என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மகா சிவராத்திரி, பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு வருகிற 28ம் தேதி (திங்கட்கிழமை) முதல் 3-ந் தேதி (வியாழக்கிழமை) வரை சதுரகிரிக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற சுந்தர- சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் மலைக்கு செல்ல மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் வரும் மகா சிவராத்திரி தினத்தன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதன்படி இந்த ஆண்டு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மகா சிவராத்திரி வருகிறது. இதையொட்டி சதுரகிரி கோவிலுக்கு திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மகா சிவராத்திரி, பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு வருகிற 28ம் தேதி (திங்கட்கிழமை) முதல் 3-ந் தேதி (வியாழக்கிழமை) வரை சதுரகிரிக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மேற்கண்ட நாட்களில் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வேண்டும். பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்க அனுமதி இல்லை. மலையேறும் பக்தர்கள் அங்குள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலை அடிவாரம் மற்றும் கோவில் பகுதியில் செய்யப்பட்டுள்ளது.
சிவராத்திரி தினமான 1-ம் தேதி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு விடிய விடிய இரவு முழுவதும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம்....திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் யானை வாகனச் சேவையில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமன் வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், ‘கோதண்டராமர் அலங்காரத்தில்’ அனுமன் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து மாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணி வரை கல்யாண மண்டபத்தில் வசந்தோற்சவம் நடந்தது. பின்னர் இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை யானை வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தார்.

புனித தோமையாரிடம் திருமுழுக்கு பெற்ற சில கிறிஸ்தவ குடும்பங்கள் கி.பி.முதல் நூற்றாண்டின் இறுதியில் வில்லுக்குறி மாடத்தட்டுவிளை ஊரில் தங்கினார்கள்.
குமரி மாவட்டம் வில்லுக்குறி மாடத்தட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா மற்றும் 104-வது ஆண்டுவிழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆலயம் மிகவும் பழமையான வரலாறு கொண்டது ஆகும்.
புனித தோமையாரிடம் திருமுழுக்கு பெற்ற சில கிறிஸ்தவ குடும்பங்கள் கி.பி.முதல் நூற்றாண்டின் இறுதியில் வில்லுக்குறி மாடத்தட்டுவிளை ஊரில் தங்கினார்கள். இவர்கள் தான் மாடத்தட்டுவிளையில் குடியமர்த்தப்பட்ட முதல் கிறிஸ்தவ பூர்வீக குடிமக்கள் ஆவார்கள்.
கல்வெட்டு
இங்கு காணப்படும் விளக்குத்தூண் கல்வெட்டு இவர்களின் தொன்மைக்கு சான்றாகும். இந்த கல்தூண் இப்போது ஆலயத்தின் வடமேற்கு மூலையில் நிற்கிறது. இந்த கல்வெட்டில் காணப்படும் எழுத்துக்கள் கல்வெட்டின் தொன்மையை உறுதி செய்கிறது. ஆகவே, இங்கு சுமார் 652 ஆண்டுகளுக்கு முன்பே புனித செபஸ்தியார் ஆலயம் இருந்தது என்பதை உறுதியாக கூறலாம்.
மாடத்தட்டுவிளை புனித ெசபஸ்தியார் ஆலயம் கோட்டார் பங்கின் கீழ் கொல்லம் இயேசு சபை கல்லூரியின் கண்காணிப்பில் செயல்படத் தொடங்கியது.
கி.பி.1644-ம் ஆண்டு ரோம் இயேசு சபை அதிபருக்கு அருட்தந்தை ஆந்திரேயாஸ் லோப்பன் கோட்டார் பங்கில் அடங்கி உள்ள கிளை பங்குகள் பற்றி புள்ளி விவரம் அனுப்பி உள் ளார். அதில் மாடத்தட்டுவிளை மலைப்பகுதியில் உள்ளது என்றும், பாதுகாவலர் புனித செபஸ்தியார் என்றும், அப்போது 350 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர் என்ற செய்தியை தருகிறார். வராப்புழை மறை மாவட்டத்தில் இருந்து கொல்லம் தனி மறைமாவட்டமாக செயல்படத் தொடங்கியதும் மாடத்தட்டுவிளை கோட்டார் பங்கில் இருந்து கி.பி. 1853-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி முதல் காரங்காடு பங்கின் கிளையானது.
