என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் தை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருட திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, பரத நாட்டியம், சொல்லரங்கம், சிறப்பு அபிஷேகம் மற்றும் சாமி பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்து வந்தன.
விழாவின் 9-ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதற்காக நாகராஜா கோவிலில் இருந்து சுவாமி அனந்தகிருஷ்ணன், பாமா மற்றும் ருக்மணியுடன் தேரில் எழுந்தருளினார். அப்போது சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. திரளான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழுத்தலைவர் சிவகுற்றாலம், இணை ஆணையர் அன்புமணி, பா.ஜனதா மூத்த உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, தி.மு.க. மாநகர செயலாளர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்கள்.
தேரானது 4 ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தின் போது ஏராளமான மக்கள் வீட்டின் மொட்டை மாடியில் நின்றபடி மலர்களை தூவி வரவேற்றனர். ரத வீதிகள் நெடுகிலும் பக்தர்கள் வீடுகள் மற்றும் கடைகளின் முன் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்ட விழாவுக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். பக்தர்களுக்கு தண்ணீர், மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டத்தில் தேருக்கு பின்னால் ஒரு யானை வரும். தேரின் சக்கரம் பின்னோக்கி சென்றுவிட கூடாது என்பதற்காக அந்த யானை தடியை சுமந்து வந்து தேர் நிற்கும்போதெல்லாம் தடியை சக்கரத்தின் பின்னால் போடும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக யானை பயன்படுத்தப்படவில்லை. மாறாக தடி தூக்கும் பணியை பக்தர்களே செய்தனர்.
இதை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு மண்டகப்படி, 8.15 மணிக்கு கச்சேரி, 9.30 மணிக்கு சப்தாவர்ணம் ஆகியவை நடந்தன.
விழாவின் இறுதி நாள் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு ஆறாட்டு, அதன் பிறகு இன்னிசை சொல்லரங்கம், இரவு 7.45 மணிக்கு ஆறாட்டு துறையில் இருந்து கொம்மண்டை அம்மன் சாமி கோவிலுக்கு எழுந்தருளல், 8.15 மணிக்கு பக்தி மெல்லிசை நடக்கிறது. பின்னர் இரவு 9.30 மணிக்கு ஆறாட்டு துறையில் இருந்து சாமி கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக தேரோட்டத்தையொட்டி ரத வீதிகள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ரத வீதிகளில் வேறு வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

வீட்டில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியாக மனக்கசப்புகள் இன்றி அன்போடு இருக்க இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.
வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு தனி தைரியம் வேண்டும். வீட்டில் இருவர் சண்டை போட்டால் மீதி இருக்கும் நபர்களுக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்காமல் போய்விடும். அது எந்த உறவாக இருந்தாலும் சரி, அப்படியான ஒரு மனக்கசப்பை ஒருமுறை ஏற்படுத்திக் கொண்டால் அவர்களுடைய மன நிலையிலும் பாதிப்புகள் ஏற்படும். வெளியில் தான் ஆயிரம் பிரச்சனை என்றால் வீட்டிற்கு வந்தும் நிம்மதி இல்லையே! ஒருவாய் சாப்பாடு கூட மனநிம்மதியுடன் சாப்பிட முடியாவிட்டால் எதற்காக இந்த வீட்டில் இருக்கிறோம்?
இப்படி பிரச்சினைகள் இருக்கும் பொழுது தூக்கமும் சரியாக வராமல் போய்விடும். பெற்றோர்களுக்கு இடையே சண்டை நடந்தால் பிள்ளைகளுக்கும் கணவன் மனைவிக்கு இடையே சண்டை நடந்தால் அந்த இருவருக்கும் மன அழுத்தம் என்கிற நோய் வந்துவிடுகிறது. இவற்றை நீடிக்க விட்டால் பெரும் பிரச்சனை தான். இப்படி வீட்டில் நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள் வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நல்ல ஒரு மாற்றத்தை உணரலாம்.
