என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில், மணிக்கூண்டு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள கொங்கலம்மன் கோவில், மிகவும் பழமை வாய்ந்தது.
அதற்கு ஆதாரமாக பல கல்வெட்டுகளும் கோயிலில் உள்ளன. தை மாதம் தேர்த் திருவிழாவின் போது, முதலில் ஆனங்கூரில் உள்ள ஆதி கொங்கலம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்ட பிறகே, இங்கே தேர்த்திருவிழா நடைபெறும். அதன் பின்னணியில் ஒரு சம்பவம் நடைபெற்றதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக சில கொள்ளையர்கள் இந்தக் கோயிலில் இருந்த கொங்கலம்மன் சிலையைத் திருடிச் சென்றனர். அவர்கள் ஆனங்கூர் என்ற இடத்துக்கு அருகில் வந்தபோது, வண்டியின் அச்சு முறிந்துவிட்டது. முறிந்த அச்சை சரிசெய்து கொண்டு
இருந்தபோது, 'என்னைத் திருடிச் சென்றால், உங்களுக்கு ஆபத்து ஏற்படும்’ என்று அசரீரி ஒலிக்கவே, கொள்ளையர்கள் பயந்துபோய் அம்மன் சிலையை அங்கேயே விட்டு விட்டுச் சென்றுவிட்டனர். மறுநாள் காலையில் தங்கள் ஊரில் அம்மன் சிலையைக் கண்ட ஆனங்கூர் மக்கள் ஒரு கோயிலைக் கட்டி அங்கே அம்மன் சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர்.
கொங்கலம்மன் ஆனங்கூரில் கோயில் கொண்டு விட்டபடியால், ஈரோடு மக்கள் புதியதாக ஒரு அம்மன் விக்கிரஹத்தை இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். அதில் இருந்துதான் ஈரோடு கொங்கலம்மன் தேர்த் திருவிழாவுக்கு முன்னதாக ஆனங்கூர் ஆதி கொங்கலம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.
பாண்டிய மன்னர்கள் இந்த ஆலயத்தைக் கட்டி, திருப்பணிகள் செய்துள்ளனர். இவர்களை அடுத்து ஆண்ட எல்லா மன்னர்களும், கொங்கலம்மனை தங்கள் காவல் தெய்வமாகவே வணங்கி வந்ததாகவும் ஆலயத்தின் தல வரலாறு கூறுகிறது. கோயிலில் உள்ள மகா மண்டபத்தில் 6 அழகிய கல் தூண்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளன. மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும், அடுத்து கருவறையும் அமைந்துள் ளது. கருவறையில், வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை அருளும் கருணை நாயகியாக எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள் கொங்கலம்மன்.
ஈரோடு நகரில் உள்ள கோயில்களுக்கு காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்துச் செல்லும்போது முதலில் கொங்கலம்மனுக்கு முதல் தீர்த்தம் செலுத்திய பிறகுதான் மற்ற கோயில்களுக்கு தீர்த்தத்தை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
இந்த ஆலயத்தில் பிரத்தியங்கிரா தேவி சந்நிதியும் உள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் பிரத்தியங்கிரா தேவிக்குப் பச்சை மிளகாயால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த ஆலயத்தின் பிரதான தல விருட்சமாகத் திகழும் அரச மரத் துடன், பிரத்தியங்கராதேவியின் சந்நிதியைச் சுற்றி, ஈசான மூலையில் மலங்கிழுவை மரம், அக்னி மூலையில் வில்வ மரம், நைருதி மூலையில் மின்ன மரம், வாயு மூலையில் அத்தி மரம் ஆகிய தெய்விக மரங்கள் உள்ளன. அந்த வகையில் இந்தக் கோயிலில் ஐந்து தல விருட்சங்கள் அமைந்திருப்பது விசேஷம் என்கிறார்கள்.