தனி பங்கானது
பின்னர், கி.பி.1918-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி காரங்காட்டில் இருந்து பிரிந்து மாடத்தட்டுவிளை தனி பங்கானது. இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் புனித செபஸ்தியார் உருவச்சிலை ரோமாபுரியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். இந்த சிலை உலகம் முழுவதும் காணப்படும் பொதுவான தோற்றத்தில் இருந்து வேறுபட்டு இடது கை மார்பிலும், வலது கை உடலோடு ஒட்டிய நிலையிலும் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.
கி.பி.1923-ம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதி புனித செபஸ்தியாரின் உடலில் இருந்து சிறிய எலும்புத்துண்டை கொல்லம் ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகர் அருளிக்கமாக மாடத்தட்டுவிளை ஆலயத்துக்கு வழங்கி பக்தர்களின் வணக்கத்திற்கு வைக்க உத்தரவிட்டார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியாரின் திருநாளான ஜனவரி 20-ந் தேதியும், ஆலயத்தின் 9-ம் திருவிழாவின் போதும் பக்தர்களின் பார்வைக்கும், வணங்குவதற்காகவும் ஆலயத்தில் வைக்கப்பட்டு வருகிறது. திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித ெசபஸ்தியாரின் திருப்பண்டத்தை முத்தமிட்டு புனிதரின் ஆசி பெற்று வருகின்றனர்.

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளில் சோமாஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை சோமாஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அதன் பிறகு உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பழச்சாறு போன்ற சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பங்ேகற்றனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சேஷ வாகனத்தில் உற்சவர்களான சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் எழுந்தருளி அருள் பாலித்தனர்.

வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 2-வது நாளான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடந்தது. அதன் பிறகு தங்கக்கொடி மரத்துக்கு சிறப்புப்பூஜைகள், அபிஷேகம், ஆராதனை நடந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக காலை 10 மணியளவில் நான்கு மாட வீதிகளில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி, ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார், சண்டிகேஸ்வரர் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதில் சண்டிகேஸ்வரர் மட்டும் விநாயகர், முருகன், சிவன், அம்பாளை பார்த்தபடி பின்நோக்கி வலம் வந்தார்.
அப்போது மாட வீதிகளில் திரண்டு இருந்த திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும், மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனா். ஊர்வலத்துக்கு முன்னால் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்ட பஞ்ச மூர்த்திகள் தங்கக்கொடி மரம் எதிரில் 5 திசைகளில் அமர்த்தப்பட்டனர். மதியம் ஒரு மணியளவில் வேத பண்டிதர்கள் ஆகம முறைப்படி கலசங்களை வைத்தும், சிறப்பு யாகம் வளர்த்தும் சிறப்பு பூஜைகளை செய்தனா். பூஜைகள் முடிந்ததும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க, பக்தர்கள் ஹர ஹர மகாதேவா.. சம்போ சங்கரா.. எனப் பக்தி கோஷம் எழுப்ப, பிரதான அர்ச்சகர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் பிரம்மோற்சவ விழா கொடியை தங்கக்கொடி மரத்தில் ஏற்றினார்.
அத்துடன் பிரம்மோற்சவ விழா கொடியுடன் பெண் பக்தர்கள் கொடுத்த சேலைகளும் கொடிமரத்தில் ஏற்றப்பட்டன. அதன் பிறகு தங்கக்கொடி மரத்துக்கு சிறப்புப்பூஜைகள், அபிஷேகம், ஆராதனை நடந்தது.
கொடியேற்றத்துக்கு பூஜை செய்வதற்கான மங்கல பொருட்களை உபயதாரர்கள், கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியினர், ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. குடும்பத்தினர் தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக வந்து கோவில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பித்தனர். அதில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் வெள்ளி அம்பாரிகளில் சிவன், அம்பாள் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஸ்ரீசைலம் கோவிலுக்கு திருப்பதி ஏழுமலையான் வழங்கிய சீர் வரிசை பொருட்களாக லட்டு, பட்டு வஸ்திரம், பூஜை பொருட்களை திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தனது தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று சமர்ப்பித்தார்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆந்திராவில் பிரசித்திப் பெற்ற சைவத் திருத்தலமான ஸ்ரீசைலத்தில் உள்ள பிரம்மராம்பா சமேத மல்லிகார்ஜுனசாமி கோவிலில் 22-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி வரை 11 நாட்கள் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
ஸ்ரீசைலம் கோவிலுக்கு திருப்பதி ஏழுமலையான் வழங்கிய சீர் வரிசை பொருட்களாக லட்டு, பட்டு வஸ்திரம், பூஜை பொருட்களை திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தனது தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று சமர்ப்பித்தார். அவற்றை, ஸ்ரீசைலம் கோவில் முதன்மைச் செயல் அலுவலர் லாவண்ணா பெற்றுக் கொண்டார்.
