
ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாகும். பிரசித்திபெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் தெப்ப உற்சவ விழா 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு அழகியநம்பிக்கும், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நம்பி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 12 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) இரவில் திருமலைநம்பி கோவில் தெப்ப உற்சவம் நடக்கிறது.
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் 10-ம் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடந்தது. சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை ஆகியோர் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தனர். விழாவில் திரளாை னவர்கள் கலந்து கொண்டனர்.