என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
தைப்பூச திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும்.
தைப்பூச திருநாளில் "தொட்டதெல்லாம் துலங்கும்" என்பது மக்களிடையே உள்ள பழமையான வழக்காடு சொல். எனவே அன்றைய தினம் குழந்தைகளுக்கு காது குத்துதல், கல்வி தொடக்குதல், திருமணப்பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற்கொள்ளப் பெறுகின்றன.
தைப்பூச திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின்றது. சிவ-சக்தி ஐக்கியம் இந்நாளிலேயே நிகழ்ந்ததாக இந்து மதத்தில் நம்பப்படும் நீண்டகால ஐதீகம் ஆகும்.

தைப்பூச திருவிழாவுக்கு மற்ற திருவிழாக்களை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழனியாண்டவனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
கலியுக கடவுள் என பக்தர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை ‘பழனி மலை’ ஆகும். இது அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாகவும் விளங்குகிறது. இத்திருத்தலத்தில் திருக்கார்த்திகை, பங்குனிஉத்திரம், தைப்பூசம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் தைப்பூச திருவிழாவுக்கு மற்ற திருவிழாக்களை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழனியாண்டவனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பொதுவாக தைப்பூச திருவிழா வெற்றி விழா எனவும் அழைக்கப்படுகிறது. தைப்பூச நன்னாளில் பழனிக்கு வந்து முருகப்பெருமானை வழிபடுபவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தை மாதத்தில் பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் மங்கல நாள் அன்று முருகப்பெருமானை வேண்டி கொண்டாடப்படும் வெற்றி திருவிழாவாக தைப்பூசம் திகழ்கிறது.
முருகப்பெருமான் தன் அன்னையாகிய உமாதேவியாரிடம் ‘தாரகன்’ என்ற அசுரனை சம்ஹாரம் (வதம்) செய்வதற்காக “வெற்றிவேல்” வாங்கிய நாளே தைப்பூச நாளாகும்.
தாரகனை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்ட தினமே தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளாகும். இதனை போற்றும் விதமாக தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நம் துன்பங்கள் நீங்க தைப்பூச நன்னாளில் பழனி முருகப்பெருமானின் அருளை பெற்று சிறப்புடன் வாழ்வோம்.

மருதமலை சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதணை காட்டப்பட்டது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தைப்பூசத்தையொட்டி மருதமலை முருகன் கோவிலில் கடந்த 21-ந் தேதி இரவு வாஸ்து பூஜை மற்றும் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக தேரோட்டம் நடத்தவும், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. தைப்பூசத்தை கொண்டாட நேற்று முதலே பக்தர்கள் அதிகளவில் மருதமலைக்கு படையெடுத்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு 8 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
தைப்பூசமான இன்று அதிகாலை 3 மணிக்கு கோபூஜையுடன் நடைதிறக்கப்பட்டு பின்னர் விநாயகர் பூஜை நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணியசுவாமிக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதணை காட்டப்பட்டது. இதையடுத்து 4 மணிக்கு யாக குண்டம் வளர்த்து வள்ளி தெய்வானையுடன் மூலவருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் சுப்பிரமணியசுவாமிக்கு வலப்புறத்தில் வள்ளி பச்சை பட்டுடுத்தியும், இடபுறத்தில் தெய்வானை நீல பட்டுடுத்தியும் காட்சி அளித்தனர். தொடர்ந்து மொய்காணிக்கை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் முருகனுக்கு உகந்த உரல் இடிக்கப்பட்டு பொற்சின்னபாடல் பாடப்பட்டு மேளதாளம் இசையுடன் திருக்கல்யாணம் நடந்து முடிந்தது. இதையடுத்து வள்ளி தெய்வானையுடன் வெள்ளை யானையில் மூலவர் வீதி உலா வந்து முத்தங்கி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
காலை 7 மணிக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் இரவு ரோட்டோரத்திலும், பாரதியார் பல்கலைகழகம் அருகே தங்கியும் இன்று சாமியை தரிசித்து சென்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் மூலம் போக்குவரத்து வசதி செய்யப்பட்டது. கூட்ட நெரிசலை தடுக்க தரிசன வரிசை 3 ஆக பிரிக்கப்பட்டு பொதுவழி, சிறப்பு தரிசனம், வி.ஐ.பி.தரிசனம் என தடுப்புகள் அமைத்து அனுமதிக்கப்பட்டனர். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
காங்கயம் அடுத்த சிவன்மலை முருகன் கோவில் இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெபற்றது. தொடர்ந்து காலை 7 மணியளவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து தேர் கோவிலை சுற்றி கிரிவலம் நடக்கிறது. இன்று இரவு 7 மணிளவில் கிரிவலம் அனைத்தும் முடிந்து தேர் நிலையை அடைகிறது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிவன்மலை முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரி முல்லை செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என் நடராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வெங்குமணிமாறன், காங்கயம் பஞ்சாயத்து சேர்மன் மகேஷ்குமார், சிவன்மலை தைப்பூச திருவிழா சுங்கம் குரூப் நிர்வாகிகள் சுகுமாறன், சிந்து, கங்கை முத்து, குண்டடம் அரிமா சங்க தலைவர் டாக்டர் செல்வகுமார், வாஸ்து நிபுணர் ஊதியூர் பழனிசாமி, நகராட்சி முன்னாள் துணை தலைவர் வைஸ் கந்தசாமி, சித்த வைத்திய தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம்-சோலைமலை முருகன் கோவிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் பால்குடம், காவடி உள்ளிட்ட பல்வேறு வகையில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக கோவிலில் வந்து தரிசனம் செய்து சென்றனர்.
