என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை(19-ந்தேதி) கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிகிறார்.
    சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்கட்டாக மதுரை சித்திரை திருவிழா நடந்து வருகிறது.. முதலில் தொடங்கிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் கடந்த 14-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், மறு நாள் தேரோட்டமும் நடந்தது. பின்னர் தீர்த்தவாரியுடன் அந்த திருவிழா நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதற்கிடையில் அழகர்கோவிலில் சித்திரை பெருவிழாவையொட்டி அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு கடந்த 14-ந் தேதி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று முன்தினம் நடந்தது. அன்றைய தினம் காலை 6.12 மணி அளவில் மேள, தாளங்கள் முழங்க, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது 10 லட்சத்திற்கும் அதிகமான கூட்டம் கூடியதால் மதுரை நகரமே குலுங்கியது.

    பின்னர் மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலுக்கு இரவு 11 மணி அளவில் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்று காலை வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து கருட வாகனத்தில் புறப்பாடாகி மதுரை வண்டியூரில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மண்டூக முனிவர், நாரை உருவ சிலை அங்கு வைக்கப்பட்டிருந்தது. அவர் சாப விமோசனம் பெற்றதை விளக்கும் விதமாக நாரை பறக்க விடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சி முடிந்த உடன் மதியம் 3.30 மணிக்கு அனுமார் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடந்தது. பின்னர் மேள தாளம் முழங்க மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு கிளம்பினார். அங்கு நள்ளிரவு தசாவதாரம் தொடங்கியது. முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் உள்ளிட்ட அவதாரங்களில் அழகர் காட்சி தந்தார்.
    முன்னதாக வழியில் சதாசிவ நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அழகரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் நகர்ப்பகுதிகளில் இருந்து வந்திருந்தனர்.

    இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் வீதிஉலா வர உள்ளார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, நாளை(19-ந்தேதி) அதிகாலை 2.30 மணிக்கு கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிகிறார். அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். பின்னர் மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 20-ந்தேதி பிற்பகல் 12.05 மணிக்கு மேல் இருப்பிடம் சென்று அடைகிறார்.
    லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீ சக்கர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப்படும். குறிப்பிட்ட திதியை பரிபாலனம் செய்யும் தேவிகளை வழிபட்டால் வறுமை உள்ளிட்ட சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.
    லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீ சக்கர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப்படும். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக, லலிதா பரமேஸ்வரியை சுற்றி வீற்றிருந்து அருள்வதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை எனப்படும் கிருஷ்ண பட்சம் (அமாவாசையுடன் சேர்த்து 15 நாட்கள்), வளர்பிறை எனப்படும் சுக்ல பட்சம் (பவுர்ணமியுடன் சேர்த்து 15 நாட்கள்) என இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பட்ச பதினைந்து நாட்களில் பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பட்சத்திற்கும் ஒருநாள் அதிபதிகளாக வருவார்கள். ஒரு மாதத்தின் இரு நாட்களில் பிரபஞ்சத்தை நிர்வாகம் செய்கின்றனர். குறிப்பிட்ட திதியை பரிபாலனம் செய்யும் தேவிகளை வழிபட்டால் வறுமை உள்ளிட்ட சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.

    இங்கே 5 நித்ய தேவிகளைப் பற்றிய விவரங்களை சிறு குறிப்பாக பார்க்கலாம்.

    காமேஸ்வரி

    விரும்பிய உருவத்தை எடுக்கக் கூடிய தேவி இவள். கோடி சூரிய பிரகாசமாக ஜொலிக்கும் தேகம் கொண்டவள். மாணிக்க மகுடம், பொன் மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற அணிகலன்களை அணிந்தவள். முக்கண்கள், ஆறு திருக்கரங்களில் கரும்பு வில், மலர் அம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்தவள். பிறை சூடிய திருமுடி கொண்டவள். இவரை வழிபட்டால் குடும்பத்தில் ஆனந்தம், தன வரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்வு அமையும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளா்பிறை பிரதமை, அமாவாசை.