நாகதோஷம் உள்ளவர்களுக்கு, இந்த ஆலயத் தில் பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆலயத்தின் ஈசான்ய மூலையில் ராகு கேதுவுக் குத் தனிச் சந்நிதி உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை ராகுகால வேளையில், ராகு பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
ஆலயத்தில் மகிஷாசுரமர்த்தினி, மதுரை வீரன், கருப்பண்ணசாமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, கௌமாரி, சப்த கன்னிமார் மற்றும் பேச்சியம்மன் ஆகியோருக்கும் தனித் தனி சந்நிதிகள் உள்ளன. ஆலயத்தில் வருடம்தோறும் தைப்பூசத் தேர்த் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது சொல் வழக்கு. எனவே மலை மீது இருக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் தைப்பூசத் திருநாளில் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
சிவபெருமானிடம் இருந்தும், பிரம்மதேவனிடம் இருந்தும் கடும் தவத்தின் மூலமாக பல வரங்களைப் பெற்றனர், சூரபதுமனும் அவனது தம்பிகளான தாரகாசுரன் மற்றும் சிங்கமுகன் ஆகியோரும். அதில் முக்கியமானது, ‘தங்களது மரணம் நிகழ்ந்தால், அது சிவபெருமானுக்கு நிகரான சக்தியால்தான் நிகழ வேண்டும்’ என்பதாகும். இவர்கள் மூவரும் தாங்கள் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவர்களை சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்தினா். தேவர்களின் தலைவனான இந்திரனும் கூட, யாரும் அறியாத ஓரிடத்தில் போய் மறைந்து கொண்டான். சிறையில் வாடியபடியே தேவர்கள் அனைவரும் பிரம்மனையும், விஷ்ணுவையும் நோக்கி தங்கள் பிரார்த்தனையை வைத்தனர்.
அவர்கள் ஈசனால்தான் இதற்கு தீர்வு காண முடியும் என்று அவரிடம் சென்றனர். அங்கு ஈசன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அவரை தியானத்தில் இருந்து எழுப்பும் தைரியம் எவருக்கும் இல்லை. எனவே மன்மதனை அழைத்து, சிவபெருமான் மீது காம பாணம் வீசச் செய்தனர். இதனால் கண் விழித்த ஈசன், தன் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறியை வெளிப்படுத்தினார். அவை ஆறு தீப்பொறிகளாகப் பிரிந்து கங்கையை அடைந்தது. அதனை வாயுதேவன், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தார். அங்கு அந்த ஆறு தீப் பொறிகளும், ஆறு குழந்தைகளாக மாறின. அவரே முருகப்பெருமான்.
முருகப்பெருமான் அவதரித்தது வைகாசி விசாகம் ஆகும். அவர் சூரபதுமர்களை வதம் செய்தது ஐப்பசி மாதம் சஷ்டி திதியில். அன்றைய தினம்தான் கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது. அப்படி சூரபதுமர்களை அழிப்பதற்காக, முருகப்பெருமானுக்கு பார்வதேவி ஞானவேல் வழங்கினார். பார்வதியிடம் இருந்து முருகன் ஞானவேல் பெற்ற தினத்தையே, தைப்பூசத் திருநாள் என்று பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். பழத்திற்காக கோபித்துக் கொண்டு, ஆண்டி கோலத்தில் முருகப்பெருமான் நின்ற இடம் பழனி. அந்தத் திருத்தலத்திற்குச் சென்றுதான், பார்வதி ஞானவேலை வழங்கியதாக புராணங்கள் சொல்கின்றன. எனவே தான், தைப்பூசத் திருநாள், பழனியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தேவர்களின் படைத் தளபதியாக பொறுப்பேற்று, அசுரர்களை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூச திருநாளில் வணங்கி வழிபட்டால், மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் நம்மை நெருங்காது. முருகப்பெருமானுக்கு நடைபெறும் திருவிழாக்களிலேயே புகழ்பெற்றதும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் முதல் வெளிநாட்டவர் வரை மனம் விரும்பி கொண்டாடும் விழாவாகவும் தைப்பூசம் உள்ளது.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது சொல் வழக்கு. எனவே மலை மீது இருக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் தைப்பூசத் திருநாளில் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
தைப்பூச திருநாளில் பழனி முருகனுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்திகளும், மாந்திரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது. அதனால் தான் ‘சுக்குக்கு மிஞ்சுன மருந்தும் இல்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சுன கடவுளும் இல்லை’ என்று சொல்லி இருக்கிறார்கள். தைப்பூச திருநாளில் தான் உலகம் தோன்றியதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
அதே போல் சிவபெருமான், பார்வதியுடன் இணைந்து தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆனந்த திருநடனம் புரிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்ததும், இந்த தைப்பூசத் திருநாளில்தான். இரணியவர்மன் என்ற அரசன், தில்லையம்பலத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்தான். அவனுக்கு சிவபெருமான் காட்சியளித்தது இந்த தைப்பூசத் திருநாளே ஆகும். எனவே தைப்பூசம் அன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், இறைவனுக்கு அபிஷேக மற்றும் அலங்காரங்கள் செய்யப்படும்.
தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூச தினத்தில் குரு வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை அளிக்கும்.

பழனிக்கு வரும் மக்களின் பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் எல்லாம் தமிழ்க்கடவுள் முருகனோடு தொடர்புடைய பண்பாட்டு கூறுகளை எடுத்துக் காட்டுகின்றன.
சமஸ்கிருதத்தில் ‘புஷ்டி' என்றால் பலம் என்று பொருள். இந்த சொல்லில் இருந்து மருவிய புஷ்யம் என்பதே பூசம் என்றானதாக கூறப்படுகிறது. பூசம் என்பது இந்திய வானியலிலும், ஜோதிடத்திலும், ராசி சக்கரத்தில் பேசப்படுகின்ற 27 நட்சத்திரங்களில் 8-வது நட்சத்திரம் ஆகும். இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளி, மென்பேச்சு மற்றும் ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். அறிவுசார்ந்த வேலைகளில் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பார்கள் என்பது நம்பிக்கை ஆகும்.
நட்சத்திர சிந்தாமணி எனும் நூலில் பூச நட்சத்திரத்தை பற்றி கூறுகையில், பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல மதிப்பு உடையவர்களாகவும், வழக்கறிந்து வழக்காடுவதில் வல்லவர்களாகவும், குற்றமற்ற மனநிலையில் மற்றவர்களை மகிழ்பவர்களாகவும் விளங்குவார்கள் என்கிறது. ராமாயணத்தில் பரதன் பூச நட்சத்திரத்தில் பிறந்தான் என்றும் கூறப்பட்டுள்ளது.
தைப்பூசம் அன்று வரக்கூடிய பவுர்ணமி நாளன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலை சுற்றியுள்ள ரதவீதிகளில் நடைபெறும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இதனை தேர் நோன்பு என்றும் கூறுவர். இந்நாளில் மக்கள் பொங்கல் வைத்தும், கும்மியடித்தும் பழனி முருகனை வழிபடுகின்றனர். பழனி முருகன் கோவிலில் இத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உமாதேவியார் முருகனிடம் வேலை எடுத்துக் கொடுத்து தாரகன் என்னும் அசுரனை வென்று வரும்படி கூறிய நிகழ்வினை போற்றும் வகையில் இவ்விழா நடத்தப்படுகிறது என்பது ஐதீகமாகும்.
இந்நாளில் பல்வேறு நேர்த்தி கடன்களுடன் விரதமிருந்து வரும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அதன் தாக்கம் குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தங்களின் வாழ்க்கை செழிப்பாகும், நினைத்த காரியம் கைக்கூடும் என்று நினைத்து பழனிக்கு வரும் மக்களின் பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் எல்லாம் தமிழ்க்கடவுள் முருகனோடு தொடர்புடைய பண்பாட்டு கூறுகளை எடுத்துக் காட்டுகின்றன.

பழனியில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடக்கிறது. இதையொட்டி காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் பழனிக்கு திரண்டு வந்தனர்.