முருகப்பெருமானின் முதற்படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் தைப்பூச விழாவும் ஒன்று.
இன்று தைப்பூச விழா விமரிசையாக திருப்பரங்குன்றத்தில் கொண்டாடப்பட்டது.
காலையில் சுப்பிர மணியசுவாமி-தெய்வானை, முத்துக்குமார சுவாமி-தெய்வானை ஆகிய 2 சுவாமிகளுக்கு உற்சவர் சன்னதியில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபா ராதனைகள் நடைபெற்றது.
தைப்பூசத்தையொட்டி காலை முதலே பக்தர்கள் பால்குடம், காவடி உள்ளிட்ட பல்வேறு வகையில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக கோவிலில் வந்து தரிசனம் செய்து சென்றனர்.
கிராம மக்கள் நேற்று இரவே வந்து திருப்பரங்குன்றம் பகுதி மண்டபங்களில் தங்கியிருந்து அதிகாலையில் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் உள்ள பழனியாண்டவர் கோவிலிலும் உச்சிக்கால வேளையில் பழநி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று ராஜா அலங்காரம் செய்யப்பட்டது.
ராஜ அலங்காரத்தில் பழனி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை, முத்துக்குமாரசுவாமி- தெய்வானையுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது.
மதுரை மாவட்டம் அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவிலில் கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது.
அன்று பூதவாகனத்திலும், மறுநாள் அன்ன வாகனத்திலும், 21-ந் தேதி காமதேனு வாகனத்திலும், 22-ந் தேதி ஆட்டுகிடாய் வாகனத்திலும், 23-ந் தேதி பூச்சப்பரத்திலும் சாமி புறப்பாடாகி திருவிழா நடந்தது.
24-ந் தேதி யானை வாகனத்திலும், 25ம் தேதி பல்லக்கு வாகனத்திலும், சுப்ரமணிய சுவாமி எழுந்தருளி புறப்பாடு நடந்தது. நேற்று தங்கதேரோட்டமும் அன்று மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும்,
தைப்பூசத்தையொட்டி இன்று காலை 10.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. காலை முதல் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலை 5 மணிக்கு கொடி இறக்கம் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு சுவாமி இருப்பிடம் சேரும் நிகழ்ச்சியும் நடைபெருகிறது. இத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து இருந்தனர்.

குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் குடும்ப விழா மற்றும் 103-வது ஆண்டு விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

சிறப்பு
புனித தோமையார் வழியாக திருமுழுக்கு பெற்ற சில கிறிஸ்தவ குடும்பங்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதியில் குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகில் உள்ள மாடத்தட்டுவிளையில் தங்கியதாகவும், இவர்கள் தான் மாடத்தட்டுவிளையில் குடியமர்த்தப்பட்ட முதல் கிறிஸ்தவ பூர்வீக குடிமக்கள் என்றும், மாடத்தட்டுவிளை ஆலயத்தில் உள்ள விளக்குத்தூண் மற்றும் கல்வெட்டு அதன் தொன்மைக்கு சான்றாக விளங்குகிறது.
இந்த கல் விளக்குதூண் 15-2-1371-ல் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்த கல் விளக்குத்தூண் தற்போது ஆலயத்தி்ன் வடமேற்கு மூலையில் நிற்கிறது. இந்த கல்வெட்டில் காணப்படும் எழுத்துக்கள் கல்வெட்டின் தொன்மையை உறுதி செய்கிறது. இங்கு சுமார் 653 ஆண்டுகளுக்கு முன்பே புனித செபஸ்தியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் இருந்தது என்பதை உறுதியாக கூறலாம்.
