என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்தத்தில் முக்கோட்டி உற்சவம் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது. அங்குள்ள ஸ்ரீராமர், கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
திருமலை
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே 6 கிலோ மீட்டர் தூரத்தில் சேஷாசலம் வனப்பகுதியில் ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்தம் உள்ளது. அங்கு ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற முனிவர் மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். அவரின் தவத்தை மெச்சிய மகாவிஷ்ணு, தெலுங்கு புஷ்யமி மாதத்தில் புஷ்யமி நட்சத்திரத்தில் (தை மாதம் பவுர்ணமியுடன் கூடிய பூச நட்சத்திரத்தில்) முனிவர் முன் தோன்றி அருள்பாலித்தார்.
அப்போது முனிவர், தங்களை நினைத்து தவத்தில் ஈடுபடுவதற்கு முன்பு புனித நீராட தீர்த்தம் ஒன்றை உருவாக்கி தர வேண்டும் கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக் கொண்டபடியே மகாவிஷ்ணு சேஷாசலம் வனப்பகுதியில் அடர்ந்த காட்டின் நடுவே தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். அதுவே ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
இந்தத் தீர்த்தத்தில் தை மாதம் பவுர்ணமியுடன் கூடிய பூசத்தன்று அனைத்துப் புண்ணியத் தீர்த்தங்களும் வந்து சேருகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு இக, பர சுகம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்தத்தில் நேற்று முக்கோட்டி உற்சவம் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது. அங்குள்ள ஸ்ரீராமர், கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. அதில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இஸ்ரவேலின் முதல் அரசனான சவுல், கடவுளின் கட்டளையை மீறியதால், தாவீது இஸ்ரவேலின் புதிய மன்னனாக இறைவனால் அடையாளம் காட்டப்பட்டார்.
இஸ்ரவேலின் முதல் அரசனான சவுல், கடவுளின் கட்டளையை மீறியதால், தாவீது இஸ்ரவேலின் புதிய மன்னனாக இறைவனால் அடையாளம் காட்டப்பட்டார்.இதையடுத்து மக்களின் ஆதரவு தாவீதுக்குப் பெருகியதைக் கண்டு ‘எங்கே அவன் அரசனாகிவிடுவானோ’ எனப் பயந்து அவனைக் கொல்லத் துணிந்தார், சவுல். அவரது அந்த கொலை முயற்சியிலிருந்து பலமுறை தப்பித்த தாவீது, பல நகரங்களுக்கு ஓடி அங்கிருக்கும் ராஜாக்களிடம் அடைக்கலம் கேட்டு, எங்கும் நிரந்தரமாகத் தங்க முடியாமல் அலைந்தார். சவுலோ தன் ஆட்களுடன் தாவீதைக் கொல்லத் துரத்திக்கொண்டே இருந்தார்.
அதுல்லாம் என்ற குகையில் தாவீது மறைந்து வாழ்ந்தபோது அவருடைய அண்ணன்களும் தாவீது இருக்கும் இடத்துக்கு வந்து, அவருடன் சேர்ந்துகொண்டார்கள். அதேபோல் அநீதியினால் கொதித்துப்போய் அரசனுக்கு எதிராகப் புரட்சி செய்து பிரச்சினைகளில் சிக்கியிருந்தவர்களும், கடன்தொல்லையால் அவதிப்பட்டவர்களுமாக சுமார் 400 ஆண்கள் தாவீதோடு சேர்ந்துகொண்டார்கள். அவர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்த தாவீது அவர்களின் தலைவரானார். பின்னர் நோபு நகரில் கடவுளாகிய யகோவுக்கு ஊழியம் செய்துவந்த குருவாகிய அகிதூப்பின் மகன் அகிமெலேக்கைச் சென்று சந்தித்தார்.
தாவீது அவரிடம் உணவையும், ஆயுதங்களையும் பெற்றுக்கொண்டார். அகிமெலேக்கின் இந்தச் செயலை ஒற்றர்கள் வழியே கேள்விப்பட்ட சவுல், நோபு நகருக்கு ஆட்களை அனுப்பி தாவீதுக்கு உதவிய அகிமெலேக்கையும் 85 குருமார்கள் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அனைவரையும் அரண்மனைக்கு அழைத்துவரச் செய்து, கொன்று போட்டான். நோபு நகரத்தையும் தாக்கி, ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள் எல்லாரையும் வாளுக்குப் பலியாக்கினான். அகிமெலேக்கின் மகன்களில் ஒருவராகிய அபியத்தார் கொலைக்களத்திலிருந்து தப்பியோடி தாவீதிடம் தஞ்சமடைந்து, சவுல் இரக்கமின்றி நடத்திய படுகொலைகளைப் பற்றி எடுத்துக் கூறினார். தன்பொருட்டு இத்தனை மரணங்கள் நிகழ்ந்ததை எண்ணி தாவீது மிகவும் வருந்தி அழுதார்.