    மந்திரம்:-

    ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
    நித்யக்லின்னாயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    பகமாலினி

    ‘பகம்’ என்ற சொல்லுக்கு பரிபூர்ண ஐஸ்வர்யம், தர்மம், தேஜஸ், ஞானம், வைராக்கியம், வீரியம், முக்தி போன்ற பொருளும் உண்டு. இவற்றின் அம்சமாக திகழ்வதால் இந்த அன்னைக்கு ‘பகமாலினி’ என்று பெயர். சிவந்த நிறமுள்ள இவள், சிவப்பு கற்களால் ஆன நகைகளை அணிந்து அழகு பொலியும் திருமுகம் கொண்டவள். முக்கண்களுடனும் இடது கரங்களில் அல்லி மலர், பாசக்கயிறு, கரும்பு வில் ஏந்தியும், வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் காட்சி தருகிறாள். இந்த தேவியை வழிபாடு செய்தால், வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம். கர்ப்பத்திலுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை துவிதியை, தேய்பிறை சதுர்த்தசி.

    மந்திரம்:

    ஓம் பகமாலின்யை வித்மஹே
    ஸர்வ வஸங்கர்யை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    நித்யக்லின்னா காயத்ரி மந்திரம்

    கருணை மிகுந்த இந்த அம்பிகையை வழிபடுவோர், மூவுலகிலும் புத்தி மற்றும் சக்தியோடு வாழ்வர். சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல், முக்கண்கள், திருமுடியில் பிறை சந்திரன் கொண்டு அருளும் இந்த தேவிக்கு ‘மதாலஸா’ என்ற பெயரும் உண்டு. தன் நான்கு கரங்களிலும், பாசம், அங்குசம், பான பாத்திரம், அபய முத்திரை தரித்தவள். இந்த அன்னையை வழிபட்டால், குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் வராது.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை திருதியை, தேய்பிறை திரயோதசி.

    மந்திரம்:

    ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே
    நித்ய மதத்ரவாய தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    வஹ்னி வாஸினி மந்திரம்

    அக்னி மண்டலத்தில் உறைவதால் வஹ்னி வாஸினி என்று பெயர். அக்னி மண்டலம் நம் உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை துலங்குகிறாள். `வஹ்னி’ என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும் குறிக்கும். அழகே உருவாய் அருளே வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் விருப்பமுள்ளவள். சுற்றிச் சுழலும் மயக்கும் விழிகளையுடையவள். தன் திருக்கரங்களில் தாமரை, சங்கு, கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம்புகள், மாதுளம்பழம், அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள். இந்த அம்மனை வழிபட்டால் நோய் தீரும், தேக பலத்தோடு, உலக இன்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பு அமையும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை ஏகாதசி.

    மந்திரம்:

    ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே
    ஸித்திப்ரதாயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்
    ராமாயண இதிகாசத்தின்படி, வனவாசத்தை மேற்கொண்ட ராமபிரான், சில காலம் இந்த இடத்தில் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. அதன் நினைவாகவே இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது.
    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, ராம்டெக் என்ற சிறிய நகரம். இங்குள்ள கர்பூர் பாவ்லி என்ற இடத்தில் ராமர் திருக்கோவில் ஒன்று அமைந்துள்ளது.

    மிகவும் பழமையும், தொன்மையும் வாய்ந்த இந்த ஆலயத்தைச் சுற்றிலும் நீர் சூழ்ந்திருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. ராமாயண இதிகாசத்தின்படி, வனவாசத்தை மேற்கொண்ட ராமபிரான், சில காலம் இந்த இடத்தில் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.

    அதன் நினைவாகவே இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. ‘கபூர் பாவ்லி’ என்பதற்கு, ‘கற்பூரம் போல மணக்கும் தண்ணீர்’ என்று பொருளாம்.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22ந்தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது.
    சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பார்த்தசாரதி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. வருகிற 18ந்தேதி கருடசேவை உற்சவம் நடக்கிறது. 20ந்தேதி நாச்சியார் கோலத்தில் பல்லக்கு சேவை நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22ந்தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் 4 மாட வீதிகளில் வலம் வந்து 9 மணிக்கு நிலையை வந்தடையும்.