தர்ப்பை வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகளை கிரகிக்கும் தன்மை பெற்றுள்ளது. அதனால் தான் இதனை ஹோமங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் நடுப்பகுதியில் தூபக்கால் அல்லது மண்சட்டி வைத்துக் கொண்டு அதில் நாலைந்து தர்ப்பைப் புல்லை போட்டுக் கொள்ளுங்கள். தர்ப்பை புல் எரிவதற்கு கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
திருஷ்டி நீங்க கல் உப்பும், கடுகும் முதன்மையானதாக கருதப்படுகிறது. இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து எரியும் நெருப்பில் மிக சிறிய அளவில் போட்டுக் கொள்ளுங்கள். தர்ப்பை உடன் இவைகள் எரியும் பொழுது நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மை சுற்றியிருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகள் கிரகிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடும். அதன் பின் வீட்டில் நிச்சயம் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும். தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் கண்டிப்பாக வரவே வராது. குழந்தைகளும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடக்கும் விழாக்கள் பற்றிய விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
7-ந்தேதி ஸ்மார்தா ஏகாதசி, 8-ந்தேதி வைஷ்ணவ மாத்வா ஏகாதசி, 11-ந்தேதி புரந்தரதாசர் ஆராதனை மகோற்சவம், கும்ப சங்கரமணம், திருக்கச்சிநம்பி உற்சவம், 16-ந்தேதி வசந்த பஞ்சமி, 19-ந்தேதி ரத சப்தமி, 23-ந்தேதி பீஷ்ம ஏகாதசி மற்றும் சர்வ ஏகாதசி, 24-ந்தேதி குலசேகர ஆழ்வார் வருட திருநட்சத்திர உற்சவம், 27-ந்தேதி குமார தாரா தீர்த்த முக்கோட்டி உற்சவம்.
மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அஸ்திரராஜருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் குளத்தில் நீராடினார்கள்.
தைப்பூசத்தையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மதியம் 1 மணியளவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவாக சென்று சிவகங்கை குளக்கரையில் எழுந்தருளினர்.
தொடர்ந்து பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய சாமிகளும் குளக்கரையில் எழுந்தருளினர். பின்னர் அஸ்திரராஜருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் குளத்தில் நீராடினார்கள்.
பின்னர் மேளதாளம் முழங்க பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஊர்வலமாக நடராஜர் சன்னதியை அடைந்தனர். தொடர்ந்து அங்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் தைப்பூசத்தையொட்டி தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசத்தையொட்டி தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி தைப்பூசத்தையொட்டி நேற்று காலை, சிக்கல் சிங்காரவேலவருக்கு, மஞ்சள், பால், பன்னீர், திரவியம், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரவு கோவிலில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. முன்னதாக கோவிலின் மேற்குவாசல் வழியாக சாமி புறப்பாடு நடந்தது.
பின்னர் சிங்காரவேலவர், வள்ளி, தெய்வானையுடன் முத்தங்கி அலங்காரத்தில், தங்கப்படிச் சட்டத்தில் தெப்பத்துக்கு எழுந்தருளினார். குளத்தின் கிழக்கு கரையில் இருந்து வலம் வரத்தொடங்கிய தெப்பம், 4 கரைகளையும் 3 முறை வலம் வந்து நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு அயவந்தீஸ்வரர் மற்றும் முருகனுக்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தயிர், பச்சரிசிமாவு, திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து அயவந்தீஸ்வரர் சன்னதி முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாய்மேடு பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.முன்னதாக சாமிக்கு பால், தயிர், இளநீர், திருநீறு, நெய் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து மாசிமக விழாவுக்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும், விழா தொடர்பான பட்டோலை வாசிக்கும் நிகழ்ச்சியும்(விழாவில் நடைபெறும் நிகழ்வு குறித்து விவரங்கள் அடங்கிய வாசகங்களை படிப்பது) நடைபெற்றது. அதை தொடர்ந்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய விநாயகர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வேதாமிர்த ஏரியில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

மதுரையில் தெப்ப திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. தைப்பூச விடுமுறை என்பதால் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு தரிசனம் செய்தனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது சிறப்பு. அதில் சித்திரை திருவிழா, ஆடி முளைக்கொட்டு, ஆவணி மூலஉற்சவம், ஐப்பசி, தை தெப்ப திருவிழா போன்றவை முக்கியமானவை.