அதேசமயம் தாவீதிடம் பலமுறை தோற்ற பெலிஸ்தியர்கள் கேகிலா என்ற நகரத்தைத் தாக்கி, அங்குள்ள தானியங்களையும் செல்வங்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட தாவீது, தனது சிறு படையுடன் விரைந்து சென்று கேகிலா நகரத்தாரைக் காப்பாற்றினார். இது பற்றிய செய்தி சவுலின் காதுகளுக்குச் சென்றதும் அவரது ரத்தம் கொதித்தது. பெரும் படையுடன் புறப்பட்ட சவுல், தாவீதை தீர்த்துக்கட்ட துடித்தார். இதை கடவுள் வழியாக அறிந்த தாவீது, தன்னுடன் இருந்த 600 வீரர்களுடன் பல இடங்களில் பதுங்கி வாழ்ந்தார். இறுதியாக என்கேதிக்கு என்ற செங்குத்தான மலைப் பகுதிக்குப் போய், அங்கிருந்த குகைகளில் தங்கினார்.
இதை அறிந்துகொண்ட சவுல், 3,000 தலைசிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து, வரையாடுகள் திரிகிற செங்குத்தான அந்தப் பாறைகளின் நடுவே தாவீதையும் அவருடைய ஆட்களையும் தேடிக்கொண்டு போனார். தன் படை வீரர்களை விட்டு தனியாக ஒரு குகைக்குள் சென்ற சவுலுக்கு, அங்கே தாவீதும் அவரது படையும் பதுங்கி இருந்தது தெரியவில்லை.
தாவீதின் வீரர்கள் அவரிடம், “இன்றைக்கு நம் கடவுளாகிய யகோவா உங்கள் கைகளின் வெகு அருகில் உங்கள் எதிரியைக் கொண்டுவந்து கொடுத்திருக்கிறார். அவரை நீர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று தூண்டினார்கள். ஆனால், தாவீது எழுந்து சத்தமில்லாமல் போய், சவுல் போட்டிருந்த கையில்லாத அங்கியின் ஓரத்தை மட்டும் வெட்டி எடுத்தார். அவரது ஆட்களோ தாவீதின் செயலால் கோபமுற்று சவுலைக் கொல்லத் துடித்து மறைவுகளிலிருந்து வெளிப்பட்டார்கள். ஆனால், தாவீது தன்னுடைய வீரர்களைத் தடுத்து, ஆட்களை எச்சரித்தார். சவுலோ இதைக் கேட்டு குகையிலிருந்து தலைதெறிக்க வெளியே ஓடினார்.
அப்போது, தாவீதும் அந்தக் குகையிலிருந்து வெளியே வந்து, “என் எஜமானே, சவுல் ராஜாவே.. நீங்கள் குகையில் இருந்தபோது கடவுள் உங்களை எப்படி என் கையில் கொடுத்தார் என்பதை இன்றைக்கு நீங்களே பார்த்தீர்கள். ஆனால், நான் உங்களைக் கொல்லவில்லை. ஏனெனில், நீங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உங்களுடைய கையில்லாத அங்கியின் ஓரத்தை வெட்டி எடுத்துக்கொண்டேன். நான் இதை மட்டும்தான் வெட்டி எடுத்தேன், உங்களைக் கொல்லவில்லை. இதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நான் உங்களுக்கு எதிராக எந்தப் பாவமும் செய்யவில்லை. ஆனால், நீங்கள் என் உயிரை வேட்டையாடத் துடிக்கிறீர்கள். இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடி அலைகிறார்? யாரைத் துரத்திக்கொண்டு வருகிறார்? உங்களுக்கும் எனக்கும் நடுவில் நின்று கடவுளே தீர்ப்பு கொடுக்கட்டும். நீங்கள் எனக்குத் தீர்ப்புக் கொடுக்காதீர்கள்” என்றார். கடவுள் முன்பாக தாவீதின் பணிவைக் கண்டு சவுலின் ஆணவம் உடைந்து நொறுங்கியது.

