என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    அனுமன் ஜெயந்தி நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் வீற்றிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். துன்பம் விலகும்.
    ராமாயணத்தின் கதாநாயகனாக விளங்கும் ராமபிரானின் முதன்மை பக்தனாக விளங்கியவர், அனுமன். ராமரின் மேல் கொண்ட பக்தியே, அனுமனையும் வழிபாட்டுக்குரிய தெய்வமாக மாற்றி அமைத்திருக்கிறது. மார்கழி அமாவாசை தினமும், மூல நட்சத்திரமும் இணைந்த நாளில் அவதரித்தவர், அனுமன். அந்த நாளை, ஒவ்வொரு ஆண்டும் ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் ஆஞ்சநேயர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

    ராமாயணத்தில் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர் அனுமன் என்று புராணங்கள் சொல்கின்றன. ராமரின் சிறந்த பக்தனும் ஆவார். எனவே அனுமனை வழிபடுபவர்களுக்கு, சிவபெருமான் மற்றும் பெருமாள் ஆகிய இருவரின் ஆசிகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். ராமபிரான், ராவணனுடனான யுதத்தத்தில் வெற்றிகாண்பதற்கு, பக்கபலமாக இருந்தவர் அனுமன். ராவணனின் இருப்பிடத்தில் சீதை இருப்பதை, அனுமன் தான் அங்குசென்று உறுதிப்படுத்தி வந்தார். ராவணப் படைக்கு எதிராக போரிட, ராமபிரானின் பக்கத்தில் சுக்ரீவனின் வானரப் படைகளை இணைக்க பாலமாக இருந்தார். ராவணனின் மகன் மேகநாதன் எய்த அம்பால் மூச்சையாகிப் போன லட்சுமணனை காப்பாற்ற, சஞ்சவீ மலையில் உள்ள மூலிகைகள் தேவைப்பட்டபோது, உரிய நேரத்தில் சென்று அந்த மலையையே பெயர்த்து எடுத்து வந்தவர் அனுமன்.

    இப்படி ராமபிரானுக்கு பல வகையில் பலமாக அமைந்தவர், அனுமன். அவருடைய ஜெயந்தி நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் வீற்றிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும். ஆஞ்சநேயரை அவருடைய நாமத்தைச் சொல்லி வணங்குவதை விட, ராமபிரானின் நாமத்தைச் சொல்லி வணங்குவதே அதிக பலனைத் தரும். அந்த அளவுக்கு அவர், ராமபிரானின் மீது பக்தி செலுத்தியவர். ராமநாமம் உச்சரிப்பதோடு, வடை மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் சாத்தியும் வழிபடலாம்.

    அனுமன் ஜெயந்தி அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, ராம நாமம் சொல்லி அனுமனை வணங்க வேண்டும். அன்றைய தினம் உணவருந்தாமல், அருகில் இருக்கும் ராமர், அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்கு துளசி மாலை மற்றும் வெற்றிலை மாலை சாத்தி வழிபாடு செய்யலாம். வீட்டில் இருக்கும் அனுமனின் படத்தில், அவருடைய வாலுக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து வணங்குங்கள். ஏனெனில் அனுமனுக்கு அவரது வாலில் தான் சக்தி அதிகம்.

    மேலும் பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். முழு நேரமும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவில் ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும். மறுநாள் காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    * பெங்களூருவில் உள்ள மகாலட்சுமிபுரம் என்ற இடத்தில், பிரசன்ன வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள சிறுகுன்றின் மீது கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் ஆஞ்சநேயர், 22 அடி உயரம் கொண்டவர். இவருக்கு எதிரே உள்ள கொடிமரம் கல்லால் ஆனது. இத்தல ஆஞ்சநேயர் வலது கரத்தில் சஞ்சவீ மலையை தாங்கியபடியும், இடது கையில் கதாயுதத்தை வைத்தபடியும் காட்சி தருகிறார். இந்தக் கோவிலை வலம் வரும்போது, அஷ்ட லட்சுமிகளையும், அஷ்ட விநாயகர்களையும் தரிசிக்கலாம்.