முன்னதாக ஸ்ரீசைலம் கோவிலுக்கு வந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காப்பு கட்டிய பக்தர்கள் கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.
திருப்புவனம் புதூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் மற்றும் ரேணுகாதேவி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடை பெறுவது வழக்கம். இதையொட்டி இந்த ஆண்டிற்கான விழா கொடியேற்றத்துடன் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கியது.
முன்னதாக புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கோவிலுக்கு எழுந்தருளினர். அதன் பின்னர் மாரியம்மன் கோவிலில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
இதையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கொடிமரம், மாரியம்மன், ரேணுகாதேவி அம்மன் மற்றும் உற்சவ சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அதன்பின்னர் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 4-ந் தேதி அன்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது விரதம் இருந்து வரும் பக்தர்கள் அன்று காலை முதல் இரவு வரை தீச்சட்டி எடுத்தல், கரும்பு தொட்டில், மாவிளக்கு, உருவபொம்மை எடுத்தல், கரும்புள்ளி- செம்புள்ளி குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடனை செலுத்த உள்ளனர்.
மேலும் காப்பு கட்டிய பக்தர்கள் கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். கொடியேற்று விழாவை முன்னிட்டு திருப்பு வனம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலுக்கு வடக்கே செல்லூர் எனும் பகுதியில், வைகைக் கரைக்கு அருகில் கோயில் கொண்டு, தன்னை நாடி வருவோர்க்கு அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் திருவாப்புடையார்.
தன்னை வழிபட்டு வந்த பக்தன் செய்த தவறையும் மன்னித்து, அவனையே குபேரனாக்கிப் பெருமை சேர்த்த திருவாப்புடையார் கோவில், மதுரை மாநகரின் செல்லூர் பகுதியில் அமைந்திருக்கிறது.
தல வரலாறு :
சோழாந்தக மன்னன் என்பவன் மிகச்சிறந்த சிவபக்தனாக இருந்தான். அவன் எப்போதும் சிவனை வழிபாடு செய்த பின்புதான் சாப்பிடுவான். ஒரு முறை அவன், தனது அமைச்சர் மற்றும் படைவீரர்களுடன் அருகிலிருந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அப்போது, அழகிய மான் ஒன்று அவன் கண்ணில் பட்டது. உடனே அவன், அந்த மானை விரட்டிக் கொண்டு நடுக்காட்டிற்குள் சென்று விட்டான். அந்த மான் அவனது பிடியில் சிக்காமல் காட்டிற்குள் சென்று மறைந்து விட்டது.
மானை விரட்டிச் சென்ற மன்னன் களைப்பால் அவதியுற்றான். அப்படியே அந்தக் காட்டிற்குள் சோர்ந்து போய் அமர்ந்து விட்டான். அவன் பின்னால் சென்ற பாதுகாப்பு வீரர்கள், மன்னனின் சோர்வு நீங்க ஏதாவது சாப்பிடும்படி சொன்னார்கள். ஆனால் மன்னன், ‘சிவனுக்கு வழிபாடு செய்த பின்பே சாப்பிடுவேன்’ என்று சொல்லி மறுத்து விட்டான்.
நடுக்காட்டில் இறைவனை வழிபட வேண்டும் என்றால், சிவலிங்கத்திற்கு எங்கே போவது? மன்னனுடன் வந்த அமைச்சர், மன்னனை சாப்பிட வைப்பதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்தார். அந்தக் காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து, அதைத் தரையில் ஆப்பு போன்று அடித்து வைத்தார்.
பின்னர் அவர் மன்னனிடம் அந்த மரத்துண்டைக் காட்டி, ‘அந்தச் சுயம்புலிங்கத்தை வழிபட்டுவிட்டுத் தாங்கள் சாப்பிடலாம்’ என்று சொல்ல, சோர்வுடன் இருந்த மன்னன், அந்த ஆப்பைச் சிவலிங்கம் என நினைத்து வணங்கி விட்டு சாப்பிட்டான். அவனுக்குச் சோர்வு நீங்கிய பிறகு, தான் வணங்கியது சிவலிங்கம் அல்ல, அது ஆப்பு என்று தெரிந்தது.
