என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பிப்ரவரி 27-ந்தேதி நடக்கும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழாவுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கே அனுமதி. கொரோனா பிரச்சினையால் கேரள அரசு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்
கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது.
ஆண்டுதோறும் இக்கோவிலில் மாசி மாதம் பொங்காலை விழா மிகவும் விமரிசையாக நடைபெறும். பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலுக்கு தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் செல்வார்கள்.
இங்கு நடைபெறும் பொங்காலை விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு நடந்த பொங்காலை விழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இது உலக சாதனையாக கருதப்பட்டது.
இந்த ஆண்டுக்கான பொங்காலை விழா அடுத்த மாதம் பிப்ரவரி 27ந்தேதி நடக்கிறது. இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், திருவனந்தபுரம் மேயர் ஆரியாராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் பல்ராம் குமார் உபாத்யா மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் பொங்காலை விழாவில் பங்கேற்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டு பொங்காலை விழாவில் பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொங்கலிட அனுமதி வழங்க வேண்டும்.
எத்தனை நபர்களுக்கு அனுமதி வழங்குவது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
பொது இடங்களில் எக் காரணம் கொண்டும் பொங்கல் வைக்க அனுமதிக்கக்கூடாது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதே நேரம் பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கல் வைத்து வழிபட எந்த தடையும் இல்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

சாய் பாபாவின் பக்தர்களுக்கு அவரது அருள் எப்போது ஒரு கவசம் போல காக்க தினமும் விபூதி அணிந்துகொள்ளும் சமயத்தில் சாய் பாபா விபூதி மந்திரம் அதை ஜெபிப்பது சிறந்தது.
சாய் பாபாவை வழிபடும் யாவருக்கும் எந்த துன்பங்களும் நேருவதில்லை. அப்படியே துன்பங்கள் அவர்களை நெருங்கினாலும் அது. அவர்களின் பக்தியை சோதிக்கும் ஒரு பரிட்சையே தவிர மற்றபடி சாய் பாபா எப்போதும் தன் பக்தர்களை காத்து ரட்சிக்கும் ஒரு அற்புத சக்தியாக விளங்குகிறார் என்பது சாய் பாபா பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சாய் பாபாவின் பக்தர்களுக்கு அவரது அருள் எப்போது ஒரு கவசம் போல காக்க தினமும் விபூதி அணிந்துகொள்ளும் சமயத்தில் சாய் பாபா விபூதி மந்திரம் அதை ஜபிப்பது சிறந்தது.
விபூதி மந்திரம்:
பரமம் பவித்ரம் பாபா விபூதிம்
பரமம் விசித்ரம் லீலா விபூதிம்
பரமார்த்த இஷ்டார்த்த மோகபஷ
ப்ரதானம் பாபா விபூதிம் இதமஸ்ரயாமி
இந்த மந்திரத்தை ஜபித்தபடி விபூதி அணிவதன் பயனாக, அந்த நாள் முழுக்க அனைத்து தீய சக்திகளிடம் இருந்தும், அந்த விபூதி கவசம் போல காக்கும். அது மட்டும் அல்லாமல் அன்றைய நாள் ஒரு அற்புதமான நாளாக அமையும் என்பது நம்பிக்கை.

நெல்லையப்பர் கோவில் திருவிழாவில் நடராஜர் திருநடன காட்சி நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கடந்த 22-ந்தேதி நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றில் உள்ள தைப்பூச மண்டலத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
நேற்று நெல்லையப்பர் கோவிலில் உள்ள சவுந்திர சபா மண்டபத்தில் நடராஜர் திருநடன காட்சி நடைபெற்றது. இதில் நடராஜர் திருநடனத்தை கண்டு அம்பாள் மெய்மறந்த நிலையில் சுவாமி திடீரென மாயமானார்.
இதையடுத்து ரதவீதியில் சுவாமியை தேடி அம்பாள் வந்தபோது, சந்திப்பிள்ளையார் கோவில் அருகே அம்பாளுக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது. சுவாமி நெல்லையப்பர் கோவில் எதிரே உள்ள சந்திர புஷ்கரணி என்கிற வெளி தெப்பத்தில் சுவாமி-அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