    * மதுரையில் இருந்து உசிலம்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஆனையூரில் ஐராவதீஸ்வரர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயரின் தாயார் அஞ்சனாதேவிக்கு தனிச் சன்னிதி உள்ளது. அஞ்சனாதேவியின் வலதுபுறம் குழந்தை வடிவில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

    * திவ்ய தேசங்கள் 108-ல், முதன்மையானதாக வைத்து எண்ணப்படும் சிறப்பைப் பெற்றது, திருவரங்கம் அரங்கநாதர் கோவில். இந்தக் கோவிலின் வெளிப்புறம் ‘பக்த ஆஞ்சநேயர்’ என்ற பெயருடன், விஸ்வரூப வடிவத்தில் அனுமன் காட்சி தருகிறார்.
    கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று நேரடியாக வழங்கப்பட இருந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி 10-ந்தேதி வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி விசே‌ஷ பூஜைகள் பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக விசே‌ஷ பூஜைகள், கூடுதலாக பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது ரத்து செய்யப்பட்டன.

    வழக்கம்போல் ஏழுமலையானுக்கு அதிகாலை 4 மணிக்கு நடைபெறும் திருப்பாவை, தோமாலை உள்ளிட்ட சேவைகள் நடைபெறுகிறது.

    இதையடுத்து வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். காலை 9 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கம்போல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஜனவரி மாதத்திற்கான ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

    இதேபோல் கடந்த 27-ந்தேதி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஜனவரி 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையில் உள்ளூர் முகவரி கொண்ட ஆதார் அட்டை உள்ள பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இன்று காலை திருப்பதி பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம், அலிபிரி உட்பட 5 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுக்கள் வழங்கப்பட இருந்தது.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று நேரடியாக வழங்கப்பட இருந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி 10-ந்தேதி வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் உள்ளூர் பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற வந்திருந்தனர்.

    டிக்கெட்டுகள் 10-ந்தேதி வழங்கப்படும் என தேவஸ்தான ஊழியர்கள் கூறியதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    திருப்பதியில் நேற்று 31,967 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 11,233 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    துளசி மாலையுடன் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.புகழ் கூடும், செல்வம் பெருகும், பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் சனி கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

    தேவர்களும், அசுரர்களும் ஒன்று கூடி பாற்கடலை கடைந்து அதில் இருந்து அமிர்தத்தை பெற முயன்றனர். அப்போது பாற்கடலில் இருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் தோன்றினர்.

    மகா விஷ்ணுவின் ஆனந்த கண்ணீர் பெருகி அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அந்த கலசத்தில் இருந்து பச்சை நிறத்துடன் துளசி மகாதேவி தோன்றினார். துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகா விஷ்ணு வைத்துக்கொண்டு மற்றவற்றை தேவர்களுக்கு வழங்கி விட்டார்.

    துளசியில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் வசிக்கின்றனர்.இலையின் நுனியில் பிரம்மன், நத்தியில் மாயோன்மற்றும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரி, பார்வதி ஆகியோர் வசிக்கின்றனர். துளசியை நினைத்தால் பாவம் போகும்.

    துளசி மாலை சாத்தி விஷ்ணுவை வழிபட்டால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும் என்பது ஐதீகம். இதன்படி விஷ்ணுவின் திருநாமத்தில் ஊறித்திளைக்கும் ஆஞ்சநேயருக்கும் பக்தர்கள் துளசி மாலை சாத்தி வழிபடுவது பிரதானமாக உள்ளது. துளசி மாலையுடன் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.புகழ் கூடும், செல்வம் பெருகும், பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். துளசி தீர்த்தத்தை அருந்தினால் பரமபதம் செல்வார்கள் என்றும் ஒரு கருத்து உள்ளது.
    பக்தர்கள் 365 படிகளுக்கும் மஞ்சள், குங்குமம், வைத்து மலர் தூவி வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் செய்துஇருந்தனர்.
    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் டிச., 31-ம் தேதி திருப்படித் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளன இந்த படிக்கட்டுகள் ஒரு வருடத்திற்கான நாட்களை குறிப்பதால் ஆங்கில புத்தாண்டு வழிபாடு இங்கு விமரிசையாக நடந்து வருகிறது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். படிகளில் மஞ்சள், குங்குமம் பூசி கற்பூரம் ஏற்றி வழிபடுவர்.