அதை நினைத்து வருந்திய மன்னன், ‘இறைவா! நான் இதுவரை உன்னை வழிபட்டு வந்தது உண்மையானால், நான் வணங்கிய இந்த ஆப்பில் இறைவனாக இருந்து அருள் புரிய வேண்டும்’ என்று மனமுருக வேண்டினான். மன்னனின் பக்தியில் மகிழ்ந்த இறைவன், அந்த ஆப்பிலேயே இறைவனாகத் தோன்றினார். ஆப்பில் எழுந்தவர் என்பதால் அவருக்கு ‘ஆப்புடையார்’ எனும் பெயர் ஏற்பட்டது. அந்த ஊரும் ‘ஆப்பனூர்’ என்றானது.
குபேரனான பக்தன் :
பிரம்மனின் வழியில் வந்த புண்ணியசேனன் என்கிற சிவபக்தன், தான் பல கோடி செல்வத்திற்கு உரிய வராக வேண்டும் என்று நினைத்து, இந்தக் கோவிலுக்கு வந்து கடும் தவம் இருந்து வந்தான். அவனுடைய தவத்தில் மகிழ்ந்த ஆப்புடையார், சுகந்த குந்தளாம்பிகையுடன் அவன் முன்பாகத் தோன்றினார்.
புண்ணியசேனன் தன் முன்பாகத் தோன்றிய இறைவனிடம், தன்னைப் பெரும் செல்வமுடையவராக்க வேண்டுமென்று வேண்டினான். இறைவனும் அவனைப் பெரும் செல்வமுடையவனாக ஆக்கினார். பெரும் செல்வம் கிடைத்தவுடன், அவனிடம் ‘தான்’ எனும் ஆணவமும் சேர்ந்து கொண்டது. அந்த ஆணவத்தின் காரணமாக அவன், இறைவனின் அருகிலிருந்த அம்பிகையின் அழகில் மயங்கினான்.
அதனை அறிந்த அம்பிகை அவனுடைய உயிரைப் பறித்தார். தன்னுடைய பக்தன் தெரியாமல் செய்த தவறை மன்னித்து, அவனை மீண்டும் உயிர்ப்பிக்க உதவும்படி அம்பிகையிடம் சொன்னார். அம்பிகையும் அதற்குச் சம்மதிக்க, இறைவன் அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தருளினார். இறைவனின் கருணையால் உயிர் பெற்ற அவன், தனது தவறுக்கு இருவரிடமும் மன்னிப்பு வேண்டினான்.
அவனை மன்னித்த ஆப்புடையார், அவனுக்குக் ‘குபேரன்’ என்று புதுப்பெயரிட்டுப் புதிய வாழ்வு தந்தார். மேலும் பெரும் செல்வத்துடன் வடக்கு திசையைக் காத்து வரும் பணியை அவனுக்கு வழங்கிப் பெருமை சேர்த்தார். தன்னுடைய பக்தன் தவறு செய்த போதும், அவனை மன்னித்து, அவனுக்குப் பெரும்பணி கொடுத்த பெருமை இறைவனுக்கும் கிடைத்தது.
இந்தக் கோவிலில் மூலவரான ஆப்புடையார் சுயம்புலிங்கமாகக் கிழக்கு நோக்கிப் பார்த்த நிலையிலும், அம்மனான சுகந்த குந்தளாம்பிகை தெற்கு நோக்கிப் பார்த்த நிலையிலும் இருக்கின்றனர். ஆலய வளாகத்தில் விநாயகர், முருகன், நடராஜர், காசி விசுவநாதர், மீனாட்சி ஆகியோரது சிலைகளும், நவக்கிரக சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இறைவனின் சிறப்பு :
இந்தக் கோவில் மூலவரான சுயம்புலிங்கம் சிறியதாக இருப்பினும், இவரது பெருமை உயர்ந்தது என்கின்றனர். மலைகளில் மேருவைப் போலவும், பசுக்களுள் காமதேனுவைப் போலவும், விண்மீன்களுக்கிடையே சந்திரனைப் போலவும், ஒளியுடைய பொருட்களுள் சூரியனைப் போலவும், கொடையாளிகளுள் மேகத்தைப் போலவும், புருஷர்களுள் விஷ்ணுவைப் போலவும், இது போன்று எவையெல்லாம் சிறப்புடையதோ, அதே போல் இங்குள்ள இறைவனான ஆப்புடையார் மற்ற சுயம்புலிங்கங்களை விடச் சிறப்பு மிக்கவர் என்றும், இவரை வணங்கினால், அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று இக்கோவிலுக்கான தலபுராணம் கூறுகிறது.
