என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பகவதி அம்மன் பாணாசுரம் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து மகாதானபுரத்தில் உள்ள கோபால கிருஷ்ண சாமி கோவிலுக்கு பகவதி அம்மன் செல்கிறார்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, இரவில் வாகன பவனி போன்றவை நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் விழாவான நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி நாளை அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9 மணிக்கு கோவிலின் வெளிபிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம் பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதன்பிறகு மதியம் 12.30 மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மன் பரிவேட்டை ஊர்வலம் தொடங்குகிறது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் கோவிலை விட்டு வெளியே வரும் போது போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர்.

    பின்னர், கோவிலில் இருந்து புறப்படும் பரிவேட்டை ஊர்வலம் சன்னதி தெரு, தெற்கு ரதவீதி, மேலரதிவீதி, வடக்கு ரதவீதி, மெயின்ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மாலை 6 மணிக்கு மகாதான புரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்றடைகிறது.

    அங்கு பகவதி அம்மன் பாணாசுரம் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து மகாதானபுரத்தில் உள்ள கோபால கிருஷ்ண சாமி கோவிலுக்கு பகவதி அம்மன் செல்கிறார்.

    அங்கு பகவதி அம்மனுக்கும், நவநீத சந்தான கோபால கிருஷ்ண சாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடக்கிறது. அதன்பிறகு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 7.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்ததும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு ஆண்டுக்கு 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருகோவில் நிர்வாகம், பக்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்துள்ளது.

    பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை திருவிழாவைெயாட்டி கன்னியாகுமரியில் நாளை (வெள்ளிக் கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் இருந்து தங்க நாற்கர சாலை வழியாக கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும். இதுபோல், கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் பஸ்கள் இதே வழியாக நாகர்கோவிலுக்கு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    நவராத்திரியில் முப்பெரும் தேவியரை பூஜித்து இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எல்லா நலமும், வளமும், ஞானமும் அருள வேண்டுவோம்.
    மலை மகளான துர்கை, அலை மகளான லட்சுமி மற்றும் கலை மகளான சரஸ்வதி ஆகிய மூவரையும் போற்றிக் கொண்டாடும் விழாவே நவராத்திரித் திருவிழாவாகும். இவர்கள் மூவரையும் ஆதிசக்தியின் வடிவங்களாக நாம் வணங்குகிறோம்.

    * ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரிப் பண்டிகையின் முதல் மூன்று நாட்கள் உக்கரமான துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் மென்மையான லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் ஞானத்தின் வடிவான சரஸ்வதிக்கும் ஒதுக்கப்பட்டு மிகவும் விமரிசையாக கொண்டாடப் படுகின்றது. துர்கையை-மகேஸ்வரி, கௌமாரி, வராகியாக முதல் மூன்று நாட்களிலும், லட்சுமியை- மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாக அடுத்த மூன்று நாட்களிலும், சரஸ்வதியை- சரஸ்வதி, நரசிம்கி, சாமுண்டியாக கடைசி மூன்று நாட்களிலும் வழிபடுகின்றோம்.

    * நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கை, பரமேஸ்வரியின் அம்சங்களான நவ துர்க்கைகளையும் வேண்டி வீரத்தையும், தைரியத்தையும் பெற வேண்டும். முதல் ராத்திரியின் போது சக்தியை மலர்களால் அலங்கரித்து வழிபட்டால் சர்வ மங்கள ரூபிணியாக அவள் நமது இல்லங்களில் கொலு வீற்றிருப்பாள்.

    * இரண்டாவது ராத்திரியின் போது அன்னைக்கு ஆபரணங்களை அணிவித்து வழிபட்டால் அவள் சர்வ பூரண பூஜிதமாக அருள் பாலிப்பாள்.

    * மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சக்தியானவள் மூன்றாவது ராத்திரி நாம் செய்யும் பூஜைகளுக்கு மனமகிழ்ந்து மனவலிமையையும், உடல் திடத்தையையும் வழங்குகிறாள்.

    * நவராத்திரியின் இடைப்பட்ட மூன்று நாட்கள் லட்சுமியையும், அவர் வடிவாகத் திகழும் ஆதி லட்சுமி, சந்தான லட்சுமி, வீரலட்சுமி, விஜய லட்சுமி, கஜலட்சுமி, தானிய லட்சுமி, தனலட்சுமி, மகாலட்சுமியையும் வணங்கி அருள் பெற்றிட வேண்டும்.

    * பணம், பொருள், புகழ் என சகல செளபாக்கியங்களையும் பெற மகாலட்சுமியின் வடிவங்களை பூஜித்து வணங்க வேண்டும்.

    * நவராத்தியின் கடைசி மூன்று நாட்கள் சாந்தமும், சாத்வீக குணமும் பொருந்திய சரஸ்வதியின் அம்சங்களான வாசீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்காக கொண்டாடப்படுகின்றது.

    * கல்வியறிவையும், ஞானத்தையும் வழங்கும் அஷ்ட சரஸ்வதியை நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் வழிபட்டு அன்னையின் அருளைப் பெறுகின்றனர். பிரம்மதேவர் வேதங்களை சரஸ்வதியை வணங்கிய பின்னரே உருவாக்கினாராம்.

    * இந்த ஒன்பது நாட்களிலும் பகலில் சிவபெருமானுக்கும், இரவில் அம்பிகைக்கும் பூஜை செய்ய வேண்டும் என்று ஒதுக்கியுள்ளனர்.

