
அப்போது கிரிவலம் செல்லும் பாதையில் இருந்த வீடுகளின் முன்பு பொதுமக்கள் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து நடராஜரை வழிபட்டனர். ஆர்.வி.நகர், முத்தழகுபட்டி வழியாக சென்ற இந்த ஊர்வலம் மீண்டும் மலைக்கோட்டைக்கு வந்து நிறைவடைந்தது. இதில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின்னர் மலைக்கோட்டை நுழைவு வாயில் முன்பு நடராஜர் சிலை இறக்கி வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. கிரிவலத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.