என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “அஜா’’ ஏகா இந்த நாளில்தான் அரிச்சந்திரன், விரதம் இருந்து தாம் இழந்த நாடு, மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
    ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ஆம்நாள் ஏகாதசி வருகிறது. ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது. அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர்.

    புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “பத்ம நாபா’’ ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது. நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும்.

    புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “அஜா’’ ஏகா இந்த நாளில்தான் அரிச்சந்திரன், விரதம் இருந்து தாம் இழந்த நாடு, மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே நாமும் இவ்விரதநாளில் விரதம் கடைபிடித்தால், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். புரட்டாசி மாத ஏகாதசியன்று கண்டிப்பாக தயிர் உபயோகிக்க கூடாது. அதில் மட்டும் கவனமாக இருங்கள்.
    சபரிமலைக்கான புதிய மேல் சாந்தி நாளை தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுகிறார்.
    திருவனந்தபுரம் :

    மலையாள காலண்டரின் படி துலா மாத பிறப்பை முன்னிட்டு துலா பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அப்போது ஆகம விதிகளின்படி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி விளக்கு ஏற்றி சடங்குகளை செய்ய உள்ளார்.

    நாளை(17-ந்தேதி) முதல் வழக்கமாக பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இதனால் நாளை அதிகாலை 5 மணியில் இருந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கோவில் நடை வருகிற 21-ந்தேதி வரை திறந்திருக்கும். அன்றைய தினம் வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    தற்போது நடைமுறையில் உள்ள தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு, கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். “நெகட்டிவ்’’ சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்திக் கொண்டதற்காக சான்றிதழ் ஆகியவற்றை பக்தர்கள் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்கள், ஆர்.டி.பி. சி.ஆர். “நெகட்டிவ்’’ சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் இல்லாதவர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சபரிமலைக்கான புதிய மேல் சாந்தி நாளை தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுகிறார்.

    துலா மாத பூஜைகள் முடிந்தபிறகு வருகிற 21-ந்தேதி கோவில் நடை அடைக்கப்படுகிறது. அதன் பிறகு நவம்பர் 2-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டு மறுநாளே மூடப்படுகிறது.

    கருடனை கண்டால் மனதை ஒருமுகப்படுத்தி தரிசனம் செய்யுங்கள். ஒவ்வொரு நாள் கருடன் தரிசனத்துக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.
    நாராயணருக்கு வைகுந்தத்தில் சேவை செய்ய எத்தனையோ பேர் இருந்தாலும் அனந்தன் எனப்படும் ஸ்ரீஆதிசேஷன், பெரிய திருவடி எனப்படும் ஸ்ரீகருடன், சேனாமுதல்வன் எனப்படும் ஸ்ரீவிஸ்வக்சேனர் ஆகிய மூவரும் முக்கியமானவர்கள். இவர்களில் ஆதிசேஷன் பெருமாளுக்கு குடையாகவும், சிம்மாசனமாகவும், படுக்கையாகவும் இருக்கிறார். விஸ்வக் சேனர் மகா விஷ்ணுவின் படைகளின் சேனாதிபதியாக விளங்குகிறார்.

    ஆனால் ஸ்ரீகருடனோ பெருமாளுக்கு தோழன், தாசன், ஆசனம், வாகனம், கொடி, மேல்சுட்டு, விசிறி என 7 விதமான தொண்டுகளை செய்பவராக உள்ளார். இத னால் பெருமாளுடன் மிக, மிக ஐக்கியமானவராக கருடர் உள்ளார். இந்த சிறப்பு காரணமாக கரு டனை வைணவர்கள் ‘கருடாழ்வார்’ என்று போற்றி புகழ்கின்றனர்.

    கருடனை பெரிய திருவடி, கொற்றப்புள், தெய்வப் புள், வேதஸ் வரூபன், காய்சினப்புள், பட்சிராஜன், புள்ளரையன் வைநதேயன், ஓடும் புள், சுபர்ணன், விஜயன், உவணன், வினைதச் சிறுவன் என பல பெயர்களில் அழைக்கிறார்கள். கருடன் இந்திரலோகத்தில் இருந்து அமிர்தத்தை எடுத்து வந்து தன் தாய் வினதையின் அடிமைத் தனத்தை நீக்கினார். அந்த தாயின் அருளால் தான் பெருமாளின் வாகனமாக கருடன் திகழ்கிறார். இவ ருக்கென்றே ‘கருட பஞ்சமி’ என்ற பண்டிகையும் உள்ளது. சகோதரர்களின் நலனுக்காக பெண்களால் இப்பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