இந்தாண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக கோவிலில் நடக்க இருந்த பல திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா நோய் தொற்று குறைந்ததை தொடர்ந்து அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்து, திருவிழா நடத்த அனுமதித்தது. சில தினங்களுக்கு முன்பு மார்கழி அஷ்டமி சப்பர திருவிழா விமரிசையாக நடந்தது.
இதை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளினர். தெப்பத்திருவிழாவிற்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி கடந்த 26-ந் தேதி மாலை நடைபெற்றது. நேற்று முன்தினம் சிந்தாமணி கிராமத்தில் கதிரறுப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
நேற்று சிகர நிகழ்ச்சியான தெப்ப திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு வெள்ளி அவுதா தொட்டில் வாகனத்தில் அம்மனும், வெள்ளி சிம்மாசனத்தில் சுந்தரேசுவரரும் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடாகினர். பின்னர் அவர்கள், நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து, கீழமாசி வீதி, யானைக்கல், கீழவெளி வீதி, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக முக்தீஸ்வரர் கோவிலை அடைந்தனர்.
காலை 10.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்மனுக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது. தெப்பக்குளத்தில் முழுமையாக நீர் நிரம்பி இருந்ததால் ரம்மியமாக காட்சி அளித்தது.
நேற்று தைப்பூச தினத்துக்கு அரசு விடுமுறை அளித்து இருந்ததால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தெப்ப உற்சவத்தை எதிர்நோக்கி அங்கு காத்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தெப்பக்குளத்தை தெப்பம் வலம் வர தொடங்கியது. குளத்தின் ஒவ்வொரு முனையையும் தெப்பம் கடந்து செல்லும் போது, மீனாட்சி-சுந்தரேசுவரரை போற்றி பக்தர்கள் எழுப்பிய பக்தி கோஷங்கள் விண்ணதிர ஒலித்தது.
இருமுறை தெப்பம் வலம் வந்த பின்னர், சுவாமி-அம்மன், தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளினர்.
இரவி்ல் தை பவுர்ணமி நிலவு வெளிச்சத்திலும், மின் ஒளியிலும் தெப்பக்குளமும், தெப்பமும் ஜொலித்தன. இதைதொடர்ந்து மீண்டும் சுவாமி, அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி, மீண்டும் ஒரு முறை தெப்பக்குளத்தை வலம் வந்தனர். பகலில் இருந்ததைவிட பன்மடங்கு பக்தர்கள் கூட்டம் இரவில் இருந்தது. தெப்ப உற்சவம் நிறைவு பெற்றதும், சுவாமி-மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
விழா ஏற்பாடுகளை, கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் செல்லத்துரை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
வைகை ஆற்றில் இருந்து பனையூர் கால்வாய் வழியாக தெப்பக்குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக, இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு நீர்வரத்து தடைபட்டது. தற்போது பனையூர் கால்வாய் வழியாக நீர்வரத்து வரும் வகையில் புனரமைப்பு செய்யப்பட்டதையடுத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டில் ஓரளவு நீர்நிறைந்த தெப்பக்குளத்தில் திருவிழா நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டில் தெப்பம் முழுவதும் நிறைந்துள்ளதால், 2-வது ஆண்டாக கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மட்டுமின்றி வெளியூர்களை சேர்ந்த பலரும் வந்திருந்தனர்.

நாகூர் தர்கா கந்தூரி விழா முடிவடைந்ததையொட்டி கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதிய பிறகு ஒரே நேரத்தில் தர்கா 5 மினாரக்களிலும் கொடி இறக்கப்பட்டது.
நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது இந்த தர்கா கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 21-ந் தேதி வாணவேடிக்கை நிகழ்ச்சியும், 22-ந் தேதி பீர் அமர வைத்தல் நிகழ்ச்சியும், 23-ந் சந்தன கூடு ஊர்வலமும். 25-ந்தேதி பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கந்தூரியின் நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது. இதில் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஒதிய பிறகு ஒரே நேரத்தில் தர்கா 5 மினாரக்களிலும் கொடி இறக்கப்பட்டது.