முதல் ஆலயம்
கி.பி. 1603-ல் இயேசு சபை குருக்களால் போர்ச்சுக்கீசியர் ஆதரவில் களி மண்ணால் ஆன முதல் ஆலயம் நாகர்கோவிலில் உள்ள கோட்டாருக்கு அடுத்தபடியாக மாடத்தட்டுவிளையில் அமைக்கப்பட்டது. அன்று முதல் மாடத்தட்டுவிளை கோட்டாறு பங்கின்கீழ், கொல்லம் இயேசு சபை கல்லூரியின் கண்காணிப்பில் செயல்பட தொடங்கியது.
கோட்டாறு பங்கில் அடங்கியுள்ள கிளை பங்குகள் பற்றிய புள்ளிவிவரத்தை கி.பி.1644-ல் ரோம் இயேசு சபை அதிபருக்கு அருட்தந்தை அந்திரேயாஸ் லோப்பன் அனுப்பி உள்ளார். அதில் மாடத்தட்டுவிளை மலைப்பகுதியில் உள்ளது என்றும், பாதுகாவலர் புனித செபஸ்தியார் என்றும், அப்போது 350 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர் என்றும் புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. வராப்புழை மறை மாவட்டத்தில் இருந்து கொல்லம் தனி மறை மாவட்டமாக செயல்பட தொடங்கியதும், மாடத்தட்டுவிளை கோட்டாறு பங்கில் இருந்து கி.பி.1853-ம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி முதல் காரங்காடு பங்கின் கிளை பங்கானது.
புனித செபஸ்தியார்
பின்னர் கி.பி.1918-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி காரங்காட்டில் இருந்து பிரிந்து மாடத்தட்டுவிளை தனி பங்கானது. இந்த ஆலயத்தின் உள் அமைந்திருக்கும் புனித செபஸ்தியார் திருவுருவச்சிலை ரோமாபுரியில் இருந்து கொண்டு வரப்பட்டது ஆகும். இந்த சிலை உலகம் முழுவதும் காணப்படும் பொதுவான தோற்றத்தில் இருந்து வேறுபட்டு இடது கை மார்பிலும், வலது கை உடலோடு ஒட்டிய நிலையிலும் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும்.
கி.பி.1923-ம் ஆண்டு ஜனவரி 2-ந்தேதி புனித செபஸ்தியாரின் உடலில் இருந்து எலும்பின் சிறிய பகுதியை அருளிக்கமாக கொல்லம் ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் மாடத்தட்டுவிளை ஆலயத்துக்கு வழங்கி, பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்க உத்தரவிட்டார். அன்றுமுதல் ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியாரின் திருநாளான 9-ம் திருவிழாவின் போதும் பக்தர்களின் பார்வைக்கும், வழிபாட்டுக்கும் ஆலயத்தில் வைக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித செபஸ்தியாரின் திருப்பண்டத்தை முத்தமிட்டு புனிதரின் ஆசி பெற்று வருகின்றனர்.

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி :
திருப்பதியில் கொரோனா ஊடரங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு தினமும் ரூ.300 கட்டண சிறப்பு தரிசனத்தில் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்களும், மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்கள் மற்றும் விஐபி பிரேக் தரிசனம் என மொத்தம் 40 ஆயிரம் பக்தர்கள் தினமும் தரிசனத்தில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதியில் இலவச தரிசனத்தில் கூடுதலாக 10 ஆயிரம் பக்தர்களை அனுப்ப தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதற்காக இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி உள்ளது.
தரிசனத்துக்காக முன்பதிவில்லாமல் வரும் பக்தர்கள் நிராசையுடன் திரும்பக்கூடாது என்று தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதன் மூலம் திருப்பதியில் தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சமீப காலமாக திருப்பதி தேவஸ்தானம் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.
தேவஸ்தானத்தில் 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும், அந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இதை நம்பிய பலரும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு இந்த தகவலை பகிர்ந்துள்ளனர். மேலும் பலர் தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்தனர்.
இந்நிலையில் தேவஸ்தானத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக வரும் தகவல் வதந்தி என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வேலையில்லா பட்டதாரிகள் இடைத்தரகர்களை நம்பி பணம் அளித்து ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவஸ்தானம் திருமலை போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்தவற்காக இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். அவர்கள் காலையில் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் :
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெறும். இதில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்றாகும்.