    கருடனின் அம்சமாக அவதரித்தவர் பெரியாழ்வார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த பெரியாழ்வாரின் மகளாக அவதாரம் எடுத்தவர் ஸ்ரீஆண்டாள். பெரியாழ்வார் தன் மகள் ஆண்டாளை ரங்கநாதருக்கு திருமணம் செய்து கொடுத்த போது மாப்பிள்ளை அருகில் நின்று கொண்டு தாரை வார்த்துக் கொடுத்தாராம். இதன் அடிப்படையில் பெரியாழ்வாரின் அம்சமான கருடாழ்வார் பெருமாள் அருகிலேயே இருக்கிறார் என்பார்கள்.

    இதனால் தான் வைணவத் தலங்களில் கருட கொடி அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கருடனை தரிசனம் செய்த பிறகு, பெருமாளையும், தாயாரையும் தரிசிப்பதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் பிறந்தார். எனவே சுவாதி நட்சத்திர நாட்களில் (நாளை சுவாதி நட்சத்திர நாள்) கருடனை வழிபட்டால், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் எளிதில் கிடைப்பார். குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆலயங்களில் முக்கிய திருவிழாக்கள் நடக்கும் போது மேலே கருடன் பறப்பதை பார்த்திருப்பீர்கள். அப்படி கருட தரிசனம் கிடைக்கும் போது கை கூப்பி வணங்க தேவை இ¢ல்லை. மனதுக்குள் கருடன் அருள் பெறும் மந்திரங்களை சொல்லி வழிபட்டால் போதும்.

    மேலும் கருடனின் பார்வை நம் மீது பட்டாலே போதும், நாம் எடுத்த செயல்கள் எல்லாம் வெற்றிபெறும். கருடனின் பார்வைக்கு, ‘சூட்சும திருஷ்டி’ என்று பெயர். அந்த பார்வை பட்டால் உங்களை எந்த தீய சக்திகளும், திருஷ்டிகளும், தீ வினைகளும் நெருங்காது. எனவே கருடனை கண்டால் மனதை ஒருமுகப்படுத்தி தரிசனம் செய்யுங்கள். ஒவ்வொரு நாள் கருடன் தரிசனத்துக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை கருடனை வழிபட்டால், நோய்கள், பாவங்கள் மனக்குழப்பங்கள் நீங்கும்.

    திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் கருடனை வழிபட்டால் பெண்களுக்கு அழகு உண்டாகும். பகை விலகும். குடும்ப சிக்கல்களுக்கு விடை கிடைக்கும்.

    புதன், வியாழன் கிழமைகளில் வழிபட்டால், எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். பகைவர்கள் வைத்த சூனியம் நீங்கும்.

    வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபட்டால் ஆயுள் கெட்டியாகும். எந்த விஷயத்திலும் துணிச்சல் உண்டாகும். தன்னம்பிக்கை, ஆர்வம் அதிகரிப்பதால் செல்வம் பெருகும்.

    இப்படி பல்வேறு சிறப்பு களை கொண்டுள்ள கருடன், பெருமாளுக்கு செய்யும் கருட சேவையால் மேலும் சிறப்பு பெறுகிறார். வைணவத் தலங்களில் விழா நாட்களிலும், பிரம் மோற்சவத்தின் போதும் திருமால் எத்தனையோ விதமான வாகனங்களில் எழுந்தருளினாலும் கருட வாகனத்தில் வரும் போது, பக்தர்களால் அதிகம் ஆரா தனை செய்யப்படுகிறார். திருமாலின் வாகனமாக கருடன் மாறியதற்கு பல கதைகள் சொல்லப்படுகிறது. கருடன் பல நூறு ஆண்டுகள் தவம் இருந்து மகாவிஷ்ணுவை சுமந்து செல்லும் வாகனமாக மாறியதாக ஒரு கதை உண்டு.