தை மாத பவுர்ணமியையொட்டி கருட சேவை உற்சவம் நடந்தது. இதில் கோவில் எதிரே உள்ள வாகன மண்டபத்தில் இருந்து ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின்போது 5-ம் நாள் கருடசேவை உற்சவம் நடைபெறும். அன்று ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் மாடவீதிகளில் வலம் வருவார்.
அதேபோல் ஒவ்வொரு பவுர்ணமி மாதமும் பவுர்ணமியன்று இரவு கருட சேவை உற்சவம் நடைபெறும். அதன்படி, தை மாத பவுர்ணமியையொட்டி கருட சேவை உற்சவம் நேற்று இரவு நடந்தது.
இதில் கோவில் எதிரே உள்ள வாகன மண்டபத்தில் இருந்து ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வி.ஐ.பி. தரிசன டிக்கெட், ஆன்லைன் மூலம் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள், இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவில் உண்டியல் மூலம் நேற்று ரூ.2.54 கோடி வசூலாகியுள்ளது. தொடர்ந்து இன்று அதிகாலை முதல் கட்டண தரிசனத்திலும், இலவச தரிசனத்திலும் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா வருகிற 11-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்குகிறது.
திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி இந்த ஆண்டு மாசித்திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்குகிறது.
இதைத் தொடர்ந்து 12-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சி, 14-ந்தேதி சாமி சாட்டுதல், 16-ந்தேதி கோவில் நிர்வாகம் சார்பில் மாசித்திருவிழா கொடியேற்றமும் நடைபெறுகின்றன. இதையடுத்து 27-ந்தேதி அம்மனின் தசாவதார நிகழ்ச்சியும், மார்ச் 1-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கொடி இறக்கமும், 2-ந்தேதி கோட்டை மாரியம்மனின் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழாவின் போது சாமி வீதியுலா நடைபெறுவது வழக்கம். அதில் கோட்டை மாரியம்மன் திண்டுக்கல் நகர் முழுவதும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்புரிவார். ஆனால், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், இந்த ஆண்டு மாசித்திருவிழாவில் சாமி வீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் ஒவ்வொரு நாளும் கோவில் வெளிப்பிரகாரத்தில் சாமி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதோடு தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள், கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
இதற்கிடையே மாசித் திருவிழாவையொட்டி நேற்று காலை முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, முகூர்த்தகால் நடப்பட்டது. இதில் கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி, பரம்பரை அறங்காவலர்கள் பாலசுந்தரம், பாலகுரு, கணேசன், சண்முக முத்தரசப்பன், மகாலட்சுமி, கண்ணன், கமலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் பவுர்ணமியை முன்னிட்டு மலைக்கோட்டை நுழைவு வாயில் முன்பு திரண்ட பக்தர்கள், நடராஜர் சிலையை சப்பரத்தில் தூக்கிக்கொண்டு கிரிவலம் புறப்பட்டனர்.
திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி பவுர்ணமி தினமான நேற்று மாலை 5.30 மணி அளவில் அபிராமி அம்மன் பக்தர்கள் குழு சார்பில் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மலைக்கோட்டை நுழைவு வாயில் முன்பு திரண்ட பக்தர்கள், நடராஜர் சிலையை சப்பரத்தில் தூக்கிக்கொண்டு கிரிவலம் புறப்பட்டனர்.
அப்போது கிரிவலம் செல்லும் பாதையில் இருந்த வீடுகளின் முன்பு பொதுமக்கள் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து நடராஜரை வழிபட்டனர். ஆர்.வி.நகர், முத்தழகுபட்டி வழியாக சென்ற இந்த ஊர்வலம் மீண்டும் மலைக்கோட்டைக்கு வந்து நிறைவடைந்தது. இதில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின்னர் மலைக்கோட்டை நுழைவு வாயில் முன்பு நடராஜர் சிலை இறக்கி வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. கிரிவலத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சுக்கிரன் நீச்சமடைந்தால் அந்த தோஷத்திற்கு சம்மந்தப்பட்டவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர்கள் விரதம் அனுஷ்டிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
ஒருவர் வாழ்க்கையில் அனைத்து சுக சௌக்கியங்களும் பெற்று, மகிழ்ச்சியாக வாழவேண்டும் எனில், அவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலிமை பெற்றிருப்பது அவசியம். குறிப்பாக ஒருவரின் திருமண வாழ்க்கை இனிமையாக அமைய சுக்கிரன் வலிமைப் பெற்றிருக்க வேண்டும். சுக்கிரன் கன்னியில் நீசம் பெற்றிருந்தாலும் செவ்வாயுடன் கன்னியில் சேர்ந்திருந்தாலும் சுக்கிரனின் வலிமை குன்றிவிடும்.