* சோழாந்தகனின் மரபு வழியில் வந்த சுகுணபாண்டியன் என்பவனது ஆட்சியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்போது இக்கோவில் அர்ச்சகர், நெல்லுக்குப் பதிலாக, வைகை ஆற்று மணலைக் கொண்டு சமைத்தார். அப்போது அந்த மணல் அன்னமாக மாறியது என்றும், அதனால் இத்தல இறைவனுக்கு ‘அன்னவிநோதன்’ என்கிற பெயர் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
* தன்னை வணங்கி வந்த பக்தன் தவறு செய்த போதும், அவனைத் திருத்தி அவனுக்குக் குபேர வாழ்வு அளித்ததால் இத்தலத்து இறைவனைக் கருணை மிகுந்தவன் என்றும் சொல்கின்றனர்.
ஐப்பசி அன்னாபிஷேகம் இங்கே விசேஷம். விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பச்சரிசி சாதத்தை வடித்து, அதனை லிங்கத் திருமேனியில் சார்த்துவர். கருகுமணியால் காதணி, கழுத்தில் புடலங்காய் மாலை என அணிந்தபடி காட்சி தரும் லிங்கத் திருமேனியை தரிசிக்கலாம். பூஜை முடிந்ததும் லிங்கத் திருமேனியின் சிரசில் உள்ள சாதத்தை எடுத்து வைகையில் கரைப்பார்கள். இதனால், அந்த நதி இன்னும் புண்ணியம் பெறுவதாக ஐதீகம். மீதமுள்ள சாதத்தைப் பிரசாதமாக வழங்குவர். இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட, வியாபாரம், விளைச்சல் பெருகும். குபேர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதேபோல், கார்த்திகை மாதத்தில் திருவாப்புடையார் கோயிலில் சிறப்பு பூஜைகளும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறும். கார்த்திகை சோம வாரத்தில் (திங்கட்கிழமை) சிவனாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். கார்த்திகையில் திருவாப்புடையாரை வணங்கினால், சகல செல்வங்களும் வந்துசேரும். வீட்டின் தரித்திரம் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும்.
அமைவிடம் :
மதுரை மாநகரில் செல்லூர் பகுதியில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்லூர் செல்லும் அனைத்து நகரப்பேருந்துகளிலும் செல்ல முடியும். கோரிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் சிறிது தூரம் நடந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு தரிசன நேரத்தை ஒரு நாளைக்கு 2 மணிநேரம் கூடுதலாக ஒதுக்கப்பட உள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் இலவச தரிசன பக்தர்கள், ரூ.300 டிக்கெட் பக்தர்கள், வி.ஐ.பி. பிரேக் தரிசன பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாதாரணப் பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு 30 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிபாரிசு கடிதத்தில் ஒதுக்கப்பட்ட வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது.
வி.ஐ.பி. பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை சாதாரணப் பக்தர்களுக்கு ஒதுக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதனால் வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச தரிசன பக்தர்களுக்கு கூடுதலாக தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன. அத்துடன் இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு தரிசன நேரத்தை ஒரு நாளைக்கு 2 மணிநேரம் கூடுதலாக ஒதுக்கப்பட உள்ளது. இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.

இதையும் படிக்கலாம்...இன்று பசிப்பிணி நீக்கும் ‘ஷட்திலா’ ஏகாதசி
காரைக்குடி வீரமாகாளியம்மன் கோவில் அருகே உள்ள திடலில் 11 அரிவாள்களை கொண்ட ஏணி மீது ஏறி நின்று சாமியாடி அருள்வாக்கு கூறி பக்தர்கள் மீது மலர் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலைகோட்டை பர்மா காலனியில் உள்ளது, சக்தி வீரமாகாளியம்மன் கோவில். இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான தீ மிதி உற்சவ விழா கடந்த 11-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
முக்கிய விழா நாளான நேற்று முன்தினம் மாலையில் மதுக்குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், இரவு 9.30 மணிக்கு மேல் கோவில் அருகே உள்ள திடலில் 11 அரிவாள்களை கொண்ட ஏணி மீது ஏறி நின்று சாமியாடி அருள்வாக்கு கூறி பக்தர்கள் மீது மலர் தூவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நேற்று காலை பால்காவடி எடுத்து வந்து தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து தீ மிதித்து சாமி தரிசனம் செய்தனர்.