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. 7-ம் நாளான இன்று தைப்பூசம் ஆகும். இன்று (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவில் அருகே தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக திண்டுக்கல் சாலை, தாராபுரம் சாலை, உடுமலை சாலை உள்ளிட்ட சாலைகளில் நேற்று பக்தர்கள் பாதயாத்திரையாக அணிவகுத்து வந்து கொண்டு இருந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் சண்முகநதி, இடும்பன்குளத்தில் புனித நீராடிய பின்னர் திருஆவினன்குடி கோவிலுக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக பழனி பஸ்நிலையம், குளத்துரோடு, அடிவாரம் ரோடு, சன்னதி ரோடு, பூங்காரோடு, அய்யம்புள்ளி ரோடு, கிரிவீதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர். சிலர் மேள, தாளங்களுடன் ஆங்காங்கே மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து ஆடியபடி சென்றனர்.
பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தடுக்கவும், திருட்டு நடப்பதை தடுக்கவும் சாதாரண உடையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் வரும் வழி நெடுகிலும் தண்ணீர் பந்தல், அன்னதான கூடங்களில் உணவு, குடிநீர், ஐஸ்கிரீம், இளநீர் ஆகியவை வழங்கப்பட்டது. அதை அவர்கள் ஆனந்தமுடன் வாங்கி சாப்பிட்டனர்.
இன்று மாலையில் நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள இருப்பதால் மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.
அதோடு பழனி முருகன் கோவிலில் தரிசனம் முடித்த பின்பு பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
அங்கிருந்து திருச்சி, மதுரை, திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிறுத்தவும், பயணிகளுக்கான நிழற்குடைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு கழிப்பறை, குடிநீர் என அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி போலீசார் அவ்வப்போது ஒலிபெருக்கியில் அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர்.

உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டாலும், பழனியில் நடைபெறும் திருவிழா கோலாகலமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே மூண்ட போரில், அசுரர்களை அழிக்க முடியாமல் திணறிய தேவர்கள் சிவபெருமானின் அருளை நாடினர். முக்கண் நாயகனை நேரில் சந்தித்து தேவர்கள் முறையிட்டதால், எம்பெருமான் தேவர்களை காக்க தனது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளை உருவாக்கினார். அவ்வாறு வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. அதுவே முருகன் அவதாரம் ஆகும்.
கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட 6 குழந்தைகளும் ஆறுமுகத்துடன் முருகனாக அவதரித்தார். ஞானப்பழம் கிடைக்காததால் கோபமுற்ற முருகன் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் குடியேறினார். பின்னர் முருகப்பெருமான் சூரர்களை அழிப்பதற்காக சிவனில் பாதியான சக்தியுடையாள், முருகப்பெருமானுக்கு ஞானவேலை தந்தருளியது 'தைப்பூச' தினத்தன்று என்று கூறப்படுகிறது.
உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டாலும், பழனியில் நடைபெறும் திருவிழா கோலாகலமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

சங்க இலக்கியமான திருமுருகாற்றுபடை முருகப்பெருமானை பாட்டுடை தலைவனாக கொண்டு அவனது அறுபடை வீடுகளை பாடும் காவியமாகும்.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்ற சிறப்பு பெற்றது தமிழ் இனம். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலைகளை வளர்த்தவர்கள், பண்பாட்டை காத்தவர்கள், நாகரிகத்தை உலகிற்கு சொல்லி கொடுத்தவர்கள். காதல், வீரம் இரண்டையும் கண்களாக போற்றி மண்ணின் பெருமைகளை காத்தவர்கள் தமிழர்கள். இந்த சிறப்பு பெற்ற தமிழர்களின் வழிபாட்டு கடவுளாக இருப்பவன் அறுபடை அழகன், முத்தமிழின் முதல்வன் முருகப்பெருமான். இந்து சமயத்தின் உருவ கடவுள்களுள் ஒருவனாக திகழ்ந்தாலும் அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே. இதனால் முருகன், தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுகிறான்.