    அதன்படி இன்று திருத்தணி கோவிலில் படித்திருவிழா நடைபெற்றது. காலை 8.30 மணி அளவில் திருத்தணி மலைக்கோவில் அடிவாரத்தில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், தி.மு.க. திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் எம்.பூபதி, திருத்தணி நகர செயலாளர் வினோத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு படித்து விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் 50-க்கும் மேற்பட்ட பஜனை குழுவினர், ஒவ்வொரு திருபடிகள் வழியாக தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடல்களை பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் ஏராளமானோர் குவிந்து இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு படிகளுக்கும் மஞ்சள், குங்குமம், வைத்து மலர் தூவி வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் செய்துஇருந்தனர்.

    இன்று புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெற உள்ளது. பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறையுடன் தரிசனத்துக்கு வருவது கோரிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.
    சுபஸ்ரீ பிலவ வருடம் மார்கழி மாதம் 17-ந் தேதி (1.1.2022) சனிக்கிழமை, சதுர்த்தசி திதி, கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசியில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கின்றது.
    ஆண்டின் தொடக்கத்தில் குரு பார்வையால் புனிதமடையும் ராசிகளான மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கும், எண்கணித அடிப்படையில் ஆண்டின் கூட்டுத் தொகை 6 மற்றும் 8 எண் ஆதிக்கத்தில் வருவதால், 6, 15, 24, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும், விருச்சிக ராசியில் புத்தாண்டு பிறப்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கும், சனிக்கிழமை பிறப்பதால் சனி மற்றும் புதன் கிழமையில் பிறந்தவர்களுக்கும் இந்த ஆண்டு யோகம் தரும் ஆண்டாகும். அவர்களுக்கு தொட்டது துலங்கும். தொழில் வளம் மேலோங்கும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

    மற்ற ராசி நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், மற்ற எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களும் தங்கள் சுய ஜாதகத்தின் அடிப்படையில் பாக்கிய ஸ்தானத்தின் பலமறிந்து, அதற்குரிய தெய்வ வழிபாடுகளை தேர்ந்தெடுத்து, யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் வெற்றிப் பாதைக்கு வழி கிடைக்கும்.

    புத்தாண்டின் பொதுப்பலன்

    * புத்தாண்டில் சுக்ர பலம் நன்றாக இருப்பதால் மழை வளம் அதிகரிக்கும். மழைநீர் வீடுகளில் புகுந்து மக்களை அச்சுறுத்தலாம்.

    * மளிகை சாமான், காய்கறிகள், வாகன உதிரி பாகங்கள், கட்டுமானப் பணிக்குரிய பொருட்கள் போன்றவற்றின் விலை படிப்படியாக உயரலாம்.

    * வரிச்சுமை கூடும். தங்கம், வெள்ளி விலை குறைவதுபோல் தோன்றி, மேலும் உயர்ந்து மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். சொத்துக்களின் விலையும் உயரும். சொகுசு வாகனங்கள் மின்சாரத்தின் மூலம் இயங்கும் வாகனங்களாக மாறி, விரைவில் விற்பனைக்கு வரலாம்.

    * பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றின் விலை ஓரளவு குறையலாம். செவ்வாய் - சனி பார்வை காலங்களிலும், சேர்க்கைக் காலங்களிலும் இயற்கை சீற்றங்கள், நோய் தாக்கங்கள் ஏற்படலாம். மக்கள் மிகமிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    * அரசாங்கமும், நீதிமன்றங்களும் புதுப்புது சட்டங்களை உருவாக்கும். பல பிரபலங்கள் வழக்குகளில் சிக்குவதும், விடுபடுவதும் வாடிக்கையாகும். அரசியல் களத்தில் உட்பூசல் அதிகரிக்கும்.