கொரோனா காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு தைப்பூச தெப்ப திருவிழாவையொட்டி சுவாமி-அம்பாள் ராமேசுவரம் கோவிலை விட்டு வெளியே வந்தனர். திரளான பக்தர்கள் பரவசத்துடன் வரவேற்றனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று காலை கருவறையில் உள்ள ராமநாதசாமி, பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து தங்க ரிஷப வாகனங்களில் பிரியாவிடையுடன் சுவாமி-அம்பாள் எழுந்தருளினார்கள். அதன்பின்னர் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலிலிருந்து சாமி, அம்பாள் புறப்பட்டு கோவிலின் கிழக்கு வாசல் பகுதிக்கு வந்தனர்.
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 10 மாதங்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் இருந்து முதல் முறையாக நேற்று சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளிப்பதற்காக கோவிலை விட்டு வெளியே வந்ததால் கிழக்கு வாசல் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். ரிஷப வாகனத்தில் வந்த சுவாமியையும், அம்பாளையும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ’ஓம் நமசிவாய’ என்ற பக்தி கோஷம் எழுப்பி வரவேற்று பரவசம் அடைந்தனர்.
அப்போது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன், மாநில இளைஞரணி செயலாளர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சுவாமி, அம்பாளுக்கு மாலைகள் சாற்றி, மேளதாளம் முழங்க சிறப்பு வரவேற்பு கொடுத்தனர்.
தொடர்ந்து கோவிலின் கிழக்கு ரத வீதி, தெற்கு, மேற்கு ரத வீதி நடுத்தெரு, திட்டக்குடி, ராமர்தீர்த்தம், சீதா தீர்த்தம் வழியாக பக்தர்களுக்கு காட்சி அளித்த படி பகல் 1 மணி அளவில் லட்சுமணேசுவரர் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். மாலை 6 மணி அளவில் சுவாமி-அம்பாள் தெப்ப உற்சவத்துக்காக சிறப்பு அலங்காரமானார்கள்.
இரவு 7 மணியளவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார்கள். கோவில் இணை ஆணையர் கல்யாணி ெதப்ப உற்சவத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தெப்பமானது 11 முறை லட்சுமண தீர்த்த குளத்தை வலம் வந்தது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் தக்கார் ராஜாகுமரன்சேதுபதி, கோவிலின் சூப்பிரண்டுகள் ககாரின் ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன், கமலநாதன், கண்ணன், செல்லம் உள்ளிட்ட ராமேசுவரம் தீவு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மீண்டும் சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி இரவு 10 மணி அளவில் கோவிலுக்கு வந்தடைந்த பின்னர், பள்ளியறை பூஜை நடைபெற்றது.

'அரோகரா' கோஷம் விண்ணதிரும் வகையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் பழனி முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில், தைப்பூசத்திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ம் நாளான நேற்று தைப்பூசத் திருநாள் ஆகும்.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு தோளுக்கினியான் வாகனத்தில் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பகல் 10.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் கோவிலில் இருந்து முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் தேர்கட்டி மண்டபத்திற்கு வந்தார். அங்கு சிறப்பு பூஜை நடைபெற்ற பின், பகல் 11 மணிக்கு சாமி திருத்தேர் ஏற்றம் நடந்தது.
மாலை 4.40 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து தேர் சக்கரங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தேங்காய் உடைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ேதரோட்டம் தொடங்கியது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...! வீரவேல் முருகனுக்கு அரோகரா...! ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா'...! என்று விண்ணதிர சரண கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக விநாயகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய சிறிய தேர்கள் இரண்டும் 4 ரதவீதிகளில் இழுக்கப்பட்டன. அதன்பிறகு நிலையில் இருந்து 4.45 மணிக்கு திருத்தேர் புறப்பட்டது. கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்த தேர் மாலை 6.10 மணிக்கு நிலையை வந்து சேர்ந்தது.