மேலும், சுக்கிரன் லக்னத்துக்கு 8-ம் வீட்டில் இருப்பதும் சுக்கிர தோஷமாகும். அந்த 8-ம் வீடு சுக்கிரனின் ஆட்சி வீடுகளாகிய ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளாகவோ, உச்ச வீடான மீன ராசியாகவோ இருந்தால், சுக்கிரனால் தோஷம் ஏற்படாது. சுக்கிரன் 7-ம் வீட்டில் இருப்பதும் 3, 6, 12 ஆகிய இடங்கள் ஒன்றில் மறைவு பெற்றிருப்பதும் தோஷத்தை ஏற்படுத்தும்.
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனால் தோஷம் ஏற்பட்டிருந்தால், வாழ்க்கையில் பல சுகங்களை அனுபவிப்பதில் தடைகள் ஏற்படும். திருமணம் நடைபெறுவது தாமதமாவதுடன், இல்லற வாழ்க்கையிலும் பல பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வெண்ணிற வஸ்திரம் அணிவித்து, வெண் தாமரை மலரால் அர்ச்சித்து வழிபடவேண்டும்.
மொச்சைப் பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வீட்டுப் பூஜையறையில் மகாலட்சுமி திருவுருவப் படத்தை அலங்கரித்து வைத்து, நெய் தீபம் ஏற்றி, மகாலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் பாராயணம் செய்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.
பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில், கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம். தினமும் இரவு மொச்சைப் பயறை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் மொச்சை ஊறிய தண்ணீரை அத்தி மரத்துக்கு ஊற்றிவிட்டு, மொச்சைப் பயறை பசுவுக்கு உண்ணக் கொடுக்கவேண்டும்.
வீட்டில் மரம் வளர்க்க வசதியில்லாதவர்கள், அருகிலுள்ள கோயிலில் வளர்க்கச் செய்யலாம். இதன் மூலம் மிகக் கடுமையான சுக்கிர தோஷங்களிலிருந்தும் விடுபடலாம்.

தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நாள் முதற்கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாரை, சாரையாக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்தனர்.
பழனி மலைக்கோவிலில் உள்ள பாரவேல் மண்டபம் மலர்களை கொண்டு ஓம் வடிவில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.
* தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றதை அடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் சங்கமித்தனர். இதையடுத்து பக்தர்களின் பசியை போக்க ஆங்காங்கே உணவு, தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.
* பழனி அடிவாரத்தில் இருந்து சீரான முறையில் மலைக்கோவிலுக்கு அனுப்பியதால் சிரமமின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
* குளத்துரோடு, அடிவாரம் ரோடு, பூங்காரோடு உள்ளிட்ட பகுதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டன. அதேநேரத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
* பழனி மலைக்கோவிலில் உள்ள பாரவேல் மண்டபம், பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இது, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
* பழனி பெரியநாயகி அம்மன் கோவில் ரதவீதிகளில் நேற்று தேர் வலம் வந்தபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் ெஹலிகேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
* மலைக்கோவில் மற்றும் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களில், முக கவசம் அணியாதவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.
* தேரோட்டத்துக்கு முன்பாக பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ரதவீதிகள் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.
* பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில் தைப்பூச திருவிழாவுக்கு என்று தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் நகர் பகுதியில் குப்பைகள் சேராமல் தூய்மையாக வைத்திருந்தனர்.
* பழனி இடும்பன் மலை பகுதியில் நேற்று காலை ஏராளமான பக்தர்கள் சூரிய தரிசனம் செய்தனர்.
* தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நாள் முதற்கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாரை, சாரையாக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்தனர்.
* மலர்காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து வந்து பக்தர்கள் அசத்தினர். அலகு குத்தி சில பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
* குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் சிலர் கரும்பு தொட்டிலை சுமந்து வந்தனர்.