    இன்னொரு கதையும் இருக்கிறது. ஒரு சமயம் கருடன், இந்திரனுடன் போரிட்டார். அப்போது திருமால் உபேந்திரனாக அவதாரம் எடுத்து இந்திரனுக்காக கருடனுடன் போரிட்டார். அந்த போரில் கருடனின் ஆணவம் நீங்கும் வகையில் அவரை வீழ்த்தி அடக்கினார். தன் நிலை உணர்ந்த கருடன் திருமாலின் வாகனமாகவும், கொடியாகவும் மாறியதாக சொல்வார்கள்.

    கருடன் மகாபலம் பொருந்தியவர். அழகான முகம், குவிந்த இறகுகள், உறுதியான நகங்கள், கூர்மையான கண் பார்வை, பருத்த கழுத்து, குட்டையான கால்கள், பெரிய தலை என பல சிறப்பம்சங்களைக் கொண்டவர். எல்லா திசைகளிலும் மிக வேகமாக பறக்கும் ஆற்றல் கொண்ட கருடன், தன் சக்தி மூலம் திருமாலுக்கு உதவினார். முதலையிடம் சிக்கிய கஜேந்திரயானையைக் காப்பாற்ற திருமால் கருடன் வாகனத்தில் பறந்து வந்தார் என்ற ஒரே ஒரு உதாரணமே இதற்கு போதும்.

    திருமால் நினைக்கும் முன்பே அந்த செயலுக்கு கருடன் தயாராகி விடுவார் என்பார்கள். எனவே தான் பக்தர்களை காப்பாற்ற திருமால் கருட வாகனத்தில் எழுந்தருள்வதை சிறப்பாக சொல்கிறார்கள். இதையே ‘கருட சேவை’ என்கிறோம். சிலருக்கு பெருமாளை தினமும் வழிபட, வழிபட ஒருவித அகங்காரம் வந்து விடக்கூடும்.

    அப்படி இல்லாமல் பெருமாளுக்கு என்றென்றும் தாசனாக இருக்கும் ஸ்ரீகருடன் போல எப்போதும் திருமாலுக்கு சேவை செய்து வாழ வேண்டும் என்பதை கருட சேவை நமக்கு உணர்த்துகிறது. புரட்டாசி மாதம் தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் தலங்களில் கருட சேவை நடைபெறும். அன்றைய தினம் கருட சேவை வழிபாடு செய்தால், பெருமாளின் கருணைப் பார்வை நம் மீது திரும்பும். எனவே புரட்டாசி கருட சேவைகளை தவற விடாதீர்கள்.
    புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திருமலைநம்பி கோவில் அமைந்துள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவிலில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

    இந்த நிலையில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் முதல் நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் ஆவணி மாதம் நடைபெறும் உறியடி திருவிழா, புரட்டாசி கருட சேவை நிகழ்ச்சி ஆகியவை ரத்து செய்யப்பட்டது. நம்பி கோவிலை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மீண்டும் திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில், தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர்.

    புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி மாவட்டம் குணசீலத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலில் 48 நாட்கள் விரதம் இருந்து தங்கி சுவாமியை தரிசித்தால் நோய் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருப்பதிக்கு செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து பெருமாளை தரிசித்தால் திருப்பதியில் வணங்கிய பயன் கிடைக்கும் என்பதால் தென் திருப்பதி என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தை முக்கியமாக கொண்டு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்கு ஹனுமந்த வாகனம், கருட, சேஷ, யானை போன்ற வாகனங்களில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். நேற்று முன்தினம் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக, காலை 5-30 மணிக்கு பெருமாள், உபய நாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்பக்கம் டிராக்டர் மூலமும், பக்தர்கள் சார்பிலும் தேர் இழுக்கப்பட்டது. பின்புறம் பொக்லைன் எந்திரம் மூலம் தேர் நகர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தேரோடும் வீதி வழியாக வலம் வந்த தேர், காலை 7 மணிக்கு நிலையை அடைந்தது.

    வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் நடை திறக்கப்படும் என்றும், சாமியை வணங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    மாலை 4 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இன்று(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு புண்ணியாக வாசனம், இரவு தீபாராதனையும் நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு புஷ்ப பல்லக்கில் பெருமாள் சேவை சாதிக்கிறார். தொடர்ந்து கண்ணாடி அறை சேவை நடைபெறுகிறது.

    விழா நாட்களில் அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் டோக்கன் வழங்கப்பட்டு பெருமாளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பக்தர்கள் நின்று செல்வதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் சவுக்கு கட்டைகள் கட்டப்பட்டு இருந்தது.