    சுபஸ்ரீ பிலவ வருடம் மார்கழி மாதம் 17-ந் தேதி (1.1.2022) சனிக்கிழமை, சதுர்த்தசி திதி, கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசியில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கின்றது. நவக்கிரகங்களில் ‘தைரியகாரகன்’ என்று அழைக்கப்படும் செவ்வாயும், ‘ஆயுள்காரகன்’ என்று அழைக்கப்படும் சனியும் சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார்கள். புத -சுக்ர யோகத்தோடும், சந்திர- மங்கள யோகத்தோடும் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. அதே நேரத்தில் சர்ப்ப கிரகத்தின் ஆதிக்கமும் கூடியிருக்கிறது. எனவே பிறக்கும் புத்தாண்டில் மக்கள் அனைவரும் நோய்தொற்று அகன்று ஆரோக்கியத்துடனும், அமைதியுடனும் வாழ்க்கை நடத்தவும், தடைகற்கள் எல்லாம் விலகி தன்னிகரற்ற வாழ்வு அமையவும், ஆண்டின் தொடக்க நாளில் தும்பிக்கையானை நம்பிக்கையோடு வழிபடுவோம்.

    தமிழ் புத்தாண்டு தொடங்குவதைக் கொண்டாடுவதைப் போல ஆங்கிலப் புத்தாண்டையும் கொண்டாடுவதை மக்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். கிரகங்களின் சுழற்சியின் மூலமே மனித வாழ்க்கையின் வளர்ச்சியில் மாபெரும் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை மக்கள் அனைவரும் புரிந்து கொண்டனர். அதனால் தான் மாபெரும் கிரகங்களின் மாற்றங்கள் நிகழும் போதெல்லாம் அதைக் கொண்டாடி, அதற்குரிய தெய்வத்தை வழிபடுகிறார்கள்.

    ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் பொழுதும், ‘இந்தப் புத்தாண்டு நமக்கு எப்படி இருக்கும்?, பொருள் வரவை பெருக்குமா?, புதிய பாதை காட்டுமா?’ என்று அனைவருமே சிந்திப்பது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘உலகமெங்கும் பரவியுள்ள நோய்த் தொற்று அகலுமா? ஆரோக்கியமாக வாழ முடியுமா? இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிக்க இயலுமா?’ என்றெல்லாம் சிந்திக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கெல்லாம் விடைகூறும் விதத்தில் 12 ராசிகளுக்குரிய பலன்களும், போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறுவதற்கான வழிபாடுகளையும் கணித்து இதில் பலன்கள் எழுதப்பட்டுள்ளது.

    புத்தாண்டின் கூட்டுத் தொகை (2022 என்பது 2+0+2+2=6) சுக்ரனுக்குரிய எண் ஆதிக்கத்தில் வருகின்றது. தேதி, மாதத்துடன் கூட்டும்பொழுது வருடப்பிறப்பு நாள் (1+1+2+0+2+2=8) சனி ஆதிக்கத்தில் வருகிறது. வருடத் தொடக்கத்தில் சனியோடு சுக்ரனும், புதனும் இணைந்திருக்கின்றனர். புதனும், சுக்ரனும் சனிக்கு நட்பு கிரகம் என்பதால், இந்த ஆண்டில் சனி கிரகத்திற்குரிய விநாயகப்பெருமான், அனுமன், சனி பகவான், சுக்ரனுக்குரிய சிவன், அம்பிகை, புதனுக்குரிய விஷ்ணு, சொந்த வீட்டில் சஞ்சரிக்கின்ற செவ்வாய்க்குரிய முருகப்பெருமான், கும்ப குருவின் பலம்பெற குரு பகவான், ரிஷபத்தில் ராகு இருப்பதால் நந்தியம்பெருமான், சுக்ரன் ஆதிக்கத்தில் ஆண்டு பிறப்பதால் சரஸ்வதி, லட்சுமி ஆகியோரை முறையாக வழிபட்டால் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்லலாம்.