பெண்கள் மாதவிடாய் காலத்திலும், வீட்டில் பிறப்பு, இறப்பு போன்ற தீட்டு காலங்களிலும் கூட, ஏகாதசி விரதத்தை விடாமல் தொடரலாம்.
26-2-2022 மாசி மாத தேய்பிறை ஏகாதசி
பவுர்ணமி மற்றும் அமாவாசைக்கு பிறகான பதினொன்றாம் நாள் வரும் திதி, ஏகாதசி. இது மாதத்திற்கு இரண்டு என்று, வருடத்திற்கு 24 ஏகாதசிகளாக வரும். சில வருடங்களில் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. ஏகாதசி விரதத்தை ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் மேற்கொள்ளலாம். முக்கியமாக, பெண்கள் மாதவிடாய் காலத்திலும், வீட்டில் பிறப்பு, இறப்பு போன்ற தீட்டு காலங்களிலும் கூட, ஏகாதசி விரதத்தை விடாமல் தொடரலாம். ஏகாதசிகளில் ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றாலும், ஒவ்வொரு ஏகாதசிக்கும் தனித் தனிச் சிறப்புகளும் உண்டு.
அந்த வகையில் மாசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசியான ‘ஷட்திலா’ ஏகாதசியைப் பற்றி இங்கே பார்ப்போம்.
ஏகாதசி தினத்தன்று பெருமாளை நோன்பிருந்து வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். இந்த ஷட்திலா ஏகாதசி அன்று, விரதம் இருந்து இறைவனுக்கு கொய்யாப்பழம் படைத்து வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும். அதோடு இந்த ஏகாதசியில் ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும், காலணி, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக் குடம், பசு ஆகிய 6 பொருட்களில் ஏதாவது ஒன்றை தானமாக வழங்கினால், பிரம்மஹத்தி தோஷம் கூட நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
மேலும் பசியால் வாடுபவர்களுக்கு அன்னதானம் செய்தால், நமக்கு அடுத்து வரும் சந்ததியினர் வறுமை, பசி இன்றி சுமுகமான வாழ்க்கையை வாழ்வார்கள். மாசி மாத தேய்பிறை ஏகாதசி வழிபாடு, முன்னோர்களின் முக்திக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் விரதமாகும். அகால மரணமடைந்தவர்கள் மோட்சம் பெற, மாசி மாத தேய்பிறை ஏகாதசி வழிபாடு உதவும். ஏகாதசி அன்று பெருமாளை வழிபாடு செய்ய, சிறப்பான பூஜைகளை மேற்கொள்வது நல்லது.
ஆனாலும் இயலாதவர்கள் ஏகாதசி அன்று உண்ணாமல் விரதம் இருப்பதால், உடல் சோர்வை அதிகரித்துக்கொள்ளாமல் வீட்டிலேயே இறைவனை தியானித்து, விஷ்ணு புராணம், பாகவதம் போன்றவற்றை படிக்கலாம். உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக கொண்டு, பரமாத்மாவை மனதில் உருவேற்றிக் கொண்டே இருந்தால் விஷ்ணுவின் அருளைப் பெறலாம்.

உலகில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆண்டிற்கு 12 மாதங்களும் 10 நாட்களுக்கு குறையாமல் திருவிழா நடைபெறும்.
திருவிழா அல்லது உற்சவம் என்பது, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்று கூடி கொண்டாடுவது. திருவிழா என்றாலே தனி உற்சாகம் தான் எங்கு பார்த்தாலும் பந்தல்கள், வானவேடிக்கை, வண்ண விளக்குகள், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என கிராமமே களைகட்டி காணப்படும். திருவிழா நாட்களில் மக்கள் எந்த ஊரில் இருந்தாலும் தனது சொந்த ஊருக்கு வந்து திருவிழாக்களை கொண்டாடுவார்கள். திருவிழாவை ஊர்வலம் அல்லது வலம் என்பதே தமிழ் சொல்லாகும். உற்சவம் என்றால் அது பிறமொழி சொல் ஆகும்.