    மேலும் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை WWW.gunaseelamtemple.com என்ற கோவில் இணையதளத்தில் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே காணும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி அய்யங்கார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
    புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை அன்று இத்தல பூதநாராயணப் பெருமாளுக்கு, ஒரு படி அரிசி வாங்கிக்கொடுத்து, அன்னப்படையல் செய்து, பெருமாளை வழிபாடு செய்தால், இல்லத்தில் நிறைந்த செல்வம் வந்து தங்கும் என்பது ஐதீகம்.
    திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று, கிரிவலம். பவுர்ணமி தோறும் இங்குள்ள மலையை பக்தர்கள் அனைவரும் வலம் வந்து இறைவனை வழிபடுவார்கள். இங்கு சிவபெருமானே மலையாக இருப்பதால், அந்த மலையைச் சுற்றி கிரிவலம் வருவது பெரும் பிரசித்திப் பெற்றது. இந்த ஆலயத்தின் அருகில் அமைந்திருக்கும் இரட்டைப் பிள்ளையார் கோவிலும் வெகு பிரபலம். இந்த ஆலயத்திற்கு அருகில் பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இது ‘பூதநாராயணப் பெருமாள் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. ஆலயம் சிறியது என்றாலும் பழமை வாய்ந்ததாக உள்ளது.

    இந்த ஆலயத்தின் தெய்வமான பெருமாள், வெகுகாலமாக பூமியில் புதையுண்டு இருந்தார். அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பிற்பாடு, இவரை வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த சிறிய ஆலயத்திற்குள் தும்பிக்கை ஆழ்வார் எனப்படும் விநாயகர், ஆஞ்சநேயர், சுதர்சனப் பெருமாள் ஆகியோர் ஒரே சன்னிதியில் இருப்பது விசேஷமாகும். இங்கு கருடாழ்வாரும் காட்சி தருகிறார்.

    இந்தக் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை அன்று, பூதநாராயணப் பெருமாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படும். அப்போது ஒரு மூடை அரிசியில் அன்னம் சமைத்து, அதனை பெருமாளுக்கு படைத்து சிறப்பு பூஜை செய்வார்கள். இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டதும், இந்த அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த அன்னத்தை வாங்கி சாப்பிட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை அன்று இத்தல பூதநாராயணப் பெருமாளுக்கு, ஒரு படி அரிசி வாங்கிக்கொடுத்து, அன்னப்படையல் செய்து, பெருமாளை வழிபாடு செய்தால், இல்லத்தில் நிறைந்த செல்வம் வந்து தங்கும் என்பது ஐதீகம். இந்தக் கோவில் கருவறையில் குழந்தை கண்ணனே, பூத நாராயணப் பெருமாளாக வீற்றிருந்து அருள்பாலிப்பதாக தல வரலாறு சொல்கிறது.

    கிருஷ்ணரைக் கொல்ல ஆயர்பாடிக்கு பூதகி என்ற அரக்கியை அனுப்பி வைத்தான், கம்சன். அந்த அரக்கி, நயவஞ்சமாக ஆயர்பாடி மாளிகைக்குள் நுழைந்து, குழந்தை கண்ணனைத் தூக்கிக் கொண்டு விண்ணில் பறந்தாள். அப்படி பறந்த வேளையில், தன்னுடைய மார்பில் இருந்து விஷப்பாலை, கண்ணனுக்குப் புகட்டினாள். ஆனால் குழந்தையாக இருந்த கண்ணன், அந்த பூதகியின் மார்பின் வழியாக அவள் ரத்தம் முழுவதையும் உறிஞ்சி குடித்தான். இதனால் அரக்கி இறந்து போனாள்.

    பூதகியிடம் விஷப்பால் உண்ட கண்ணனே, இங்கு ‘பூத நாராயணர்’ என்ற பெயரில் அருள்கிறார். இந்த ஆலய இறைவனை வேண்டிக்கொண்டால், அறிவும், ஞானமும் கிடைக்கும் என்கிறார்கள். மேலும் குழந்தைகளுக்கு உள்ள தீராத நோய், கண் திருஷ்டி போன்றவை அகலும்.
    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    குலசேகரன்பட்டினம் :

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து காட்சி அளித்தார்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முக்கிய விழா நாட்களிலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    விழாவையொட்டி பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்த பக்தர்கள் காப்புக்கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு சுவாமிகளின் வேடங்களை அணிந்து, அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்தனர். ஒவ்வொரு ஊரிலும் தசரா குழுவினரும் பல்வேறு வேடங்களை அணிந்து கலைநிகழ்ச்சி நடத்தியதால், தென்மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

    இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான நேற்று இரவில் நடந்தது. இதையொட்டி காலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலையில் கோவில் மண்டபத்தில் சூலாயுதத்துடன் எழுந்தருளிய அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    நள்ளிரவு 12 மணியளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, கோவிலின் முன்பு சென்றடைந்தார். தொடர்ந்து அங்கு ஆணவமே உருவான மகிஷாசூரன் மூன்று முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார்.