    * பண்டைய காலத்தில் போர்புரிய சில சட்ட தர்மங்களைக் கையாண்டனர். பகலில் போர்புரிந்து விட்டு இரவில் அன்று நடந்தவற்றை ஆராய்ந்து மறுநாள் செய்வதற்கான வேலைகளைத் திட்டமிட்ட பின்னர் களைப்பு நீங்கி உற்சாகமடைய ஆடல், பாடல் போன்ற கலைநிகழ்ச்சிகளை நடத்துவார்கள் இது போன்று பண்டைய நாட்களில் நடந்தவற்றையே நாம் இப்பொழுது நவராத்திரித் திருவிழவாகக் கொண்டாடுகிறோம்.

    * இந்த ஒன்பது நாட்களும் பராசக்தியானவள் கன்னிப்பெண் வடிவில் அவதரிக்கிறாள். பராசக்தி அசுரனை எதிர்த்து போர்புரிந்த போது அனைவரும் பொம்மையைப் போல் சிலையாய் நின்றதை நினைவு கொள்ளும் வகையில் நாம் ஒன்பது படிகளில் கொலு பொம்மைகளை வைக்கிறோம் என்று புராணங்கள் கூறுகின்றன.

    * கொலுப்படியில் முதல் படியானது ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி, மரம் போன்ற பொம்மைகளுக்கானதாகும்.

    * இரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட உயிரின பொம்மைகளும், மூன்றாம் படியில் மூன்றிவு கொண்ட உயிரின பொம்மைகளும், நான்காம் படியில் நான்கறிவு கொண்ட உயிரின பொம்மைகளும் வைக்கப்டுகின்றன.

    * ஐந்தாம் படியில் ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் மற்றும் பறவை பொம்மைகளும், ஆறாம் படியில் சிந்திக்கும் சிரிக்கும் ஆறறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளும், ஏழாம் படியில் மனித நிலையில் இருந்து உயர்ந்த சித்தர்கள், ரிஷிகள் மற்றும் மகான்களின் உருவ பொம்மைகளும் வைக்கப்படுகின்றன.

    * எட்டாம் படியில் தேவர்கள், அஷ்டதிக்பாலகர்கள், நவக்கரக நாயகர்கள் மற்றும் தேவதைகளின் உருவ பொம்மைகளும், கடைசியானதும் உயர்ந்த நிலையில் உள்ளதுமான ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன், முப்பெரும் தேவியர்கள் ஆகியோரது பொம்மைகளை வைத்து இவர்களுக்கு நடுநாயகமாக ஆதிபராசக்தியின் உருவ பொம்மையை வைக்கிறார்கள்.

    * மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலைய அடைய வேண்டுமென்ற பொருள்படும் விதத்தில் இந்த ஒன்பது கொலுப்படியின் தத்துவம் அமைந்துள்ளது.

    * நவராத்திரியில் முப்பெரும் தேவியரை பூஜித்து இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எல்லா நலமும், வளமும், ஞானமும் அருள வேண்டுவோம்.
    திருந்திய தம்பியை ஏற்றுக் கொள்ள மறுக்கும், மன்னிக்கும் மனமற்ற அண்ணனாய் இருக்கக் கூடாது என்பதே இந்த நிகழ்வு சொல்லும் செய்தியாகும்.
    ஒருவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். கால்நடைகள், நிலபுலன்கள், வேலையாட்கள் என அவர்கள் செல்வச் செழிப்புடன் இருந்தார்கள்.

    மூத்த மகன் அமைதியானவன். தந்தைக்கு உதவியாய் இருந்தான். இளையவன் அவனுக்கு நேர் எதிர். உல்லாசப் பேர்வழி. ஒரு நாள் அவன் தந்தையிடம் வந்தான்.

    ‘அப்பா... நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்’.

    ‘என்ன முடிவு?’

    ‘நம்முடைய சொத்தில் எனக்குச் சேரவேண்டிய பாகத்தை எனக்குக் கொடுத்துவிடுங்கள், நான் போகிறேன்’.

    தந்தை எவ்வளவோ அறிவுரைகள் சொல்லியும் அவன் கேட்கவில்லை, எனவே தந்தை சொத்தைப் பிரித்து இருவருக்கும் அளித்தார்.

    இளையவன் சொத்தையெல்லாம் விற்று பெரும் பணம் திரட்டினான்.

    ‘வாருங்கள் நாம் வெளியூர் சென்று உல்லாசமாய் இருக்கலாம்’ என்று அவன் நண்பர்களை அழைத்தான். அவர்கள் வெளியூர் சென்று விடுதிகளிலும், சூதாட்ட இடங்களிலும் சென்று ஆனந்த வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள்.

    வருடங்கள் கடந்தன. அவனிடமிருந்த பணம் முழுவதும் தீர்ந்து போக, நண்பர்கள் விலகினர். விடுதியிலிருந்தும் துரத்தப்பட்டான்!

    செல்வத்தின் மீது நிமிர்ந்து படுத்திருந்த அவன் இப்போது கோணிக்குள் உடல் சுருக்கி தெருவோரத்தில் கிடந்தான். பசி அவனுடைய வயிற்றைக் கிள்ளியது.

    ‘ஐயா... எனக்கு ஏதாவது ஒரு வேலை தாருங்க ளேன்...’ என்று கேட்டு அவன் வேலை தேடி அலைந்தான், எதுவும் கிடைக்கவில்லை.