    23-ந்தேதி வெண்ணை தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை, 24-ந்தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், இரவு 7.30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடக்கிறது. 25-ந்தேதி கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
    ‘திருவாதிரை’ நட்சத்திரம் சிவனுக்கு உகந்த நட்சத்திரமாகும். இறைவனுக்கு உகந்த நட்சத்திரமாக விளங்குவதால் தான் இந்த நட்சத்திரத்திற்கு ‘திரு’ என்று அடைமொழி வழங்கப்படுகின்றது.
    நட்சத்திர மண்டலத்தில் ஆறாவது நட்சத்திரமாக இருப்பது திருவாதிரை. 27 நட்சத்திரங்களில் 'திரு' என்ற சிறப்புடன் அழைக்கப்படும் இரண்டு நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் இது.

    ‘திருவாதிரை’ நட்சத்திரம் சிவனுக்கு உகந்த நட்சத்திரமாகும். இறைவனுக்கு உகந்த நட்சத்திரமாக விளங்குவதால் தான் இந்த நட்சத்திரத்திற்கு ‘திரு’ என்று அடைமொழி வழங்கப்படுகின்றது.

    எனவே திருவாதிரையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு சிவனேசன், சிவப்பிரியன், சங்கரன், சிவசங்கரன், பரமசிவன், சொக்கலிங்கம், நாகலிங்கம், சிவலிங்கம், சுந்தரேசன், சர்வேஸ்வரன் என்றும், பெண் குழந்தைகளுக்கு சங்கரி, சிவசங்கரி, விசாலாட்சி, ஆதிரை, சிவகாமி, மீனாட்சி, காமாட்சி போன்ற பெயர்களையும் சூட்டுவது வழக்கம்.

    தற்போதுள்ள நாகர்கோவில் நகரத்திற்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணசாமி கோவில் அமைந்திருப்பதால் இத்தலத்திற்கு கிருஷ்ணன் கோவில் என்ற பெயர் அமைந்தது.
    கி.பி.13-ம் நூற்றாண்டில் கேரளா வயநாடு பகுதியை ஆண்டு வந்த வர்மா மன்னரால் கட்டப்பட்டது கிருஷ்ணசாமி திருக்கோவில். இவர் சிறந்த கிருஷ்ண பக்தர் ஆதலால் சர்வாங்கநாதன் என்று அழைக்கப்பட்டவர். இச்செய்தி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் வரலாற்றிலும் திருவிதாங்கூர் வைக்கம் கருவூல ஆவணத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. இம் மன்னர் திருக்குறுங்குடி கோயிலில் புகழ் வாய்ந்த மணி ஒன்றையும் தானமாக வழங்கியுள்ளார்.

    கி.பி.15-ம் நூற்றாண்டு காலத்தில் இருந்து வைஷ்ணவ யாத்ரீகர்கள் வட இந்தியாவிலிருந்து இத்திருக்கோவிலுக்கு விஜயம் செய்துள்ளனர். கங்கை மற்றும் யமுனா எனும் பகுதிகளின் இடையே இருக்கும் தீர்க்கப்பட்டர் என்னும் வைஷ்ணவ பக்தரால் பல்வேறு பொருள்கள் இத்திருக்கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை ஆராய்ச்சியின்படி இச்சம்பவம் கி.பி.1464-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சதுர்வேதி மங்கலத்தில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலுக்கு 2 அந்தண பெண்களையும், சிறிய அளவில் நிலங்களும் மன்னர் ஆதித்ய வர்மாவால் தானமாக கொடுக்கப்பட்டுள்ளதை திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் வைஷ்ணவ அடையாளத்துடன் கூடிய செம்புபட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் வடசேரி மற்றும் கிருஷ்ணன் கோவில் பகுதியே அன்றைய சதுர்வேதி மங்கலம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள நாகர்கோவில் நகரத்திற்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணசாமி கோவில் அமைந்திருப்பதால் இத்தலத்திற்கு கிருஷ்ணன் கோவில் என்ற பெயர் அமைந்தது. இக்கோவிலில் வீற்றிருக்கும் நவநீத கிருஷ்ண மூர்த்தி தனது இருகரங்களிலும் வெண்ணெய்யை ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தருகிறார்.