    பின்னர் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார்.

    கோவில் அருகில் உள்ள கடற்கரை வெறிச்சோடி கிடந்ததை படத்தில் காணலாம்.

    தொடர்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர்புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அன்னை சம்ஹாரம் செய்தார். அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார். சூரசம்ஹாரம் முடிந்ததும் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 2-வது ஆண்டாகவும் பக்தர்கள் பங்கேற்பின்றி, கோவிலின் முன்பாக சூரசம்ஹாரம் எளிமையாக நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    தொடர்ந்து இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    11-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் கோவில் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் உள்பிரகாரத்தில் அம்மன் வலம் வந்து மீண்டும் கோவிலை சேர்கிறார். மாலையில் கோவிலில் கொடியிறக்கப்பட்டவுடன் அம்மனுக்கு காப்பு களையப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்து வேடம் அணிந்த பக்தர்கள், அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களில் காப்புகளை அவிழ்த்து வேடங்களை களைந்து விரதத்தை நிறைவு செய்கின்றனர்.

    விழாவின் நிறைவு நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    தசரா திருவிழாவையொட்டி, உடன்குடி தாண்டவன்காட்டில் பல்வேறு இடங்களிலும் பிரமாண்ட அம்மன் சிலைகள் கண் திறந்து மூடுவது போன்று ஒளி, ஒலி அமைப்புடன் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் மலைமுகடுகளில் இருந்து பல்வேறு அம்மன்கள் வெளியே வந்து செல்வது போன்றும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.

    தசரா திருவிழாவையொட்டி குலசேகரன்பட்டினத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்தனர். உள்ளூர் நபர்களின் அடையாள அட்டையை பரிசோதித்து உறுதிப்படுத்திய பின்னரே அனுமதித்தனர். வெளியூர் நபர்களை அனுமதிக்கவில்லை. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தலைமையில் சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பெருமாள் மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி விஷ்ணுவுக்குரிய பூஜைகளையும், விரதங்களையும், வழிபாடுகளையும் செய்ய உகந்தது.
    இந்துக்களின் கலாச்சாரத்தில் விரதங்கள், பண்டிகைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும், ஒரு மாதம் முழுவதும் விரதம்  கடைக்கப்பிடிக்கப்படுவது புரட்டாசி மாதம். புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் பல  தடைகளை நீக்கி நலன்களை வாரி வழங்கும் என்பது நம்பிக்கை. பணம் இல்லாமல் இவ்வுலகம் இல்லை. பணமிருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க  போதிய ஆயுளும், ஆரோக்கியமும் அவசியம். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் தருவது சனிக்கிழமை விரதம்.

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி  சனிக்கிழமையில்தான் சனி பகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும், கடவுளான திருமாலை வணங்குவது  வழக்கத்தில் வந்தது. ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால், மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனியை போல் கொடுப்பாருமில்லை. கெடுப்பாரும்  இல்லை என்று சொல்வார்கள். நவக்கிரகங்களில் சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தை பொருத்தே ஆயுள்காலம் அமையும்.

    ஆனால், அந்த கிரகத்தை கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. ஒவ்வொரு  தெய்வத்துக்கும், தேவர்களுக்கும் சில மாதங்களில் வரும் பண்டிகைகள் முக்கியமானதாக இருக்கும். பெருமாள் மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி  விஷ்ணுவுக்குரிய பூஜைகளையும், விரதங்களையும், வழிபாடுகளையும் செய்ய உகந்தது.