பணகுடி ராமலிங்க சுவாமி, திருக்குறுங்குடி நம்பிராயர் கோவில்களில் தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பணகுடி ராமலிங்க சுவாமி- சிவகாமி அம்பாள், நம்பி சிங்கபெருமாள் கோவில் தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் தெப்ப திருவிழா நடந்தது. சுவாமி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாகும். பிரசித்திபெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் தெப்ப உற்சவ விழா 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு அழகியநம்பிக்கும், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நம்பி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 12 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) இரவில் திருமலைநம்பி கோவில் தெப்ப உற்சவம் நடக்கிறது.
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் 10-ம் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடந்தது. சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை ஆகியோர் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தனர். விழாவில் திரளாை னவர்கள் கலந்து கொண்டனர்.

குளச்சல் தூய காணிக்கை அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 7-ந்தேதி வரை 10நாட்கள் நடக்கிறது.
குளச்சல் தூய காணிக்கை அன்னை திருத்தல திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 7-ந்தேதி வரை 10நாட்கள் நடக்கிறது.
இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு முன்னோர் திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற கோட்டார் பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் குளச்சல் மறை வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் சேல்ஸ், பங்குத்தந்தை மரிய செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவிழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள், திருப்பலி ஆகியவை நடக்கிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து, இரவு 9 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா நடக்கிறது. வருகிற 2-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நற்கருணை ஆராதனை, மாலை 6 மணிக்கு காணிக்கை அன்னை திருச்சப்பர மெழுகுவர்த்தி பவனி நடைபெறுகிறது. 5-ந்தேதி காலை 7 மணிக்கு நோயாளிகளுக்கான குணமளிக்கும் சிறப்பு திருப்பலியும், 6-ந்தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு மாலை ஆராதனையும் நடக்கிறது.
7-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா முதல் திருப்பலி, 8 மணிக்கு கோட்டார் பிஷப் நசரேன் சூசை தலைமையில் பெருவிழா திருப்பலி, 10 மணிக்கு இலவச மருத்துவ முகாம் ஆகியவற்றுடன் விழா நிறைவடைகிறது.

சோமரசம்பேட்டையில் 5 சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று முன்தினம் சிறப்பாக நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து உற்சவர் முத்துகுமாரசாமி உய்யக்கொண்டான் வாய்க்காலில் தீர்த்தவாரி கண்டருளினார். அதன்பின்னர் வடகாபுத்தூரில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனை தொடர்ந்து நேற்று காலை 10. 30 மணிக்கு வடகாபுத்தூரில் இருந்து முத்துக்குமாரசாமி புறப்பட்டு உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர், அல்லித்துறை பார்வதீஸ்வரர், சோழங்கநல்லூர் காசி விஸ்வநாதர், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சந்திப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 5 சுவாமிகளும் சோமரசம்பேட்டை 4 வீதிகளிலும் வலம் வந்து அங்குள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்குமேல் சுவாமிகள் ரத்தம் கோயிலுக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தைத்தேர் திருவிழா ஆளும் பல்லக்குடன் நிறைவு பெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி நம்பெருமாள் தினமும் காலை, மாலை இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் உத்திரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27-ந் தேதி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ரெங்கவிலாச மண்டபம் வந்தடைந்தார். பின்னர், இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் புறப்பட்டு 4 உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இந்த நிகழ்ச்சியுடன் தைத்தேர் திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அசோக்குமார், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