* பழனி ரதவீதிகளில் பெண் பக்தர்கள் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடியபடி வலம் வந்தனர்.
* பழனி தைப்பூச ேதரோட்டத்தையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டநெரிசலில் பல்லடத்தை சேர்ந்த குமார், சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த ஹரிப்பிரியா ஆகியோரின் செல்ேபான்கள் காணாமல் போயின. அதனை, போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
* பழனி மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் மற்றும் அடிவார பகுதி மின்னொளியில் ஜொலித்தன. இதேபோல் பாதயாத்திரை பக்தர்கள் நலன் கருதி ஒட்டன்சத்திரம்-பழனி, தாராபுரம்-பழனி, உடுமலை-பழனி வரை வழிநெடுகிலும் 10 அடிக்கு ஒரு மின்விளக்குகள் வீதம் ஏராளமான விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
* விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று நடந்த தைப்பூச தேரோட்டத்தையொட்டி, போலீஸ் டி.ஐ.ஜி.முத்துசாமி தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* தைப்பூச நாளான நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். இதனால் அடிவாரத்தில் இருந்து சீரான முறையில் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுப்பப்பட்டனர். மலைக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக சேவல்களை வழங்கினர்.
* பழனி தைப்பூச திருவிழாவுக்கு வந்த பக்தர்கள், இடும்பன்குளத்தில் புனித நீராடினர். இதனால் ஆழமான பகுதிக்கு பக்தர்கள் செல்வதை தடுக்க தீயணைப்பு துறையினர் ரப்பர் படகில் ரோந்து சென்றனர்.

தைப்பூசத்தை யொட்டி நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி பழனியாண்டவர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி தேர்த்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பூத வாகனம், ஆட்டுக்கிடா, மயில் வாகனம், காமதேனு, ரிஷபம், யானை போன்ற வாகனங்களில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 11 மணிக்கு சாமி தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது.
மலையை சுற்றி உள்ள பாதையில் பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு தேரை இழுத்தனர். வழி நெடுகிலும் ஏராளமான பெண்கள் தேங்காய், பழம் வைத்து சாமியை வழிபட்டனர். இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஸ்குமார், எருமப்பட்டி ஒன்றியகுழு தலைவர் (பொறுப்பு) லோகநாதன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் இந்த தேரோட்டத்தை காண நாமக்கல், கூலிப்பட்டி, ரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தூசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டு இருந்தனர். தேரோட்டத்தையொட்டி அங்கு கரும்பு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் ராமபுரத்தில் உள்ளது புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூர் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு சமீபகாலமாக வெள்ளமென பக்தர்கள் திரண்டு வந்து அம்மன் அருளினைப் பெற்றுச் செல்கின்றனர். இந்த ஆலய தல வரலாறு வருமாறு:-
பொன்மேனி என்ற பெயருடைய விவசாயி ஒருவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். வறுமையை சமாளிக்க அவர் மகிசுரன் என்பவனிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கினார்.
ஆனால் பாவம் நிலத்தை அவரால் திருப்பவே முடியவில்லை. கடனை உடனே திருப்பித் தருமாறு மகிசுரன் வற்புறுத்தினான். கொடுக்க முடியாமல் பொன்மேனி திணறவே, கோபம் வந்தது மகிசுரனுக்கு.
அந்த ஊரில் இருந்த பூங்காவனத்திற்குச் சென்று, அன்றைய இரவிற்குள் நிலத்தை உழுது, விதைத்து, நீர்பாய்ச்சுமாறு கட்டளையிட்டான். ஒரேநாளில் இவை அனைத்தையும் செய்வது என்றால் எளிதான காரியமா என்ன? ஆனாலும் அவனால் வேறு என்னதான் செய்ய முடியும்?சிவராத்திரி அன்று கோவிலுக்குச் சென்று சிவன் அருளைப் பெற முடியாமல் போயிற்றே என்று வருந்தியவாறே, பூங்காவனம் சென்றான் பொன்மேனி. தான் எப்போதும் வணங்கி வரும் இஷ்ட தெய்வமான கருமாரியை கரங்கூப்பி வணங்கியவாறு, நிலத்தை அந்த இரவு நேரத்தில் உழத் தொடங்கினான். திடீரென்று அவனது ஏர் கலப்பை ஏதோ ஒன்றில் இடித்தது போலத் தெரிந்தது.