    இத்தலத்தை குமரியின் குருவாயூர் என்று சிறப்பாக அழைப்பர். தினந்தோறும் கிருஷ்ணசாமியின் முகத்தில் சந்தனம் அல்லது வெண்ணெயால் அலங்காரம் செய்யப்படுகிறது. இது அவரது பக்த கோடிகளுக்கு ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாள் இரவும் பாலகிருஷ்ண சாமி நித்திரைக்கு செல்லும் முன் ஊஞ்சல் சேவையுடனும், பாராயணத்துடனும் செல்வதை காண கண்கோடி வேண்டும். இக்காட்சியை கண்டு நெய்வேத்திய பிரசாதம் அருந்தி வருபவர்களுக்கு சந்தான வரம் கிடைக்கும் என்பதும் இத்தலச் சிறப்பாகும்.

    கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடைவெளிக்குப் பிறகு இக்கோவிலில் புனரமைக்கப்பட்டு புதியதாக கட்டப்பட்ட ராஜகோபுரத்துடன் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் வடசேரியை சார்ந்த கே.கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் கமிட்டி மூலமாக சிறப்புற கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
    சித்திரை விழாவில் இன்று(சனிக்கிழமை) சித்ரா பவுர்ணமியையொட்டி தீர்த்த திருவிழாவும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது.
    தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற நீலகண்ட பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் நீலகண்ட பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம்,  பூஜை செய்து வழிபட்டனர்.

    விழா நாட்களில் தினமும் காமதேனு வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், மயில் வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. விழாவில் நேற்று அதிகாலை 4 மணி முதல் பால் காவடி, பன்னீர் காவடி, அக்னி காவடி, வேல் காவடி, பறவைக்காவடி என பல்வேறு காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 5.30 மணிக்கு நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.
    விழாவில் அசோக்குமார் எம்.எல்.ஏ., பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பழகன், தொழிலதிபர்கள் கந்தப்பன், ராமதாஸ், ஒன்றிய தலைவர் சசிகலா ரவிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் இன்று(சனிக்கிழமை) சித்ரா பவுர்ணமியையொட்டி தீர்த்த திருவிழாவும்,  நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது. 18-ந்தேதி  விடையாற்றி உற்சவமும், மண்டலாபிஷேகமும்  நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் தலைவர் கணேசன் சங்கரன், அறங்காவலர் குப்பமுத்து சங்கரன், கோவில் நிர்வாக அதிகாரி சிதம்பரம், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள், முடப்புளிக்காடு கிராமத்தார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 1008 பால்குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் உள்ள மாரியம்மனுக்கு, ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு முத்துமாரி சுக்ரவார வழிபாட்டு குழு சார்பில் 1008 பால்குடம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். அதன்படி இந்த ஆண்டு 16-வது பால்குட ஊர்வலம் கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டது.

    ஊர்வலம் 4 ராஜவீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை  விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    இரவு பானக பூஜையும், நாளை (17 -ந்தேதி) மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உற்சவமும், இரவு தெப்ப உற்சவம், 18 -ந்தேதி காலை துவாதச ஆராதனம் நடைபெற உள்ளது.
    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இந்த கோவிலில் வருடம்தோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக தொற்று பரவல் காரணமாக பிரம்மோற்சவம் சாதாரணமாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து தேவநாதசுவாமி கோவிலில் 12 நாட்கள் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 7-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    அதன் பின்னர் ஹம்ச வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்‌.

    கடந்த 11-ந் தேதி ஸ்ரீ வேணுகோபாலன் சேவை தங்க விமானத்திலும், சே‌ஷ வாகனத்திலும், தங்கப்பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும் சாமி வீதி உலா நடைபெற்றது. 12- ந்தேதி இரவு முக்கிய விழாவாக கருட மஹா உற்சவத்தன்று கருடவாகனத்தில் ஸ்ரீ தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் தேவநாத சுவாமி வீதிஉலா நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் காலை 6.10 மணிக்கு நடந்தது. திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாத சுவாமி அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என்ற பக்தி கோ‌ஷத்துடன் பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேரோட்ட விழாவில் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இரவு பானக பூஜையும், நாளை (17 -ந்தேதி) மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உற்சவமும், இரவு தெப்ப உற்சவம், 18 -ந்தேதி காலை துவாதச ஆராதனம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
    சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அன்றைய தினம் அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சென்று சாமி தரிசனம் செய்து கிரிவலம் செல்வது வாழ்வில் பல நல்ல பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது. மேலும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர்கள் ஆசியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்த ஆண்டு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்துக்கு அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி இன்று அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்னதாகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் செல்ல தொடங்கிவிட்டனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி வழங்கப்படவில்லை.அவைகள் நகர எல்லையில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்றனர் ஆட்டோக்களும் இயக்கப்பட்டன. நகரமெங்கும் சிறு சிறு வியாபாரிகள் கடை அமைத்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். கற்பூரம் மற்றும் தண்ணீர் பாட்டில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

    அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு இன்று காலை குவிந்த பக்தர்கள் கூட்டம்.

    மேலும் பக்தர்களுக்கு இலவச தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு அவர்களின் தாகம் தணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இன்று காலை திருவண்ணாமலை நகரம் பக்தர்களின் கூட்டத்தால் திணறியது. அலைகடல் புகுந்தது போல் பக்தர்கள் கூட்டம் கண் கொள்ளா காட்சியாக இருந்தது. கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கிரிவலப் பாதையில் இடைவெளியின்றி பக்தர்கள் சென்று வருகின்றனர்.

    சில பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா "என்ற பக்தி கோ‌ஷம் முழங்கி செல்கின்றனர். சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வந்ததும் பரவசநிலையில் அண்ணாமலையாரை வணங்கியபடி செல்கின்றனர். கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    2 ஆண்டுக்கு பின்னர் சித்ரா பவுர்ணமி விழா களை கட்டி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் வியாபாரமும் களை கட்டியுள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இதையும் படிக்கலாம்...சனி பகவானின் நல்லருளை பெறுவதற்கான சிறந்த பரிகாரங்கள்
    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி எளிய முறையில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடந்தது குறிப்பிடத்தக்கது.
    உலக மக்களின் பாவங்களுக்காக 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த ஏசுவின் பாடுகளை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். ஏசு சிலுவையில்  உயிர் விட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. ஏசு உயிர்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில்  கடந்த மாதம்  (மார்ச்)  2-ந் தேதி  தவக்காலம் தொடங்கியது. கடந்த 10-ந்தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.  அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பெரிய வியாழனையொட்டி பாதம் கழுவும்  நிகழ்ச்சி நடந்தது.

    வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் நேற்று மாலை புனித வெள்ளி சிறப்பு திருப்பலி  பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில்  நடைபெற்றது. இதை தொடர்ந்து இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திருச்சிலுவை ஆராதனை, திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவை பாதை, சிறப்பு மறையுரை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    இதையடுத்து  பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குதந்தை, உதவி பங்குத்தந்தையர்கள் கலையரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த  சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சொரூபத்தை முத்தமிட்டனர். இதையடுத்து சிறிய அளவிலான ஏசு சொரூபத்தை பவனியாக எடுத்து சென்றனர். அப்போது அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்கள் ஏசு சொரூபத்தை முத்தமிட்டனர்.

    பின்னர் கலையரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான ஏசு சொரூபத்தை  சிலுவையில் இருந்து இறக்கி பவனியாக கீழ்கோவிலுக்கு எடுத்து சென்றனர். இதில் பங்குத்தந்தை அற்புதராஜ் , பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி  எளிய முறையில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடந்தது குறிப்பிடத்தக்கது.
    மயிலாடுதுறை ஐயாறப்பர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 'சிவ சிவ' என்று பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த ஐயாறப்பர் கோவில் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் திருவையாறில் நடைபெறும் சப்தஸ்தான பெருவிழா போன்று ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சப்தஸ்தான பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல, இந்த ஆண்டிற்கான சப்தஸ்தான பெருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கோவிலில் தினமும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

    இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக அம்பாள் தேரில் எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 'சிவ சிவ' என்று பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் கோவில் முன்பிருந்து புறப்பட்ட தேர், மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி, தெற்குவீதி வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. பாதுகாப்பு பணியில் மயிலாடுதுறை போலீசார் ஈடுபட்டனர்.
    ×