இன்று தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷகம், 8.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுவாமி அலைவாய்யு கந்த பெருமான் எழுந்தருளி வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வழிக்காட்டு நெறிமுறைகளால் சுவாமி அலை வாயு கந்த பெருமான் உள்பிரகாரத்தில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கில் பாதயாத்திரையாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் இரவில் கோவில் வளாகத்தில் தங்கினர்.
மேலும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் இன்றும் பக்தர்கள் திரண்டு வந்தனர். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்தவற்காக இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் காலையில் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அவை என்னவென்றும் அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தையும் அறிந்து கொள்ளலாம்.
ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அதாவது ஒரு சில ஜாதகங்களுக்கு திருமணமே தேவையில்லை என்ற அமைப்பு இருக்கும். அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள், 10ஆம் வீட்டில் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் சன்னியாசம் செல்வார் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
அதுபோன்ற அமைப்பு உடையவர்கள் சிறுவயது முதலே காதல், கல்யாணம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு திருமணம் தேவையில்லை.
ஆனால், ஒரு சிலருக்கு திருமண தோஷம் இருந்தாலும், மனதில் திருமண ஆசை இருக்கும். ஆனால் பெண் அமையாமல்/கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். திருமண வயதிற்குப் பின்னரும் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான்.
இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள், விதவைகளைத் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என சில ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகராஜா கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் ஆன்மிக சொற்பொழிவு, பரத நாட்டிய சொல்லரங்கம், சிறப்பு அபிஷேகம் மற்றும் காலை, மாலை நேரங்களில் வாகன பவனி நடந்தது.
8-ம் நாள் திருவிழாவான நேற்று காலை சிறப்பு பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி, 6.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு இசை பட்டிமன்றம், 9 மணிக்கு அன்ன வாகனத்தில் சாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிலையில் 9-ம் நாள் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., கலெக்டர்அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மாலை 6.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும், இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து 10-ம் திருவிழாவான நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு ஆறாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு இன்னிசை சொல்லரங்கம் நடைபெறும். இதனையடுத்து ஆறாட்டு துறையில் இருந்து அம்மன் கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

பணத்தை காணிக்கையாக அளிப்பதால் செல்வம் பெருகும். சேவல், புறா போன்றவற்றை காணிக்கையாக வழங்குவதால் நோய்கள், பில்லி, சூனியம் உள்ளிட்டவை நீங்கி ஆயுள் அதிகரிக்கும்.
முருக பக்தர்கள் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்களில் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னர் முருகனை வழிபட்டு உண்டியலில் பக்தியோடும், மகிழ்ச்சியோடும் காணிக்கைகளை செலுத்துகின்றனர். இதனால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன என்று பக்தர்கள் மனமுருக கூறுகின்றனர்.
பணத்தை காணிக்கையாக அளிப்பதால் செல்வம் பெருகும். சேவல், புறா போன்றவற்றை காணிக்கையாக வழங்குவதால் நோய்கள், பில்லி, சூனியம் உள்ளிட்டவை நீங்கி ஆயுள் அதிகரிக்கும். உழவு செழிக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகள் பசு, சேவல் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். அதேபோல் முருகன் கோவிலில் அன்னதானம் என்பது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தானத்தால் குடும்பத்தில் முருகப்பெருமானே ஆண் குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகமாக உள்ளது.

மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கத்தில் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடப்பதை முன்னிட்டு இன்று மதியம் 3.30 மணியளவில் சமயபுரம் கோவில் நடையடைக்கப்படும். மறுநாள் காலை வழக்கம் போல் கோவில் திறக்கப்பட்டு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.
சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கை என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. ஆண்டு தோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றிக்கு வரும் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம், சந்தனம், தாம்பலம், மாலைகள், அலங்காரம் எனப்படும்தளிகை வகையறாக்கள் ஊர்வலமாக எடுத்து சென்று மாரியம் மனுக்கு சமர்பிப்பதுவழக்கம்.
