
தொடர்ந்து பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய சாமிகளும் குளக்கரையில் எழுந்தருளினர். பின்னர் அஸ்திரராஜருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் குளத்தில் நீராடினார்கள்.
பின்னர் மேளதாளம் முழங்க பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஊர்வலமாக நடராஜர் சன்னதியை அடைந்தனர். தொடர்ந்து அங்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.