நம் நாட்டில் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்திருக்கின்றன. தமிழகத்தை பிற சமயத்தினர் ஆட்சி செய்திருக்கின்றனர். பிற மதத்தினர் நம் தமிழக வளங்களை கொள்ளை அடித்திருக்கின்றனர். அரசர்களின் ஆட்சி, அந்நியர் ஆட்சி என அரசுகள் பலவாறு மாறி இருக்கின்றன. ஆனால் தெய்வ வழிபாடு எவ்வித மாற்றமும் பெறவில்லை. தெய்வத்தை வழிபடுகிற வழக்கம் தொடங்கிய காலத்தில் இருந்தே இறை நம்பிக்கை, இன்றைக்கு எத்தனை விஞ்ஞான முன்னேற்றமும், வளர்ச்சிகளும் வந்த பிறகும் கூட ஆன்மிகம் தனது வேரை ஆழமாக பரப்பி இருக்கிறது.
புராணங்கள் முருகப்பெருமானை சிவனின் மகனாக உரைக்கின்றன. அதன்படி சிவனிடம் இருந்து புறப்பட்ட தீப்பொறி சரவண பொய்கையில் 6 பகுதிகளாக விழ, அப்பொறிகளானது குழந்தை வடிவம் ஏற்கிறது. கார்த்திகை பெண்கள் ஆறு பேரால் இந்த ஆறு குழந்தைகளும் வளர்க்கப்படுகின்றன. பின்னர் கார்த்திகை திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை திருநாளே முருகப்பெருமானின் விசேஷ தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் வைகாசி மாத விசாக நட்சத்திர தினம், முருகப்பெருமானது ஜென்ம நட்சத்திர தினம். இந்த தினத்தை பக்தர்கள் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.
முருகப்பெருமானின் வரலாற்றை எடுத்துரைக்கும் கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரியரால் இயற்றப்பட்டது. அதேபோல் சங்க இலக்கியமான திருமுருகாற்றுபடை முருகப்பெருமானை பாட்டுடை தலைவனாக கொண்டு அவனது அறுபடை வீடுகளை பாடும் காவியமாகும். இந்த அறுபடை வீடுகளும் ஒவ்வொரு சிறப்பினை கொண்டதாகும். போரில் சூரபத்மனை வென்றபின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த தலம் திருப்பரங்குன்றம். சூரபத்மனை போரிட்டு வென்று வாகை சூடிய திருத்தலம் திருச்செந்தூர். மாங்கனிக்காக விநாயகரோடு போட்டியிட்டு கோபித்து கொண்டு தண்டாயுதபாணியாக நின்றதலம் பழனி. தந்தை சிவனுக்கு பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும் தலம் சுவாமிமலை. சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து குறமகள் வள்ளியை மணந்த தலம் திருத்தணி. தமிழ் மூதாட்டி அவ்வைக்கு பழம் உதிர்த்து வள்ளி-தெய்வானையோடு காட்சி தந்த தலம் பழமுதிர்சோலை.
முருகனின் கரத்தில் இருக்கும் வேல், அநீதி அழிக்கும் ஆயுதம். முருகப்பெருமானை நாடுகிற மனிதர்களின் மனத்துணிவு வேலைவிட உறுதியாக இருந்தால் வாழ்வின் துன்ப கணைகளை தகர்க்க முடியும். முருகனை வழிபடுவர்கள் அக அழகோடு சென்றால், அவர்கள் வாழ்வை பொருளுடையதாக மாற்றி கருணை வழங்குபவன் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.

தைப்பூச திருவிழாவையொட்டி மருதமலை முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முருக பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. மருதமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தைப்பூச திருவிழா நடைபெற திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 22-ந் தேதி கொடியேற்றம் நடந்தது. பின்னர் தினந்தோறும் காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று தைப்பூசத்தையொட்டி சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இந்த நிலையில் பாதயாத்திரை வரும் பக்தர்கள், பால்குடம் பால்காவடி எடுத்து வரும் பக்தர்கள் கோவிலுக்குள் நேற்று அனுமதிக்கப்படவில்லை.இன்று (வியாழக்கிழமை) அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 3 மணி முதல் 5.30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து சிறிய தேரில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வீதி உலா வருகின்றார்.