    கடைசியில் ஒருவர் இரக்கப்பட்டு பன்றிகளை மேய்க்கும் வேலையைக் கொடுத்தார். வேறு வழியில்லாமல் அதைச் செய்தான்.

    அந்த நாட்டில் பஞ்சம் பரவத் தொடங்கியது. எனவே அவன் பன்றிகளுக்கு வைக்கும் தவிட்டை உண்ணத் தொடங்கினான். அதுவும் அவனுக்குக் கிடைக்கவில்லை. உரிமையாளர் அவனை அடித்துத் துரத்தினார்.

    அப்போது தான் அவன் தன் தவறை உணர்ந்தான். தந்தையிடம் சென்று மன்னிப்புக் கேட்டு அவருடைய வேலைக்காரர்களில் ஒருவராக வாழலாம் என முடிவெடுத்தான். தந்தையின் இல்லம் நோக்கி நடந்தான்.

    அழுக்கடைந்த ஆடைகளுடன் ஒரு உருவம் தள்ளாடித் தள்ளாடி வருவதைக் கண்ட தந்தை அவனை அடையாளம் கண்டுகொண்டார்! அவனை நோக்கி ஓடினார்.

    ‘மகனே...’ என தன்னை நோக்கி ஓடி வரும் தந்தையைக் கண்டு மகன் கண் கலங்கினான்.

    ‘அப்பா... மன்னியுங்கள்... விண்ணகத் தந்தைக்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் நான் பாவம் செய்து விட்டேன். இனிமேல் எனக்கு உமது மகனாய் இருக்கும் தகுதி இல்லை. என்னை உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவராக எண்ணி உணவளிப்பீரா?’ - அவன் சொல்ல நினைத்திருந்ததை சொல்ல ஆரம்பிக்கும் முன், தந்தை பணியாளரை அழைத்தார்.

    ‘முதல் தரமான ஆடைகளைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள். விரல்களுக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் உடனே அணிவியுங்கள். கொழுத்த கன்றை அடித்து விருந்து வையுங்கள்’.

    மாலையில் மூத்த மகன் வயலிலிருந்து வீடு திரும்பினான்.

    ‘இசை கேட்கிறது, நடனச் சத்தம் கேட்கிறது, என்ன விஷயம்?’ - பணியாளர் ஒருவரிடம் கேட்டான்.

    ‘உமது தம்பி திரும்பி வந்திருக்கிறார், எனவே தந்தை கொழுத்த கன்றை அடித்து விருந்து வைக்கிறார்’.

    ஒரு உதவாக்கரைக்கு இத்தனை பெரிய விழாவா? அண்ணனின் மனதில் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. வீட்டுக்குள் நுழையாமல் வெளியே நின்றான்.

    தந்தை வெளியே வந்தார்.

    ‘மகனே உள்ளே வா... உன் தம்பி திரும்பி வந்திருக்கிறான்’.

    ‘உம் சொத்தையெல்லாம் அழித்து விட்டு வந்த மகனுக்காக விருந்தா...? ரொம்ப நல்லது. நீங்கள் விருந்து கொண்டாடுங்கள். நான் உள்ளே வரவில்லை’.

    ‘ஏன் இத்தனை கோபம்?’

    ‘இருக்காதா? நான் இத்தனை காலம் உம்மோடு இருக்கிறேனே. நான் விருந்துண்டு மகிழ எனக்கு ஒரு ஆட்டுக் குட்டியையாவது நீர் தந்ததுண்டா? இதோ கூத்தடித்து வந்த மகனுக்காய் கன்றை அடிக்கிறீர்’.

    ‘மகனே... நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையது எல்லாமே உன்னுடையது தான். நாம் இப்போது மகிழ்வது தான் முறை. ஏனென்றால், உன் தம்பி இறந்து போயிருந்தான், உயிர்த்துவிட்டான். காணாமல் போயிருந்தான், கிடைத்துவிட்டான்’ என்றார்.

    அண்ணனோ வீட்டுக்குள் நுழைய மனம் இல்லாமல் இருந்தான், தம்பியோ வீட்டுக்குள் தந்தையின் அன்பில் இணைந்திருந்தான்.

    விண்ணகத் தந்தையின் அன்பை விட்டு விலகிச் செல்லும் போது, பாவத்தில் விழுகிறோம். அந்த தற்காலிக இன்பங்களே முழுமை என நினைக்கிறோம். அவற்றை விட்டு விலகி மீண்டும் தந்தையின் அன்பில் இணைய விரும்பி வருபவர்களை தந்தை எந்த கேள்வியும் இன்றி அன்புடன் அரவணைக்கிறார்.

    நாம் நம் பாவத்தை விட்டு மனம் திரும்பி இறைவனிடம் வரும் மகனாய் இருக்க வேண்டும். திருந்திய தம்பியை ஏற்றுக் கொள்ள மறுக்கும், மன்னிக்கும் மனமற்ற அண்ணனாய் இருக்கக் கூடாது என்பதே இந்த நிகழ்வு சொல்லும் செய்தியாகும்.
    4 நாட்கள் தொடர் விடுமுறை விஜயதசமி தினம் என்பதால் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு வந்தது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

    தடை உத்தரவு முடிவுக்கு வந்ததால் இன்று அருணாசலேஸ்வரர் கோவில் வழக்கம்போல் திறக்கப்பட்டது.