என்ன அது? என்று அவன் கீழே குனிந்து உற்றுப்பார்த்தபோது, அங்கே ரத்தம் பீறிட்டு வழிந்தோடிக் கொண்டிருந்தது. பிசுபிசுவென்று வடிந்த ரத்தம், பின்னர் வேகமாகப் பீய்ச்சுவதைப் பார்த்ததும் பொன்மேனிக்கு கண்கள் இருண்டு, மயக்கம் வந்தது. அப்படியே மயக்கமானான். அப்போது ஒரு அசரீரி குரல் அவன் காதுகளில் விழுந்தது.
பயப்படாதே பக்தனே! சற்றுமுன் வயதான பெரியவராக சிவபெருமானும். வயதான மூதாட்டி போல பராசக்தியாகவும் வந்தது நாங்கள்தான். நீ தண்ணீர் கொண்டு வந்ததும் சிவன் சென்றுவிட்டார். நான், இங்கே உன் நிலத்தில் மண்புற்றாக மாறினேன். அந்தப் புற்றில்தான் நீ, உன் கலப்பையால் இடித்து என்னைக் காயப்படுத்தி விட்டாய். அதனால்தான் அதில் ரத்தம் வழிந்தோடுகிறது. வலி தாங்காமல் நான் அப்படியே அங்கு படுத்துவிட்டேன்.
கவலைப் படாதே. இதனால் எதுவும் தவறாகி விடவில்லை. மாறாக நல்லதையே நீ செய்திருக்கிறாய். அதாவது, இடித்துக் காயப்படுத்தியதன் மூலம் இந்த உலகிற்கு நீ என்னைக் காண்பித்து விட்டாய். எங்களைப் பூஜிக்கும் பேற்றையும் நீ அடைந்து விட்டாய் இவ்வாறு அந்த அசரீரி சொன்னது. பொன்மேனி சுய உணர்வுக்கு வந்து, தன் காதுகளில் ஒலித்த அந்தக் குரல் பார்வதி தேவியினது என்பதைப் புரிந்து கொண்டான். அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இதனையடுத்து ஊர் முழுவதும் இந்தச் செய்தி காட்டுத் தீயாகப்பரவியது. அங்கேயே சயன நிலையில் அங்காளம்மனைப் பிரதிஷ்டை செய்வது என ஊரார் முடிவு செய்தனர். அப்படியே அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டாள். பூங்காவனத்தில் தோன்றிய அம்மன் என்பதால் பூங்காவனத்தம்மன் என்னும் சிறப்பு பெயரும் புட்லூர் அங்காள பரமேசுவரிக்கு வழங்கப்பட்டு வருகிறது.
புட்லூர் ஆலயத்துக்கு இன்னொரு தல வரலாறும் சொல்லப்படுகிறது. ஒரு தடவை சிவனும், பார்வதியும் மேல்மலை யனூருக்கு புட்லூர் வனம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். நீண்ட தூரம் நடந்து களைப் படைந்ததால் வேப்ப மர நிழலில் கர்ப்பிணியாக இருந்த பார்வதி அமர்ந்தாள். தாகமாக இருப்பதால் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். உடனே சிவபெருமான் அருகில் இருந்த கூவம் நதியை தாண்டி சென்று புனிதநீர் எடுத்து வந்தார். அந்த சமயத்தில் பலத்த மழை பெய்து கூவம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் சிவபெருமானால் நதியை கடந்து வர இயலவில்லை. எனவே வெள்ளம் குறையட்டும் என்று சிவன் காத்திருந்தார். இதற்கிடையே பசி-தாகத்துடன் இருந்த பார்வதி அப்படியே தரையில் விழுந்து விட்டாள். அவளை சுற்றி மண் குவிந்து புற்றாக வளர்ந்து விட்டது. இந்த நிலையில் அங்கு திரும்பி வந்த சிவபெருமான், புற்றுக்குள் பார்வதி அமர்ந்து விட்டதை அறிந்து அங்கேயே நின்று விட்டார். அதை பிரதிபலிக்கும் வகையில் புட்லூர் தலத்தில் சிவபெருமான், தாண்டவ ராயன் அம்சமாக சற்று கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை பார்க்கலாம்.