திருப்பைஞ்சீலியில் உள்ள பிரசித்தி பெற்ற நீலிவனநாதர் கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் நீலிவனநாதர் வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது
திருப்பைஞ்சீலியில் உள்ள பிரசித்தி பெற்ற நீலிவனநாதர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவிற்கு சுவாமி, அம்பாள் துடையூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று தீர்த்தவாரி கண்டு அருள்வது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் அம்பாள் பல்லக்கிலும், நீலிவனநாதர் குதிரை வாகனத்திலும் கோவிலிலிருந்து துடையூர் கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று தீர்த்தவாரி கண்டு அருளினார். அதைத்தொடர்ந்து நேற்று அங்கிருந்து சுனைபுகநல்லூர் வழியாக திருப்பைஞ்சீலி வந்தடைந்த சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் நீலிவனநாதர் வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

ஒரு வீட்டில் எதிர்மறையான விஷங்கள் நிகழ்ந்தால், அந்த வீட்டில் பல பிரச்சனைகள் நிகழும். அனைத்து பிரச்சனைகளும் தீர இந்த எளிமையான கல் உப்பு பரிகாரம் செய்தாலே போதும் அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடிவிடும்.
ஒரு வீட்டில் எதிர்மறையான விஷங்கள் நிகழ்ந்தால், அந்த வீட்டில் பல பிரச்சனைகள் நிகழும், மேலும் பார்க்கும் வேலைகளில் ஈடுபாடுகள் இல்லாமல் இருக்கும், எந்த விஷயத்திலும் எளிதில் முடிவு எடுக்க முடியாது, ஒரு செயலை செய்யலாமா? வேண்டாமா ? என்ற எண்ணம் தோன்றும். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை, பணம் கிடைப்பதற்கு தாமதம், பணம் வந்தும் பற்றாக்குறை போன்றவை. ஜாதக கிரக நிலைகளுக்கு அப்பாற்பட்டு, வீட்டிலிருக்கும் எதிர்மறை அதிர்வுகள் காரணமாக, வீட்டிற்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏற்பட்டிற்கும் கண் திருஷ்டி, மேலும் கணவன் மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வெளியில் கிளம்பும்போது, ஏற்படும் குடும்ப கண் திருஷ்டி, சில குடுபங்களில் மாதம் ஒருமுறையாவது மருத்துவமனைக்கு செல்வது போன்ற விஷயங்களால், குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த அனைத்து பிரச்சனைகளும் தீர இந்த எளிமையான கல் உப்பு பரிகாரம் செய்தாலே போதும் அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடிவிடும்.
கல் உப்பு பரிகாரம்:- கல் உப்பு, காய்ந்த மிளகாய் (நீளமானது) 4, எலுமிச்சை பழம் 1, கண்ணாடி கோப்பை 1, இந்த பரிகாரம் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கும் ஒரு எளிய பரிகாரம்.
இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் செய்யவேண்டும். அப்போதுதான் பலன்கள் அதிகமாக கிடைக்கும். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, ஒரு எலுமிச்சை பழத்தை கல் உப்பின் நடுவில் நிற்க வைக்கவேண்டும்.
பிறகு நான்கு காய்ந்த மிளகாயை அதனை சுற்றி நான்கு மூலைகளிலும் சொருக வேண்டும்.
மிளகாயின் கூர்மையான பகுதி எதிர்மறை சக்திகளை ஈர்த்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனை தலைவாசல் கதவின் உட்புற பகுதியின் மூலையில் வைக்கவேண்டும். இதனை வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றவேண்டும். அவ்வாறு மாற்றும்போது அந்த மூன்று பொருட்களையும் (கல் உப்பு, எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய்) ஓடும் நீரில் விட்டுவிடலாம் அல்லது மூன்று பொருட்களையும் சேகரித்து யார் காலிலும் படாதவாறு போட்டுவிடவேண்டும்.
இந்த பரிகாரத்தை செய்வதால் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டோக்கன் எண்ணிக்கையை 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தி உள்ளது. தரிசனத்துக்காக முன்பதிவில்லாமல் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பக்கூடாது என தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு தினமும் ரூ.300 கட்டண சிறப்பு தரிசனத்தில் 25 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் பக்தர்களும், மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் என மொத்தம் 40 ஆயிரம் பக்தர்கள் தினமும் சாமி தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் கூடுதலாக 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக இலவச தரிசன டோக்கன் எண்ணிக்கையை 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தி உள்ளது. தரிசனத்துக்காக முன்பதிவில்லாமல் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பக்கூடாது என தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது. அதன் மூலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாம் அனைவரும் விரதம் இருந்து கடவுளை வணங்கும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
விரதங்கள் எல்லாவற்றிற்கும் கூடுதலான விதிமுறைகள் பொதுவானதாகவே இருக்கும். விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடை களை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.
ஒவ்வொரு விரதத்திற்கும் வித்தியாசமான உணவு முறைக் கட்டுப்பாடுகள் உண்டு. அதற்கு ஏற்றபடி உணவினை உட்கொள்ளுதல் நன்று. பாரணை நாளன்று உரிய நேரத்தில் சமைத்து சாப்பிடுதல் வேண்டும்.
நோயாளர்களும், அசௌகரியமுடையோரும், பாலகர்களும், மாதவிலக்கான பெண்களும் விரதம் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள். பெண்கள் மாத விலக்காகி ஏழு தினங்கள் ஆன பின்பே விரதம் மேற் கொள்ளலாம்.
மேலும் குழந்தை பிறந்து நாற்பத்து எட்டு தினங்களுக்குப் பிறகே குழந்தை பெற்ற பெண்கள் விரதம் கடைப்பிடிக்கலாம். குடும்ப உறுப்பினர் எவரேனும் இறந்தால், அவர்கள் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகே குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

