என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.
    X
    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம்

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    தமிழகத்தில் உள்ள சிவ ஆலயங்களில் பழமையானது நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை, இரவு சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை ஆகியோா் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலையில் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை ஆகிேயார் ஊர்வலமாக வந்து சப்பரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து 8.20 மணிக்கு கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார்.விழாவில் தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், உவரி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராஜன் கிருபாநிதி, வருமானவரி துறை முன்னாள் கமிஷனர் மகாலிங்கம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் பக்தர்கள் கடல் மண்ணை பெட்டியில் சுமந்து வந்து அதை கடற்கரையில் கொட்டி நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு தெப்ப திருவிழா நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து இருந்தார்.
    Next Story
    ×