    4 நாட்கள் தொடர் விடுமுறை விஜயதசமி தினம் என்பதால் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், வள்ளிமலை, ரத்தினகிரி முருகன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் இன்று தரிசனம் செய்தனர்.
    பாலா பக்தர்களின் அன்புச் சிறையிலிருந்து நீங்கா வண்ணம், அனைவரும் அவளுக்குப் போட்ட பூட்டு பாட்டு. ஆம்! பாடல்கள்தான் அவளுக்குப் பிடித்த ஒன்று. அவளைப்பற்றி பாடப்பாட பாடல் பிறக்கும். நல்ல பாதை திறக்கும்.
    காஞ்சிக்கு காமாட்சி, மதுரைக்கு மீனாட்சி, காசிக்கு விசாலாட்சி, அதே போன்று நெமிலிக்கு பாலா! ஆம், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே நெமிலி என்ற அழகான ஊரிலே கடந்த 150 ஆண்டுகளாக அருள் மழை பொழிந்து வருகிறாள் அன்னை பாலா! அன்னை பாலா நெமிலிக்கு வந்த வரலாறு சுவாரஸ்யமானது. சிவம் பெருக்கும் சிலர் நெமிலி டி.கே.சுப்பிரமணிய ஐயர் கனவிலே பத்து வயதுப் பெண் ஒருவள் பச்சைப் பாவாடை உடுத்திக் கொண்டு நான் தான் பாலா! உன் வீட்டுக்கு விக்கிரமாக வருவேன்.

    உன் இல்லத்துக்கு அருகே உள்ள குஸஸ்தலை ஆற்றில் என்னைத்தேடுக! என்று அருள்வாக்கு தந்தாள் இரண்டு நாள் ஆற்றிலே தேடிய போது கிடைக்காமல் அடம்பிடித்த பாலா மூன்றாவது நாள் தேடிய போதுதான் தனது விளையாட்டை நிறுத்திக்கொண்டு விக்கிரமாக சுண்டு விரல் உயரத்திலே அந்த சுந்தரி அவருக்குக் கிடைத்தாள். கடந்த நான்கு தலைமுறைகளாக ஐயரவர்கள் வீட்டுக் கூடத்தையே தனது மண்டபமாக்கி அருளாட்சி புரிந்து வருகிறாள்.

    திருமணம் - திருமகவு - திருமணை - திருக்கல்லி என வந்தவருக் கெல்லாம் அருளை வாரி வழங்கி வருகிறாள். தற்போது பீடத்தை நான்காவது தலைமுறையை சார்ந்த ஸ்ரீபாலா பீடாதிபதி, கவிஞர் நெமிலி எழில்மணி மற்றும் அவரது பிள்ளைகள் பாபாஜி. மோகன்ஜி பராமரித்து வருகின்றனர். கவிஞர் நெமிலி எழில்மணி அவர்கள் தமிழக அரசால் கலைமுதுமணி என்ற விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர்.

    ஸ்ரீபாலாவின் மூல மந்திரம்

    ஐம் - க்லீம் - செள்

    ஸ்ரீ பாலாவின் தியான ஸ்லோகம்

    அருண கிரண ஜாலா- ரஞ்சிதா சாவகாசா

    வித்ருத் ஜப படீகர் - புஸ்தகா பீதி ஹஸ்தா

    இதர கர வராட்யா - புஹ்ல கஹலார சமஸ்தர்

    நிவசது ஹ்ருதி பாலா - நித்ய கல்யாண சீலா

    நெமிலி பாலாவின் - உற்சவ விக்கிரகம் கொள்ளை அழகு - கைகளில் ஜப மாலையும், புத்தகமும் ஏந்திக்கொண்டு அபய வரத முத்திரைகளைக் காட்டி கொண்டிருக்கும் ஸ்ரீபாலாவே சகல வித்யை கட்டும் பிறப்பிடம்.

    நெமிலி பாலா. அந்த இசையினில் வசிப்பவள் பாலா. கடந்த பல வருடங்களாக முதல் நாள் இன்னிசை வழங்கி வந்த டாக்டர் சீர்காழி கோவிந்த ராஜனை தொடர்ந்து அவரது மகன் டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம் முதல் நாள் நவராத்திரி இசை வழங்கி வருகிறார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து இசை வழங்கி சேவை செய்து வந்தார். பின்னணிப் பாடகிகள் பி.சுசிலா, வாணி ஜெயராம், சித்ரா, எஸ்.ஜானகி, நித்யஸ்ரீ மகாதேவன், சுதா ஆகியோரும் பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப் பிரமணியம், கே.வீரமணி, மலேசியா வாசுதேவன், பி.பீ.ஸ்ரீனிவாஸ், மதுதேவா போன்ற பலரும் அன்னையிடம் பாடி அருளைப் பெற்றவர்கள்.

    அன்னை பாலாவின் நவராத்திரியை தவிர ஆடி வெள்ளிப் பெருவிழா, சித்திரைத் திருவிழா, ஐப்பசி பூரத்தன்று பிறந்த நாள் விழா, புத்தாண்டு விழா என பாலாபீடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும்.

    பாலா பீடம் ஒரு சித்தர் பீடம், ஆம் கருவூர் சித்தருக்கு காட்சி தந்த அருட்பீடம். கருவூர் சித்தரின் பூசை விதிமுறை கண்ணிகள், அதாவது செய்யுட்களில் முதல் செய்யுள் என்ன தெரியுமா?

    ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே

    ஆச்சரியம் மெத்தமெத்த அது தான் பாரு

    சோதியந்த நடுவீடு பீடமாகி

    சொகுசு பெற வீற்றிருந்தாள் துரைப்பெண்ணாத்தாள்

    வீதியது ஆறுதெரு அமர்ந்த வீதி

    விளையாடி நின்றதிரு மாளி கண்டாய்

    பாதி மதி சூடியே இருந்த சாமி

    பத்து வயதாகுமிந்த வாமிதானே

    ஓ! இது என்ன ஆச்சர்யம் நெமிலியிலே ஆற்றுக்குப் போகும் சத்திரத் தெருவிலே ஐயரவர்கள் நடுவீடான கூடத்திலே பாலாபீடம் அமைந்துள்ளதே! என்னே கருவூர் சித்தரின் தீர்க்க தரிசனம் என்று வாரியார் ஸ்வாமிகள் வியந்தார். பண்டபுத்ரவதம் செய்தவள் பாலா! பாலா லீலா வினோதனி என லலிதா சகஸ்ரநாமம் கூறுகிறது.

    ஸ்ரீ பாலா பீடக்குறிப்புகள்

    அரக்கோணம் தாலுகா, நெமிலியில் ஸ்ரீ பாலா பீடம் அமைந்துள்ளது. அரக்கோணத்திலி ருந்து 16 கி.மீ தொலைவிலும், சோளிங் கரிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், காஞ்சீபுரத்திலிருந்து 24 கி.மீ தொலைவிலும், காவேரிப் பாக்கத்திலிருந்து 20 கி.மீ தொலை விலும், நெமிலி உள்ளது. பிரதி மாதம் முதல் ஞாயிறு, புத்தாண்டு மற்றும் நவராத்திரி காலங்களில் சிறப்பு வழிபாடு உண்டு.

    அன்னை பாலா

    திருமணம் முடிக்கும் திரிபுர சுந்தரியாகவும்,

    திருமகவு அளிக்கும் திரிபுர சுந்தரியாகவும்,

    திருமனை வழங்கும் திரிபுர சுந்தரியாகவும்,

    திருக்கல்வி தரும் திரிபுர சுந்தரியாகவும்

    அருள் பாலிக்கிறாள்.

    அருள் மிகும் தேவி அன்னை பாலா திரிபுரசுந்தரி சரணம்

    இருள்தனை நீக்கும் தாயே பாலா திரிபுரசுந்தரி சரணம்.

    பாலா பக்தர்களின் அன்புச் சிறையிலிருந்து நீங்கா வண்ணம், அனைவரும் அவளுக்குப் போட்ட பூட்டு பாட்டு. ஆம்! பாடல்கள்தான் அவளுக்குப் பிடித்த ஒன்று. அவளைப்பற்றி பாடப்பாட பாடல் பிறக்கும். நல்ல பாதை திறக்கும்.

    அருள்மிகு தேவி அன்னை பாலா திரிபுரசுந்தரி சரணம்!

    இருள்தனை நீக்கும் தாயே

    பாலா திரிபுரசுந்தரி சரணம்!

    இந்தப் பாடல் பாடாமல் எந்த பூஜையும் நிறைவு பெறாது. பூஜை என்ன, பாலா பீடத்து விழாக்கள் எதுவானாலும் இந்தப்பாடல் பாடாமல் விழா நிறைவுறாது. இந்தப்பாடல் பாலா பக்தர்களுக்குத் தெவிட்டாத தேசிய கீதம்.

    எளிமையான வார்த்தைகள், பாடப்பாட சந்தோஷம் பிறக்கும் எளிமையானப் பாடல்.

    எந்தப் பேனாவும் தானாக எழுதாது. வெளியே இருந்து ஒரு சக்தி இயக்க வேண்டும். அந்தப் பேனாவை பாலா இயக்குகிறாள் என்பதே நிதர்சனமான உண்மை.

    பாலாவை மயக்கப் பாடல் ஒன்றுதான் சரியான வழி என்று பலரும் பரீட்சித்துப் பார்த்து கொண்டனர்.

    அன்னை பாலாவை, அழகு கொஞ்சும் அன்பு பாலாவை தன் பாடல்கள் மூலம், தன்னுடைய எழுத்துக்கள் மூலம், வெளிஉலகிற்கு தெரியச் செய்த பெருமை கவிஞர் நெமிலி எழில்மணியைச் சாரும்.

    மெலிந்த எளிமையான தோற்றம், இயல்பான பேச்சு, சிரித்த முகம் மற்றும் சாதாரண வேட்டி சட்டையுடன் பாலா பீடத்தை வலம் வரும் கவிஞர் நெமிலி எழில்மணி நம்மில் நடமாடும் ஒரு உன்னதமான சித்தர்போல உள்ளார்.

    பாலா அவருக்களித்த உபதேசத்தை இதுவரை அவர் மறுத்ததில்லை. ஏன் எப்படி என்று காரணம் கேட்டதில்லை. அடுத்தவர்களுக்கு அதை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. பாலா சொல்வதைத் திருப்பிச்சொல்லும் ஒரு கிளிப் பிள்ளையாக அவர் உள்ளார். அவரை பாலா தனக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு பல உன்னதமான பாடல்களை எழுத வைத்துள்ளார். அவர் பாலா வித்யா மந்திரைத் துவக்க வைத்தது. பாலாவின் பவுர்ணமி பிரசாதங்களைப் பாலா விஜயம் எனும் பெயரில் எல்லோருக்கும் அனுப்பி வைத்தது. தெய்வ வழிப்பாட்டை மனிதநேய வழிபாடாக மாற்றியவர்.