    கீர்த்தி தரும் கிரக சஞ்சாரம்

    இப்புத்தாண்டில் 21.3.2022 அன்று ராகு, கேதுக்களின் பெயர்ச்சி நிகழவிருக்கிறது. மேஷ ராசியில் ராகு பகவானும், துலாம் ராசியில் கேது பகவானும் சஞ்சரிப்பார்கள்.

    13.4.2022 அன்று, மீன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிச் செல்கிறார். ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதால் இந்தப் பெயர்ச்சியின் விளைவாக கோடி நன்மை பெறும் ராசிகள் கடகம், கன்னி, விருச்சிகம்.

    இந்த ஆண்டு மிதுன ராசிக்கு அஷ்டமத்துச் சனியும், கடக ராசிக்கு கண்டகச் சனியும், துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், தனுசு ராசிக்கு பாதச் சனியும், மகர ராசிக்கு ஜென்மச் சனியும், கும்ப ராசிக்கு விரயச்சனியும் நடைபெறுவதால், மேற்கண்ட ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்படுங்கள். அருளாளர்களின் ஆலோசனைகளும், அனுபவஸ்தர்களின் அறிவுரைகளும் துன்பத்தை நீக்கி, இன்பத்தை இல்லம் கொண்டு வந்து சேர்க்கும். குரு மற்றும் சனியின் வக்ர காலத்திலும், சனி -செவ்வாய் பார்வை மற்றும் சேர்க்கைக் காலத்திலும் இயற்கை சீற்றங்களில் இருந்து விடுபடவும், நோயின் தாக்கங்கள் அகலவும், அமைதியும், ஆனந்தமும் அனைவர் வாழ்விலும் குடிகொள்ளவும் இறை வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

    சுபம்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, வேம்பார் உள்ளிட்ட அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் சுமார் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்கண்ட அனைத்து இடங்களிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி நடத்தவும், அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு நலச்சங்கங்கள் போன்ற இடங்களில் வசிப்பவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒன்று கூடி நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, வேம்பார் உள்ளிட்ட அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதி உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசம், சமூகஇடைவெளியை கடைப்பிடிப்பதை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள், அலுவலர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட களக்காடு தலையணையில் நாளை (1-ந் தேதி) சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடைவிதித்துள்ளது.

    இதனால் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல நாளை ஒரு நாள் மட்டும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளிலும் குளிக்கவும், அங்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் உள்ள மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் இன்று யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    இதனால் குற்றாலம் அருவிகளில் குளிக்க வந்த குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
    பண்டிகை நாட்களில் வரும் பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாமல் வரும் பக்தர்களை கோவில் நிர்வாகம் அனுமதிக்க கூடாது.
    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் பண்டிகை நாட்களில் அதிக அளவிலான பக்தர்கள் கூட்டம் கூடுவது தொடர்பாக கொரோனா தொற்று பரவலை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    கொரோனா தொற்று பரவலை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    பண்டிகை நாட்களில் வரும் பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாமல் வரும் பக்தர்களை கோவில் நிர்வாகம் அனுமதிக்க கூடாது.

    பண்டிகை நாட்களில் கோவில் வளாகத்தில் ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பண்டிகை நாட்களில் வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு கோவில் நிர்வாகத்தின் மூலம் தனி குழு அமைக்க வேண்டும்.

    கோவிலில் பணியாற்றி வரும் ஊழியர்கள், தொண்டர்கள் மற்றும் சங்கத்தினர் அனைவரும் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியுள்ளதை உறுதி செய்து, தடுப்பூசி சான்றிதழ்களுடன் கூடிய அறிக்கையினை மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    கோவிலுக்கு பணியாற்ற வரும் தொண்டர்கள் மற்றும் சங்கத்தினர் எண்ணிக்கையினை 50 சதவீதமாக குறைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    கோவிலின் உள்ளே உள்ள அனைத்து கடைகளையும் பண்டிகை நாட்களில் மூடுவதை உறுதி செய்ய வேண்டும். இதர கடைகள் காலை 4 மணி முதல் 10 மணி வரை மூடுவதை உறுதி செய்ய வேண்டும்.
    திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோவிலாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
    சிவனின் பெயர் : மகாபலேஸ்வரர்,
    பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்
    அம்மனின் பெயர் : கவுரி
    தல விருட்சம் : வன்னி மரம்