தமிழகத்தில் இரண்டாவது பெரிய நகரமான மதுரை திருவிழா நகரம் என்று அழைக்கப்படுகிறது. உலகில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆண்டிற்கு 12 மாதங்களும் 10 நாட்களுக்கு குறையாமல் திருவிழா நடைபெறும். மேலும் மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவும், தெப்பத்திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது.
தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாரியம்மன் கோவில்களில் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழா நடக்கும். அதன் ஒரு வாரத்திற்கு முன்பாக பூச்சொரிதல் திருவிழா நடக்கும். இந்நிகழ்வே, திருவிழா ஆரம்பிப்பதற்கான அறிகுறியாகும். பூச்சொரிதல் அன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடி, மணமுள்ள மலர்களைக் கொண்டு வந்து பெண் தெய்வங்கள் முன்பு குவித்து வைத்து வழிபடுவார்கள்.
திருவாரூர் தியாகராஜர் கோவில், நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவில், நாகர்கோவில் நாகராஜாகோவில், சுசீந்திரம் தானு மாலையன் கோவில், உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில், பழனி முருகன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் பல முக்கியமான திருக்கோவில்களில் தேர்த் திருவிழா மிக முக்கியமாக கொண்டாடப்படுகிறது. தேர்த் திருவிழாவின் போது, உற்சவர் தேரில் திருக்கோவிலை சுற்றி பவனி வருவார். ஆசியாவிலேயே திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் 2-வது பெரிய தேராக கருதப்படுகின்றது. தை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற முக்கியமான திருவிழா, தைப் பூசத் திருவிழா ஆகும். உலகிலுள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இத்திருவிழா மிகவும் பிரசித்தியானது. சித்திரைத் திருவிழா இந்தியாவில் தமிழ்நாட்டில் தமிழ் ஆண்டுப்பிறப்பான சித்திரை மாதத்தில் பவுர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இது தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் இடங்களிலும் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்திலும், அதனைச் சுற்றியிருக்கும் மாநிலங்களில் வீற்றிருக்கும் பெண் தெய்வமான மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படும்.
இம்மாதத்தில், பெண்கள் மாரியம்மனுக்கு விரதம் இருந்தும், தீ மிதித்தும், அம்மனுக்கு கூழ் வார்த்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கார்த்திகைத் தீபத் திருவிழா அன்று மாலை, குன்றுகளைக் கொண்ட அனைத்து சிவ மற்றும் முருகன் கோவில்களில் அகண்ட கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இத்திருவிழா,திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலுள்ள (குன்றுகள் அல்லாத) சைவ சமயம் மற்றும் வைணவ தலங்களில், பெரிய கார்த்திகை நாளன்று சொக்கப்பனை கொளுத்தப்படும்.
ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும், வாமணன் அவதரித்ததும் அன்று தான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைகாஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.
ஹோலி அல்லது ரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான வசந்த காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, உள்ளிட்ட இந்து மக்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றில் டோல்யாத்திரை (டெளல் ஜாத்ரா) அல்லது வசந்த உற்சவம் (வசந்தகாலத் திருவிழா) என அழைக்கப்படுகின்றது. பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, விருந்தாவன், நந்தகோன் மற்றும் பர்சனா நகரங்களில் ஹோலி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத் தலங்களாக இருக்கும் .
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உள்ளிட்ட மிக முக்கிய தினங்களில், தேவாலய திருவிழாக்கள் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல புனித ஆலயங்களில் திருவிழா ஊர்வலமும், சிறப்பு பிரார்த்தனை கூட்டமும் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாள்காட்டியின் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாமியரின் மூன்றாவது கட்டாய கடமையாகும். சூரிய உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு மற்றும் நீர் ஆகிய எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இது நிறைவேற்றப்படுகின்றது. தியாக திருநாள் அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை அச்சுப் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. நாகை மாவட்டம் நாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் அமைதி வழியில் தனது அன்பு அழைப்பால் எண்ணற்ற மக்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்த நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
புத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது விசாகம் (இலங்கையில்) வைகாசி மாத பவுர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பவுத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். புத்தர் பிறந்ததும், ஞானோதயம் பெற்றதும் மற்றும் அவர் இயற்கை எய்தியதும் ஒரே நாளாகும். இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும். கொண்டாட்ட முறைகளில் நாடுகளுக்கு இடையே சில வேறுபாடுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.