இதுகுறித்து கோவில் உதவி ஆணையாளர் (பொறுப்பு) விமலா கூறுகையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மருதமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை.நிகழ்ச்சி முடிந்தவுடன் பக்தர்கள் காலை 7 மணிக்கு மேல் சுவாமி தரிசனம் செய்யலாம். மலைக்கோவிலுக்கு கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை என்று கூறினார்.

பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவிலில் தைத் திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவிலில் தைத் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
9-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 9.35 மணிக்கு விநாயகர், சாமி, அம்பாள் ஆகியோர் தேரில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து 9.55 மணிக்கு தேரோட்டத்தை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ஆஸ்டின் எம்.எல்.ஏ., இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தேர், ரத வீதிகள் வழியே வந்தது. அங்கு திரளானபக்தர்கள் பங்கேற்று சாமியை தரிசனம் செய்தனர். தேர் பகல் 2.35 மணிக்கு நிலையை அடைந்தது.
இரவு 8.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் தோவாளை தாசில்தார் ஜூலியன் ஹீவர், பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகராஜன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், பா.ஜனதா .மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கலிங்கம், தோவாளை ஒன்றிய பொதுச்செயலாளர் விஜய் மணியன், பூதை மண்டல தலைவர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி, தோவாளை ஒன்றிய தலைவர் மகாதேவன், வர்த்தகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ரெங்கநாதன், பூதை பேரூர் தலைவர் கோ.சி.சுந்தர், செயலாளர் ஆலிவர் தாஸ், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வன் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பூதப்பாண்டி பேருராட்சி சார்பில் அனைவருக்கும், முக கவசம் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வருஷாபிஷேக விழா நடந்தது.
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவையும், அதைத்தொடர்ந்து கலச பூஜையும், உற்சவ விக்ரகங்களான வெங்கடாசலபதிக்கும் ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கும் திருமஞ்சனம் சாத்தும் நிகழ்ச்சி, யாகசாலை பூஜை ஆகியவை நடந்தது.
அதைத்தொடர்ந்து எண்ணை, பால், தயிர், நெய், சந்தனம், களபம், பன்னீர், தேன், மஞ்சள்பொடி மற்றும் 108 கலசங்களில் உள்ள புனித நீரால் அபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இந்த பூஜைகளை பாலாஜி அர்ச்சகர் தலைமையில் அர்ச்சகர்கள் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி, சென்னை ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி, துணைத் தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் மோகன் ராவ், ரெங்காரெட்டி, அனில்குமார்ரெட்டி, கிருஷ்ணமூர்த்தி, கார்த்திகேயன், டாக்டர் மிஸ்சிதா, அசோக், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் மற்றும ்பொருளாளர் அனுமந்தராவ், கன்னியாகுமரி உதவி செயல் அலுவலர் மோகன், ஆய்வாளர் சாய் கிருஷ்ணா, தென்தாமரைகுளம் பேரூர்அ.தி.மு.க.செயலாளர் தாமரைதினேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் கோவிலில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் 4-ம் நாளான 22-ந் தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளினார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்தார். 4.45 மணிமுதல் 5.15 மணிவரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நான்கு உத்திர வீதிகளின் வழியாக வலம் வந்து காலை 9.15 மணியளவில் நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, விளக்கு மற்றும் சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இத்துதியை தைப்பூச தினத்தன்றும் (இன்று), ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அரளிப் பூ சரத்தை முருகப்பெருமானுக்கு சாத்தி பாராயணம் செய்து வணங்கினால் செவ்வாய் தோஷம் விலகும். விரும்பியன எல்லாம் கிட்டும்.