திருவண்ணாமலையில் ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளும் ஒன்று. ஈசானியகுளம், அய்யங்குளம், தாமரைகுளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் அருணாசலேஸ்வரர் கலந்து கொள்வார்.
அதன்படி திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நேற்று தைப்பூசத்தையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதைமுன்னிட்டு நேற்று காலையில் கோவிலில் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மங்கள மேளதாளத்துடன் கோவிலில் இருந்து அம்பாளுடன் அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்திற்கு வந்தார். அங்கு சூலத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது சூலத்திற்கு பால், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாலை வரை சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு கோவிலுக்கு திரும்பினார்.
அருணாசலேஸ்வரர் கோவில் வரலாற்று கதையின்படி திருவண்ணாமலை பகுதியை ஆண்டு வந்த வல்லாள மகாராஜா என்ற மன்னர் அருணாசலேஸ்வரரின் தீவிர பக்தர் ஆவார். வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அருணாசலேஸ்வரரிடம் அவர் தனது மனைவியுடன் தினமும் மனமுருக குழந்தை வரம்கேட்டு வேண்டி வந்து உள்ளார். ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அருணாசலேஸ்வரர் உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாக பாவித்து கொள். இந்த பிறவியில் நானே உனது மகன் என்று கூறியுள்ளார். அதன்படி ராஜாவும் அருணாசலேஸ்வரரை தனது மகனாக பாவித்து சிறந்த முறையில் ஆட்சி புரிந்து வந்துள்ளார். தைப்பூசத்தின் போது அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு விட்டு மாலையில் மேளதாளத்துடன் கோவிலுக்கு திரும்பி செல்வார்.
அப்போது போர்களத்தில் வல்லாள மகாராஜா எதிரிகளால் தந்திரமாக கொல்லப்பட்டார் என்ற தகவல் அருணாசலேஸ்வரருக்கு தெரிவிக்கப்படும். தன்னை மகனான பாவித்த வல்லாள மகாராஜா இறந்ததை கேட்டு மேளதாளங்கள் இல்லாமல் கோவிலுக்கு அருணாசலேஸ்வரர் திரும்புவார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை நினைவுகூறும் விதமாக நேற்று மாலை அறிவொளிப்பூங்கா அருகே தீர்த்தவாரி முடித்து விட்டு அருணாசலேஸ்வரர் சென்றபோது பணியாளர் ஒருவர் வல்லாள மகாராஜா இறந்த செய்தியை தெரிவித்தார். இதையடுத்து மேளதாளங்களின்றி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.