    புரட்டாசி மாத சனிக்கிழமை  விரதத்துக்கு மகிமை உண்டு. உண்மையான பக்தியே இந்த விரதத்திற்குரிய தேவையான பொருள். ஒவ்வொரு சனிக்கிழமையிலும், விரதமிருக்க முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமை விசேஷமாக விரதம் அனுஷ்டிப்பர். சனீஸ்வரனுக்குரிய தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவே கரியப்பட்டினை  அவனுக்கு சாத்துதலும், எள்ளுச்சாதம் நிவேதனம் செய்தலும், காகத்திற்கு உணவிடுதலும் சனிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை.

    உணவிலே நல்லெண்ணை மற்றும் எள்ளு பதார்த்தங்கள் சேர்த்தல் நன்று. இத்தினத்திலே எள்ளு, கறுப்புத்துணி, நல்லெண்ணை முதலியவற்றை தானம்  செய்வதால் சனி தோஷத்தை நீக்கலாம். செப்பு பாத்திரத்தில் நல்லெண்ணை விட்டு தமது முகத்தை அதில் பார்த்துவிட்டு தானம் செய்தல் வேண்டும். ஏனைய விரதங்களுக்கு எண்ணெய் முழுக்கு விலக்கப்பட்ட ஒன்று. ஆனால், சனீஸ்வர விரதத்திற்கு எண்ணெய் தேய்த்து நீராடல் வேண்டும்.

    கறுப்புத்துணியில் எள்ளுப்பொட்டலம் கட்டி அதனை சிறிய மண்சட்டியில் வைத்து நல்லெண்ணை விட்டு அதனை தீபமாக ஏற்றி சனிதோஷங்களுக்கு பிரீதி  செய்யலாம். இது முழுதாக எரிந்து நன்றாக நீராகும் வரை நிறைய நல்லெண்ணை விட வேண்டும். அரைகுறையாக எரிந்து பொருமுவது கூடாது. அதிலும்,  புரட்டாசி மாதத்தில் நாளை கடைசி சனிக்கிழமை என்பதால் சனீஸ்வரரை மனமுருகி வேண்டி விரதமிருந்தால் அதன் பலன் நிச்சயம் கிட்டும் என்பது நம்பிக்கை.
    கொரோனா விதிமுறையால் திருப்பதி கோவில் வளாகத்தில் கல்யாண மண்டபம் அருகே தொட்டியில் தண்ணீர் நிரப்பி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தப்பட்டது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கி நடந்து வந்தது. காலை மாலை என இருவேளையும் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக 2-வது ஆண்டாக பக்தர்கள் இன்றி பிரம்மோற்சவ விழா நடந்தது.

    நேற்று காலை சர்வ பூபால வாகனத்தில் ஏழுமலையான் அருள்பாலித்தார்.

    நேற்று இரவு குதிரை வாகன சேவை நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரமணா, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, முதன்மை செயலர் ஜவஹர் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இன்று அதிகாலை திருச்சி உற்சவம் மற்றும் பட்ன திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பி தீர்த்தவாரி நடந்தது.

    வழக்கமாக கோவில் தெப்பத்தில் தீர்த்தவாரி நடக்கும். கொரோனா விதிமுறையால் கோவில் வளாகத்தில் கல்யாண மண்டபம் அருகே தொட்டியில் தண்ணீர் நிரப்பி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தப்பட்டது.

    இதையடுத்து கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது.

    திருப்பதியில் நேற்று 28,163 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 10,942 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.2 கோடி உண்டியலில் காணிக்கை வசூலானது.
    திருமலையில் ஸ்ரீவேங்கடேசுவரருக்கு பிறப்பு கடவுளான பிரமன்தானே முன்னின்று இவ்விழாவை நடத்தி வைத்தார். பிரம்மனால் நடத்தப்பட்ட உற்சவம் ஆகையால் இது பிரம்மோத்சவம் என்று அழைக்கப்பட்டது.
    புரட்டாசி திருவோணம், திருவேங்கடவனின் பிறந்த நாளாகத் தொன்று தொட்டு கருதப்பட்டு வருகிறது. இந்த திருவோண தினத்திற்கு முன்பாக ஒன்பது நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் பல வாகனங்களில் விசேஷ அலங்காரங்களுடன் உற்சவமூர்த்தியான திருமலை அப்பன் அமர்ந்து திருவீதி வலம் வருகிறார்.