    பாலா பீடத்தின் அதிபதியாக தனி ஆசனம் தந்தும், தன்னிகரில்லாப் பதவி தந்தும், இன்றளவும் மிகமிக எளிமையாக கர்வம் தரிக்காமல் சாதாரண உடை அணிந்து வருபவர்கள் எல்லாம் பாமரத் தமிழில் பாலாவின் பெருமைகளை எடுத்துச்சொல்லி பாலா பீடத்தில் தினந்தோறும் சேவை செய்துவருகிறார். ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்கள் பயன்பெற தெலுங்கிலும் பேசி விளக்குகிறார். பாலாவை தரிசிக்க வருபவரை உபசரிக்கும் உயர்ந்த பண்புகளை பாலா அவருக்கு உபரியாக கொடுத் திருக்கிறாள். மிகமிக விசேஷமான மனிதர்கள் மிகமிக எளிமையோடு காட்சி தருவார்கள். அவர்கள்தான் உண்மையான ஞானிகள்.

    எழில்மணி அவர்கள் எழுதிய பாலா சுப்ரபாதம், கவசம் மற்றும் அருள்மிகு தேவி பாடல்களைப் பாட முன்னேற்றம் வரும்.

    கவிஞர் நெமிலிஎழில்மணி, நெமிலி ஸ்ரீ பாலா பீடாதிபதி
    இந்த நாளில் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ’ என்று எழுத கற்றுக் கொடுப்பது ‘வித்யாரம்பம்’ எனப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் கல்வி வளம் பெருகும் என்பது ஐதீகம்.
    மகிஷன் என்னும் அசுரன், பிரம்மதேவரை நோக்கி தவம் இருந்தான். அவன் முன் தோன்றிய பிரம்மனிடம், ‘அழிவில்லாத வரம் வேண்டும்’ என்று கேட்டான். ஆனால் அதைத் தர முடியாது என்று பிரம்மன் மறுத்ததால், ‘பெண்களால் மட்டுமே அழிவு வர வேண்டும்’ என்று வரம் கேட்டான். அந்த வரத்தை அவனுக்கு அளித்தார், பிரம்மன்.

    பெண் மென்மையானவர்கள். அவர்களால் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற எண்ணத்தில், அப்படி ஒரு வரத்தை மகிஷன் கேட்டுப் பெற்றிருந்தான். அந்த வரத்தின் ஆணவத்தால், முனிவர்களையும், தேவர்களையும் துன்புறுத்தினான். இதனால் அவர்கள் அனைவரும் பராசக்தியை வேண்டினர். பெண்ணால்தான் மகிஷனுக்கு மரணம் என்பதால், தேவர்கள் அனைவரும் தங்களை காத்தருளும்படி பாராசக்தியை துதித்தனர். இதையடுத்து மகிஷனுடன் போரிட ஆயத்தமானாள், பராசக்தி.

    அவளுக்கு, சிவபெருமான் சூலத்தை வழங்கினார். விஷ்ணு பகவான் சக்கரத்தை கொடுத்தார். அக்னி தனது சக்தியையும், வாயு வில்லாயுதத்தையும் வழங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதத்தை வழங்கினர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள். மகிஷனுடனான போர் 9 நாட்கள் தொடர்ந்தது. 10-ம் நாளில் அவனை அழித்தார், பராசக்தி. இந்த நாளே ‘விஜயதசமி’ என்று கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களுக்கு பின்வரும் நாளை ‘விஜயதசமி’ என்ற பெயரில் கொண்டாடுகிறோம். இது வெற்றியைத் தரும் நாளாக கருதப்படுகிறது. எனவே எந்த ஒரு காரியத்தையும் இந்த நாளில் தொடங்கினால், அது வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கை. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி என புதியதாக ஒன்றை கற்றுக்கொள்வதற்கும், தொழில் தொடங்குவதற்கும் இந்த தினம் ஏற்றதாக இருப்பதாக நம்பிக்கை.

    இந்த நாளில் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ’ என்று எழுத கற்றுக் கொடுப்பது ‘வித்யாரம்பம்’ எனப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் கல்வி வளம் பெருகும் என்பது ஐதீகம்.
    நவராத்திரியின் 9 நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி 10-ம் நாளான தசமி அன்று அன்னை விஜயம் செய்யும் நாளே விஜயதசமி என்றும் கூறப்படுகிறது.
    சிவனை வழிபடத்தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத்தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரதமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோவிலுக்கு ஒரு ‘பிரம்மோற்சவம்‘ என்றும் போற்றப்படுகிறது.

    இந்த நவராத்திரி நாட்களில் வீடுகளில் கொலு வைத்து நிவேதனம் படைத்து வழிபாடு செய்வார்கள். இதில் அக்கம், பக்கத்து வீடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொள்வார்கள். அதே போல் அம்மன் கோவில்களிலும் நவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகளும், கொலு பூஜைகளும் நடைபெறும்.

    தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் வெற்றி, வாகை, வருகை என்று பல பொருட்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற 3 சக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மகாசக்தியாக தோன்றி மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை, சண்ட முன்டனை வதம் செய்த நன்னாள்தான் விஜயதசமி. விஜயதசமி என்றாலே வெற்றி திருநாள் ஆகும். அசுரனை அழித்த அன்னையின் வெற்றியே அது. அந்த திருநாளில் நாம் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

    அன்று அன்னையை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும். நவராத்திரியின் 9 நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி 10-ம் நாளான தசமி அன்று அன்னை விஜயம் செய்யும் நாளே விஜயதசமி என்றும் கூறப்படுகிறது. இந்த நாளில் புதிதாக தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை தொடங்கினால் வெற்றி நிச்சயம். இதனாலேயே இன்று பலரும் புதிய தொழில்களை தொடங்குகிறார்கள்.
    செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் இருக்கிறது என்றவுடன் யாரும் அலறித் துடிக்க வேண்டியது இல்லை. முறையான வழிபாடுகள், பிரார்த்தனைகள் மூலம் திருமண பந்தத்தை கோணலாகிப் போகாமல் காப்பாற்றிக் கொள்ளலாம்.
    செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு மண வாழ்க்கை தள்ளிப் போகும். இதனால் அவர்கள் படும் அவஸ்தைகள் அதிகம். மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் தோஷம் கிடையாது.

    செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய பல்வேறு பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களில் உங்களுக்கு எந்த பரிகாரம் செய்ய ஒத்து வருகின்றதோ அதை தேர்ந்தெடுத்து செய்யவும், வழக்கத்திற்கும் கொண்டு வரவும்.

    எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் சஷ்டி நாள், கிருத்திகை நாள், செவ்வாய்க்கிழமை இந்நாட்களில் பக்கத்தில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வரவும்.

    இதுவும் முடியவில்லை என்றால் செவ்வாய் அன்று காயத்ரி மந்திரத்தை நன்றாக படித்து மனதில் சொல்லிக் கொண்டு தியானத்தில் ஈடுபடவும். இவ்வாறு செய்து வர செவ்வாய் நிச்சயம் கருணை காட்டுவார்.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    குலசேகரன்பட்டினம் :

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றார்.

    தசரா திருவிழாவையொட்டி, ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருந்து காப்புக்கட்டி பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்கள், அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்து வருகின்றனர். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு ஊர்களிலும் தசரா குழுவினர் வீதி, வீதியாக சென்று கலைநிகழ்ச்சி நடத்தி, காணிக்கை வசூலித்து வருவதால், தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

    தசரா திருவிழாவின் 8-ம் நாளில் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி, கோவில் உள்காரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    9-ம் திருநாளான நேற்று (வியாழக்கிழமை) இரவு 8.30 மணியளவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார்.

    இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    முத்தாரம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபோது எடுத்த படம்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான இன்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கோவில் முன்பாக பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு இன்று இரவு 9.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் கோவில் முன்பாக அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்கிறார்.

    11-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) அதிகாலையில் சூரசம்ஹாரத்துக்கு பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 5 மணியளவில் அம்மன் கோவிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் நடைபெறும். தொடர்ந்து அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களில் பக்தர்கள் காப்பு களையுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    12-ம் திருநாளான வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணிக்கு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்று முதல் 12-ம் திருநாள் வரையிலும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ஸ்ரீபாலாஜி எனக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம் தான். அதிலும், சனிக்கிழமை தான் தனக்கு உகந்த நாள் என்கிறார். தம் பக்தன் ஒருவனுக்கு அருள் புரிந்த கதையின் மூலமாக அந்த கதை வருமாறு:--
    புரட்டாசி மாதம் என்றாலே கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி பாடல் பரவச ஒலி தான் பெருமாள் பக்தர்களின் வீடெங்கிலும் தேவகானமாக பரவும். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் ஆடை உடுத்தி, திருநாமம் தரித்துக்கொண்டு பெருமாளை மனதிலே நினைத்து வழிபடுவார்கள். சிலர் தான் நினைக்கும் காரியம் நல்லபடியாக நிறைவேறி விட்டால் திருப்பதிக்கு வருகிறேன் என்றும், இன்னும் சிலர் திருப்பதிக்கு வந்து மொட்டை போடுகிறேன் என்றும் அவர்களால் இயன்ற வேண்டுதல்களை நினைத்து காசை மஞ்சள் துணியில் முடிந்து வைப்பர்.

    சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். புரட்டாசி மாதத்தில் தான் திருவேங்கடமுடையானுக்கு பிரமோற்சவமும் நடைபெறுகிறது. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில். ஆனால் ஸ்ரீபாலாஜியோ, எனக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம் தான். அதிலும், சனிக்கிழமை தான் தனக்கு உகந்த நாள் என்கிறார். தம் பக்தன் ஒருவனுக்கு அருள் புரிந்த கதையின் மூலமாக அந்த கதை வருமாறு:--

    மன்னன் தொண்டைமானுக்கு மலையப்பன் மீது மாசிலா காதல். எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன் மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான்.

    இவ்விதம் பூஜை செய்து வரும் வேளையில் ஒரு நாள் பொன்மலர்களுக்கு இடையே மண் மலர்களும் வந்து விழுவதை கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண் மலர்கள் தானா என கூர்ந்து நோக்கினான். அவை மண் மலர்களால் தான் என்பதை மீண்டும், மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன.

