
அதேபோல, இந்த ஆண்டிற்கான சப்தஸ்தான பெருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கோவிலில் தினமும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக அம்பாள் தேரில் எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 'சிவ சிவ' என்று பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் கோவில் முன்பிருந்து புறப்பட்ட தேர், மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி, தெற்குவீதி வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. பாதுகாப்பு பணியில் மயிலாடுதுறை போலீசார் ஈடுபட்டனர்.