புட்லூர் தலத்தில் பரமேஸ்வரி அமர்ந்த புற்று தற்போதும் வளர்ந்தபடி உள்ளது. இத்தல நாயகி நவக்கிரக தோஷங்களை நீக்கி, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தருகிறாள். தன்னை நம்பி வரும் பக்தர்களின் திருஷ்டியை விலக்கி, அவர்கள் மீது படிந்துள்ள பில்லி, சூனிய தோஷங் களை விரட்டுகிறாள். சிலருக்கு அவள் பாம்பாக காட்சி கொடுக்கிறாள். சிலருக்கு மூதாட்டியாக காட்சி கொடுக்கிறாள்.
மேலும் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் மல்லாந்து படுத்திருப்பது போல அம்மனே இத்தலத்தில் இயற்கையாக தோன்றி உள்ளாள். இந்த அதிசய தோற்றத்தை பக்தர்கள் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் பார்த்திருக்க முடியாது. எனவேதான் புட்லூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது. புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலில் உள்ளே கர்ப்பகிரகத்துக்கு நேர் எதிரில் மண்புற்றாக மல்லாந்தவாக்கில் பூங்காவனத்தம்மன் எழுந்தருளி இருக்கிறாள். சுயம்பு புற்று முழுக்க முழுக்க மஞ்சளும், குங்குமம் துலங்க அன்னை அருள்பாலிக்கிறாள். அன்னை ஈசானிய மூலையில் காலை நீட்டி தென்மேற்கில் தலைவைத்து மல்லாந்து இருக்கிறாள். அந்த சன்னதியில் கால் வைத்த மறு வினாடி எல்லா பக்தர்களுக்கும் உடம்பில் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறது.
மண்புற்று மாதாவுக்கு அப்பால், கருவறையில் சூலம் தாங்கிய அங்காள பரமேஸ்வரி, எலுமிச்சம்பழ மாலைகளுடன் ஏற்றமான பூ அலங்காரங்களுடன் புன்னகை துலங்க காட்சி அளிக்கிறாள். சந்நதியை விட்டு வெளியே வந்தால், பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் தலவிருட்சமாக வேம்பு இருப்பதை பார்க்கலாம். அதன்கீழ் சுயம்புவாக உயர்ந்திருக்கும் இன்னொரு மண்புற்று, உள்ளது. அதன் உள்ளிருக்கும் அன்னைக்கு அளிப்பதற்காக எடுத்து வரப்படும் அழுதப்பால் இந்த புற்றில் அர்ப்பணம் செய்யப்படு கிறது. இந்தப் புற்றைச் சுற்றி வரும்போதே மகளிர் தங்கள் புடவையின் முந்தானையில் இருந்து ஒரு பகுதியை கிழித்து வேப்ப மரக்கிளையில் கட்டி முடிச்சிடுகிறார்கள். வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன.
இந்த அம்மனின் சந்நிதியில் ஒருமுறை காலடி எடுத்து வைத்தால் மனக்குறைகள் அகலும், தடைகள் விலகும், பில்லி, ஏவல், சூனியம், பேய், பிசாசுகள் போன்ற எவை இருப்பினும் இருந்த இடம் தெரியாமல் விலகிப் புண்ணியங்கள் சேரும் என்பது இவள் அற்புதம் அறிந்த மக்களின் மனதில் இருக்கும் மாறாத நம்பிக்கையாகும்.
இத்தகைய சிறப்புடைய புட்லூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை கூழ் வார்த்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.
குழந்தை வரம் கிடைக்கும்
திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6:30 முதல் இரவு 8 மணி வரை; மற்ற நாட்களில் காலை 6:30 முதல் மதியம் 1:00 மணி மற்றும் 2:00 முதல் இரவு 8:30 மணி வரை நடை திறந்திருக்கும்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை நடந்தது. இதையொட்டி பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் நிறைபுத்தரிசி பூஜை வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த நிறைபுத்தரிசி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா, நவராத்திரி திருவிழா, ஆடி அமாவாசை விழா, தை அமாவாசை விழா, திருக்கார்த்திகை தீபத்திருவிழா, சித்ரா பவுர்ணமி, மார்கழி ஊஞ்சல் உற்சவம், சித்திரை விசு கனி காணுதல் உள்பட பல்வேறு விழாக்கள் மற்றும் வழிபாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் நடத்தப்படும்.