    கதவுகள் அனைத்தும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையை தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது. மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான். குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.
    பிறவிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் கடவுள் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும், அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார். பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம்.

    பீமய்யாவும், தனக்கு கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் மாலவனின் உருவத்தை வடித்து மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். பிரதி வாரம் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யா, பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான்.

    இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும்போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயங்களில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களிமண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான். காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகிவிட்டது.

    இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒரு நாள் அபூர்வ கனவொன்றை கண்டான். அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, தமது பக்தன் பீமய்யா செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்த பூஜையை நீயும் சென்று பார், அப்போது உண்மை விளங்கும் என்று கூறி மறைந்தார்.
    தொண்டை மானும், திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யா செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனிக்கலானான். அனுதினமும் செய்வது போலவே பீமய்யா தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலையருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களை தூவி இறைவனை வழிபடுவதை கண்டான் தொண்டை மன்னன்.

    உடன் பீமய்யாவை சென்று கட்டித்தழுவிய தொண்டைமான் அவனிடம் உன் பக்தி உயர்வான பக்தி, உனது வழிபாட்டை திருமால் ஏற்றுக்கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றான். இதற்கிடையில் அந்த பரந்தாமன் பீமய்யாவின் கனவில் தோன்றி உன் பக்தியின் பெருமையை என்று பிறர் கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்து கொள்வேன் என கூறியிருந்தார்.

    அதன்படியே தொண்டை மான், பீமய்யாவின் பக்தியை பாராட்டியதை கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது. புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது.

    பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண் சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.
    வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதமாக அவற்றையும் இறைபொருளாக பாவித்து வணங்குவதே ஆயுத பூஜை. எனவே ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடுவோம்.
    ஆயுதபூஜை திருநாளில் உயிர்பொருட்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் நிறைந் திருக்கிறது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதமாக அவற்றையும் இறைபொருளாக பாவித்து வணங்குவதே ஆயுத பூஜை. இந்த நாளில் சிறிய கரண்டி முதல் தொழில் எந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.

    தேவைப்பட்டால் அவற்றுக்கு வண்ணமும் தீட்டலாம். மலர் மாலைகள் கொண்டு நம் தொழிலுக்கு உதவும் எந்திரங்களையும் அலங்கரிக்கலாம். பின்னர் சாமி படங்களை பூஜை செய்யும் இடத்தில் வரிசையாக வைத்து மலர் மாலைகள் போட வேண்டும். விநாயகரை பூஜையில் வைத்த பின்னரே ஆயுதபூஜையை தொடங்க வேண்டும்.

    எந்திரங்கள் மற்றும் சாமி படங்கள் முன்பு வாழை இலையை வைத்து அதில் பொரி, கடலை, அவல், நாட்டுச்சர்க்கரை, பலவகையான பழங்களை வைத்து வழிபடலாம். பிறகு எந்திரங் களுக்கு பொட்டு வைத்து தேங்காய் உடைத்து பூஜை செய்தபின் அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்கு பயன் படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பு ஆகும்.

    மேலும், ஆயுத பூஜையன்று தினம் நம்மை சுமந்து செல்லும் வாகனங்களையும் சுத்தப்படுத்தி மலர்மாலை அணிவித்து பொட்டிட்டு மரியாதை செலுத்தி வருகிறோம். எனவே ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடுவோம்.
    ராகு, கேதுவால் ஜாதகத்தில் உள்ள காலசர்ப்ப தோஷம், நாகதோஷம், மாங்கல்ய தோஷம், தாரதோஷம் போன்ற பலசர்ப்ப சாப தோஷங்கள் யாவும் புரட்டாசி மாதம் கருடவழிபாடு செய்வதால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடும்.
    1. புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.

    2. ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.

    3. புரட்டாசி மாதத்தில் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும். திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன.

    4. திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் புரட்டாசி மாதம் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.

    5. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

    6 . புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

    7.விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

    8. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்க வேண்டும்.

    9. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம்.

    10. காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.

    11. புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும்.

    12.புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். ஜேஷ்டா விரதம், மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.

    13. புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளில் சிலர் திருப்பதிக்குச் சென்று தமது காணிக்கையைச் செலுத்தி வர வேண்டும்.

    14. ராகு, கேதுவால் ஜாதகத்தில் உள்ள காலசர்ப்ப தோஷம், நாகதோஷம், மாங்கல்ய தோஷம், தாரதோஷம் போன்ற பலசர்ப்ப சாப தோஷங்கள் யாவும் புரட்டாசி மாதம் கருடவழிபாடு செய்வதால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடும்.

    15. சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினான்என்பது புராணம். இதனால் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு விசேஷமானது.

    16. புரட்டாசிக்கு இருக்கும் முக்கியத்துவம், அது பித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக்களை வழிபடும் மஹாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது.

    17.பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

    18. புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.

    19. புரட்டாசி மாதத்தில் ஒருநாள்கூட மனிதன் உபயோகப்படுத்த முடியாமல் அல்லது உபயோகப்படுத்தக்கூடாத நாளாக இருந்து விரதத்திற்காக மட்டும் அமைந்திருக்கிறது.

    20. புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு “தளியல்” போடுவது வழக்கம்.முடியாதவர்கள் 1வது,5வது சனிக்கிழமையில் போடுவார்கள்.பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.

    ×