற்சவ உலா மாட வீதியில் நடைபெற்றது.

    இந்த நிலையில் ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவு நாளான நேற்று மதியம் 12 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் வலம் வந்து அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சூல ரூபத்திற்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க சூலத்திற்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தனர். பின்னர் சாமிக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 13-ந்தேதி காலையில், தேரோட்டம் நடைபெறும்.
    • 15-ந்தேதி கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறும்.

    திருவள்ளூர் அடுத்த திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில் ஆனிபிரமோற்சவ விழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று கருட சேவை நடைபெற்றது. இதையொட்டி திருவள்ளூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 13-ந்தேதி காலையில், தேரோட்டம் நடைபெறும். வரும் 15-ந்தேதி மாலை கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    ×