தைப்பூசம்: இன்று சொல்ல வேண்டிய முருகன் ஸ்லோகம்
ஸிந்தூராருணகாந்திமிந்து வதனம் கேயூரஹாராதிமி:
திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்கஸ்ய ஸெளக்யப்ரதம்
அம்போஜா பய சக்தி குக்குடதரம் ரக்தாங்காதாம் சுகம்
ஸுப்ரஹ்மண்ய முபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம்
- ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்லோகம்
பொருள்:
குங்குமம் போன்ற சிவந்த நிறம் கொண்டவரே, சந்திரன் போன்ற ஒளியுடன் கூடிய திருமுகத்தினரே, சுப்ரமண்ய ஸ்வாமியே, நமஸ்காரம். கேயூரம், ஹாரம் முதலிய திவ்யாபரணங்களால் பிரகாசிக்கும் அழகுத் திருமேனி கொண்டவரே, சொர்க்கத்திற்கே சுகமளிப்பவரே, தாமரை மலர், அபயம், சக்தி, சேவல் தாங்கும் நான்கு கரங்களைக் கொண்டவரே, சுப்ரமண்ய ஸ்வாமியே நமஸ்காரம். செஞ்சந்தனப் பூசி, செந்நிற ஆடையும் தரித்தவரே, தன்னை வணங்குபவரின் பயத்தைப் போக்குபவரே, சுப்ரமண்ய ஸ்வாமியே நமஸ்காரம்.

சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் கோவில்களில் தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினமும் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்னம், ரிஷபம், யானை, வெள்ளி, சேஷ வாகனம் ஆகியவற்றில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது. நேற்று முன்தினம் வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடாகி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், மாலை 6 மணிக்கு அபிஷேகமும், இரவு 8.15 மணிக்கு மகாதீபாராதனையும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க இரவு 8.25 மணிக்கு அம்மன் தெப்பத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தெப்பத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிஅளித்தார். அப்போது தெப்பத்தை சுற்றி நான்கு புறங்களிலும், கூடிஇருந்த பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை வணங்கினர்.
பத்தாம் நாளான இன்று(வியாழக்கிழமை) காலை 7.31 மணிக்கு மேல் காலை 8.30 மணிக்குள் தைப்பூசத்திற்கு கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் அம்மன் எழுந்தருளி, வழிநடை உபயங்கள் கண்டருளி பின்னர் நொச்சியம் வழியாக வடகாவேரி சென்றடைகிறார். அங்கு மாலையில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். பின்னர் இரவு 10 மணிக்கு மேல் இரவு 11 மணிவரை ஸ்ரீரங்கம் ெரங்கநாதரிடம் சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகாஅபிஷேகம் நடைபெறுகிறது. 3 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். நாளை வடதிரு காவிரியிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக உபயங்கள் கண்டருளி இரவு 11 மணிக்கு ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார் அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கொடிமரத்திற்கு அம்மன் புறப்பாடாகி கொடி இறக்கப்படுகிறது. இரவு 12 மணிக்கு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து கோவிலை சென்றடைகிறார். தொடர்ந்து நடை சாத்தப்படுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தை தெப்ப திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று மாலை நடைபெற்றது. இதனையொட்டி சன்னதியிலிருந்து மாலை 5 மணிக்கு உற்சவர் ஜம்புகேஸ்வரர், பிரியாவிடை அம்மன், அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆகியோர் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி மாலை 6.30 மணிக்கு திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்திற்கு வந்தனர்.
அங்கு தெப்பத்தில் ஜம்புகேஸ்வரர், பிரியாவிடை அம்மன், அகிலாண்டேஸ்வரி அம்மன் எழுந்தருளி 3 முறை சுற்றி வந்து தெப்ப உற்சவம் கண்டருளினர். பின்னர் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அங்கிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியவாறு 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து கோவிலை சென்றடைந்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தைத்தெப்ப உற்சவத்தின் நிறைவு நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் வீதியுலா வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.