search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி சிறப்பு யாகம் நடந்த போது எடுத்த படம்.
    X
    திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி சிறப்பு யாகம் நடந்த போது எடுத்த படம்.

    கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நடந்த வருஷாபிஷேகம்

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வருஷாபிஷேக விழா நடந்தது.
    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவையும், அதைத்தொடர்ந்து கலச பூஜையும், உற்சவ விக்ரகங்களான வெங்கடாசலபதிக்கும் ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கும் திருமஞ்சனம் சாத்தும் நிகழ்ச்சி, யாகசாலை பூஜை ஆகியவை நடந்தது.

    அதைத்தொடர்ந்து எண்ணை, பால், தயிர், நெய், சந்தனம், களபம், பன்னீர், தேன், மஞ்சள்பொடி மற்றும் 108 கலசங்களில் உள்ள புனித நீரால் அபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இந்த பூஜைகளை பாலாஜி அர்ச்சகர் தலைமையில் அர்ச்சகர்கள் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி, சென்னை ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி, துணைத் தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் மோகன் ராவ், ரெங்காரெட்டி, அனில்குமார்ரெட்டி, கிருஷ்ணமூர்த்தி, கார்த்திகேயன், டாக்டர் மிஸ்சிதா, அசோக், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் மற்றும ்பொருளாளர் அனுமந்தராவ், கன்னியாகுமரி உதவி செயல் அலுவலர் மோகன், ஆய்வாளர் சாய் கிருஷ்ணா, தென்தாமரைகுளம் பேரூர்அ.தி.மு.க.செயலாளர் தாமரைதினேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×