    கோவில் சிறப்பு :

    திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

    வரலாற்றுச் சுருக்கம்

    கேது வழிபட்ட தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்[மேற்கோள் தேவை]. இக்கோயில் மாதோட்டம் நகரில் அமைந்துள்ளது. சூரபதுமனின் மனையாளின் பேரனார் துவட்டா துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார். பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். துவட்டாவில் உருவாகியமையால் துவட்டாவெனவும் காலப் போக்கில் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டாவெனவும் வழங்கிவந்தது.

    இத்தலதிலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்கு புண்ணியம் கிட்டுமெனவும், இத்தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் ஐதீகம்.

    இந்நாட்டுப் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலம் இதுவாகும்.

    கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமிதுவாகும். அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத்திருத்தலம் சுட்டப்பட்டிருக்கிறது.

    இத்திருத்தலத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்களிருந்தமையை அகழ்வாய்வுத் தரவுகள் மூலமறிய முடிகின்றது. அன்றியும் இத்திருவிடம் உலகப் புகழ்பெற்ற பெருநகரமாகவும் பல்துறைத் தொழில் வல்லவர்கள் வாழ்ந்த நகரமாகவும் சிற்பம் கலை நுணுக்கம் நிறைந்த ஆற்றல் மிக்க கலைஞர்களைக் கொண்டு திகழ்ந்த அழகு நகரமாகவும் மிளிர்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்[மேற்கோள் தேவை].

    திருக்கேதீச்சரத் திருதலத்திற்கணித்தாய் வங்காலை என்னும் நகரமிருந்தமையும், பண்டங்கள் ஏற்றியிறக்கும் துறைமுகமாகவும வங்கமெனும் பெருங்கப்பல்கள் கட்டுமிடமாகவுமிருந்துள்ளமையயும், வேறு மாளிகைத் திடல் என்னும் பாப்பாமோட்டையென்றும் இன்றும் அழைக்கப்படும் ஊர்கள் இருப்பதையும் காணலாம். அந்தணர்கள் வாழ்விடமாய் இருந்தமையால் அது பாப்பாமோட்டையெனவும் மாடமாளிகைகள் மிளிர்ந்தமையால் மாளிகைத் திடலெனவும் அமைந்திருந்தன

    ஆர்வலர் ஒருவர் பகைவரால் கவரப்படாதிருத்தற் பொருட்டு கலிங்கத்தேயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த தந்தத்துடன் மாதோட்டத்தின் கண்ணிறங்கி அன்று இரவினை அங்கேயே கழித்ததாகவும் வரலாறுண்டு.

    பத்தாம், பதிரோராம் நூற்றாண்டில் இக் கோயில் சோழமன்னர்களால் இராசராசேஸ்வர மாகாதேவன் கோயிலென அழைக்கப் பட்டது.[2]

    வரலாற்று ரீதியாக இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள்.

    ராகு, கேது தோஷம் நீங்கவும், சகல ஐஸ்வர்யங்களும் பெற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

    கோவில் திறக்கும் : காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

    முகவரி :

    அருள்மிகு திருக்கேதீச்வரர் திருக்கோவில் மாதோட்ட நகரம்,
    மன்னார் மாவட்டம். இலங்கை.
    ரெங்கநாயகி தாயார் திருவத்யயன உற்சவத்தின் திருமொழித் திருநாள்(பகல் பத்து உற்சவம்) கடந்த 25-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்கள், திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதில் மார்கழி மாதத்தில் பகல்பத்து, ராப்பத்து என்று 20 நாட்கள் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்தவகையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.

    ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்யபிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களையும் இந்த திருவிழா நாட்களில் அரையர்கள், பெருமாள் முன் அபிநயத்தோடு பாடுவது இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாகும். எனவே இது திருவத்யயன உற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த 20 நாள் உற்சவம் முழுவதும் பெருமாள் முன்னிலையிலேயே நடக்கிறது. தாயாருக்கு இந்த உற்சவத்தில் எவ்வித பங்கேற்பும் இல்லை.

    ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கநாயகி தாயார் படித்தாண்டா பத்தினி என்பதால் வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்து கொண்டு ஆழ்வார்களின் தீந்தமிழ் பாசுரங்களை கேட்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்காமல் போனதற்கு அவர் அடியார்களின் கனவில் தோன்றி வருந்தினாராம். இதனையடுத்து பெருமாளுக்கு நடத்தியதை போல் தாயாருக்கு என்று தனியாக 10 நாள் திருவத்யயன உற்சவம் நடத்தும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அந்தவகையில் ரெங்கநாயகி தாயார் திருவத்யயன உற்சவத்தின் திருமொழித் திருநாள்(பகல் பத்து உற்சவம்) கடந்த 25-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது.

    விழாவின் அடுத்த பகுதியான ராப்பத்து உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று மாலை 5½ மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6½ மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்தடைந்தார். அங்கு அலங்கார கோஷ்டி வகையறா கண்டருளினார். பின்னர் இரவு 8½ மணியளவில் திருவாய்மொழி மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9½ மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
    செவ்வாய்க்கு அதிபதி முருகக்கடவுள். அதனால்தான், முருகப்பெருமானை மனதார வணங்கி வழிபட்டால், செவ்வாய் உள்ளிட்ட தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
    கந்தக்கடவுளை, மந்திரம் சொல்லியும் ஜபித்து வழிபடலாம். கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் குறித்து சிலாகித்து விவரிக்கப்பட்டுள்ளது.

    ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
    க்லெளம் ஸெளம் நமஹ

    எனும் மூலமந்திரத்தைச் சொல்லி, முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக பெருமிதத்துடன் விவரிக்கிறார்கள் முருக பக்தர்கள்.
    தினமும் இந்த மந்திரத்தைச் சொல்லி வேலவனை வணங்குங்கள். தினமும் 54 முறை சொல்லி ஜபிக்கலாம். 108 முறை சொல்லி வணங்கலாம். இந்த மந்திரத்துடன் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுங்கள்.

    தினமும் கந்தசஷ்டி கவசம் சொல்லி, இந்த மந்திரத்தைச் சொல்லி, செந்நிற மலர்களால் அர்ச்சித்து வந்தால், சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். நல்ல உத்தியோகமும் தள்ளிப் போன பதவி உயர்வும் கிடைக்கப்பெறலாம்.
    நாளை 2022-ம் ஆண்டு புது வருடம் பிறப்பதை ஒட்டி உலகப் புகழ்பெற்ற தனுஷ்கோடி பகுதிக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் செல்ல கலெக்டர் சங்கர்லால் குமாவத் தடை விதித்து உத்தரவிட்டார்.
    கொரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக நாளை 2022-ம் ஆண்டு புது வருடம் பிறப்பதை ஒட்டி ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளுக்கு பக்தர்களும், சுற்றுலாபயணிகளும் அதிக அளவில் வருகை தருவார்கள்.

    இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் -தமிழக அரசு உத்தரவின்படி காசிக்கு நிகராக புனிதமாக கருதப்படும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று உலகப் புகழ்பெற்ற தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தடை விதித்து உத்தரவிட்டார்.

    தனுஷ்கோடி பகுதிக்கு இன்று முதல் வாகனங்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள்-பக்தர்கள் செல்லவும் போலீசார் புதுரோடு பகுதியில் பேரிகாடு அமைத்து அவர்களை திருப்பி அனுப்பினர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று காலை 5 மணி முதல் அடுத்த நாள் காலை வரை தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். அதேபோல் அன்று இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    இது குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன்கருதி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம் அங்காளம்மன் கோவிலில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு வழக்கமான தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது,

    இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    ×