தேரோட்ட நிகழ்ச்சியை காண தேரடி, நான்கு ரத வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூசத்திருவிழாவில் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தந்தபல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் 9-ம் நாளான நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசாமி வீதி உலா, இரவு 9 மணிக்கு பெரிய தங்கமயில் வாகனத்தில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் உலா வருகிறார்.
10-ம் திருநாளான 31-ந்தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடி இறங்குதலுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

நெல்லையப்பர் கோவில் தீர்த்தவாரி நெல்லை சந்திப்பு கைலாசபுரம் மண்டபத்தில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கடந்த 22-ந் தேதி பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது.
10-ம் நாளான நேற்று நெல்லை சந்திப்பு கைலாசபுரம் சிந்துபூந்துறை தீர்த்தவாரி மண்டபத்தில் தைப்பூச தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி பகல் 12 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் சுவாமி-அம்பாள் நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை வழியாக ஈரடுக்கு மேம்பாலம் கீழ்ப்பகுதியில் உள்ள கைலாசபுரம் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபம் வந்தடைந்தனர். அவர்களுடன் அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகளும் பின்தொடர்ந்து வந்தனர்.
சுவாமி-அம்பாளுக்கு தைப்பூச மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அஸ்திரதேவர், அஸ்திர தேவி ஆகியோருக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ராமராஜா, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாலையில் சுவாமி-அம்பாள் பரிவார மூர்த்திகளுடன் தீர்த்தவாரி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு டவுன் பாரதியார் தெரு, தெற்கு புது தெரு வழியாக ரதவீதி சுற்றி நெல்லையப்பர் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தமிழகத்தில் உள்ள சிவ ஆலயங்களில் பழமையானது நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை, இரவு சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை ஆகியோா் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலையில் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை ஆகிேயார் ஊர்வலமாக வந்து சப்பரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து 8.20 மணிக்கு கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார்.விழாவில் தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், உவரி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராஜன் கிருபாநிதி, வருமானவரி துறை முன்னாள் கமிஷனர் மகாலிங்கம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பக்தர்கள் கடல் மண்ணை பெட்டியில் சுமந்து வந்து அதை கடற்கரையில் கொட்டி நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு தெப்ப திருவிழா நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து இருந்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் கிரிவலம் செல்வதை போலீசார் தடுத்தனர். இருந்த போதிலும் பக்தர்கள் சாரைசாரையாக மாற்று வழியில் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வருகின்ற பக்தர்கள் கிரிவலம் செல்வது தொன்று தொட்டுவரும் வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவியதால் பக்தர்கள் கிரிவலம் செல்ல பவுர்ணமி தினங்களில் தடை விதிக்கப்பட்டு வந்தது.
தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் சாமி வீதி உலா நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய வகை கொரோனா பரவுவதாக கூறி இன்றும் (28-ந்தேதி) தைமாத பவுர்ணமிக்கு தடைவிதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கலெக்டர் உத்தரவு பிறப்பித்தின் பேரில் இன்று அதிகாலை 1.45 மணி முதல் போலீசார் கிரிவலப்பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் தடுப்புகள் வைத்து பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் பக்தர்கள் சாரைசாரையாக மாற்று வழியில் கிரிவலம் சென்று வருகின்றனர்.
அவர்கள் செங்கம் சாலை வழியாக அத்தியந்தல் மற்றும் அடி அண்ணாமலை வழியாக கிரிவலம் சென்று வருகின்றனர்.
இன்று காலை மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றுள்ளனர். கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தராவிட்டாலும் சுமார் 25 ஆயிரம் பக்தர்கள் வரை இன்று கிரிவலம் செல்வார்கள் என்று தெரிகிறது.
கிரிவலப் பாதையில் சென்ற பக்தர்களுக்கு அடி அண்ணாமலை பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளில் சில சன்னதிகளுக்கு பக்தர்கள் சென்று வழிபட்டனர் பக்தர்கள் வருகை காரணமாக பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.