    “திருமலையில் ஸ்ரீவேங்கடேசுவரருக்கு பிறப்பு கடவுளான பிரமன்தானே முன்னின்று இவ்விழாவை நடத்தி வைத்தார். பிரம்மனால் நடத்தப்பட்ட உற்சவம் ஆகையால் இது பிரம்மோத்சவம் என்று அழைக்கப்பட்டது. கி.பி.966-ம் ஆண்டில் ஒருமுறை பிரம்மன் திருவிழா நடைபெற்று வந்ததாகவும், அதன்பிறகு புரட்டாசியில் ஒன்றும், மார்கழியில் ஒன்றுமாக இரண்டு தடவை நடத்தப்பட்டன என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

    திருமலையின் மூன்றாம் சுற்றுச்சுவற்றிலுள்ள ஒரு கல்வெட்டில் 1551-ம் வருடத்தில் பதினொரு பிரம்மோத்சவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கிறது. கொடியேற்றத்துடன் பிரம்ம உற்சவம் தொடங்கும். பிரம்மோத்சவத்தில் ஊஞ்சல் சேவையைக் காண்போருக்கு இம்மையிலும், மறுமையிலும் கோடான கோடி இன்பமும் பெருகும்.

    ஐந்தாம் நாள் திருவிழா அன்று காலையில் மோகினி அவதார உத்சவம் நடைபெறும். இரவு எம்பெருமான் கருடாழ்வார் மீது பவனி வந்து அருட்காட்சி தந்து அருளுகிறார். கருட வாகனத்திற்கு வெண்பட்டுக் குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. ஆறு பெரிய குடைகளும், நான்கு சிறிய குடைகளும் சமர்ப்பிக்கப்படும்.

    இக்குடைகள் சென்னையிலிருந்து திருமலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கருடோத்சவ தினத்தன்று மூலவருக்கு அணிவிப்பதற்காக விலை உயர்ந்த பட்டாடைகள் தயாரித்து ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்து தினசரி பூஜை செய்வர். காலை, மாலை இரு வேளைகளிலும், சின்ன சேஷவாகனம், பெரிய சேஷவாகனம், தங்கத் திருச்சி, ஹம்சவாகனம், முத்துப்பந்தல், கல்ப விருஷம், சர்வ பூபால வாகனங்கள், பல்லக்கு கருட சேர்வை, ஹனுமந்த வாகனம், சூரிய, சந்திரப்பிரபை வாகனம், திருத்தேர், குதிரை வாகனம் இப்படி பல வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா வருகிறார். குடை, சாமரம், மங்கள வாத்தியம் முதலியவற்றுடன் வடமொழி மறையும், தென் மொழி மறையும் பாராயணம் செய்ய பக்தர்களின் பஜனை புடை சூழ பிரம்ம உத்சவம் நடைபெறும். இத்திருவிழா காண்போரை இன்பக்கடலில் மூழ்கச் செய்யும்.

    மாலை வேளைகளில் ஊஞ்சல் சேவை நடைபெறும். ஆறாவது நாள் இரவு யானை வாகனத்தில் பகவான் பவனி வருவார். இதற்கு முன்பாக வசந்த உத்சவம் நடைபெறும். வெள்ளை வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு குங்குமக் குழம்புடன் கூடிய சந்தனத்தை வாரி அள்ளி வழங்கிக் கொண்டு பவனி வருகிறார். தேர் திருவிழா அன்ற பகவான் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். திருவிழாவின் கடைசி தினமான திருவோணத்தன்று சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வாருக்கு நீரோட்டம் நடைபெறும். பின் கொடியிறக்கம் (துவஜாவரோகணம்) நடைபெற்றுத் திருவிழா இனிதே நடைபெறுகிறது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் திருமலையில் பிரம்ம உத்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
    சாய் பாபாவின் 103-வது மகா சமாதி தினத்தையொட்டி அங்கு இன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
    சென்னை :

    சீரடியில் உள்ள சாய் பாபா ஆலயத்துக்கு உலகம் முழுவதும் கோடான கோடி பக்தர்கள் இருக்கிறார்கள். சாய்பாபா 1918-ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார்.

    இதையடுத்து ஆண்டு தோறும் விஜயதசமி தினத் தன்று சீரடி சாய்பாபாவின் மகா சமாதி தினத்தை அவரது பக்தர்கள் நடத்தி வருகிறார்கள்.

    இன்று சாய்பாபாவின் 103-வது மகா சமாதி தினம் நடத்தப்பட்டது. இதையடுத்து இன்று அனைத்து சாய்பாபா ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆரா தனைகள் நடத்தப்பட்டன.

    கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவில் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. சாய் பாபாவின் 103-வது மகா சமாதி தினத்தை யொட்டி அங்கு இன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    துவாரகாமாயி ஆத்ம ஞானியர் மையம் சார்பில் ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவின் 103-வது ஆராதனை மற்றும் ஸ்ரீ சாயி குருசரித்திர நூல் வெளியீட்டு விழா தி.நகர் வாணி மஹாலில் இன்று நடந்தது.

    விழாவில் சாய்பாபா பற்றிய பக்தி சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சாய்பாபா சிலையை பல்லக்கில் வைத்து பெண்கள் நடனமாடி ஊர்வலமாக எடுத்து வந்தனர். அன்பின் மேடையில் சாய்பாபா பற்றிய பாடலுக்கு மாணவிகள் பரதநாட்டியம் ஆடினார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாய்பாபா சரித்திர நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் முதல் பிரதியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட அதனை தொழில் அதிபர் வீரமணி, எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர் .

    நிகழ்ச்சியில் முன்னாள் போலீஸ் ஏடிஜிபி.சே‌ஷசாயி, எழுத்தாளர் ரமாசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    இந்த கோவில் ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வடபுறத்தில் அழகன்குளம் கிராமத்தில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க அழகன்குளம் கிராமம். இந்த கிராமம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு சங்ககாலம் கடந்து கி.மு. 3-ம் நூற்றாண்டினை சேர்ந்த பழமை வாய்ந்ததாகும். இங்கு தேவிபட்டினம், ராமேசுவரம் செல்லும் வழயில் கடலும்-வைகை ஆறும் சங்கமிக்கும் ஆற்றங்கரை சாலையில் அழகன்குளம் பஸ்நிறுத்தம் அருகில் அருள்பாலித்துக்கொண்டு உள்ளது ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவில்.

    இந்த கோவிலின் பிரகாரம் 2007-ம் ஆண்டு கோவில் அறங்காவலர்களால் புனரமைக்கப்பட்டு இந்தியாவின் தலைசிறந்த ஸ்தபதிகளில் ஒருவரும், கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு இல்லம், சென்னை வள்ளுவர் கோட்டம் மட்டுமல்லாது திருமலை திருப்பதியின் ஆஸ்தான ஸ்பதி மறைந்த எஸ்.கே. ஆச்சாரி கலைநயத்துடன் இந்த கோவிலை வடிவமைத்துள்ளார். இங்கு பெருமாள், ஆண்டாள், ஸ்ரீவிஷ்வக்சேனர், காலிங்க நர்த்தனர் சன்னதி அமைந்துள்ளது. இந்த கோவிலில் அறங்காவலர்கள் சார்பில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியில் பெருமாள், கள்ளழகர் வேடம் அணிந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ வைகை ஆற்றில் குதிரை வாகனத்தில் சந்தான கோபால கிருஷ்ணன் எழுந்தருள்வார்.

    அப்போது கருட வாகனத்தில் சாமி வீதிஉலா வரும் அழகை காண கோடி கண்கள் போதாது. இதுமட்டுமல்லாது மகர்நோன்பு, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி போன்றவையும் பெருமாளின் ரோகினி நட்சத்திரம் அன்று சிறப்பு பூஜைகளும் சிறப்பு அலங்காரமும் சிறப்பாக நடைபெறும். இங்கு திருமணம் மற்றும் குழந்தைபேறுக்காக பெருமாளை வணங்கி பலர் பலன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவிலின் திருவிழா காலங்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தகோடிகள் இங்கு வந்து சாமிதரிசனம் செய்வார்கள். இந்த கோவில் ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வடபுறத்தில் அழகன்குளம் கிராமத்தில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அறங்காவலர்களாக வாசுகிஸ்ரீதரன், கிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்களின் ஆலோசனைகளை பெற்று கோவிலின் வளர்ச்சியை ஆண்டுதோறும் மிக சிறப்பாக செய்து வருகின்றனர்.

    தானத்தில் சிறந்தது அன்னதானம் என சொல்லும் கருத்துக்கு ஏற்ப திருவிழா காலங்களில் சுவையான சைவ உணவுகளை சமைத்து பலவகை காய்கறிகளுடன் பாயசமும் கூடிய உணவு வழங்கி வருகின்றனர்.
    ×