search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    நித்யா தேவிகள்
    X
    நித்யா தேவிகள்

    சங்கடங்களில் இருந்தும் விடுதலை தரும் நித்யா தேவிகள் மந்திரம்

    லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீ சக்கர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப்படும். குறிப்பிட்ட திதியை பரிபாலனம் செய்யும் தேவிகளை வழிபட்டால் வறுமை உள்ளிட்ட சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.
    லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீ சக்கர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப்படும். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக, லலிதா பரமேஸ்வரியை சுற்றி வீற்றிருந்து அருள்வதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை எனப்படும் கிருஷ்ண பட்சம் (அமாவாசையுடன் சேர்த்து 15 நாட்கள்), வளர்பிறை எனப்படும் சுக்ல பட்சம் (பவுர்ணமியுடன் சேர்த்து 15 நாட்கள்) என இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பட்ச பதினைந்து நாட்களில் பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பட்சத்திற்கும் ஒருநாள் அதிபதிகளாக வருவார்கள். ஒரு மாதத்தின் இரு நாட்களில் பிரபஞ்சத்தை நிர்வாகம் செய்கின்றனர். குறிப்பிட்ட திதியை பரிபாலனம் செய்யும் தேவிகளை வழிபட்டால் வறுமை உள்ளிட்ட சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.

    இங்கே 5 நித்ய தேவிகளைப் பற்றிய விவரங்களை சிறு குறிப்பாக பார்க்கலாம்.

    காமேஸ்வரி

    விரும்பிய உருவத்தை எடுக்கக் கூடிய தேவி இவள். கோடி சூரிய பிரகாசமாக ஜொலிக்கும் தேகம் கொண்டவள். மாணிக்க மகுடம், பொன் மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற அணிகலன்களை அணிந்தவள். முக்கண்கள், ஆறு திருக்கரங்களில் கரும்பு வில், மலர் அம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்தவள். பிறை சூடிய திருமுடி கொண்டவள். இவரை வழிபட்டால் குடும்பத்தில் ஆனந்தம், தன வரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்வு அமையும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளா்பிறை பிரதமை, அமாவாசை.

    மந்திரம்:-

    ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
    நித்யக்லின்னாயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    பகமாலினி

    ‘பகம்’ என்ற சொல்லுக்கு பரிபூர்ண ஐஸ்வர்யம், தர்மம், தேஜஸ், ஞானம், வைராக்கியம், வீரியம், முக்தி போன்ற பொருளும் உண்டு. இவற்றின் அம்சமாக திகழ்வதால் இந்த அன்னைக்கு ‘பகமாலினி’ என்று பெயர். சிவந்த நிறமுள்ள இவள், சிவப்பு கற்களால் ஆன நகைகளை அணிந்து அழகு பொலியும் திருமுகம் கொண்டவள். முக்கண்களுடனும் இடது கரங்களில் அல்லி மலர், பாசக்கயிறு, கரும்பு வில் ஏந்தியும், வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் காட்சி தருகிறாள். இந்த தேவியை வழிபாடு செய்தால், வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம். கர்ப்பத்திலுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை துவிதியை, தேய்பிறை சதுர்த்தசி.

    மந்திரம்:

    ஓம் பகமாலின்யை வித்மஹே
    ஸர்வ வஸங்கர்யை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    நித்யக்லின்னா காயத்ரி மந்திரம்

    கருணை மிகுந்த இந்த அம்பிகையை வழிபடுவோர், மூவுலகிலும் புத்தி மற்றும் சக்தியோடு வாழ்வர். சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல், முக்கண்கள், திருமுடியில் பிறை சந்திரன் கொண்டு அருளும் இந்த தேவிக்கு ‘மதாலஸா’ என்ற பெயரும் உண்டு. தன் நான்கு கரங்களிலும், பாசம், அங்குசம், பான பாத்திரம், அபய முத்திரை தரித்தவள். இந்த அன்னையை வழிபட்டால், குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் வராது.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை திருதியை, தேய்பிறை திரயோதசி.

    மந்திரம்:

    ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே
    நித்ய மதத்ரவாய தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    வஹ்னி வாஸினி மந்திரம்

    அக்னி மண்டலத்தில் உறைவதால் வஹ்னி வாஸினி என்று பெயர். அக்னி மண்டலம் நம் உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை துலங்குகிறாள். `வஹ்னி’ என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும் குறிக்கும். அழகே உருவாய் அருளே வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் விருப்பமுள்ளவள். சுற்றிச் சுழலும் மயக்கும் விழிகளையுடையவள். தன் திருக்கரங்களில் தாமரை, சங்கு, கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம்புகள், மாதுளம்பழம், அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள். இந்த அம்மனை வழிபட்டால் நோய் தீரும், தேக பலத்தோடு, உலக இன்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பு அமையும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை ஏகாதசி.

    மந்திரம்:

    ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே
    ஸித்திப்ரதாயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்
    Next Story
    ×