ஆனால் தை மாத நிறைபுத்தரிசி பூஜை மட்டும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கவுடியார் அரண்மனை சார்பில் நிச்சயிக்கப்படும். நெற்பயிர்கள் அறுவடையையொட்டி தை மாதத்தில் இந்த நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். அதேபோல இந்த ஆண்டுக்கான தை நிறைபுத்தரிசி பூஜை நேற்று காலை நடந்தது. அதன்படி அதிகாலை 5.30மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்பட்டது.
இதையொட்டி நேற்று அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக் கட்டாக கட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
வழக்கமாக வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை தர்மசாஸ்தா கோவிலில் வைத்து பூஜை செய்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக பகவதி அம்மன் கோவிலுக்கு எடுத்து வருவார்கள். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக நெற்கதிர்களை வயலில் இருந்து கோவில் ஊழியர்கள் நேரடியாக பகவதிஅம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
அதன் பிறகு அந்த நெற்கதிர்களை பகவதியம்மன் மூலஸ்தானத்துக்கு முன்பு உள்ள மண்டபத்தில் படைத்து வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதற்கிடையே ஐதீகத்தின் படி நெற்கதிர்கள் மற்றும் தேங்காய், பழங்கள் அறுவடை தர்மசாஸ்தா கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன் போற்றி, விட்டல் போற்றி ஆகியோர் நடத்தினார்கள்.
சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கோவில் மேலாளர் ஆறுமுக நயினார் முன்னிலையில் நெற்கதிர்களை கோவில் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.
இந்த நெற்கதிர்களை தங்கள் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வைத்தால் இல்லத்தில் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதும், விளைநிலங்களில் அந்த நெல்மணிகளை தூவினால் அந்த ஆண்டு பயிர்கள் செழித்து வளரும் என்பதும் ஐதீகம் ஆகும். எனவே இந்த நெற்கதிர் பிரசாதம் வாங்குவதற்காக நேற்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர்.
நிறைபுத்தரிசி சிறப்பு வழிபாடுடன் நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உச்சி கால பூஜை, இரவு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை போன்றவை நடந்தது. நிறைபுத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம், வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் சிவ குற்றாலம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அழகேசன், சதாசிவம், ஜெயச்சந்திரன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவ ராமச்சந்திரன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார், கோவில் பொருளாளர் ரமேஷ் ஆகியோர் செய்துஇருந்தனர்.

பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பந்தற்கால் நாட்டு விழா நடைபெற்றது.
பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி பெருந் திருவிழா அடுத்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
இதற்கான பந்தற்கால் நாட்டு விழா தைப்பூச நாளான நேற்று நடந்தது. விழாவன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு அபிஷேகம்,காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 7.30 மணிக்கு நிறை புத்தரிசி பூஜை நடந்தது.
தொடர்ந்து பந்தற்கால் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில் இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம், கோவில் தந்திரி மகா தேவரு அய்யர், தேவசம் கண்காணிப்பாளர் செந்தில் குமார், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கோவில் என்ஜினீயர் அய்யப்பன் மற்றும் ஹைந்தவ சேவா சங்க நிர்வாகிகள் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி வேல்முருகன் கோவிலில் முருகன், வள்ளி-தெய்வானைக்கு தெப்பக்குளத்தில் ஆறாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா நேற்று வரை 10 நாட்கள் தொடர்ந்து நடந்தது.
விழாவையொட்டி தினமும் அதிகாலையில் நிர்மால்ய தரிசனமும் தொடர்ந்து அபிஷேகமும், சிறப்பு வழிபாடும், யாகசாலை பூஜையும் நடந்தது. உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலும் நடந்தது. மாலையில் சமய உரையும், இரவு பஜனையும் நடந்தது.
பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.
10-ம் திருநாளான நேற்று தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு உற்சவமூர்த்தி கிரிவலம் வருதலும், இரவு 7 மணிக்கு கார்த்திகை பொய்கை திருக்குளத்தில் வேல்முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு தீர்த்தவாரி ஆறாட்டு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சுவாமிக்கும், அம்பாள் விக்ரகங்களுக்கும் பொய்கை திருக்குளத்தின் கரையில் வைத்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் விக்ரகங்களுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.
அதன்பிறகு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமியையும், அம்பாளையும் எழுந்தருள செய்து முருகன் குன்றத்தின் மேல் பகுதியில் கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் நற்பணி மன்றத்தினர் செய்து இருந்தனர்.