அந்த வகையில் நாளை தைப்பூசம் என்பதால்காலை யிலேயே சமயபுரம்கோவிலில் இருந்து உற்சவர் அம்பாள் கண்ணாடி பல்லக்கில் புறப் பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளிய வாறு ஸ்ரீரங்கம் வருகிறார். இன்று மாலை ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் கொள்ளிடக்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் அலங்கார பந்தலில் எழுந்தருளுவார். அங்கு அம்பாளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் சிறப்பு பூஜைகளுக்குப்பின் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
தீர்த்தவாரிக்கென கொள்ளிடம் ஆற்றுக்குவரும் மாரியம்மனுக்கு சமர்பிக்க இன்று இரவு ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம், சந்தனம், தாம்பூலம், மாலைகள், வளையல்கள், அலங்காரம் எனப்படும் தளிகை வகையாறாக்களை யானை மீது வைத்து மேளதாளத்துடன் கொள்ளி டம் ஆற்றில் எழுந் தருளியிருக்கும் அம்பாளுக்கு சீர் வரிசைப பொருட்கள் சமர்ப்பிக்கப்படும்.
இதையடுத்து அம்பாளுக்கு ரெங்கநாதர்கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மங்களப்பொருட்களு டன் மகாதீபாரதனை நடைபெறும். இதனை முன்னிட்டு அன்று இரவுகிராமிய கலை நிகழ்ச்சிகள் நடை பெறும். அன்னதானம் மற்றும் பிரசாத வினியோகம் நடைபெறும்.
மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கத்தில் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடப்பதை முன்னிட்டு இன்று மதியம் 3.30 மணியளவில் சமயபுரம் கோவில் நடையடைக்கப்படும். மறுநாள் காலை வழக்கம் போல் கோவில் திறக்கப்பட்டு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.
அந்த வகையில் நாளை தைப்பூசம் என்பதால்காலை யிலேயே சமயபுரம்கோவிலில் இருந்து உற்சவர் அம்பாள் கண்ணாடி பல்லக்கில் புறப் பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளிய வாறு ஸ்ரீரங்கம் வருகிறார். இன்று மாலை ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் கொள்ளிடக்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் அலங்கார பந்தலில் எழுந்தருளுவார். அங்கு அம்பாளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் சிறப்பு பூஜைகளுக்குப்பின் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
தீர்த்தவாரிக்கென கொள்ளிடம் ஆற்றுக்குவரும் மாரியம்மனுக்கு சமர்பிக்க இன்று இரவு ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம், சந்தனம், தாம்பூலம், மாலைகள், வளையல்கள், அலங்காரம் எனப்படும் தளிகை வகையாறாக்களை யானை மீது வைத்து மேளதாளத்துடன் கொள்ளி டம் ஆற்றில் எழுந் தருளியிருக்கும் அம்பாளுக்கு சீர் வரிசைப பொருட்கள் சமர்ப்பிக்கப்படும்.
இதையடுத்து அம்பாளுக்கு ரெங்கநாதர்கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மங்களப்பொருட்களு டன் மகாதீபாரதனை நடைபெறும். இதனை முன்னிட்டு அன்று இரவுகிராமிய கலை நிகழ்ச்சிகள் நடை பெறும். அன்னதானம் மற்றும் பிரசாத வினியோகம் நடைபெறும்.
மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கத்தில் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடப்பதை முன்னிட்டு இன்று மதியம் 3.30 மணியளவில் சமயபுரம் கோவில் நடையடைக்கப்படும். மறுநாள் காலை வழக்கம் போல் கோவில் திறக்கப்பட்டு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தைப்பூசத் தெப்பத்திருவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. வடபழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சென்னை :
மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலில் தை பூசத் தெப்ப திருவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. முதல்நாள் சந்திரசேகர சுவாமி தெப்பம், நாளை (வெள்ளிக்கிழமை) சிங்காரவேலர் தெப்பம், 30-ந்தேதி சிங்காரவேலர் தெப்பம் நடக்கிறது.
விழா நாட்களில் தினசரி இரவு 7 மணி முதல் தெப்பம் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவை http://www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARAR TEMPLE என்ற YouTube channel- என்ற இணையதள முகவரியில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வடபழனி முருகன் கோவிலில் திருப்பணி நடைபெற்றுவருவதால் பக்தர்கள் நலன் கருதி, பால்குடம், காவடி மற்றும் அலகு குத்துதல் ஆகியவை அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும் தைப்பூசத்தை முன்னிட்டு கட்டாய முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி முடிவுற்று காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அபிஷேக நேரம் நீங்கலாக தொடர்ந்து தரிசனம் செய்யலாம். மூலவர் அதிகாலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரை ராஜ அலங்காரத்திலும், பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வைர சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்திலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்திலும் அருள்பாலிக்கிறார்.
கோவிலின் தெற்கு கோபுர வாயில் இருண்டு வகை வரிசைகள் கட்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வள்ளி மண்டபம் அருகில் வாகன நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவலை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், உதவி ஆணையர் கே.சித்ராதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளனர்.